Showing posts with label அகமுடையார். Show all posts
Showing posts with label அகமுடையார். Show all posts

Wednesday, February 7

அகமுடையார்களின் எதிர்ப்பு


முக்குலம் அல்லது தேவர் என்பதை சாதி பெயராக அறிவிக்க கூடாது என்று அகமுடைய முன்னோர்கள் அளித்த விபரங்கள்.அகமுடையார் மட்டுமல்லாது கள்ளரும் மறவரும் இதையே வலியுறுத்தியுள்ளனர்.


அகமுடையரின் எதிர்ப்பு












கள்ளர்களின் எதிர்ப்பு





அன்றைய முதல்வர் கருணாநிதியின் விளக்கம்



சட்டசபையில் ஆர்.எம்.வீரப்பனின் விளக்கம்


Saturday, January 28

கோவை அகமுடையார் பிரிவுகள்

கோவையின் வளர்ச்சிக்கு அகமுடையார் இன மக்கள் பெரும் பங்காற்றியிருக்கிறார்கள் அகமுடையார் குடியேற்றங்கள் சேர நாட்டில் ஏற்பட்ட குழப்ப காலத்தில் இருந்து தொடங்குகிறது பின்னர் மதுரை ராமநாதபுரம் ஆற்காடு பகுதியில் இருந்து குடியேற்றங்களும் நாயக்கர் படையில் வந்தவர்கள் சேதுபதிகளிடம் ஏற்பட்ட மோதலினால்  குடியேறியவர்கள் பஞ்ச கால குடியேற்றம் என ஒவ்வொரு காலகட்டங்களிலும் கொங்கு பகுதியில் அகமுடையார் குடியேற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது.

இரத்தின சபாபதி முதலியார்  இவருடைய பெயரில் அமைந்துள்ளதே ஆர்.எஸ்.புரம்

அகமுடையார் சமூகத்தினர் அகம்படிய தேவர் என்றும் வெற்றிலைக்கார தேவர் சமூகம் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

அகமுடையரில் ஒரு பிரிவினர்  எமதர்மரை  குல தெய்வமாக வணங்குகின்றனர்.


பிரிவுகள்:


1.ராஜ  குல அகமுடையார் 
2.துளுவ வேளாள அகமுடையார் 
3.கோட்டை பற்று அகமுடையார்
4.இரும்புத்தலை அகமுடையார் 
5.ஐவளி நாடு அகமுடையார்


கோவை பகுதியில் வெள்ளலூர்,சூலூர்,இருகூர், பள்ளபாளயம்,ஒட்டபாளயம்,இராசிபாளயம்,உடையாம்பாளயம்,ஆண்டிபாளையம் போன்ற இடங்களில் வசிக்கின்றனர்

பொள்ளாச்சி பகுதியில் ஒத்தக்கால் மண்டபம், கிணத்துக்கிடவு,பொள்ளாச்சி,குறும்ப பாளையம்,செல்லம்பாளையம்,செட்டிப்பாளையம் போன்ற இடங்களில் வசிக்கின்றனர்

உடுமலை  பகுதியில் கண்ணாடிபுதூர்,ஆண்டிபாளையம்

திருப்பூர் பகுதியில் திருப்பூர்,பெரிச்சம்பாளையம், மங்கலம், செட்டிபாளையம்,கருவலம்பபாளையம்

மேலும் கோதவாடி,தேவன்பாடி, வீரப்பகவுண்டன்புதூர்,தென்னம்பாளையம்,குறும்பபாளையம்,எம்மாண்டாம்பாளையம்,செட்டிக்காபாளையம் போன்ற இடங்களில் வசிக்கின்றனர்.

ராமலிங்க செட்டியார் கோவையின் முதல் எம்.பி

பட்டங்கள்:


தேவர்
சேர்வை
முதலியார்
மணியகாரன்
செட்டியார்
கொங்கன்
குடகன்
வேந்தன்
மலையான்
புலவர்
உதியன்
வாத்தியார்
கணக்கன்

சிவகங்கை அகமுடையார் பிரிவுகள்

சிவகங்கை என்றாலே நினைவுக்கு வருபவர்கள் மருது பாண்டியர்களும் அவர்களின் ஆங்கிலேய எதிர்ப்பு போராட்டங்களுமே.


ஆவாரங்காடு பகுதியில் உள்ள கலைஅரங்கம் மேல் உள்ள மருதிருவர் சிலைகள்


சிவங்ககை மாவட்டங்களில் அகமுடையார் இன மக்கள் பெருந்தொகையினராய் வாழ்கின்றனர். சிவகங்கை, மானாமதுரை, தேவகோட்டை,காரைக்குடி மற்றும் திருப்பத்தூர் என மாவட்டத்தின் அனைத்து பகுதியிலும் பரவி வாழ்கின்றனர்.


கோட்டைப்பற்று அகமுடையார் திருமண மண்டபம்


1.ராஜகுல அகமுடையார்
2.ராஜபோஜ அகமுடையார்
3.ராஜவாசல் அகமுடையார்
4.கோட்டைப்பற்று அகமுடையார்

பிரிவுகள் இப்பகுதியில் காணப்படுகின்றனர்.

மானாமதுரை வட்டம் வீரநாரயண தேவன்பட்டியில் உள்ள மருதிருவர் சிலைகள்

Thursday, January 26

தஞ்சை அகமுடையார் பிரிவுகள்

ஐந்து நாட்டு அகமுடையார்:

அதானி,பெரம்பூர்,விலாங்குளம்,சூரங்குடி,சங்கமங்கலம்,அம்மையாண்டி,திருத்தேவன் மற்றும் கும்பதேவன் பகுதிகளில் வசிக்கும் அகமுடையார்கள் தங்களை ஐந்து நாட்டு அகமுடையார் என அழைத்து கொள்கின்றனர்.



புன்னியரசு நாட்டு அகமுடையார்:

அதம்பை,பத்தரசன்கோட்டை,கயவூர் இப்பகுதிகள் மற்றும் இதனை சுற்றி வசிக்கும் பகுதிகளில் உள்ளவர்கள் தங்களை புண்ணியரசு நாட்டு அகமுடையார் என விளிக்கின்றனர்.ஐந்து நாட்டு அகமுடையர்களும் புண்ணியரசு நாட்டு அகமுடையர்களும் ஒரே மாதிரியான பழக்கவழக்கங்களை கொண்டுள்ளனர்.

உமாமகேஷ்வரன் பிள்ளை - கரந்தை தமிழ் சங்கத்தின் நிறுவனர்


பதினொரு நாட்டு அகமுடையார்:

ஆவணம் மற்றும்  இதனை சுற்றியுள்ள பத்து கிராமங்களை சேர்ந்தவர்கள் பதினோரு நாட்டு அகமுடையார் என அழைத்து கொள்கின்றனர்.

