Saturday, September 10

அகப்படை

படையை அதன் நிலை அடிப்படையில் இருபடைகளாக பிரிக்கலாம்
*அகப்படை
*மறப்படை


 
அகப்படை என்றால் மூலப்படை, அந்தரங்கமான சேனை அல்லது அணுக்கபடை.ஒரு நாட்டுக்கு இன்றியமையாத படைகளை மூலப்படை, கூலிப்படை, நாட்டுப்படை, காட்டுப்படை, துணைப்படை, பகைப்படை என ஆறு வகையாகச் சொல்வர்.
மூலப்படை என்பதற்கு தொல்படை என பொருளுண்டு
இவற்றில் தொல்படையான மூலப்படையே சிறப்பானது.
வள்ளுவர் மூலப்படையை தொல்படை என தனது குறளில் "
உலைவு இடத்து ஊறுஅஞ்சா வன்கண் தாலைவுஇடத்துக்
தொல்படைக்கு அல்லால் அரிது" குறிக்கிறார்.
விளக்கம்:போரில் வலிமை குன்றினாலும் இடையூறுகளுக்கு அஞ்சாத அஞ்சாமை தொன்றுதொட்டு பெருமையுடைய படைகளுக்கு அல்லாமல் முடியாது.

தினமும் பயிற்சி செய்து நீண்ட காலமாக நிலைத்திருக்கும் படை அகப்படை.

மூலப்படை என்பது அரசரின் முன்னோரை தொடங்கி வரும் சேனை.இப்படையின் சிறப்பானது அரசன் மீது கொண்டுள்ள அன்பும் போரில் வலிமை குன்றினாலும் பயந்து விலகாத வீரமுமாகும்.

இராமாயணத்தில் மூலபல வதைபடலத்தில் இந்திரஜித்தின் இறப்பிற்கு பின் தாங்கள் போர்புரிய செல்வதாக மூலப்படயினர் கூறினர் இராவணன் இராமனையும் இலக்குவனையும் கொல்லும் படி கேட்டுகொள்கிறான்.மூலப்படை வருவதை கண்டு வானரபடை ஓட்டம் பிடித்தனர்.ஜாம்பவான் பயந்து ஓடியதற்கு அவமானபடுகிறார்.வீபஷணன் மூலப்படை பற்றியும் அதன் வலிமை பற்றியும் இராமனுக்கு சொல்கிறான்.இந்த அதிசய போரை சிவபெருமான், பிரம்மன் மற்றும் தேவர்கள் பார்க்கிறார்கள்.மூலப்படையை இராமன் அழித்ததை உலகமே கண்டு வியந்தது என கம்பர் கூறுகிறார்.

பரிமேலழகர் "மூலப்படை அறுவகை படையுள்ளும் சிறப்புடையது" என கூறுகிறார்.

யது குல மருதரசர்


மருது பாண்டியர்களின் வீரம் மற்றும் கொடை தன்மை பற்றி தெரிந்த அளவுக்கு அவர்களுடைய தமிழ் பற்றை பற்றி பலர் அறியவில்லை புலவர் பலர் கூடி அமர்ந்து தமிழ் வளர்க்க தமிழ் சங்கம் நிறுவியிருந்தனர்.வடமொழியில் அமைந்த வானர வீர புராணத்தை தமிழ் மொழியில் மாற்ற உதவினர்.இப்புராணம் தலபுராணமாக மானாமதுரையில் இருக்கும் சிவதலத்திற்கு பாடபெற்றது. அப்புராணத்தை தமிழ் மொழியில் மாற்றி அமைத்த புலவர் கடவுளை பற்றிய பாடலுக்கு பின் மருதுவை பற்றி கூறுகிறார் அதில் பகைவர்க்குச் சிங்கத்தை போன்றவன்(அடையலர் கேசரி) கல்வி மற்றும் செல்வம் உடையவன் காளையார் கோயிலில் கோபுரம் மற்றும் தேர் செய்தவன் உடையார் வேளின் புதல்வன் விசுவை மருது அரசர் உதவ வானரவீர புராணத்தை வடமொழியிலிருந்து தமிழ்மொழியில் எழுதியது மதுரை தெய்வசிகாமணியின் புதல்வர் என தம்மை பற்றி ஆசிரியர் கூறுகிறார். அடுத்து புராணத்தின் இறுதி பாடலில் மானாமதுரை வாழ்க(இந்து நன்நகரம்) வீற்றிருக்கும் இறைவன் இறைவியான சோமேசர் ஆனந்தவள்ளி வாழ்க என கூறி மருதரசரை பற்றி கற்பகம் போன்ற கொடைக்கை உடைய யது குலத்தை சேர்ந்த மருதரசர் அவரின் மைந்தர்கள் கிளைகள் சார்ந்தோர் வாழ்க வாழ்க என புராணத்தை நிறைவு செய்கிறார்.

Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...