Showing posts with label அகமுடையார் இன முன்னோர்கள். Show all posts
Showing posts with label அகமுடையார் இன முன்னோர்கள். Show all posts

Thursday, March 8

முத்துகருப்பணன் சேர்வைகாரர்


மாபெரும் வீரராக திகழ்ந்தவர் திருச்சுழியில் இருக்கும் மிகவும் பழமை வாய்ந்த திருமேனிநாதசுவாமி கோயிலின் கம்பத்தடி மண்டபத்தை கட்டியவர் முத்துகருப்பணன் சேர்வைகாரர். முத்திருளாயி அம்மாள் மற்றும் ஆண்டியண்ணன் சேர்வைக்காரர் சிலையும் இம்மண்டபத்தில் உள்ளது.

Wednesday, February 7

அம்மணி அம்மாள்

அம்மணி அம்மாள் பழந்தமிழ் குடியான அகமுடையார் இனத்தில் பிறந்தவர் திருவண்ணாமலையில் வாழ்ந்த பெண் சித்தராவார்.திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோயில் வடக்கு கோபுரத்தினை கட்டிய பெருமை உடையவர்.

அம்மணி அம்மாள்

இவருடைய ஜீவ சமாதி திருவண்ணாமலை ஈசான்ய லிங்க கோயிலின் எதிரே அமைந்துள்ளது.இவர் திருவண்ணாமலை அருகேயுள்ள சென்ன சமுத்திரம் என்ற ஊரில் பிறந்தவர் திருவண்ணாமலை அருணாச்சலேசுவர் கோயிலின் வடக்குக் கோபுரம் பாதி மட்டுமே கட்டப்பட்ட நிலையைக் கண்டு, அதனைக் கட்ட எண்ணம் கொண்டார். இதற்காகப் பக்தர்கள், செல்வந்தர்களின் உதவியை நாடி கோபுரத்தினைக் கட்டி முடித்தார். திருவண்ணாமலையின் வடக்குக் கோபுரம் அம்மணியம்மாள் கோபுரம் என்றே அழைக்கப்படுகின்றது.



அம்மணி அம்மன் கோபுரம் (171 அடி உயரம்)



இவர் பூமிக்குள் புதைந்திருக்கும் புதையலையே அறிந்து கொள்ளும் வல்லமை வாய்ந்தவர் என்று கூறிகின்றார்கள்.அம்மணியம்மாளின் இயற்பெயர் அருள்மொழியாகும். இவர் திருவண்ணாமலை அருகேயுள்ள சென்ன சமுத்திரம் என்ற கிராமத்தில் பிறந்தவர். சைவக் கடவுளான சிவபெருமான் மீது அளவற்ற பக்தியைக் கொண்டிருந்தார். பெற்றோருடன் ஒரு முறை அண்ணாமலைக்கு வந்த போது, மீண்டும் கிராமத்திற்குத் திரும்ப மறுத்து அண்ணாமலையிலேயே தங்கிவிட்டார். அதன் பிறகு பருவம் வந்த போதும் திருமணம் செய்து கொள்ளாமல் துறவியாக வாழ்ந்தார்.நமசிவாய மந்திரத்தினை உச்சரித்து திருநீறு தந்து எண்ணற்றவர்களின் நோய்களையும், வாழ்க்கைப் பிரச்சனைகளையும் தீர்த்து வைத்தார். அண்ணாமலையார் கோயிலின் வடக்குக் கோபுரம் பாதி கட்டப்பட்ட நிலையில் இருப்பது கண்டு மனம் வருந்தினார். பின் தாமே முன்வந்து கோபுரத்தினைக் கட்ட முடிவு செய்தார். அதற்கான பொருட் செலவுகளை நன்கொடைகள் மூலம் பெற்றார். ஒரு முறை செல்வந்தர் ஒருவரின் வீட்டிற்குச் சென்று கோபுரத்தினைக் கட்ட பணம் கேட்ட பொழுது, அச்செல்வந்தர் பணத்தினை வைத்துக் கொண்டு தன்னிடம் பணமே இல்லையென்றார். ஆனால் அண்ணாமலையாரின் அருள் பெற்ற அம்மணி அம்மாள், அச்செல்வந்தரிடம் இருக்கும் தொகையைச் சரியாகக் கூறி அப்பணத்தினை நன்கொடையாகக் கேட்டார். தன்னிடம் இருப்பதை அறிந்து சரியாகக் கூறும் அம்மாளை வணங்கி அச்செல்வந்தர் பணத்தினைக் கொடுத்ததாக ஒரு தொன்மக் கதையுண்டு.



அம்மணி அம்மாள் 17ம் நூற்றாண்டின் இறுதியில் ஜீவ சமாதியடைந்தார்.இவரது சமாதி ஈசான்ய லிங்க சன்னதிக்கு எதிரில் அமைந்துள்ளது.இந்த மடத்தில் தீபத்திருவிழா வழிபாடு சிறப்பாகும்.திருவண்ணாமலையில் தீபம் ஏற்றியதும், அம்மணி அம்மாளின் ஜீவசமாதியில் நெய்தீபம் ஏற்றப்படும். மடத்தின் முன்பு பக்தர்கள் தீபம் ஏற்படுத்தி வழிபடுகின்றார்கள்.இம்மடத்தில் கொடுக்கப்படும் விபூதி பிரசாதம் புகழ்பெற்றது

Saturday, December 23

ராமசாமி சேர்வை


தென்னாட்டு வீர மருது பாண்டிய மன்னன் வரலாற்று கும்மியின் ஆசிரியர் ராமசாமி சேர்வை அகமுடையார் இனத்தவர்கள் பற்றிய சிறு குறிப்பை கூறுகிறார் (பெரும்பாலும் அகம்படியர்கள் தங்கள் வரலாற்றை எழுதவில்லை மிகச்சிலரே எழுதியுள்ளனர்) அதில் சேர சோழ பாண்டிய மன்னர் மூவரும் ஒரே ஷத்திரிய குலத்தில் உதித்தவர்கள் இவர்களின் வழித்தோன்றல்களான பல்லவர்களும் சித்தர்பிரான் சுந்தரானந்தர்,வங்கி மன்னன் கந்தவர்மன்,கலிங்கத்து கொற்றவன் கருணாகரன்,திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளல்,தொண்டைமண்டலச் சீமான் பச்சையப்ப முதலியார்,திருச்சிராப்பள்ளி தாயுமான சுவாமிகளும்,சிவகங்கை மருது சகோதரர்களும் இந்த வழித்தோன்றல் என்பது சரித்திரம் கண்ட உண்மையாகும்.சிதம்பரம் நடராஜ கோயிலில் சிவபக்தியில் சிறந்த ஏழாயிரம் அகம்படியார் அணுக்கத் தொண்டர்கள் சேவை செய்தனர்.

Wednesday, February 22

வீ .நாராயணசாமி அகம்படியர்



மதுரை ஜில்லா ஹிந்துமகாசபை மாகாண கமிட்டி மெம்பராக இருந்து பல நற்காரியங்கள் செய்தவர்.

Tuesday, January 17

எம்.ஆர்.குருசாமி முதலியார்


அன்றைய இந்தியாவின் புகழ்பெற்ற மருத்துவர்  குருசாமி முதலியார் மைசூர் மாகாணத்தின் நிலமங்களா என்னும் ஊரில் 1880இல் பழந்தமிழ்க்குடியாம் அகமுடையார் இனத்தில் ராமசாமி முதலியார் என்னும் புகழ்பெற்ற கட்டிட கான்ட்ராக்டரின் மகனாக பிறந்தார்.மைசூரில் பள்ளிக்கல்வியை முடித்தவர் பெங்களூர் மத்திய கல்லூரியில் B.A பட்டம் பெற்றார்.ராஜாஜி இவருடைய கல்லூரி  நண்பர்.