கோட்டை பற்று அகமுடையார்;

பெரிய கோட்டை,முன்னவல் கோட்டை,கருப்புமுதலி கோட்டை மற்றும் சிக்கப்பட்டு பகுதி மற்றும் பல பகுதிகளில் பரவி வாழும் அகமுடையார்கள் கோட்டை பற்று அகமுடையார் என் அழைத்து கொள்கின்றனர்.

இரும்புதலை அகமுடையார்;

இரும்புதலை மற்றும் இதன் சுற்று வட்டார பகுதிகளில் வசிப்போர்கள் தங்களை இவ்வாறு அழைத்து கொள்கின்றனர்.








Friday, January 20

புதுக்கோட்டை அகமுடையார் பிரிவுகள்


அய்யாசாமி சேர்வையின் புதல்வர் புதுக்கோட்டை மான்பூண்டியா பிள்ளை
பிரபல இசை கலைஞர்

1.அஞ்சூர் அகமுடையார்

வைத்தூர்,முட்டம்பட்டி,எறையூர்,வாட்டனகுருச்சி,மெய்க்குடிப்பட்டி பகுதிகளில் வாழும் அகமுடையார்கள் பல்லவராய அரச மரபினர். வல்லத்தரையன், பேய்வேட்டி, பேயடி, வாட்டாச்சி,சோழகன் மற்றும் கஸ்த்தூரி போன்ற பல பிரிவுகளை தங்களுக்குக்குள் கொண்டிருந்தனர்.

2.கோட்டைபற்று அகமுடையார்

பெருச்சாட்டி,மலுக்கன்,தனிப்பிரான்,குன்றாண்டான் போன்ற ஏழு பிரிவுகளை தங்களுக்குள் கொண்டுள்ளனர்.தாஞ்சுர் அகமுடையார் எனவும் அழைக்கப்படுகின்றனர். 

3.கிழக்கு சீமை அகமுடையார்
4.அஞ்சுக்கோட்டை அகமுடையார்
5.ராஜகுல அகமுடையார்
6.கோட்டைகாடு அகமுடையார்


சேர்வை,தேவர்,பிள்ளை பட்டங்களை புதுக்கோட்டை அகமுடையர்கள் பயன்படுத்துகின்றனர்.

Monday, January 2

தொண்டை மண்டல அகமுடையார்கள்

தொண்டை மண்டல அகமுடையார் பிரிவுகளும் பட்டங்களும்:


1.விழுப்புரம் மாவட்டம்
1திருவெண்ணெய் நல்லூரில் - கோட்டை
பற்று அகமுடையார்
பட்டம்:- பிள்ளை, # உடையார் , ( துளுவ
வேளாளர் )
2.திருக்கோவிலூர் மற்றும் திருவண்ணாமலை
வட்டாரத்தில் மலைமான் ( மலைநாட்டு )
அகமுடையார்.
பட்டம்:- # பிள்ளை, உடையார், நாயக்கர்,
முதலியார்
3.கடலூர், விழுப்புரம், புதுச்சேரி வட்டாரத்தில் - துளு நாடு இரும்புத் தலைவேளிர் அகமுடையார் ,
பட்டம்:- # பிள்ளை , முதலியார், உடையார்,
( துளுவ வேளாளர் )
4.வேலூர் மாவட்டம் & சென்னை,
காஞ்சிபுரம் - கோட்டை பற்று அகமுடையார் மற்றும் துளு நாடு வேளீர் அகமுடையார்
பட்டம்:- # முதலியார், உடையார், பிள்ளை
( துளுவ வேளாளர் )
5.பெங்களூர் மற்றும் ஆந்திர மாநிலத்தில் -
சேர வம்ச ஐவளி நாட்டு அகமுடையார்
பட்டம்:- முதலியார், இராவ், ரெட்டி,
( துளுவ வேளாளர் )
நன்றி அண்ணன் : ஜெயகாந்தன் அகமுடையார் நெல்லிக்குப்பம

அங்கம்போரா

அங்கம்போரா-பழந்தமிழரின் தற்காப்புக்கலை:




சோழர் ஆட்சி இலங்கையில் வலுவிலந்த காலத்தில் சிங்கள மன்னர்கள் ஆட்சி மீண்டும் இலங்கையில் தோன்றியது!
அகம்படி சாதியினரின் தொல் அரசகுடிச்சிறப்பையும் , போர்முறைகளையும் கண்ட சிங்கள அரசர்கள் அகம்படியினரை தங்கள் படையினுள் இணைத்துக்கொண்டனர்!
முதலாம் பராக்கிரமபாகுவின் (1153-1186) படையில் அகம்படியினர் பெருமளவிலான அகம்படியினர் இருந்தனர்
ஆதாரம்: நிகாய சங்கரகய (சிங்கள பழம் நூல்)
கம்பதெனிய,கம்பளை,கோட்டே ஆகிய ராசதானிகளும் அகம்படிகள் படையினராக இருந்துள்ளனர்
ஆதாரம்: மயூரசந்தேஸய (சிங்கள பழம் நூல்)
அகம்படியினர் போர்ப்படையில் இருந்ததோடு அரசர்களின் அரண்மனைகள்,கோட்டைகள் மற்றும் புத்த ஆலயங்களைப் பாதுக்காத்தனர்.
அவ்வகையில் புத்தரின் புனிதப்பல் இருந்த புகழ்பெற்ற புத்த ஆலயத்தை அகம்படியினர் பாதுகாத்தனர்
ஆதாரம்: அகம்படி உம்பிழ அயித்தன் கல்வெட்டு( இலங்கை-ஹிங்குறாக்கொடை) -காலம் கி.பி 1150
பலகாலம் தமிழகத்தை விட்டு இலங்கையில் தங்கியிருந்த அகம்படியினர் அங்கிருந்த பெண்களை மணந்து கொண்டு புதிய சாதியை உருவாக்கினர்.
அகம்படியினர் பலர் புத்த மத்தத்தையும் தழுவினர்.அகம்படியினருக்கும் இலங்கையில் உள்ள பெண்களுக்கும் பிறந்தவர்கள் புத்த மதத்தினராகவே வளர்ந்தனர்!
தமிழ்நாட்டில் வாழந்த அகம்படியினர் பின்னாட்களில் வேளாண்மையில் கவனம் செழுத்த ஆரம்பித்த போது தங்களுடைய அங்கப்போர்க்கலை பயிற்சியை முற்றிலும் மறந்து போயினர்.
அதே வேளையில் அகம்படியினர் தங்கள் தற்காப்புக்கலையை சேரநாட்டில் களரிப்பயிற்று என்ற பெயரிலும் இலங்கையில் அங்கம்போரா என்ற பெயரிலும் தொடர்ந்து வளர்த்தனர்.
துரதிஷ்டவசமாக சேர நாடு ,கேரளமாகி தாய்தமிழ்நாட்டில் இருந்து தனது அடையாளங்களை அறுத்துக் கொண்டது.இலங்கை அகம்படியார்களும் புத்தமதத்தில் இணைந்து தனிச்சாதியிலும் கலந்தனர்.
இன்று இவர்கள் இலங்கையில் ( அகம்போடா,ஹேவபொனெ என்ற சாதியின் பெயரால் அறியப்படுகிறார்கள்- இலங்கையில் இவர்கள் சத்திரிய வர்ணத்தவர்களாக அறியப்படுகிறார்கள்)
இலங்கையில் அங்கம்போரா தற்காப்புக்கலை தொடர்ந்து வளர்ந்தது.அங்கப் போர்முறை அதிநுட்பமானது என்பதால் பெளத்த சங்கங்கள் போன்ற தீவிரமான கட்டுப்பாடு மிக்க நிறுவனங்களால் மட்டுமே தொடர்ந்து பின்பற்றப்பட்டு வந்தது.
இலங்கையில் உள்ள பெளத்தர்களிடையே அங்கமன உனம்புவா, கெஹல் பண்ணா, கல்கோடா போன்ற சில குடும்பத்தவரிடம் மட்டும் அங்கப்போர் மரபுகள் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது!
அங்கமன உனம்புவா, கெஹல் பண்ணா, கல்கோடா போன்ற குடும்பங்கள் இன்றும் தங்களை அகம்படி வழியினர் என்றே அழைத்துக்கொள்கின்றனர்.அங்கமன உனம்புவா என்ற பெயரில் உள்ள அங்கமன என்பதே அகம்படி என்ற தமிழ்ச் சொல்லின் சிங்கள மொழியின் திரிந்த வடிவம் ஆகும்.
அங்கம்போரா(அங்கப்போர்) இலங்கையில் தொன்றுதொட்ட தற்காப்புக்கலை (30 ஆயிரம் வருடங்களுக்கு மேலான வரலாறு) என்று பின்னால் எழுதப்பட்ட புனைக்கருத்துக்கள் கூறினாலும்.அங்க
ம்போரா பற்றிய வரலாற்றுக் குறிப்புக்கள் 12ம் நூற்றாண்டில்(இலங்கையில் அகம்படியினரின் வருகைப்பின்பே ) கிடைக்கின்றன.
மேலும் அங்கம்போரா இன்று சிங்களத் தற்காப்புக்கலை என்று அறியப்பட்டாலும் அது இலங்கையில் இருந்த அகம்படியார்களால் உருவாக்கப்பட்டத
ென்பதை சிங்களர்களே மறுக்கவில்லை.
அங்கம்போரா -பழந்தமிழ்குடியினரான அகம்படியார்களால் உருவாக்கப்பட்ட தற்காப்புக்கலை என்பதை சிங்கள வரலாறு கட்டியம் கூறுகிறது!
அங்கம்போரா-பழந்தமிழரின் தற்காப்புக்கலை சிங்களர் வசம் சென்றது காலத்தின் கோலம்!



