Friday, May 3

இராதாகிருட்டின பிள்ளை

கரந்தைத் தமிழ்ச் சங்கத்தை நிறுவிய பெருமையினைப் பெற்றமையால், சங்கம் நிறுவிய துங்கன் எனப் போற்றப் பெற்றவர் இராதாகிருட்டினன். 



 தன் முயற்சியால் தோன்றிய கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் எவ்விதப் பதவியினையும் ஏற்காமல், அடிப்படை உறுப்பினராய் இருந்து பெருந்தொண்டாற்றிய பெருமைக்கு உரியவர் இவர். சங்கம் வளர உறுப்பினர்களின் எண்ணிக்கையினை அதிகப்படுத்துவதுதான் முதற் படி என்பதை உணர்ந்த இராதாகிருட்டினன், தான் பணியாற்றிய தனுக்கோடி அலுவலகத்தில் தன்னுடன் பணியாற்றும் சக அலுவலர்களையும், தனுக்கோடியின் வணிகர்களையும், ஒப்பந்தக் காரர்களையும் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் உறுப்பினர்களாக்கினார்.


    தன் மனைவி செண்பக வள்ளி அம்மாள் அவர்களையும், 1916 ஆம் ஆண்டிலேயே, கரந்தைத் தமிழ்ச் சங்க உறுப்பினராக்கினார். இராதா கிருட்டினனின் மனைவி செண்பக வள்ளி அம்மாள் அவர்கள்தான், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதல் பெண் உறுப்பினர் என்ற பெருமையினைப் பெற்றவராவார்.

தகவல்கள் : கரந்தை ஜெயக்குமார் 

ஞானசுந்தரம் தேவர்


மன்னார்குடியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற முதல் சட்டமன்ற உறுப்பினர் ஞானசுந்திரம் தேவர்.

மறையூர் அன்னசத்திரம்

மாமன்னர் மருதுபாண்டியரால் உருவாக்கப்பட்ட மறையூர்  {நரிக்குடி} அன்னசத்திரம்







புகைப்படங்கள் மற்றும் தகவல் 

மாவீரர் நல்லகண்ணு சேர்வை



சில நாட்களுக்கு முன் மதுரையின் முக்கிய இடங்களில் மெகா போஸ்டர் ஒன்றை ஒட்டியிருந்தனர். அந்தப் போஸ்டரில் ‘செத்த கெழவன் எழுதிவெச்ச ஒத்த சொத்து வீரமடா’ என்ற வாசகம் கொட்டை எழுத்துக்களில் இருந்தன. அந்த வரியை எழுதியவர் ‘வைரமுத்து’ என்று குறிப்பிட்டிருந்தனர். முதியவர் ஒருவரின் படத்தைப் போட்டு இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் என்று அச்சிட்டிருந்த அந்தப் போஸ்டரில், அந்த முதியவரின் பெயர் ஏனோ இடம்பெறவில்லை. 
அவர் யாராக இருக்கும்?’ என்று மனதில் அசைபோட்டபடியே அந்தப் போஸ்டரைக் கவனித்த வெளியூர்க்காரர்கள் அனேகம் பேர் இருப்பார்கள்.

யார் அந்த முதியவர்? மதுரைக்காரர்களுக்கு நன்றாகவே தெரியும். அவர் பெயர் நல்லகண்ணு சேர்வை. ‘மதுரை மண்ணின் அழிக்க முடியாத அடையாளம் மாவீரன் ஐயா நல்லகண்ணு சேர்வை’ என்று ஒரு சமூகத்தினரால் அவர் கொண்டாடப்படுகிறார். மாவீரன் என்ற பட்டம் நல்லகண்ணு சேர்வைக்குக் கிடைத்த பின்னணியைப் பார்ப்போம்.

‘வீரதீர பராக்கிரமம்’ நிறைந்தவராகவும், முதுமைக் காலத்தில் ஆன்மிக நாட்டம் கொண்டவராகவும் வாழ்ந்திருக்கிறார் நல்லகண்ணு சேர்வை. பருத்தி வீரன் என்ற பெயரில் சினிமா ஒன்று வந்ததல்லவா! நிஜ பருத்தி வீரன் நல்லகண்ணு சேர்வை வீட்டில் வேலை பார்த்தவராம். ரஜினி நடிப்பில் பேட்ட வெளியானது அல்லவா! அந்தக் காளி கதாபாத்திரத்தை யாரை மனதில் நிறுத்தி கார்த்திக் சுப்புராஜ் உருவாக்கினார் தெரியுமா? நெல்பேட்டை சீனி என்பவர் மிகப்பெரிய தாதாவாக மதுரையில் வலம் வந்தவர். தற்போது, மதுரையைக் கலக்கிக்கொண்டிருக்கும் அத்தனை தாதாக்களும் நெல்பேட்டை சீனியின் சிஷ்யர்கள்தான்.
நெல்பேட்டையில் இருந்து ‘பேட்ட’–ஐ உருவி ரஜினி படத்தின் தலைப்பாக வைத்தார் மதுரைக்காரரான கார்த்திக் சுப்புராஜ். பேட்ட சினிமாவில் நெல்பேட்டை சீனி வாழ்க்கையோடு தொடர்புடைய சில சம்பவங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அப்பேர்ப்பட்ட நெல்பேட்டை சீனியும்கூட, நல்லகண்ணு சேர்வையின் வார்ப்புதான். எம்.ஜி.ஆர். நடித்த உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் வெளிவராது என்று அப்போது சவால் விட்டார் மேயர் முத்து. எம்.ஜி.ஆரையே எதிர்த்த முத்துவின் தைரியத்துக்கும் துணிச்சலுக்கும் பின்னால் இருந்தவர் நல்லகண்ணு சேர்வை என்று நிறையப் பேசுகிறார்கள் மதுரைவாசிகள்.
~நக்கீரன்~