பின்னர் மெட்ராஸ் மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பில் சேர்ந்தார்.முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று தஞ்சை மருத்துவ கல்லூரியில் பணியாற்றினார்.சில ஆண்டுகள் கழித்து மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.ஆங்கில மருத்துவர்கள் மட்டுமே வழங்கப்பட்ட மிகவும் மதிக்கத்தக்க பதவி குருசாமி முதலியார் அவர்களுக்கு வழங்கப்பட்டது முதல் இந்தியராக தெரபாட்டிக்ஸ் பேராசியராக நியமிக்கப்பட்டார்.1950 களில் influenza மெட்ராஸில் மிக அதிகமாக பரவி உயிர் பலிகளை வாங்கிக்கொண்டிருந்த நேரம் ஒரு பேட்டியின் போது எல்கோசின் என்ற மாத்திரையின் மூலம் influenza வை குணப்படுத்தலாம் என கூறினார்.உடனே அந்த மாத்திரையை மக்கள் அதிகளவு வாங்கி குணமடைந்தனர் இதை பல மருத்துவர்கள் மருத்துவ நெறிகளுக்கு புறம்பாக குருசாமி முதலியார் கூறியுள்ளார் என சாடினார் மக்களின் நலனை காட்டிலும் மருத்துவ நெறி பெரியது இல்லை என் கூறி மக்களின் மருத்துவராக தனது இறுதி காலம் வரை பணியாற்றினார்.

Monday, January 16

அ.சி.சுப்பையா

தமிழறிஞர் சுப்பையா

தஞ்சாவூர் மாவட்டத்தைச்  சேர்ந்த திருமக்கோட்டைக் கிராமத்தில் அ.சிதம்பர தேவருக்கும் மங்களதம்மாளுக்கும் 1881ஆம் ஆண்டு  டிசம்பர் 12ஆம் நாள் பிறந்தார்.இவர் தொடக்கக் கல்வியை சிங்கப்பூரில்  பயின்றார்.1894ஆம் ஆண்டு  தமிழ்நாடு திரும்பினார். தமிழ்நாட்டில் சிற்பம், சித்திரம், வைத்தியம், சோதிடம் போன்ற பல துறைகளில் தேர்ச்சிப் பெற்றார்.சுவாமி சதானந்தா அவர்களிடம்  சித்த மருத்துவ முறைகளிலும் பயிற்சி பெற்றார்.மகாத்மா சதாநந்த சாமியவர்களின் அருள் கிடைக்கப் பெற்றமையால், ஆத்மார்த்தமான உபதேசங்களையும், சில அபூர்வ மான வைத்திய முறைகளையும் கற்று, அவரின் ஆசீர்வாதத்தால் ஸ்ரீமதி அஞ்சலையம்மாளை திருமணம் செய்து 1901-ம் வரு­டம் சிங்கப்பூர் வந்தனர். வந்த சில தினங்களின் பின் அரசாங்கப் பதார்த்த பரிசீலனப் பகுதியிலும், சிப்பாய் கோல்பந்து விளையாட்டுப் பகுதியிலும் வேலை செய்த பின் சொந்த வேலைகளில் ஈடுபட்டு சித்திரம் சித்தரிப்பதிலும், சில்லறை கட்டிட வேலைகள் ஒப்பந்தத்திலும் இவ்வாறு பல வேலைகளிலும் சீவியம் நடத்தி வந்தனர். இவ்வாறான வி­யங்களிலும் பரோபகாரமான குணத்தினாலும், பிறர்மேல் வைத்த அன்பினாலும், இவர் பெயர் நம் மக்களுள் மாத்திரமன்றிப் பிறர் மக்களுள்ளும் பிரக்கியாதி பெற்றது. தேடிய திரவியங்களும்  வளரத்துவங்கின. தனலட்சுமியும் கண்ணோக்கினள். இவ்வாறான நிலைமை எய்திய பின்னர்  சிராங்கூன் ரோட்,251- நி. இல்லத்தில்  சித்த வைத்திய பாற்மேசி  எனும் காந்தரசக் கம்பெனியை ஸ்தாபகஞ் செய்து வைத்தியம் நடத்தினர். இவரின் கையால் மண்ணைக் கொடுத்தாலும் பொன் போன்ற  மருந்தானது. ஆகையினால்  இவருடைய வைத்திய நிலைமை மலாய் நாடுகளில் எவ்வளவு தூரம் எட்டுமோ, எத்தனை சந்து பொந்துகள் நுழையுமோ, அத்தனை இடங்களுக்கு எட்டியும், நுழைந்தும் வேலை செய்தமையால் அயல் நாடுகளெங்கணும் பரவத் துவங்கியது.

இவருடைய அதிர்ஷ்டத்தோடு குணமும் மனமும் கூடிக் கொண்டன. கைபாகம் செய்பாகமும் முறை தவறாமல் நிறைவேறியது. தமது வைத்திய சாலையை மென்மேலும் விருத்தியாக்குவதற்கு நினைத்துத் தனிக் கட்டிடங்களாகச் சொந்தத்தில் மேல் கண்ட சிராங்கூன் ரோட், 233, 235-நிம்பர்களில்  மிகவும் விமர்சையாய் நடத்தி வருகின்றார். தனத்துக்கேற்ற குணம்போல் இம்மலாய் நாட்டிலும் சரி, அயல்நாடுகளிலும் சரி பொதுஜன நன்மையின் பொருட்டு எத்தனையோ வி­யங்கள் புரிந்திருக்கின்றன. அவைகளியவையுங் கூற நமது சரித்திரமிடங்கொடாததினால், சிலதை மாத்திரம் இங்கு குறிப்பிடு கின்றோம். சிங்கை விவேகானந்த சங்கம், ஆதித்திராவிட சங்கம், முதலிய சங்கங்களின ஸ்தாபகராயும், சில சங்கங்களின் அங்கத்தவராயும், எவரும் விரும்பத்தக்கவாறு தொண்டு புரிந்திருக்கின்றார்.


Tuesday, January 3

S.ராமலிங்கம் அகமுடையார்

புதுச்சேரி மாநிலத்தில் முதன் முதலில் அகமுடையார் வேளாளர் சங்கத்தை உருவாக்கியவர் நீதிபதி S.ராமலிங்கம் அகமுடையார்

Monday, January 2

B.M.சுந்தரவதன முதலியார்


தமிழ்நாட்டில் முதல் முதலில்
துளுவவேளாளர் சங்கத்தை உருவாக்கி அதன் மூலம் அகமுடையார் (துளுவ வேளாளர்) சமுதாயத்தை ஒருங்கிணைத்து முதல் மாநாட்டை நடத்தியவர் டாக்டர் B.M.சுந்தரவதனன் முதலியார்.