சோழ மண்டல அகமுடையார்கள்

சோழ மண்டல அகமுடையார் பிரிவுகள் மற்றும் பட்டங்கள்:



1.கோட்டைபற்று அகமுடையார் - கீழ் தஞ்சை முழுக்க பரவி உள்ளனர்.
பட்டம் - தேவர் மற்றும் பிள்ளை
2.இரும்புதலை அகமுடையார் - தஞ்சாவூர்
பட்டம் - பிள்ளை
3.புண்ணியரசு நாட்டு அகமுடையார் - பட்டுக்கோட்டை
பட்டம் - தேவர்
4.பதினோரு நாட்டார் அகமுடையார் - பேராவூரணி
பட்டம் - தேவர், நாட்டார் மற்றும் சேர்வை
5.ராஜவம்சத்து அகமுடையார் - முத்துப்பேட்டை முதல் வேதாரண்யம்
பட்டம் - தேவர்
6.குருகுலத்தேவர் - வேதாரண்யம்
பட்டம் - தேவர்
தகவல் உதவி: மன்னார்குடி சிவா அகமுடையார்

Saturday, September 10

அகப்படை

படையை அதன் நிலை அடிப்படையில் இருபடைகளாக பிரிக்கலாம்
*அகப்படை
*மறப்படை


 
அகப்படை என்றால் மூலப்படை, அந்தரங்கமான சேனை அல்லது அணுக்கபடை.ஒரு நாட்டுக்கு இன்றியமையாத படைகளை மூலப்படை, கூலிப்படை, நாட்டுப்படை, காட்டுப்படை, துணைப்படை, பகைப்படை என ஆறு வகையாகச் சொல்வர்.
மூலப்படை என்பதற்கு தொல்படை என பொருளுண்டு
இவற்றில் தொல்படையான மூலப்படையே சிறப்பானது.
வள்ளுவர் மூலப்படையை தொல்படை என தனது குறளில் "
உலைவு இடத்து ஊறுஅஞ்சா வன்கண் தாலைவுஇடத்துக்
தொல்படைக்கு அல்லால் அரிது" குறிக்கிறார்.
விளக்கம்:போரில் வலிமை குன்றினாலும் இடையூறுகளுக்கு அஞ்சாத அஞ்சாமை தொன்றுதொட்டு பெருமையுடைய படைகளுக்கு அல்லாமல் முடியாது.

தினமும் பயிற்சி செய்து நீண்ட காலமாக நிலைத்திருக்கும் படை அகப்படை.

மூலப்படை என்பது அரசரின் முன்னோரை தொடங்கி வரும் சேனை.இப்படையின் சிறப்பானது அரசன் மீது கொண்டுள்ள அன்பும் போரில் வலிமை குன்றினாலும் பயந்து விலகாத வீரமுமாகும்.

இராமாயணத்தில் மூலபல வதைபடலத்தில் இந்திரஜித்தின் இறப்பிற்கு பின் தாங்கள் போர்புரிய செல்வதாக மூலப்படயினர் கூறினர் இராவணன் இராமனையும் இலக்குவனையும் கொல்லும் படி கேட்டுகொள்கிறான்.மூலப்படை வருவதை கண்டு வானரபடை ஓட்டம் பிடித்தனர்.ஜாம்பவான் பயந்து ஓடியதற்கு அவமானபடுகிறார்.வீபஷணன் மூலப்படை பற்றியும் அதன் வலிமை பற்றியும் இராமனுக்கு சொல்கிறான்.இந்த அதிசய போரை சிவபெருமான், பிரம்மன் மற்றும் தேவர்கள் பார்க்கிறார்கள்.மூலப்படையை இராமன் அழித்ததை உலகமே கண்டு வியந்தது என கம்பர் கூறுகிறார்.

பரிமேலழகர் "மூலப்படை அறுவகை படையுள்ளும் சிறப்புடையது" என கூறுகிறார்.

Sunday, July 17

அகமுடையார்?

