Friday, April 13

தேவன்

இலங்கையை சேர்ந்த தமிழ் அறிஞர் கதிர்வேல்பிள்ளை அகராதியில் தேவன் என்பதற்கு குறித்துள்ள பொருள்



அகம்படியன் அரசன் அருகன் ஈட்டிக்காரன் கடவுள் கொழுந்தன் பரிசைகாரன் மடையன்

சோழர் படை

சோழர்களின் முதன்மைப் படைப்பிரிவு அகம்படி நியாயம் எனும் படைப்பிரிவு.



இப்படையில் அங்கம் வகித்தவர்கள்

1.தெரிந்த வில்லிகள் (முறையாக பயிற்சி பெற்ற திறமையான வில் விடும் வீரர்கள்)

2.அகம்படி அணுக்க வில்லிகள் (அரசனை அணுக்கத்தில்  சூழ்ந்து கொண்டு பாதுகாக்கும் விற்படையினர்)

3.வேளைக்காரர் (போர்கலத்தில் பல்வேறு கருவிகளை கையாளும்  உதவி படைப்பிரிவினர்)

4.குதிரைச்சேவகர் (குதிரையில் சென்று போர்புரியும் வீரர்)

5.சேனாதிபதிகள் (படைப்பிரிவின் தளபதிகள்)

6.தண்டநாயகம் (முழுப்படைக்கும் முதன்மையான தளபதிகள்)

அகம்படி சேனை

இலங்கையில் அகம்படியர்கள் சோழர்களின் வீழ்ச்சிக்கு பிறகு இலங்கை அரசர்களின் படைப்பிரிவில் சேர்ந்து படையில் முக்கிய அங்கம் வகித்தனர்.மத்திய கால கல்வெட்டுகள் பல இதை உறுதிபடுத்துகின்றன மேலும் சோழர்களுக்கு எதிராக போர் புரியாமல் கலகத்திலும் ஈடுபட்டுள்ளனர்.12ஆம் நூற்றாண்டை சேர்ந்த மன்னர் பராக்கிரம பாகு என்பவரின் காலத்திலிருந்து அகம்படியர் பற்றிய கல்வெட்டுகள் இலங்கையில் கிடைக்கிறது.



மகாவம்சத்தில் பராக்கிரபாகுவின் அப்பந்த மண்டலிக என்ற பாலி மொழி சொல் அகம்படி மண்டலிகர் (அகம்படி இனத்தின் முதல்வன் தமிழ்கல்வெட்டுகளில் வரும் அகம்படி முதலி) என்பதே.தம்பதெனியா, கம்பளை, கோட்டை ஆகிய இராசதானிகளின் அரசபடையில் அகம்படியர் இருந்தனர். நெட்டி மற்றும் மூலக என இரண்டு பிரிவாக அகம்படியர் இருந்துள்ளனர். இலங்கையின் தற்காப்பு கலையாக உள்ள அங்கம்போறா(தமிழில் அங்கவெட்டு) எனும் தற்காப்புக்கலை அகம்படியர்களின் தற்காப்புக்கலையே. மலையாள அகம்படியர்களான நாயர்கள் இன்றும் களரியாபட்டு என்னும் தற்காப்பு கலையை பயின்று வருகின்றன்ர.நாம் சிலம்பம் மட்டுமே பயின்று வருகிறோம்.

Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...