Friday, December 11

முத்து இருளப்ப பிள்ளை

இன்று தென் தமிழ்நாட்டு மக்களின் பசிபோக்கும் உயிர் காக்கும் தண்ணீராக விளங்குவது முல்லைப் பெரியார் அணையாகும்.இந்த அணை உருவாவதற்கு 1789ம் ஆண்டே திட்டம் தீட்டியவர்  இராமநாதபுரம் சேதுபதியின் மந்திரி ,நமது அகமுடையார் இனத் தோன்றல் முத்து இருளப்ப பிள்ளை ஆவார்கள்.
ராமநாதபுர சமஸ்தானத்தில் திவானாக பணியாற்றிய முத்து இருளப்ப பிள்ளை அகமுடையார் இனத்தில் பிள்ளைப் பட்டம் உடையவர்.இவருடைய சிந்தனையில் 1789-ம் ஆண்டு இங்கு அணை கட்ட வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது.
தென் தமிழகத்தில், 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மக்களின் வீடு முழுக்க நிறைந்திருந்தது பட்டினியும் வறுமையும்தான். ‘ஆடைக்கும் கோடைக்கும் வாடாத பனை மரங்களே’ அசந்துவிட்டன. அப்பகுதி மக்களின் ஒரே நீராதாரமாய் இருந்த வைகையிலும் வருடத்துக்கு மூன்று மாதங்களுக்கு மட்டுமே தண்ணீர் கிடைக்கும். அதுவும் நிலையில்லாதது. தண்ணீரைப் பகிர்வதில் சிவகங்கைக்கும், ராமநாதபுர சமஸ்தானத்துக்கும் தகராறுகள் நடந்து மக்களை மேலும் சோதித்தது.
அதேவேளையில் பெரிய அளவில் விவசாயம் இல்லாத திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு, மேற்கு மலையில் உருவான ஆறுகள் மூலம் கடல் வணிகம் கைகொடுத்தது.
இதை நன்கு அறிந்திருந்த முத்து இருளப்ப பிள்ளையின் மனதில் மேற்கே உருவாகி வீணாக கடலில் கலக்கும் ஆற்றினை கிழக்கே திருப்பி வைகையோடு இணைத்தால் வேளாண்மை பெருகும் அதோடு மக்களின் பசிப்பிணியும் நீங்கும் என்ற யோசனை உதித்தது.
உடன் இந்த யோசனையை சேதுபதியிடம் தெரிவித்தார் மந்திரி முத்து இருளப்ப பிள்ளை.இதைக் கேட்டவுடன் தன் சமஸ்தானத்தின் நீண்ட நாளைய பிரச்சனைக்கு தீர்வு கண்டுப்பிடிக்கப்பட்டதை உணர்ந்த மன்னர் தனது அமைச்சரான முத்து இருளப்ப பிள்ளையோடு ஒரு குழுவினை அனுப்பி  முழு விவரம் அறிந்துவரச் சொன்னான்.
அதுவரை மனித காலடிகளே படாத, சூரிய கதிர்களே உட்புக முடியாத, மிகப்பெரிய ராணுவம்போல அணிவகுத்திருந்த மேற்குத் தொடர்ச்சி மலையில் தன் உதவியாளர்களோடு சென்ற முத்து இருளப்ப பிள்ளை, சொல்லெண்ணாத் துயரத்துக்கும் விஷக்கடிகளுக்கும் இடையே, அங்கிருந்த ஆறுகளின் ஊற்றுகளைத் தேடினார். அவற்றை தன் கற்பனை திறனுக்குள் கொண்டுவந்து  முல்லை ஆறு,பெரியாறு ஆகிய இரண்டையும் சேர்த்து ஒரு அணைகட்டிட திட்டம் வகுக்க கட்டுமானத்துக்கான சாத்தியங்களை வழிவகுத்தார்.
அந்த மகிழ்ச்சியோடு மன்னனிடம் வந்தார். அங்கேதான் விதி விளையாடியது. ஏற்கெனவே பஞ்சத்தால் பாதிக்கப்பட்டிருந்த சமஸ்தானத்துக்குப் புதிதாக அணைகட்ட போதுமான நிதி இல்லை என்பதால், இருளப்ப பிள்ளையின் திட்டம் கைவிடப்பட்டது. அவருடைய உழைப்பும் வீணானது. அதற்கடுத்த வருடங்களில் மீண்டெழுந்த தாது வருடப் பஞ்சமும் மக்களை மேலும் இம்சித்தது. இன்றைய எத்தியோப்பியாவானது அன்றைய தமிழகம்.
மீண்டும் கிட்டத்தட்ட நூறாண்டுகள் கழித்து ஆங்கில ராணுவ பொறியாளர் கர்னல் ஜான் பென்னி குவிக் தலைமையில் முயற்சி செய்து 1896 ஆம் ஆண்டு கட்டி முடித்தார் என்பது வரலாறு.
இவ்வாறு முல்லைப் பெரியார் அணை உருவாவதற்கு 1789ம் ஆண்டே திட்டம் வகுத்த முத்து இருளப்ப பிள்ளை அகமுடையார் இனத்தைச் சார்ந்தவர் என்பது அகமுடையார்கள் பெருமைப்பட வேண்டிய விடயம் ஆகும்.
இவருடைய சமாதி இராமநாதபுரம் நீலகண்டி ஊரணியின் வடகரையில் இடிந்த நிலையில் சிறிய கோவில் போல உள்ளது.

முத்திருளப்ப பிள்ளை அவர்களின் சமாதி 

 

இவரின் சமாதி தற்போது பாராமரிப்பின்றி உள்ளதாகவும், இவரின் வாரிசுகள் இச்சமாதி ஆலயத்தை புதுப்பிக்க விரும்புகிறார்கள் என்பது நமக்கு தெரியவரும் செய்தி!

Wednesday, December 9

வயிரவன் சேர்வைகாரர்

ராமநாதபுரம் சமஸ்தானத்தை மன்னன் கிழவன் சேதுபதி ஆண்டு வந்த சமயம், அவரது நம்பிக்கைக்குரிய தளபதியாக விளங்கியவர், சாத்தப்பன் என்கிற காத்த வீர தளவா வயிரவன் சேர்வை.














முருக பக்தரான அவர் அடிக்கடி திருச்செந்தூர் சென்று முருகப் பெருமானை வழிபட்டு வருவது வழக்கம். ஒருநாள் அவர் கனவில் முருகன் தோன்றி, என்னை வழிபட இனி திருச்செந்தூர் வர வேண்டாம். தேவிப்பட்டினம் கடலில் நவபாஷாண கற்கள் இருக்கும் இடத்துக்குக் கிழக்கில் கண்ணாமுனை என்ற இடத்தில் மேலே கருடன் வட்டமிடும். அதற்குக் கீழே கடலில் மாலையும் எலுமிச்சம் பழமும் மிதக்கும். அந்த இடத்தில் கடலுக்கு அடியில் வள்ளி-தெய்வானை சமேதராக சத்ரு சம்ஹார வேலுடன் நான் இருப்பேன். என்னை எடுத்துச் சென்று உங்கள் ஊரில் பிரதிஷ்டை செய்து வழிபடு என்று கூறினார்.
இதோபோன்ற கனவு திருஉத்திரகோச மங்கை என்னும் தலத்தைச் சேர்ந்த ஆதிமங்களேஸ்வர குருக்களுக்கும் தோன்றியதால், இருவரும் மறுநாள் சந்தித்து, கந்தன் கனவில் சொன்ன அடையாளங்களின்படி ஆட்களை விட்டு கடலுக்குள் முருகன் சிலையைத் தேடினார்கள்.

பலமணி நேரம் தேடியும் சிலை கிடைக்கவில்லை. கடலுக்குள் சென்றவர்கள் கடும் ரணத்துடன் திரும்பினார்கள்.கடைசியில் வயிரவன் சேர்வையே கடலுக்குள் மூழ்கி அந்த சிலையையும் வேலையும் எடுத்து வந்தார்.

விஷயம் அறிந்த மன்னர், தன் அரண்மனையில் “ராமலிங்க விலாசம்’ என்ற தர்பார் மண்டபம் கட்டுவதற்காக வைத்திருந்த பொருட்களைத் தந்து பெருவயல் ஊரணிக்கரையில் முருகனுக்கு ஆலயம் அமைக்க நிலங்களையும் இறையிலியாகக் கொடுத்து உதவினார்.