அகமுடையார்கள் பற்றி அகமுடையார் அரண் நிறுவனரும் அகமுடையர்களை ஒருங்கிணைத்த பெருமைக்குரிய பாலமுருகன் அகமுடையார் அவர்களின் கருத்து

Thursday, July 14

இராமநாதபுரமும் அகமுடையார்களும்

 

ராமநாதபுரம் மாவட்டம்  வாலாந்தரவையில் இருக்கும் மருதிருவர் சிலை

தமிழகம் முழுவதும் அகமுடையார் இனத்தினர் வசித்து வருகின்றனர் பெரும்பாண்மையாக வசித்து வரும் இடங்களில் ராமநாதபுரமும் ஒன்று.ராமநாதபுரம்பாண்டியர்கள்,பல்லவர்கள்,சோழர்கள்,வாணதிராயர்கள்,நாயக்கர்கள்,சேதுபதிகள்,நவாப் மற்றும் ஆங்கிலேயர்கள் என பலரது ஆளுகைக்குட்பட்டிருந்தது.அகமுடையார்கள் இப்பகுதியில் பூர்விகமாக பன்நெடுங்காலமாக வாழந்து வருகின்றனர்.கி.பி. 1628இல் கூத்தன் சேதுபதி கோயில் யானை மீதுஅமர்ந்து நகர்வலம் வந்தபோது தமது வலிமையை நிருபித்துக் காட்ட மன்னர் அமர்ந்து இருந்த யானையின் வாலைப் பிடித்து யானை மேலும் நகரவிடாமல் நிறுத்திவிட்டார் முத்து விஜயன் சேர்வை அன்பளிப்புகள் வழங்கி அவரைப் பாராட்டிய சேது மன்னர் அவருக்கு நாள்தோறும் கோயிலில் இருந்து உணவு வழங்க உத்திரவிட்டார்.இந்த வீரச்செயல் சிற்பமாக ராமேஸ்வரம் திருக்கோயிலில் உள்ளது.சேதுபதிகளின் நம்பிக்கைக்குரிய தளபதிகளாகவும் அமைச்சர்களாகவும் அகமுடையார்கள் விளங்கினர்.சேதுபதிகளுக்கும் அகமுடையர்களுக்கும் மோதல்களும் நிகழ்ந்துள்ளன இதனால் அகமுடையார்கள் வேறு இடங்களுக்குகுடிபெயர்ந்துள்ளனர்.படைவீரர்களாகவோ அல்லது வேறு காரணங்களுக்காக குடிபெயரும் போது ராமநாதபுரம் என தங்கள் ஊரின் பெயரை புதிதாக வந்த இடத்திற்கு சூட்டி உள்ளனர்.தமிழகத்தில் கோவை,தஞ்சை போன்ற பகுதிகளில் ராமநாதபுரம் உள்ளது மேலும் மலையாவிலும் உள்ளது.சொக்கப்பன் சேர்வைக்காரர்,கங்கையாடி பிள்ளை,பாண்டியூர் பெருமாள் சேர்வைக்காரர்,வைரவன் சேர்வைக்காரர்,ரெகுநாத காங்கேய சேர்வைக்காரர்,வெள்ளையன் சேர்வைக்காரர்,வணங்காமுடி பழனியப்பன் சேர்வை,மருது பாண்டியர்கள் மற்றும் முத்துஇருளப்ப பிள்ளை என அகமுடையார் குலத்திலே ராமநாதபுரத்தில் உதித்த சிறப்புவாய்ந்தவர்கள் பலர்.பாம்பன் ஸ்வாமிகளும் இம்மண்ணிலே அவதரித்தவரே.வைரவன் சேர்வை ரணபலி முருகன் கோயில் பெருவயலில் எழுப்பியுள்ளார்.வெள்ளையன் சேர்வை மிகுந்த போர் திறன் பெற்றிருந்தார் நாயக்கர்களும் மறவர்களும் அஞ்சும் அளவிற்கு வலிமையானவராக இருந்தார்.மதுரை கோட்டையை கைப்பற்ற மைசூர் அரசரின் பிரதிநிதியாக வந்த தளபதி கோப்புடன் சண்டையிட்டு வெற்றி பெற்று நாயக்க மன்னருக்கு சேதுபதியின் வேண்டுதலுக்கு இணங்க முடிசூட்டி வைத்தார்.வாணதிராயர்,பல்லவராயர்களுக்கு பிறகு அகமுடையார் இனத்தில் தோன்றிய ராஜதந்திரி என கூறலாம்.திருநெல்வேலி பாளையக்காரர்கள் மீது படையெடுத்து பலரை கைது செய்தார் இதனை விரும்பாத சேதுபதி சேர்வையை ராமநாதபுரத்திற்கு திரும்புமாறு கட்டளையிட்டார்.இது தனக்கு ஏற்பட்ட அவமானமாக கருதி சேதுபதியை மாற்றிவிட்டு வேறொரு சேதுபதிக்கு முடி சூட்டி வைத்தார்.தென் தமிழ்நாட்டு மக்களின் பஞ்சத்தைப் போக்க முல்லைப் பெரியார் அணைத் திட்டத்தை முதலில் வடிவமைத்தவர் பிரதானி முத்துஇருளப்ப பிள்ளையே.இவர் காலத்தில் ராமேஸ்வரம் திருக்கோயிலுக்கு பல திருப்பணிகள் செய்யப்பட்டது சொக்கத்தான் மண்டபம் இவர் கட்டியதே.இவருடைய திருஉருவ சிலையும் கோயிலில் உள்ளது.இவருடைய சமாதி இராமநாதபுரம் நீலகண்டி ஊரணியின் வடகரையில் இடிந்த நிலையில் சிறிய கோவில் போல உள்ளது.இவர்மீது புலவர்கள் பலர் செய்யுட்கள் இயற்றியுள்ளனர்.பெரிய சரவணக் கவிராயர் என்பவர் இவர்மீது ‘காதல்’ பிரபந்தம் இயற்றியுள்ளார்.

ராமேஸ்வரத்தில் உள்ள மருதராசர் சிலை


ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் மூன்று முறை(2காங்கிரஸ் 1சுயேட்சை) சண்முக ராஜேஸ்வர சேதுபதி வெற்றி பெற்றுள்ளார்.இதற்கு பின் தங்கப்பன்(திமுக),சத்தியேந்திரன்(திமுக),T.இராமசாமி(தொடர்ச்சியாக 3 முறை அதிமுக),M.S.K.இராஜேந்திரன்(திமுக) என 6 முறை அகமுடையர்களும் வெற்றிபெற்றுள்ளனர்.பின்னர் தென்னவன்(அதிமுக, இசை வேளாளர்)நான்கு முறை இஸ்லாமியர்களும் தற்போது மணிகண்டன்(அதிமுக, மறவர்) வெற்றிபெற்றுள்ளனர்.ராமநாதபுரம் நகராட்சியை பொறுத்த வரை ஒரு முறை தவிர அனைத்து முறையும் அகமுடையர்களே வெற்றி பெற்றுள்ளனர்.