முத்துச்சாமி சேர்வைக்காரர் என்ற ஓவர்சுப்பிள்ளை

சிவகங்கை அரசில் தளபதியாக பணியாற்றிய சுப்பிரமணிய சேர்வைக்காரரின் பேரனே முத்துச்சாமி சேர்வைக்காரர் இவர் சிவகங்கை ஜமீன் சத்திரபதி போதகுரு மகாராஜாவிடம் பொறியியல் மேற்பாற்வையாளராக பணியாற்றியவர். இவரது நினைவாகவே சிவகங்கையில் ஓவர்சுப் (overseer) பிள்ளை தெரு என்றும் நகரின் ஒரு பகுதிக்கு முத்துச்சாமி நகர் என்றும் பெயரிட்டுள்ளனர்.





~ மீ மனோகரன் ~
~ மருதுபாண்டிய மன்னர்கள் ~

Sunday, February 24

நாகப்ப தேவர்


கோவை இராமநாதபுரமும் ஒலம்பஸ் பேருந்து நிறுத்தமும்:





  • ஒலிம்பிக்ஸ் பேருந்து நிறுத்தம் என்பதே உண்மையான பெயர். பெயர்க் காரணத்துக்கு உரியவர், ஒரு விளையாட்டு வீரர். சுமார் 70 ஆண்டு களுக்கு முன்பு ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்பட்டவர் நாகப்ப தேவர் (அகமுடையார்)
  • ஆனால், இரண்டாம் உலகப் போர் குறுக்கிட்டதால் அப்போது ஒலிம்பிக்ஸ் போட்டி நடக்கவில்லை. அதற்கு அடுத்த முறையும் போரின் பாதிப்புகளால் ஒலிம்பிக் போட்டிகள் நடக்காமல் போனது இவரது துரதிருஷ்டம்.
  • அப்போது கோவையின் கலெக்டராக இருந்த மோரிஸ் என்கிற ஆங்கிலேயர் இவருக்குப் பாராட்டு விழா நடத்தி, இவரது வீடு அருகே அமைந்திருந்த பேருந்து நிறுத்தத்துக்கு ‘ஒலிம்பிக்ஸ்’ என்று பெயரிட்டார். அதன் பின் ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியின் போதும், நாகப்பத் தேவர் தனது வீட்டின் முன் ஒலிம்பிக் கொடி ஏற்றி, ஒலிம்பிக் தீபத்தைத் தனது தெருவில் ஏந்தி வருவதை வழக்கமாக்கிக்கொண்டார். நிறைவேறாத ஒலிம்பிக் ஆசையுடனேயே கடந்த 2007-ம் ஆண்டு இறந்துவிட்டார் நாகப்பத் தேவர்.
  • இவரின் நினைவாகவே கோவை இராமநாதபுரம் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு ஒலிம்பிக்ஸ் பேருந்து நிறுத்தம் என்ற பெயர் வைக்கப்பட்டது.நாளடைவில் இப்பெயர் ஒலிம்பஸ் என்று மக்களால் உச்சரிப்பு மாற்றி ஒலிக்கப்பட்டு இன்று ஒலிம்பஸ் பேருந்து நிலையம் என்றே வழங்கிவருகிறது.
  • கோவை இராமநாதபுரத்தில்  ஒரு தெருவிற்க்கு நாகப்ப தேவர் பெயரிடப்பட்டுள்ளது.
  • நாகப்பத்தேவர்  2007ம் வருடம் இறந்து போனாலும் ஒலிம்பஸ் பேருந்து நிறுத்தம் அவரது நினைவைத் தாங்கி இப்போதும் நின்று கொண்டிருக்கிறது.


ஐந்து இரண்டு உறவின் முறை அகமுடையார்

ஐந்து இரண்டு உறவின் முறை அகமுடையார் தேவர் பட்டம் கொண்டவர்கள் தஞ்சை மாவட்டம் பேராவூரணி சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட சில பகுதிகளில் பரவிவாழ்கின்றனர்.
ஐந்து இரண்டு என பெயர் காரணங்களாக சொல்லபடுபவை ஐந்து + இரண்டு = ஏழு ஊர்களில் கொண்டான் கொடுப்பான் உறவுமுறை கொண்டவர்கள் இந்த ஏழு ஊர்களும் சிவன் கோவில்களை மையமாக கொண்டு திருமண உறவை கொண்டிருந்தனர் வேறு ஊர்களில் இருந்து திருமண உறவு கொள்ளமாட்டார்கள் எனவே ஐந்து இரண்டு உறவின் முறை பெயர் வருவதற்கு காரணமாய் இருந்தது என சொல்லபடுகிறது.
ஏழு ஊர் சிவன் கோவில்கள்
1.காரக்கோட்டை
2.பெருமகளுர்
3.ஊமத்தநாடு
4.விளங்குளம்
5.கொரட்டூர்
6.அம்மையான்டி
7.ஒல்லனூர்
இந்த ஏழு ஊர் அகமுடையார்களுக்கு காரக்கோட்டை தலைமை கிராமம் ஆகும் இவர்கள் பொருளாதர அடிபடையில் மேன்பட்டவர்களாகவும் இருந்து வருகின்றனர் இன்றைய சூழலில் சமூகம் பரந்து விரிந்து காணப்படுகிறது இங்கு விவசாயம் என்பதே முக்கிய தொழிலாகும்.

நன்றி; அகமுடையார் தொகுதி

Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...