அதன்பின்னர் ஆலயத்திருப்பணிகள் விரைவாக நடைபெற்று, கடலில் கண்டெடுக்கப்பட்ட சிலைகள் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது .

வயிரவன் சேர்வை ராமேஸ்வரம் ராமநாத சுவாமி மீதும் அதிக பக்தி வைத்திருந்ததால், ராமநாதசுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்மன் சன்னதிகளும் பெருவயல் தலத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

கடலுக்குள் இறங்கி சிலையை எடுக்க முயன்ற பலருக்கு உடல் முழுவதும் ரணம் ஏற்பட்டதால், மூலவர் சிவசுப்பிரமணியசுவாமி, ரணபலி முருகன் என்றே அழைக்கப்படுகிறார்.

ஐந்து நிலை ராஜகோபுரம் தாங்கிய கிழக்கு நோக்கிய ஆலயம். கோயிலின் நுழைவுவாயிலில் இரண்டு குதிரை சிலைகளைக் காணலாம்.
ஒரு குதிரையில், பத்ரகாளி உபாசகரான ஆதி மங்களேஸ்வர குருக்களும், அதற்கு எதிரேயுள்ள இன்னொரு குதிரையில் பத்ரகாளி அம்மன் திருவுருவமும் அமைக்கப்பட்டிருப்பது வித்தியாசமான காட்சி. காலசந்தி மற்றும் சாரட்சை பூஜையின்போது இவர்களுக்கு நைவேத்யம் செய்த பின்னரே பலிபீடத்திற்கு செய்யப்படுகிறது.
ஜெயங்கொண்ட விநாயகரை தரிசித்துவிட்டு பலிபீடம், கொடிமரம், மயில் வாகனம், அர்த்தமண்டபம் கடந்தால் கருவறை. உள்ளே வள்ளி-தேவசேனா சமேதராக ரணபலி முருகன் என்ற சிவசுப்பிரமணியசுவாமி கருணை என்ற சிவசுப்பிரமணியசுவாமி கருணை பொங்கும் முகத்துடன் காட்சி தருகிறார். திருச்செந்தூர் முருகனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள் அனைத்தும் இவரை வழிபட்டாலே கிடைக்கிறதாம்.
பிரகாரத்தில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி, சண்முக சக்கரம், நாகரை தரிசிக்கலாம்.

கோயிலுக்கு வடக்கே தளவா வயிரவர் சேர்வைக்காரரின் சமாதி கோயில் உள்ளது. அங்கு சுப்பிரமணிய யந்திரமும், சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தினமும் கோயிலில் இருந்து நிவேதனம் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள லிங்கத்திற்கு பூஜை நடைபெறுகிறது.

உற்சவர்களாக விநாயகர், வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியர், வள்ளி-தெய்வானை சமேத சண்முகர் அருள்கிறார்கள். இவர்களையும், முருகன் உருவம் பொறித்த அதிசய வேலையும் பிரம்மோற்சவ நாட்களிலும், சூரசம்ஹாரத்தன்றுமே பக்தர்களால் தரிசிக்கமுடியும். மற்ற நாட்களில், பாதுகாப்பாக வேறு இடத்தில் இருக்கும் சத்ரு சம்ஹார வேலை சிறப்பு அனுமதியின் பேரில் ஆலயத்திற்குக் கொண்டு வந்து, அதற்கு பக்தர்கள் சிறப்பு பூஜை செய்வதும் உண்டு. சத்ரு சம்ஹார வேலை வழிபடுவோருக்கு எதிரிகள் தொல்லை விலகி, சகல பேறுகளும் கிட்டும் என்பது நம்பிக்கை.

பெருவயல் தலத்தின் பெருமைக்கு மேலும் பெருமை சேர்ப்பது இங்குள்ள சத்ரு சம்ஹார வேல்.

நான் எத்தனையோ தலங்களில் முருகனை தரிசித்திருக்கிறேன். ஆனால் வேலில் முருகன் உருவம் பதித்திருப்பதை பெருவயல் கோயிலில்தான் கண்டேன் என்று திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள், முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் இதே அக்டோபர் மாதத்தில் இங்கு விஜயம் செய்தபோது குறிப்பிட்டிருக்கிறார். அதோடு தன சொற்பொழிவுகளில் எல்லாம் அந்த வேலின் சிறப்பையும் எடுத்துக் கூறியிருக்கிறார். அந்த அருள் வாசகத்தை கோயிலில் அவர் புகைப்படத்தோடு பிரேம் போட்டு மாட்டி வைத்திருப்பதை இன்றும் காணலாம்.

நன்றி வினோத் அகமுடையார் 

வடவெல்லைத் தமிழ் முனிவர் மங்கலங்கிழார்


தமிழகத்தின் வடபகுதியில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து, எளிமையாக வாழ்ந்து, தமிழைக் கசடறக் கற்றுத் தமிழ் வளரத் தாம் வாழ்ந்து, தம் வாழ்நாளில் பெரும் பகுதியைத் தமிழுக்காகவே ஈந்த பெருமைக்குரியவர் "வடவெல்லைத் தமிழ் முனிவர்" என்றும் "தமிழ்ப் பெரியார்" என்றும் போற்றப்படும் மங்கலங்கிழார். இவர் தமிழுக்கும், தமிழருக்கும் செய்த தொண்டு போற்றுதற்குரியது. "தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை" என்ற பாரதிதாசனின் வாக்கிற்கிணங்க தொண்டின் திருவுருவாய்த் திகழ்ந்தவர் மங்கலங்கிழார்.


கல்வியே தெரியாத பாமர மக்களுக்குச் சிறந்த கல்வி அளித்து, அவர்களைச் சிறந்த புலவர்களாக்கிய இவர் தொண்டினை எண்ணுந்தோறும் என்னுள்ளத்தே அழுக்காறு ஏன் சுரக்காது?


யான் நூல்கள் யாத்தலிலும் மேடையில் பேசுவதிலுமே என் அறிவைச் செலவிட்டேன். ஆனால் கிழாரவர்கள் பல மணிமணியான புலவர்களைத் தயாரித்திருக்கிறார். அவர்கள் ஒவ்வொருவர் மூலமும் அவர்தம் பாரம்பரியம் நூற்றுக்கணக்கில் பல்கும் என்பதில் ஜயமில்லை. என் தொண்டினைவிடக் கிழாரின் தொண்டு சிறந்தது, என தமிழ்த் தென்றல் திரு.வி.க. தம் "சுயசரிதை"யில் எழுதியுள்ளார்.


வட ஆர்க்காடு மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த புளியமங்கலம் என்ற சிற்றூரில் ஜயாசாமி - பொன்னுரங்கம்மாள் என்னும் பெற்றோருக்கு 1895ல் மகவாய்ப் பிறந்தார். பெற்றோர் இட்ட பெயர் குப்பன். பின்னாளில் குப்புசாமி என்றே அழைக்கப்பட்டார். புளியமங்கலத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். பின்னர் தனது சகோதரியுடன் சென்னை பெரம்பூரில் தங்கி, பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைக்கல்வி பயின்றார். குடும்பச் சூழலின் காரணமாக கல்வியைப் பாதியிலேயே இழந்தார்.