Wednesday, December 16

பாண்டிய நாட்டு ராஜகுல அகமுடையார்

பாண்டிய நாட்டின் தலை நகரம் மதுரை , மதுரை மாவட்டத்தில் இரு பெரும் பிரிவுகள் உண்டு.அவர்கள்,
• கீழமண்டு அகமுடையார் 
• மேலமண்டு அகமுடையார்

மேல மண்டு 33 கிராமங்கள் அடங்கியதாகும்

1. வெயிலாம்பட்டி
2. மங்கல்ரேவ்
3. வீரப்பட்டி
4. வீராளம்பட்டி
5. சின்ன பூலாம்பட்டி
6. கோட்டைப்பட்டி
7. சேடப்பட்டி
8. சல்லுப்பபட்டி
9. தொட்டணம் பட்டி
10. அப்பக்கரை
11. தொட்டிய பட்டி
12. அலப்பலச்சேரி
13. கரிகாலம் பட்டி
14. கண்டுகுளம்
15. திருமாணிக்கம்
16. செம்பட்டி
17. பாப்பு நாயக்கன் பட்டி
18. சங்கரலிபுரம்
19. பழையூர்
20. அல்லிகுண்டம்
21. சின்ன கட்டளை
22. பூலாங்குளம்
23. பெரிய மீனாட்சி புரம்
24. துள்ளுக்குட்டி நாயக்கனூர்
25. வாக்குளம்
26. வண்ணாங்குளம்
27. வண்டாடுபட்டி
28. வண்ணம்பட்டி
29. குருவப்பன் நாயகன்பட்டி
30. நல்லமரம்
31. நாட்டணி பட்டி
32. கன்பம்
33. சாத்தங்குடி
ஆகிய 33 கிராமங்கள் மேலமண்டு அகமுடையார் கிராமங்கள் ஆகும்

கீழமண்டு  :

மதுரை-லிருந்து விருதுநகர் செல்லும் இருப்பு பாதைகளுக்கு இடையே உள்ளது திருமங்கலம் இதன் கிழக்கே உள்ள 48 கிராமங்களும் கீழமண்டு என்று அழைக்கபடுகின்றது.

1. மருதங்குடி
2. மாந்தோப்பு
3. அழகிய நல்லூர்
4. ஆவல் சூரம்பட்டி
5. அரசம்பட்டி
6. சென்னம் பட்டி
7. குராயூர்
8. கொக்குளம்
9. திருமால்
10. கூடக்கோவில்
11. கொம்பாடி
12. உப்பிலிக்குண்டு
13. உலகாணி
14. மொச்சிக்குளம்
15. மைக்குடி
16. எட்நாளி
17. விருசங்குளம்
18. ஆலங்குளம்
19. கல்லுபட்டி
20. வெப்பன்ங்குளம்
21. கல்லணை
22. பாறைக்குளம்
23. வலையங்குளம்
24. வீரப்பெருமாள் கோவில்
25. கிருஷ்ணாபுரம்
26. புதூர்
27. தும்பக்குளம்
28. கடமாங்குளம்
29. சீகனேந்தல்
30. மாங்களம்
31. மங்கை ஏந்தல்
32. பூவனேந்தல்
33. இலுப்பகுளம்
34. ஆவீயூர்
சில கிராமங்கள் விடுபட்டுள்ளது உட்பட மொத்தம் 48 கிராமங்களும் கீழமன்டாகும்.

நன்றி ஜெ.பாலசந்தர் 

Friday, December 11

மதுரை சித்திரை திருவிழாவும் அகமுடையார்கள் அறிந்து கொள்ளவேண்டிய செய்தியும்!

கங்கையிலும்  புனிதமானது நூபுர கங்கை என ஆழ்வார்களால் பாடப்பட்டது. அத்தகைய சிறப்பு வாய்ந்த அழகர்மலையில் வீற்றிருக்கும் கள்ளழகருக்கு நடத்தப்படும்  விழாக்களில் சித்திரைத் திருவிழா முக்கியத்துவம் வாய்ந்தது; மதுரையின் பாரம்பரியத் திருவிழாவாகவும் போற்றப்படுகிறது. முன்னொரு காலத்தில் சுதபஸ் மகரிஷி நூபுர கங்கையில் தீர்த்தமாடி, அழகர் சுந்தரராஜ பெருமாளை நோக்கி தவம் மேற்கொண்டிருந்தார். அந்த சம யம் அங்கு வந்த துர்வாச முனிவரை அவர் கவனிக்க வில்லை. அதனால் துர்வாசர் கோபம் கொண்டு, ‘மண்டூக பவ’ என்று சாபமிட்டு விடுகிறார்.
ஒரு  தவளையாகப் போகும்படி தன்னை சபித்த துர்வாசரிடம், சுதபஸ் மகரிஷி சாப விமோசனம் கோரினார். துர்வாசர் அறிவுறுத்தியபடி மதுரை வைகை  நதிக் கரையில் சுதபஸ் தவம் இயற்றினார். சித்திரை மாத பௌர்ணமிக்கு அடுத்தநாள் பெருமாள் கருட வாகனத்தில் காட்சியளித்து, சுதபஸ் மகரி ஷிக்கு சாப விமோசனம் அளித்தார். இதனை அடிப்படையாகக் கொண்டு பிற்காலத்தில் இவ்விழா துவக்கப்பட்டது.
சித்திரைத் திருவிழாவின் ஆறாம்  நாளான ஏப்ரல் 26 அன்று பெருமாள் அங்கிருந்து சேஷ வாகனத்தில் புறப்பட்டு தேனூர் மண்டபம் வருகிறார். அன்று பகல் 1  மணி அளவில் தங்கக் கருட வாகனத்தில் அலங்கார பூஷிதராக, சுதபஸ் மகரிஷிக்கு (மண்டூக முனிவர்) சாப விமோசனம் அளிக்கிறார். அப்போது சுத பஸ் மகரிஷியின் சிலை வைக்கப்பட்டிருக்கும். சாப விமோசனம் பெற்றதை குறிக்கும் விதமாக நாரை பறக்க விடப்படும். இந்நிகழ்ச்சியில் ஏராளமான  பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்வர். அதன் பின்னர், கருட வாகனத்தில் வண்டியூர் அனுமார் கோயிலுக்குச் சென்று பக்தர் களின் காணிக்கைகளை ஏற்பார், பெருமாள். இரவு முழுவதும் ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சிகள் நடைபெறும்.
திருமலை நாயக்கர் காலத்திற்கு முன்னால்வரை பெருமாள் அழகர் மலையில் இருந்து புறப்பட்டு அலங்காநல்லூர் வழியாக தேனூர் கிராமத்தில் வைகை ஆற்றில் இறங்கி, வைகை வடகரையோரத்தில் சுதபஸ் மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த நிகழ்ச்சி நடைபெற்றது.இத் தேனூர் கிராமமானது அகமுடையார் சமுதாய மக்கள் பெரும்பான்மையாக ,பாரம்பரியமாக வசித்து வரும் கிராமம் ஆகும்.
திருமலை நாயக்கர் ம துரையை ஆண்டபோது சைவ-வைணவ ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக மாசி மாதத்தில் நடைபெற்று வந்த மீனாட்சி கல்யாணத்தை சித்திரை  மாதத்திற்கு மாற்றினார். இவ்வாறு காலம் காலமாக தேனூர் கிராமத்தில் நடந்து வந்த இந்த  வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வை மதுரைக்கு மாற்றிய போது,அதற்க்கு பிரதிபலனாக மதுரையில் தேனூர் மண்டபத்தை எழுப்பி,தேனூர் கிராம மக்களுக்கு மரியாதையும் செய்யும் உரிமையை செப்புப் பட்டயமாக எழுதித் தந்தார்.
மேலும் சிறப்பாக மற்ற மண்டபங்களில் அழகர் பெருமாள் எழுந்தருளும் போது,மண்டபத்தின் உரிமை உடையவர்களால் கோவிலுக்கு குறிப்பிட்ட பணம் செழுத்த வேண்டும்,ஆனால் தேனூர் மண்டபத்தில் ஸ்வாமி இறங்குவதற்க்கு இறைவனே பணத்தை தேனூர் கிராம மக்களுக்கு அளித்து வருவது நடைமுறையாகி அது இன்று வரை தொடர்கிறது.

