கங்கையிலும் புனிதமானது நூபுர கங்கை என ஆழ்வார்களால் பாடப்பட்டது. அத்தகைய சிறப்பு வாய்ந்த அழகர்மலையில் வீற்றிருக்கும் கள்ளழகருக்கு நடத்தப்படும் விழாக்களில் சித்திரைத் திருவிழா முக்கியத்துவம் வாய்ந்தது; மதுரையின் பாரம்பரியத் திருவிழாவாகவும் போற்றப்படுகிறது. முன்னொரு காலத்தில் சுதபஸ் மகரிஷி நூபுர கங்கையில் தீர்த்தமாடி, அழகர் சுந்தரராஜ பெருமாளை நோக்கி தவம் மேற்கொண்டிருந்தார். அந்த சம யம் அங்கு வந்த துர்வாச முனிவரை அவர் கவனிக்க வில்லை. அதனால் துர்வாசர் கோபம் கொண்டு, ‘மண்டூக பவ’ என்று சாபமிட்டு விடுகிறார்.
ஒரு தவளையாகப் போகும்படி தன்னை சபித்த துர்வாசரிடம், சுதபஸ் மகரிஷி சாப விமோசனம் கோரினார். துர்வாசர் அறிவுறுத்தியபடி மதுரை வைகை நதிக் கரையில் சுதபஸ் தவம் இயற்றினார். சித்திரை மாத பௌர்ணமிக்கு அடுத்தநாள் பெருமாள் கருட வாகனத்தில் காட்சியளித்து, சுதபஸ் மகரி ஷிக்கு சாப விமோசனம் அளித்தார். இதனை அடிப்படையாகக் கொண்டு பிற்காலத்தில் இவ்விழா துவக்கப்பட்டது.
சித்திரைத் திருவிழாவின் ஆறாம் நாளான ஏப்ரல் 26 அன்று பெருமாள் அங்கிருந்து சேஷ வாகனத்தில் புறப்பட்டு தேனூர் மண்டபம் வருகிறார். அன்று பகல் 1 மணி அளவில் தங்கக் கருட வாகனத்தில் அலங்கார பூஷிதராக, சுதபஸ் மகரிஷிக்கு (மண்டூக முனிவர்) சாப விமோசனம் அளிக்கிறார். அப்போது சுத பஸ் மகரிஷியின் சிலை வைக்கப்பட்டிருக்கும். சாப விமோசனம் பெற்றதை குறிக்கும் விதமாக நாரை பறக்க விடப்படும். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்வர். அதன் பின்னர், கருட வாகனத்தில் வண்டியூர் அனுமார் கோயிலுக்குச் சென்று பக்தர் களின் காணிக்கைகளை ஏற்பார், பெருமாள். இரவு முழுவதும் ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சிகள் நடைபெறும்.
திருமலை நாயக்கர் காலத்திற்கு முன்னால்வரை பெருமாள் அழகர் மலையில் இருந்து புறப்பட்டு அலங்காநல்லூர் வழியாக தேனூர் கிராமத்தில் வைகை ஆற்றில் இறங்கி, வைகை வடகரையோரத்தில் சுதபஸ் மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த நிகழ்ச்சி நடைபெற்றது.இத் தேனூர் கிராமமானது அகமுடையார் சமுதாய மக்கள் பெரும்பான்மையாக ,பாரம்பரியமாக வசித்து வரும் கிராமம் ஆகும்.
திருமலை நாயக்கர் ம துரையை ஆண்டபோது சைவ-வைணவ ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக மாசி மாதத்தில் நடைபெற்று வந்த மீனாட்சி கல்யாணத்தை சித்திரை மாதத்திற்கு மாற்றினார். இவ்வாறு காலம் காலமாக தேனூர் கிராமத்தில் நடந்து வந்த இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வை மதுரைக்கு மாற்றிய போது,அதற்க்கு பிரதிபலனாக மதுரையில் தேனூர் மண்டபத்தை எழுப்பி,தேனூர் கிராம மக்களுக்கு மரியாதையும் செய்யும் உரிமையை செப்புப் பட்டயமாக எழுதித் தந்தார்.
மேலும் சிறப்பாக மற்ற மண்டபங்களில் அழகர் பெருமாள் எழுந்தருளும் போது,மண்டபத்தின் உரிமை உடையவர்களால் கோவிலுக்கு குறிப்பிட்ட பணம் செழுத்த வேண்டும்,ஆனால் தேனூர் மண்டபத்தில் ஸ்வாமி இறங்குவதற்க்கு இறைவனே பணத்தை தேனூர் கிராம மக்களுக்கு அளித்து வருவது நடைமுறையாகி அது இன்று வரை தொடர்கிறது.
கூடுதல் செய்தி:
மாவலி வானதிராயர் இவரே மதுரைப் பாண்டியர்களை வென்றவர். இன்றைய அழகர்கோவிலை நவினப்படுத்திக் கட்டியவர்,கோட்டையை எழுப்பியவர். இவர் தம் கல்வெட்டுகளில் தம்மை மாவலி அகம்படிய வானாதிராயன் என்றே குறிப்பிட்டுள்ளார்.
மாவலி வானதிராயர் இவரே மதுரைப் பாண்டியர்களை வென்றவர். இன்றைய அழகர்கோவிலை நவினப்படுத்திக் கட்டியவர்,கோட்டையை எழுப்பியவர். இவர் தம் கல்வெட்டுகளில் தம்மை மாவலி அகம்படிய வானாதிராயன் என்றே குறிப்பிட்டுள்ளார்.
சிவகங்கை சீமையில் உள்ள மானாமதுரை(வானாதிராய மதுரை),இராசகம்பீரம்(வானராய கம்பீர கோட்டை) முதலிய இடத்தில் வானாதிராய இனமாக ராஜ குல அகமுடையரே அதிகமாக வாழ்கிறனர். சின்னமனூர் அகமுடைய பனந்தாரன்(வானாதிராயன்),பந்தளம்(அகமுடைய பனந்தார ராம வர்மா)சுவாமி ஐய்யப்பன் வழி வந்த மன்னர் போன்றவர்கள் பனந்தார வம்சத்து அகமுடையரே.
No comments:
Post a Comment