கல்வியைத் தொடர முடியாத நிலையை எண்ணி, பல நாள்கள் வருந்தினார் மங்கலங்கிழார். அந்நிலையில் சென்னையில் டி.என்.சேஷாசலம் ஐயர் என்ற வழக்கறிஞர் தமிழ் மொழியின்பால் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு தமிழ் மொழியின் இலக்கண - இலக்கியங்களைப் பாமரர்க்கும் மாணவர்க்கும் போதித்து வந்தார். இச்செய்தியை அறிந்து மங்கலங்கிழாரும் ஐயரிடம் மாணவராய்ச் சேர்ந்தார்.
"படிப்பவர் அனைவரும் வேலைக்காகப் படிக்கின்றனர்; தேர்வுக்காக வகுப்புகளில் ஒருசில தமிழ்ச் செய்யுள்களைப் படித்து அத்துடன் தமிழை மறந்து ஒதுக்கிவிடுகின்றனர்; ஏழை மக்கள் எதுவுமே படிப்பதில்லை; தாம் கற்ற கல்வி பிறர்க்கும் பயனுடையதாய் இருத்தல் வேண்டும். அதைப் பாமரர்க்கும் பரப்ப வேண்டும்," என்ற கொள்கையைக் கொண்டிருந்த ஐயரின் கொள்கை உறுதிப்பாடு மங்கலங்கிழாருக்கும் ஒருமித்த கருத்தாக இருந்தது. இதனால் இருவரும் சென்னையில் இரவு நேரப்பள்ளி ஒன்றை அமைத்து அதன் மூலம் தமிழ் மொழியைப் பரப்பி வந்தனர்.

மங்கலங்கிழாரின் மேற்பார்வையில் "கலா நிலையம்" என்ற இலக்கிய இதழ் உருவானது. தொடர்ந்து இதழ் வெளிவர தடை ஏற்பட்டதால், இந்நிலையைப் போக்க கலா நிலையம் குழுவினர் சென்னை, மதுரை, திருச்சி, சிதம்பரம் முதலிய நகரங்களில் நாடகங்கள் நடத்திப் பொருளீட்டினர். அவ்வாறு நடந்த நாடகங்களில் மங்கலங்கிழார் பெண் வேடமிட்டு நடித்தார். தொடர்ந்து இதழை வெளியிட முடியாத சூழ்நிலை உருவானது என்றாலும் அவரது இலக்கியப்பணி நின்றுவிடவில்லை. பள்ளி இளைஞர்கள் பலரை ஒன்று சேர்த்துத் தமிழ்ப் பண்டிதர்களாக உருவாக்கினார்.
"இலக்கணப்புலி" என்றழைக்கப்பட்ட கா.ர.கோவிந்தராச முதலியாரிடம் இலக்கண - இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார்.

1922ல், திருவள்ளூரைச் சேர்ந்த ஐயாசாமி - அங்கம்மாள் தம்பதியரின் மகளான கமலம்மாளை மணந்தார். அதன் பின்னர் தச்சுத் தொழில் செய்துகொண்டே விடுமுறை நாள்களிலும், இரவு நேரங்களிலும் பாடங்களைப் படிப்பதிலும், கேட்பதிலும், பிறருக்குச் சொல்லிக் கொடுப்பதிலுமே காலங்கழித்து வந்தார். கா.ர.கோவிந்தராச முதலியார் முயற்சியால் மங்கலங்கிழாருக்கு பெரம்பூர் கலவல கண்ணன் செட்டியார் உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியர் பணி கிடைத்தது. அப்பள்ளியில் பதினைந்து ஆண்டுகள் பணியாற்றினார். பிறகு உடல்நிலை காரணமாக ஆசிரியர் பணியைத் துறந்தார்.

"செக்கிழுத்த செம்மல்" வ.உ.சி.யுடன் நட்பு கொண்டு, அவருடன் இணைந்து திருக்குறளில் நன்கு தேர்ச்சி பெற்றார். அதன் பிறகு சைவ, வைணவ நூல்களையெல்லாம் ஆராய்ந்து தெளிவு பெற்றார்.

வேதாந்தத் துறையில் சிறந்து விளங்கிய வடிவேல் செட்டியாரிடம் வேதாந்தம் கற்றுத் தெளிந்தார். அதன்பிறகு புளியமங்கலம் கிராமத்தில் தனது குடும்பத்தார் வழிவழியாகச் செய்து வந்த மணியக்காரர் பணியை ஏற்று நடத்தி வந்தார். புளியமங்கலத்தில் ஓர் இரவு பள்ளியைத் துவக்கி, இளைஞர்களுக்கு தமிழ்ப் பாடமும், முதியவர்களுக்கு வேதாந்த பாடமும் நடத்தி வந்தார். வேதாந்தம் கற்ற அறிவினால் உலகின் நிலையாமையை எண்ணி துறவுக் கோலம் பூண்டு பல ஊர்களில் சுற்றித்திரிந்து கொண்டிருந்த காலத்தில் மங்கலங்கிழாருக்கு சுவாமி சின்மயானந்தரின் நட்பு கிடைத்தது. சின்மயானந்தரின் ஞான உபதேசத்தால் மீண்டும் சொந்த ஊரான புளியமங்கலத்திற்கே வந்து சேர்ந்தார்.

ஏழைக்கு எழுத்தறிவித்தல் எல்லாவற்றையும் விட மிகச் சிறந்த அறம் என்பதை உணர்ந்து தெளிந்தார். அதை தன் வாழ்வில் நிகழ்த்திக் காட்ட முடிவு செய்து, குருவராயப்பேட்டை என்ற ஊரில் உள்ள மக்களுக்குத் தமிழ்ப்பாடம் நடத்தி வந்தார். பிறகு ஊர், ஊராகச் சென்று மாணவர்களுக்குப் பாடம் நடத்தினார். 1941ம் ஆண்டு குருவராயப்பேட்டையைத் தலைமையிடமாகக் கொண்டு "அறநெறித் தமிழ்க் கழகம்" என்ற ஓர் அமைப்பை ஏற்படுத்தினார். பின்னர் அவ்வமைப்பு 16 ஊர்களில் தனது கிளைகளைக் கொண்டு செயல்பட்டது. இந்த அமைப்பின் தலைவராக மங்கலங்கிழார் திகழ்ந்தார். இவ்வமைப்பில் மாணவர்கள் இலவசமாக சேர்கப்பட்டனர்.

இக்கழகத்தின் முதல் மாநாடு 1946ம் ஆண்டு குருவராயப்பேட்டையில் பன்மொழிப் புலவர் தெ.பொ.மீனாட்சிசுந்தரம் தலைமையிலும், அடுத்த மாநாடு மு.வரதராசன் தலைமையிலும் நிகழ்த்தப்பட்டது. வசதியும், தேர்ச்சியும் உள்ள மாணவர்களைப், புலவர் தேர்வுக்கு அனுப்பி வைத்தார் மங்கலங்கிழார். அதன் பயனாய் இருபத்தைந்து பேர் புலவர் பட்டம் பெற்று அரசு வேலையில் சேர்ந்தனர். இவரின் விடாமுயற்சியால் நூற்றுக் கணக்கானோருக்கு ஆசிரியர் பணி கிடைத்தது.
ஏ.ச.சுப்பிரமணியம், ஏ.ச.தியாகராசன் உதவியுடன் தனியார் ஆசிரியப் பயிற்சிப்பள்ளியைத் திறந்து வைத்தார். அதன் பயனாய் ஆசிரியர்கள் பலர் உருவாயினர்.

அவர் காலத்தில் அமைச்சராக இருந்த எம்.பக்தவத்சலம் தலைமையில் தமிழர் மாநாடு ஒன்றை திருத்தணியிலும், அதன் பின்னர் ம.பொ.சி. தலைமையில் ஒரு மாநாடும் நிகழ்த்தினார்.
"வடக்கெல்லைப் படையெடுப்பில் எனது மெய்க்காவலராக இருந்தார் ஆசிரியர் மங்கலங்கிழார். அவரைப் போன்று தாய்மொழிப் பற்றும், தமிழின உணர்ச்சியும் உடையவர்கள் தமிழினத்தாரில் வெகு சிலரே இருக்க முடியும்" என்று சிலம்புச் செல்வர் மா.பொ.சி. புகழ்ந்துள்ளார்.