Thenur Mandapam
Thenur Mandapam
கூடுதல் செய்தி: 
மாவலி வானதிராயர் இவரே மதுரைப் பாண்டியர்களை வென்றவர். இன்றைய அழகர்கோவிலை நவினப்படுத்திக் கட்டியவர்,கோட்டையை எழுப்பியவர். இவர் தம் கல்வெட்டுகளில் தம்மை மாவலி அகம்படிய வானாதிராயன் என்றே குறிப்பிட்டுள்ளார்.
சிவகங்கை சீமையில் உள்ள மானாமதுரை(வானாதிராய மதுரை),இராசகம்பீரம்(வானராய கம்பீர கோட்டை) முதலிய இடத்தில் வானாதிராய இனமாக ராஜ குல அகமுடையரே அதிகமாக வாழ்கிறனர். சின்னமனூர் அகமுடைய பனந்தாரன்(வானாதிராயன்),பந்தளம்(அகமுடைய பனந்தார ராம வர்மா)சுவாமி ஐய்யப்பன் வழி வந்த மன்னர் போன்றவர்கள் பனந்தார வம்சத்து அகமுடையரே.

Wednesday, December 9

அகமுடையார்களால் 800 ஆண்டுகளுக்கு முன் கட்டபட்ட கோயில் :


பழங்கால கட்டுமானம்,கல் கருவறை, கருவறையில் மேற்கூரைக்கு மரங்கள்
கொடுத்து, வித்தியாசமான கட்டட அமைப்பு மற்றும் கருவறை வெளிபிரகாரத்தில் மீன் சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளதால்,
800 ஆண்டுகளுக்கு முந்தைய கோவிலாக இருக்கலாம். பாண்டிய
மன்னர் போர் புரிந்து நாட்டை பிடித்து வந்தபோது,சேர்ந்த படையணி தலைவர், வீரர்கள் சுவாமியை வழிபட கோவில் அமைத்திருக்கலாம் என்ற
வரலாற்று செய்திகள் உள்ளன.மதுரை பகுதியில் இருந்து வந்த அகமுடையார்
சமுதாயத்தை சேர்ந்தவர்கள்,பெருமாளை வைத்து விட்டு,இங்கு ஓய்வு எடுத்ததாகவும்,மறுநாள் கிளம்ப மறுத்த சுவாமி,அங்கேயே கோவில் அமைக்க
உத்தரவிட்டதால், இக்கோவில் உருவானதாகவும், அதேபோல்,
எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்ட போது, தண்ணீரில் விளக்கு எரிந்தது என கோவில் அமைய பல காரணங்கள் உள்ளதால்,இது, காரணப்பெருமாள் என
அழைக்கப்படுகிறது. ஸ்ரீ காரைவன பெருமாளை குல தெய்வமாக கொண்ட அகமுடையார்கள் மதுரையை அடுத்த திருபுவனதிற்கு அருகில் உள்ள அல்லி நகரம்  கிராமத்தில் மூல ஸ்தானமும் அங்கிருந்து சிவரக்கோட்டையிலும் அங்கிருந்து பெயர்ச்சி ஆகி  இவிடத்தில் பிரதிஷ்டை செய்து தங்களது குல தெய்வத்தை பல நூற்றாண்டுகளாக வணங்கி வருகின்றனர்.  கருவறை கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது.முன்மண்டபம், மகா மண்டபத்துடன்,முன்புறம், பழைய ஓடு வேயும்
முறையில் தாழ்வாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுற்றிலும்,
மதில் சுவர்கள் சிறிதாக அமைக்கப்பட்டு, தீபஸ்தம்பம் உள்ளது.
கோவிலுக்குள் செல்ல மூன்று வழிகள் உள்ளன.மூன்றிலும், ஒருவர்
மட்டுமே செல்லும் வகையில் கல் நடப்பட்டுள்ளது.பெருமாள் நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில், சங்கு சக்கரம்,முத்திரை காட்டும் விரல்,
அருளாசி கூறும் கையுடன்அருள்பாலித்து வருகிறார்.ஒரே பீடத்தில், இருபுறமும் தாயார், மலர்களுடன் நின்ற கோலத்தில் உள்ளனர். வழக்கமாக
புடைப்பு சிற்பம் அல்லது சிலைகளாக இருக்கும்.இங்கு, பெருமாள், சிலை வடிவம் மற்றும் புடைப்பு சிற்ப வடிவம் என இரண்டும் கலந்து அமைக்கப்பட்டு, பழைய சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக,வித்தியாசமான முறையில்
அமைந்துள்ளது. கோவில் முன், வலதுபுறத்தில் சக்கரம் போன்ற வட்ட
வடிவ கல்லில், சக்கரத்தாழ்வார் புடைப்பு சிற்பம் உள்ளது.இடதுபுறத்தில், ஆஞ்சநேயர் கும்பிட்ட கோலத்திலும், எதிரே கருடாழ்வாரும் உள்ளனர்.
இடதுபுறம், பிரகாரம் சுற்றி வரும்போது, புடைப்பு சிற்பமாக உள்ளதும்,
சிற்பக்கலை சிறப்பாகும். சைவ சமயத்தை பின்பற்றுபவர்கள்,
பெருமாள் கோவில் வைத்து வழிபட்டதும்,அவர்களே வைணவ ஜீயரிடம்
தீட்சை பெற்று, பல நூறு ஆண்டுகளாக, வைணவ முறைப்படி,
பூஜை செய்து வருவதும் வித்தியாசமானதாகும். தல விருட்சமாக பல
நூறு ஆண்டு பழமைவாய்ந்த வில்வ மரம் இருப்பதும் வித்தியாசமானதாக உள்ளது.கிருஷ்ண ஜெயந்தி,புரட்டாசி மாதத்தில், பலபகுதியில் வசிக்கும் மக்களும் இங்கு வந்து பொங்கல் வைத்து வழிபடுவதும்,வைகுண்ட ஏகாதசியும் சிறப்பாக கொண்டாடப்படும் திருவிழாவாகும்.இக்கோவில்,
பல்லடத்தில் இருந்து, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், திருப்பூர்
ரோடு சந்திப்பு, போலீஸ் செக் போஸ்ட் அருகே,பனைபாளையத்தில்
அமைந்துள்ளது.

