பச்சையப்ப முதலியார் 1754 ஆம் ஆண்டு
பெரியபாளையத்தில் பிறப்பதற்கு முன்பே அவரது தந்தை
விஸ்வநாத முதலியார் காலமாகிவிட்டிருந்தார்.வறுமையில் வாடும் குடும்பம் சென்னையைத் தஞ்சமடைந்தது.அப்போதைய
கிழக்கிந்தியக் கம்பெனியின் வெள்ளைக்கார துரைகளுக்கு துபாஷியாக(கணக்குப் பிள்ளை / மொழி பெயர்ப்பாளர் / செயலாளர்)இருந்த நாராயண பிள்ளையிடம் உதவியாளராகச் சேர்ந்தார் பச்சையப்ப முதலியார்.சிறுவனாக நாராயண பிள்ளையின் உதவியாளராக சேர்ந்த பச்சையப்ப
முதலியார், நாராயண பிள்ளை திடீரென்று மரணமடைந்ததும்,தனது 16ஆவது வயதில் பெüனி துரையின் துபாஷியாக உயர்ந்தார்.பெüனி துரை சென்னையின் மேயராக நியமிக்கப்பட்டபோது,பச்சையப்ப முதலியாரின் செல்வாக்கும் இமயமாக உயர்ந்தது.சென்னையின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவராகவும்,அதிகார பலம் மிக்கவராகவும் பச்சையப்ப முதலியார் திகழ்ந்தார்.பெரும் தனவந்தராக இருந்தாலும் மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தவர் பச்சையப்ப முதலியார்.அதிகாலையில் எழுந்து கூவம் ஆற்றில் நீராடி (அப்போதெல்லாம் கூவம் சாக்கடையாக இருக்கவில்லை) கோமளீஸ்வரன்பேட்டை ஆலயத்திலும்,கந்தகோட்டத்திலும் சாமி கும்பிட்டுவிட்டுத்தான் தனது அன்றாட அலுவல்களைத்தொடங்குவார்.அடிக்கடி காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கும்,சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கும் சென்று வருவார். அதேபோல,சாமி தரிசனம் செய்ய தஞ்சாவூருக்கும் அவ்வப்போது சென்று வருவதும் வழக்கம்.1794 மார்ச் 21 ஆம் நாள்,திருவையாற்றில் தனது 40வது வயதில் அவர் காலமானார். உயில் எழுதி வைத்து இறந்த வெகு சில இந்தியர்களில் பச்சையப்ப முதலியாரும் ஒருவர்.இந்து மதத்தைப் பரப்பவும்,பாதுகாக்கவும் நடத்தப்படும் செயல்பாடுகளுக்கு நாலரை லட்சம் ரூபாயும், இந்து இளைஞர்களின் ஆங்கில படிப்புக்கு உதவ ஏழு லட்சம் ரூபாயும்,தனது உயிலில் ஒதுக்கி இருந்தார்.அவர் 1794இல் விட்டுச் சென்ற சொத்தின் மதிப்பு ஏறத்தாழ 17லட்சம் ரூபாய். 1990இல் அதன் மதிப்பு 4,500 கோடி ரூபாயாகக்கணக்கிடப்பட்டுள்ளது. பச்சையப்ப முதலியாரின் சொத்துகளை நிர்வகித்து வரும் பச்சையப்பன் அறக்கட்டளை,ஆறு கல்லூரிகளையும்,ஒரு தொழிற்கல்வி நிலையத்தையும்,
16 பள்ளிகளையும் நடத்தி வருகிறது.