  • தவளமலைச் சுரங்கம்
  • தமிழ்ப் பொழில் 
  • சிறுவர் சிறுகதைகள்
  • வடவெல்லை
  • தமிழ்நாடும் வடவெல்லையும்
  • சகலகலாவல்லிமாலை - விளக்க உரை
  • நளவெண்பா - விளக்க உரை
  • இலக்கண விளக்கம்
  • இலக்கண வினா - விடை
  • நன்னூல் உரை மற்றும் 
  • தனிக் கட்டுரைகள்

போன்றவை மங்கலங்கிழார் எழுதிய அரிய நூல்களாகும்.

சித்தூர் மாவட்ட தமிழ்ப் பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும் என்பதற்காக காந்திய வழியில் அறப்போராட்டம் நிகழ்த்தி சிறை சென்றார்.

"தமிழ்ப் பெருந்தொண்டர் மங்கலங்கிழார் அவர்களின் தன்னலங் கருதாது பணிபல புரிந்து தமிழுக்கும் தமிழர்க்கும் பாடுபட்டு உழைத்த சான்றோர், அவர்தம் நினைவைப் போற்றுதல் தமிழர்க்குக் கடமையாகும்" என்று டாக்டர் மு.வ. புகழ்ந்துள்ளார்.

1953ம் ஆண்டு ஆகஸ்டு 31ம் நாள் மாமனிதர் மங்கலங்கழார் இயற்கை எய்தினார். தம் வாழ்வின் இறுதி மூச்சுவரை தமிழுக்காகவும், தமிழரின் நலனுக்காகவும் தன்னலங்கருதாது தொண்டு செய்த மங்கலங்கிழார் என்றுமே போற்றி நினைவு கூரத்தக்கவர்.

எட்டுக்கும் மேற்பட்ட ஊர்களில் மங்கலங்கிழார் பெயரில்
  • தொடக்கப்பள்ளி
  • தெரு
  • இலக்கிய மன்றம்
  • நூல் நிலையம்
  • உருவச்சிலை
  • அறக்கட்டளை
  • நற்பணி மன்றம்
  • பூங்கா
  • மாளிகை

போன்றவை அமைக்கப்பட்டிருந்தாலும் அவர் பிறந்த ஊரான புளியமங்கலத்தில் அவருக்கு எந்த அடையாளமும் கிடையாது. அங்கு இயங்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு அவரது பெயரிட்டு வழங்க ஆவன செய்தால், அவருக்கும் அவரது தமிழ்த் தொண்டுக்கும் செலுத்தும் நன்றிக் கடனாக அமையும் என்பதில் ஐயமில்லை.



நன்றி: தமிழ்மணி (தினமணி)

Monday, September 21

நைனப்பன் சேர்வை


'நைனப்பன் சேர்வை' நான் உங்களுக்கு ஒரு போட்டி வைக்கப் போகிறேன், ஏற்றுக்கொள்ளச் சம்மதமா? எனக் கேட்டார் பெரிய மருது பாண்டியர். 'சரி அரசே எதுவென்றாலும் நான் ஏற்றுக் கொள்கின்றேன். உங்கள் சித்தத்தை என் கடமையாக ஏற்றுக் கொள்கிறேன்” என்றார் நைனப்பர். போட்டி இதுதான். சிவகங்கைக்கும் கடியாவயல் என்னுமிடத்திற்கும் உள்ள தூரம் சுமார் 25 கிலோமீட்டர் ஆகும். இந்த 25 கி.மீட்டர் தூரத்திற்கும் பெரிய மருதுபாண்டியர் குதிரையில் இருந்தபடி போய் வருவார். ஆக மொத்தம் 50 கி.மீட்டர். இந்த தூரத்தை நைனப்ன் சேர்வை குதிரைக்குச் சமமாக ஓடிக்கடக்க வேண்டும். இதுதான் போட்டி. போட்டி தொடங்கியது. 'நைனப்பன் சேர்வை அவர்களே! நீங்கள் என் குதிரைக்கு முன்னதாக இரண்டு பல்லாங்கு தூரம் ஓடுங்கள். அதன் பிறகு நான் புறப்படுகின்றேன் என்றாராம். ஓடினார்.... பின்னாலேயே குதிரையும் பாய்ந்து வந்தது. அருகில் குதிரை வந்ததும் நைனப்பன் சேர்வை பெரிய மருது அவர்கள் அமர்ந்திருந்த குதிரையின் பின்னாலேயே நெருக்கமாக ஓடினார். குதிரை தன் இயல்பான வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தது. நைனப்பரும் ஓடினார். வழியில் பார்த்தவர்களெலலாம் படபடப்பாகப் பேசிக் கொண்டார்கள.
சிலர் என்ன இது கொடுமை! மனிதனையும் குதிரையையும் ஒன்றாக பாவிப்பார்? என பேசிக்கொண்டனர் . பலர் 'சரி அரசர் செய்தால் எதிலும் ஒரு நல்ல உள்நோக்கம் மறைந்திருக்கும.; நாட்டை நல்ல முறையில் ஆள்பவரும் மக்களைக் கண்ணாக மதித்து ஆள்பவரும் ஆனா மாமன்னர்கள் கொடுமையாக எதையும் செய்யமாட்டார்” என்று பேசிக் கொண்டனர்.ஓடிக் கொண்டிருந்த நைனப்பரின் காலில் ஒரு கருவேல முள் குத்திவிடுகிறது. போட்டி அவ்வளவுதான் என்றுதானே நினைப்பீர்கள், அதுதான் இல்லை. அந்த முள்ளை எடுப்பதற்காக உட்கார்ந்து நேரத்தைச் செலவிட்டால் குதிரை மறைந்துவிடுமே! என்று யோசிக்கும் நேரத்தில் நைனப்பர் தனது இடுப்பில் இருந்த 'வளரி” என்ற ஆயுதத்தால் முள் தைத்த காலை தூக்கி முள்ளை உள் நோக்கி அழுத்தினார். முள் கால் பாதத்திற்குள் நுழைந்துவிடுகிறது. வலியை பொறுத்துக் கொண்டு குதிரையோடு சேர்ந்து ஓடி கடியாவயலை அடைந்துவிடுகிறார். மறுபடியும் திரும்பிச் சிவகங்கை நோக்கி ஓட முயற்சித்த நைனப்பன் சேர்வையைத் தடுத்து அணைத்துக் கொண்டார் மாமன்னர் பெரியமருது பாண்டியர்.
அவரது கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.
'நைனப்பன் சேர்வை உங்களின் வீரத்தை நமது சிவகங்கை சீமை மட்டுமல்ல இந்த உலகமே தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகத்தான் இந்தக் கடுமையான போட்டியை நான் வைத்தேன். நானும் காட்டில் பல சமயம் பல கிலோமீட்டர் தூரத்தைக் குதிரையைவிட வேகமாக ஓடியெல்லாம் கடந்திருக்கின்றேன். உங்களது வீரம் வாழ்க! வைத்தியரைக் கூப்பிடுங்கள் நைனப்பரின் காலில் இருக்கும் முள்ளை உடனே அகற்றுங்கள்” என்று கட்டளையிட்ட மன்னர் ஊரும் - உலகமும் அறியும் வண்ணம் நைனப்பன் சேர்வையைப் பாராட்டி மாலையும் மரியாதையும் பொன், பொருளும் வழங்கினார் மாமன்னர் பெரிய மருதுபாண்டியர். நைனப்பன் சேர்வை அவர்களிடம் இருந்த வளரி இன்று சிவகங்கை அருங்காட்சியில் உள்ளது. அதை அவரின் வாரிசுத்தாரர் கொடுத்துள்ளனர். இன்று அதன் வடிவம் மாறாமல் புதியதாக செய்யப்பட்டது போல் உள்ளது. ஒரு சமயம் மருதுபாண்டியருடன் சென்ற நைனப்பன் சேர்வைக்கு வேட்டைக்கு காட்டிற்குச் செல்ல ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. இருவரும் காட்டு வழியாக சென்று கொண்டிருந்தார்கள். அப்போது எதிர்பாராதவிதமாக புலிவொன்று புதரிலிருந்து வெளிப்பட்டு நைனப்பன் சேர்வையை நோக்கிப் பாயந்தது. புலியோடு போராடி அதனைக் கொன்றார். பிறகு அப்புலியின் பற்களைப் பிடுங்கிப் பெரிய மருதுபாண்டியர் அவர்களின் காலடியில் 'அரசே இது என் காணிக்கை” என்று கூறிப் புலிப் பற்களை வைத்தார். ஆனால் இப்படிப்பட்ட மாவீரனைப் புலியின் பல்பட்ட, நகம்பட்ட காயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவரைக் கொன்று வைத்தியர்களைத் தோல்வி அடையச் செய்தன. நைனப்பன் சேர்வை மறைந்த போது வைர நெஞ்சத்தை உடையவராக இருந்த மாமன்னர்கள் மருதுபாண்டியர் வாய்விட்டுக் கதறி அழுதார்கள்.
நைனப்பன் சேர்வையின் குடும்பத்திற்குத் தனது குடும்பத்தை போல் எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தார் பெரிய மருதுபாண்டியர். அவர் மனமுவந்து கொடுத்த சொத்துக்களை இன்றைய தினமும் நைனப்பன் சேர்வையின் சந்ததியார் அனுபவித்து வருகிறார்கள். சிவகங்கைக்கு அருகில் 12 கி.மீ. தூரத்தில் சாத்தரசன் கோட்டையில் வடபுறத்தில் ஒரு பெரிய ஊரணியை வெட்டி அந்த ஊரணிக்கு நைனப்பர் ஊரணி என்று அவர் பெயரில் இன்றும் அழைக்கப்படுகிறது.