1891 கணக்கெடுப்பில் அகமுடையார் குல முக்கிய பிரிவுகள்:






*ஐவளிநாட்டான்

*கோட்டைப்பற்று

*மலைநாடு

*நாட்டுமங்களம்

*ராஜபோஜ

*ராஜகுலம்

*ராஜவாசல்

*கலியன்

*மறவன்

*துளுவன்

*சானி

*சேர்வைகாரன்

FROM CASTE AND TRIBES OF SOUTHERN INDIA

Sunday, September 20

அகமுடையார்


பொதுவாக அகமுடையார் என்பதன் பொருள் நில உடைமையாளர், நம்பிக்கைக்குரியவர், பரந்த சிந்தனையாளர் என்று பலவாறாக பொருளில் இலக்கியங்கள் ஊடாக அறிந்துகொள்ள முடிகிறது.மேலும் அகம்படியர் என்பதற்கு காவல் என்றே பொருள் உண்டு. அகமுடையார் குலத்தில் சேர்வை , தேவர்,உடையார்,பிள்ளை, முதலியார் உள்ளிட்ட இந்தப் பட்டங்களே பெரும்பான்மையான காணமுடிகிறது.
அகமுடையார்களில் "தேவர்" பட்டம் என்பது தமிழகத்தின் பெரும்பான்மை மாவட்டங்களில் வழங்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தின் நாகப்பட்டினம் - திருவாரூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வாழும் அகமுடையார்களுக்கு தேவர் பட்டமே. தஞ்சை டெல்டா பகுதிகளில் தேவர் பட்டம் கொண்டுள்ள அகமுடையார் இனத்தினர், ”பதினெட்டு கோட்டை பற்று அகமுடையார்” என்ற குலபிரிவை சார்ந்த்துள்ளனர். இதை தவிர்த்து, ”சித்தர் மரபு அகமுடையார்” மற்றும் ”தஞ்சை ராஜ வம்சத்து அகமுடையார்” என்ற பிரிவும் இன்றளவும் வேதாரண்யம் - முத்துப்பேட்டை போன்ற தஞ்சை கடலோர பகுதிகளில் வாழும் அகமுடையார் இன மக்களுக்கு உண்டு.
"கள்ளர்,மறவர்,கணத்ததோர் அகமுடையார் மெல்ல மெல்ல வெள்ளாளர் ஆனாரே" என்ற பாடல் வாயிலாக, போர்த்தொழிற்கு அடுத்த கட்ட நகர்வான வேளாண்மை தொழிலில் ஈடுபட ஆரம்பித்து, அதிலேயே நில நீட்சிகளோடு வாழ்ந்தவர்களின் வழித்தோன்றல்கள் அகம் உடையார் என அறியப்பட்டனர்.
அகமுடையார்களில் "முதலியார்" என்ற பட்டம் உடையவர்கள் வட தமிழகத்தில் பெரும்பான்மையாக செருமி வாழ்கின்றனர்.அகமுடைய முதலியார் என்பது போர்ப்படை தளபதிகளையே குறிக்கின்றது. முதலி என்பது ஒரு படையை தலைமைத்தாங்குகின்ற முதன்மையான தளபதி என்று பொருள் தருகிறது. வடதமிழகத்தில் வாழும் அகமுடையார்கள் அனைவருக்கும் பட்டம் என்பது முதலியார்,உடையார் மற்றும் பிள்ளை.

  அகமுடையார் குல பிரிவுகள்

  1. ராஜகுலம்
  2. புண்ணியரசு நாடு
  3. கோட்டைப்பற்று (பதினெட்டு கோட்டைப்பற்று)
  4. இரும்புத்தலை
  5. ஐவளிநாடு
  6. நாட்டுமங்களம்
  7. ராஜபோஜ
  8. ராஜவாசல்
  9. கலியன்
  10. சானி
  11. மலைநாடு
  12. பதினொரு நாடு
  13. துளுவ வேளாளர் அல்லது துளுவன்

அகமுடையார் குல பட்டங்கள்

  1. தேவர்
  2. சேர்வை
  3. பிள்ளை
  4. முதலியார்
  5. உடையார்
  6. தேசிகர்
  7. அதிகாரி
  8. மணியக்காரர்
  9. பல்லவராயர்
  10. நாயக்கர்
  11. ரெட்டி
  12. செட்டியார்
இதை தவிர்த்த ஏனைய பட்டங்கள்
  1. வானவர்
  2. பொறையர்
  3. வில்லவர்
  4. உதயர்
  5. மலையன்
  6. மலையான்
  7. வானவன்
  8. வானவராயன்
  9. வல்லவராயன்
  10. பனந்த்தாரன்
  11. பொறையான்
  12. மலையமான்
  13. தலைவன்
  14. மனியக்காரான்
  15. பூமியன்
  16. கோளன்
  17. நாகன்
  18. பாண்டியன்
  19. கொங்கன்
  20. அம்பலம்
  21. நாட்டான்மை


  • தமிழகம் மற்றும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திர,கேரளா உள்ளிட்ட தென்னிந்தியா முழுவதும் பலவேறு பட்டப்பெயர்களுடன் வசித்து வருகின்றனர். இதைதவிர்த்து, இலங்கை, மலேசியா, பர்மா, சிங்கப்பூர் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பெரும்பாலான அகமுடையார் குலத்தினர் பல தலைமுறைகளாக பூர்வீகமாக வசித்து வருகின்றனர். தமிழகத்தின் அனைத்து பகுதியிகளிலும் அகமுடையார் இனத்தினர் பரந்து விரிந்து வாழ்ந்து வருகின்றனர்.


"பெரும்பாலும் அகமுடையார் இனத்தினரின் பட்டங்களையும், பட்ட பெயர்களையும் வைத்து பலவாறு தமிழகம் முழுவதும் சிதறிக் கிடக்கின்றனர்"


  • தென் தமிழகத்தில் அகமுடையார்களை சேர்வை என்றும் மேலும் முதலியார்,பிள்ளை என்ற பட்டங்களுடன் வட தமிழகத்திலும், தேவர்,பிள்ளை,அதிகாரி,உடையார்,நாயக்கர், தேசிகர் போன்ற பல பட்ட பெயர்களுடன் மத்திய தமிழகத்திலும் அறியபடுகின்றனர்.
அகமுடைய தேவர்:
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கோயம்புத்தூர், திண்டுக்கல், திருப்பூர், விருதுநகர், திருநெல்வேலி, மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் தேவர் என்ற பட்டப் பெயரை தாங்கி அகமுடையார் குலத்தினர் அறியபடுகின்றனர்.
அகமுடைய சேர்வை:
இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் சேர்வை என்ற பட்ட பெயரை தாங்கி அகமுடையார் குலத்தினர் அறியபடுகின்றனர்.
அகமுடைய முதலியார்,துளுவவேள்ளார் ,உடையார் மற்றும் பிள்ளை:
காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சென்னை, பெரம்பலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் முதலியார் என்ற பட்ட பெயரை தாங்கி அகமுடையார் குலத்தினர் அறியபடுகின்றனர்.


Saturday, August 15

கணத்ததோர் அகமுடையார்


இக்கட்டுரையானது அகமுடையார்என்பதன் தோற்றுவாய் மற்றும் அகமுடையார்களுக்கு கனத்ததோர்என்ற பட்டம் கிடைத்த காரணத்தை ஆராய்கிறது.மேலும் இக்கட்டுரை பழந்தமிழ்நாட்டில் காவல் முறை தோன்றிய காரணத்தையும் கூறுகிறது. தொடக்ககாலத்திலே மனிதன் தன் உணவுத் தேவைக்காக மலைகளையும்(குறிஞ்சி) பின் காடுகளையும்(முல்லை) சார்ந்து இருந்தான்.நாளடைவில் அறிவு வளர்ச்சி ஏற்பட்டு,நாகரீகம் தோன்ற ஓரு சாரார் நீர்மிகுந்த இடங்களில் தங்கு பயிர் தொழில் ஈடுபட்டனர்.அவ்வாறு வேளாண்மைத் தொழிலை மேற்கொண்ட கூட்டத்தினர் அகவாழ்க்கையினர் (அகக்குடி-நாகரீகமடைந்த சமுதாயத்திற்குள் வாழ்ந்த குடியினர்) என்றும் தொடர்ந்து வேட்டைத் தொழிலில் ஈடுபட்டு வந்தவர்கள் புறவாழ்க்கையினர் (புறக்குடி ) என்று இரு பிரிவாக இருந்தனர்.நாளடைவில் புறவாழ்க்கையிலிர்ந்த வேடுவர் கூட்டத்தினருக்கு போதிய உணவுகள் கிடைக்காமல் போக அவர்கள் அகவாழ்க்கை வாழ்ந்த கூட்டத்தார் சேகரித்த வேளாண் பொருட்களை கவர்ந்து செல்ல ஆரம்பித்தனர். புறவாழ்க்கையினரின் கவர்தலில் இருந்து தாம் சேகரித்த தானியப்
பொருட்களையும் மற்றும் தம்முடன் உணவுக்காகவும்,துணைக்காகவும் வைத்திருந்த விலங்குகளை பாதுகாப்பதற்காக அகவாழ்வினர் தக்க காவல் முறையை ஏற்படுத்தினர். அந்தக் காவல் தொழிலாளர்களுக்கு அகவாழ்வினர் தமது தானியத்திலிருந்து சன்மானம் கொடுத்து வந்தனர்.நாளடைவில் வருவாயை பெருக்கிக் கொள்வதற்காக காவல் தொழிலாளர்கள் தமக்கு கப்பம் வசூலிக்கத் தலைப்பட்டனர், இவர்களை மேலாண்மை புரிந்தவர்களே முறையே அரசன், தளபதி ஆகினர்! இவர்களின் மேலாண்மையின் கீழே மக்கள் முதலில் பாதுகாவலை பெற்றனர்.இதுவே பிற்காலத்தில் நீதி/சட்டம் ஒழுங்கு மேலும் பல அரசின் செயல்பாடுகள் போன்றவை தோன்ற அடிப்படைஆயிற்று.இதுவே அரசியலின் ஆரம்பம் ஆகும்.அந்தக் காவல் தொழில் புரிந்து வந்த முறை கணஆட்சிமுறை என்றும் கூறப்பட்டது.கணஆட்சி ஏற்பட்ட பின் காவலர்கள் கணத்தார்கள் என்றும்,கணநாதர்கள் என்றும் அழைக்கப்பட்டனர்.

நன்றி www.agamudayarotrumai.com

Monday, August 10

பிற்கால சோழர்கள் படை


பிற்கால சோழர்கள் தங்களுடைய ஆட்சிக்குட்பட்ட பிற நாடுகளில் வேளிர் படை, அகம்படியர் படை இவர்களை பாதுகாப்பிற்காகவும், நிர்வாகத்திற்காகவும் அமர்த்தியுள்ளார்கள்.அகம்படியர் மைசூர், வாராங்கல், முதல் இலங்கை வரை இருந்துள்ளனர்.அகம்படியர்கள் தஞ்சையில் தேவர் என்றும் பிள்ளை என்றும் அழைக்கப்படுவார்கள்.தென்பாண்டி மண்டலத்தில் சேர்வை,தேவர்,பிள்ளை என்றும் அழைக்கப்படுவார்கள்.
தொண்டைமண்டலதில் முதலியார்,உடையார்,நாயக்கர் என்றும் அழைக்கபடுவார்கள்.அதாவது அரசு நிர்வாகத்தில் இருப்பவர்கள் பிள்ளை என்றும், போர் மற்றும் இராணுவத்தில், காவல் கடமையில் இருப்பவர்கள் தேவர்கள்,நாயக்கர்கள் என்று அழைக்கபட்டனர்.நிர்வாகம் மற்றும் காவல் கடமையில் இருப்பவர்கள் முதலியார் மற்றும் சேர்வை என அழைக்கப்பட்டனர்.


Friday, August 7

பதினொரு நட்டார்கள்

வீர மரபினராகிய அகமுடையார்களில் பதினொன்று நட்டார்கள் பேராவூரணி பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.



பதினொரு நட்டார்கள் :

1. ஆவணம்
2. நெடுவாசல்
3. வேம்பங்குடி
4. களத்தூர்
5. தென்னங்குடி
6. வீரியனங்கோட்டை
7. குருவிக்கரம்பை
8. நாடியம்
9. துறையூர்
10. முடப்புளிக்காடு
11. ஆண்டார்கோட்டை


பதினோரு நாட்டார்கள் ராஜகுல அகமுடையார் பிரிவை சேர்ந்தவர்கள் தேவர் மற்றும் சேர்வை பட்டங்கள் பயன்படுத்துபவர்கள்.தஞ்சை நாடாளுமன்ற தேர்தலில் 1956இல் வெற்றி பெற்ற வயிரவன் சேர்வை 1962இல் வெற்றி பெற்ற வயிரவத்தேவர் இருவரும் பதினோரு நாட்டார்களே.அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில் பதினோரு நாட்டார்கள் உள்ளனர்.



Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...