மான்பூண்டியாப் பிள்ளை

மாமுண்டியா பிள்ளை



தமிழகத்தைச் சேர்ந்த இசைக் கலைஞர் ஆவார். மிருதங்கம்கஞ்சிராதவில் எனும் தோல் கருவிகளை வாசிப்பதில் வல்லவராக விளங்கியவர்.

இசை வாழ்க்கை

மான்பூண்டியாப் பிள்ளை எனும் இயற்பெயர் கொண்ட இவர், பேச்சு வழக்கில் மாமுண்டியா பிள்ளை என அழைக்கப்பட்டார். மாரிமுத்து தவில்காரர் எனும் தவில் இசைக் கலைஞரிடம் தவில் வாசிக்கும் கலையைக் கற்றுகொண்டார்.
கஞ்சிராவினை வடிவமைத்தவர் மாமுண்டியா பிள்ளையாவார் கிராமிய இசையில் பயன்பட்ட இக்கருவியை தற்போதைய கஞ்சிரா உருவத்தில் செய்து கருநாடக இசைக் கச்சேரிகளில் உப தாள வாத்தியமாக வாசித்துப் பெருமை பெற்றவர் மாமுண்டியா பிள்ளை ஆவார். நாராயணசாமியப்பா எனும் கலைஞரின் ஊக்கப்படுத்துதலின் காரணமாக, ஆரம்பத்தில் இந்த வாத்தியக் கருவியினை பஜனைகளில் இசைத்தார் மாமுண்டியா பிள்ளை. பின்னர் பெரும் வரவேற்பினைப் பெற்று, கருநாடக இசைக் கச்சேரிகளின் பக்க வாத்தியங்களுள் ஒன்றாக கஞ்சிரா இடம்பெற்றது


இவரின் குறிப்பிடத்தக்க மாணவர்கள்

  • புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை
  • பழனி முத்தையா பிள்ளை (இவர், பழனி சுப்பிரமணிய பிள்ளையின் தந்தை)

பிற சிறப்புகள்
  • தவிலை அடிப்படையாகக் கொண்டு மிருதங்கம் வாசிக்கும் புதுக்கோட்டை பாணியினைக் கொண்டுவந்தவர் மாமுண்டியா பிள்ளை.

Friday, September 4

வெ. இராமலிங்கம் பிள்ளை



நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (அக்டோபர் 191888 - ஆகஸ்ட் 241972) தமிழறிஞரும், கவிஞரும் ஆவார். “கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” போன்ற தேசபக்திப் பாடல்களைப் பாடிய இவர் தேசியத்தையும், காந்தியத்தையுயும் போற்றியவர். முதலில் பால கங்காதர திலகர் போன்றவர்களின் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்ட இவர் மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஆட்கொள்ளப்பட்ட பின் அறப் போராட்டத்தால் மட்டுமே விடுதலையைப் பெறமுடியும் என்ற முடிவுக்கு வந்தவர். இவரது கவிதைகள் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி இருந்ததால் இவர் காந்தியக் கவிஞர் என வழங்கப்படுகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

இராமலிங்கனார் பழைய சேலம் மாவட்டம், தற்போதைய நாமக்கல் மாவட்டம் மோகனூரில் வெங்கடராமன், அம்மணியம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். திருச்சிராப்பள்ளி மாவட்ட காங்கிரசின் செயலாளராகவும், கரூர் வட்டாரக் காங்கிரஸ் தலைவராகவும், நாமக்கல் வட்டாரக் காங்கிரஸ் தலைவராகவும் பணியாற்றியவர். தேசபக்தி மிக்க தமது பேச்சினால் பல இளைஞர்களை தேசத் தொண்டர்களாக மாற்றியவர். அரசின் தடையுத்தரவையும் மீறி, கூட்டங்களில் சொற்பொழிவாற்றியவர். 1932இல் நடைபெற்ற உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஓராண்டு சிறைத்தண்டனை பெற்றவர். ‘தமிழ்நாட்டின் முதல் அரசவைக் கவிஞர்’ பதவியும், `பத்ம பூஷண்’ பட்டமும் பெற்றவர். சாகித்திய அகாடமியில் தமிழ்ப் பிரதிநிதியாகவும் பொறுப்பு வகித்தவர்.
‘தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா’ என்கிற வீரநடைக்கு வித்திட்ட அவரின் நினைவாக அவர் வாழ்ந்த இல்லம் நினைவில்லமாக அமைக்கப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள அரசு தலைமைச் செயலகப் பத்து மாடிக் கட்டிடத்திற்கும் இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இவரின் மலைக்கள்ளன் நாவல் எம் ஜி ஆர் நடித்து மலைக்கள்ளன் என்ற பெயரிலேயே திரைப்படமாக வந்தது.

கவிஞரின் நாட்டுப்பற்று

முத்தமிழிலும், ஓவியக்கலையிலும் வல்லவர், சிறந்த விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கு பெற்றதால் சிறைத் தண்டனையும் அடைந்தார்.
’கத்தி யின்றி ரத்த மின்றி
யுத்த மொன்று வருகுது
சத்தி யத்தின் நித்தி யத்தை
நம்பும் யாரும் சேருவீர்’
என்னும் பாடலை உப்புச் சத்தியாகிரகத் தொண்டர்களின் வழிநடைப் பாடலாகப் பாடிச் செல்வதற்கு இயற்றிக் கொடுத்தார்.

புகழ்பெற்ற மேற்கோள்கள்

  • 'கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது'
  • தமிழன் என்றோர் இனமுன்று
தனியே அதற்கோர் குணமுண்டு'
  • 'தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா'
  • 'கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்
கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்
மொழிப்பற்று
தமிழ்த்தாய் வாழ்த்து
தமிழ் அன்னைக்குத் திருப்பணி செய்வோமே
தரணிக்கே ஓரணி செய்வோமே
அமிழிதம் தமிழ் மொழி என்றாரே
அப்பெயர் குறைவது நன்றாமோ

நாமக்கல்லாரின் படைப்புகள்

  • இசை நாவல்கள் - 3
  • கட்டுரைகள் - 12
  • தன் வரலாறு - 3
  • புதினங்கள் - 5
  • இலக்கிய திறனாய்வுகள் - 7
  • கவிதை தொகுப்புகள் - 10
  • சிறுகாப்பியங்கள் - 5
  • மொழிபெயர்ப்புகள் - 4

எழுதிய நூல்கள்

  1. மலைக்கள்ளன் (நாவல்)
  2. காணாமல் போன கல்யாணப் பெண் (நாவல்)
  3. பிரார்த்தனை (கவிதை)
  4. நாமக்கல் கவிஞர் பாடல்கள்
  5. திருக்குறளும் பரிமேலழகரும்
  6. திருவள்ளுவர் திடுக்கிடுவார்
  7. திருக்குறள் புது உரை
  8. கம்பனும் வால்மீகியும்
  9. கம்பன் கவிதை இன்பக் குவியல்
  10. என்கதை (சுயசரிதம்)
  11. அவனும் அவளும் (கவிதை)
  12. சங்கொலி (கவிதை)
  13. மாமன் மகள் (நாடகம்)
  14. அரவணை சுந்தரம் (நாடகம்)

மத்திய அரசும் , மாநில அரசும் செய்த சிறப்பு

கவிஞரின் நாட்டுப் பற்றைப் போற்றும் வகையில் மாநில அரசு அவரை அரசவைக் கவிஞராகவும், பின்னர் தமிழக சட்ட மேலவை உறுப்பினராகவும் நியமித்துச் சிறப்பித்தது. மத்திய அரசு அவருக்கு பத்ம பூஷன் விருதளித்துப் போற்றியது.

நினைவு இல்லம்

தமிழ்நாடு அரசு இவர் வாழ்ந்த நாமக்கல்லிலுள்ள இல்லத்தை நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை நினைவு இல்லம் ஆக்கியுள்ளது. இதில் நூலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. மேலும் சென்னையிலுள்ள அரசு தலைமைச் செயலக பத்து மாடிக் கட்டிடத்திற்கு இவரது பெயர் சூட்டியுள்ளது. தட்டாரத் தெரு என்று அழைக்கப்பட்டு வந்த இவர் வாழ்ந்த தெரு கவிஞர் இராமலிங்கம் தெரு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சேலம் அருங்காட்சியகத்தில் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அவர்களின் உடைமைகள் காட்சிக்கு வைக்கப்பெற்றுள்ளன.

Sunday, August 9

மகாபலி சக்கரவர்த்தி


அகமுடையாரது பின்னனி பெரும்பாலும் சேர மன்னரையே பின்பற்றியது.இதை பதிற்றுபத்து போன்ற சேரர் புகழ்பாடும் இலக்கியங்ககளும் மெய்பிக்கின்றன. கல்வெட்டுகளில் அகமுடையாரை பற்றிய கல்வெட்டு சின்னமனூர் கல்வெட்டில்,பிள்ளை குலசேகர மாவலி வானாதிராய அகம்படிய முதலி சிங்க தேவன் என்று குலசேகர மாவலி வானதிராயரை பற்றி குறிப்பிடுகிறது.வானர் என்பவர்கள் மன்னர் குலத்தோர் புகழ பெற்ற சேர மரபினர் ஆவார்.மூவேந்தருடனும் மன உறவு பூண்டவர். கரிகால சோழனின் மனைவியும் வானர் குல பென்மனி,ராஜ ராஜனின் அக்காவின் கனவருமான் வந்திய தேவர் இந்த வானதிராயர் குலத்தாவர்.சேரனுக்கு வானவன்,மலையன்,வானவரம்பன் என்ற பெயர்கள் உண்டு.வானவன் (அ) வானவரம்பன் என்ற சொல்லுக்கு வானை முட்டும் மலையினை உடையவன் என்று பொருள்.சேரன்- மலை நாட்டிற்க்கு சிகரத்தை போன்றவன். சிகரன் எனற வார்த்தை மலை நாட்டின் தலைவன் என்று பொருள்.வானர்கள் மகாபலி சக்கரவர்த்தியின் இனத்தை சார்ந்தவர்கள் என்று கல்வெட்டுக்கள் கூறுகிறது.இந்தியப் புராணங்களில் முக்கியமான ஓர் வேந்தன் மகாபலி ஆவான். சேர நாட்டில் இருந்து மகாபலி மன்னன் துளு மொழி வழங்கிய கர்நாடகக் கடற்கரைப் பகுதி வரை ஆண்டதாகவும்க கூறப்ப்டுகறது.இவர் சேர வம்சத்தை சார்ந்ததாகவும் அதனால் தான் இன்றும் மலையாள தேசத்தில் கொண்டாடுகின்றனர்.இவரை அசுர மன்னனாக திரித்து கூறியது சேரர்கள் மேல் படை எடுத்த திபேத்திய பிராமனர்களால்(நம்பூதிரிகள்)புனையபட்ட பொய் கட்டு கதையே ஆகும்.

வாமன அவதாரம் எடுத்து,விஷ்ணு இம்மன்னனை பாதாள உலகிற்கு அனுப்பியதாகவும் புராணங்கள் குறிப்பிடுகின்றன.மகாபலி பாதாள உலகத்துக்கு அனுப்பப்பட்ட நாளாகிய ஆவணி மாத திருவோண நட்சத்திர நாளை விழாவாகக் கொண்டாடுகின்றனர்.

அன்றைக்கு ஒருநாள் மட்டும் மகாபலி தமது நாட்டைப் பார்வையிட்டுவிட்டு மீண்டும் பாதாள உலகம் சென்றுவிடுவதாக கருதப்படுகிறது. இந்த ஓண நாளை வாமன ஜெயந்தி என்று இந்து மதப் புராணங்கள் குறிப்பிடுகின்றன.சிவகங்கை சீமையில் உள்ள மானாமதுரை(வானாதிராய மதுரை),இராசகம்பீரம்(வானராய கம்பீர கோட்டை) முதலிய இடத்தில் வானாதிராய இனமாக ராஜ குல அகமுடையரே அதிகமாக வாழ்கிறனர்.சின்னமனூர் அகமுடைய பனந்தாரன் (வானாதிராயன்),பந்தளம்(அகமுடைய பனந்தார ராம வர்மா)[சுவாமி ஐய்யப்பன் வழி வந்த மன்னர் போன்றவர்கள் பனந்தார வம்சத்து அகமுடையரே.இருவருக்கும் இன்னும் திருமன உறவு உண்டு.கொங்கு நாட்டில் உள்ள சமத்தூர் ஜமீந்தார் யாவரும் அகமுடைய குல கவுண்டர்கள் ஆகும். வானாதிராய சேர அரச வம்சமானதால் தான் அகமுடையார் தம்மை ராஜகுல அகமுடையார் என்று குறிப்பிட்டுக்கொள்கிறார்கள். இவர்களுக்குஆதியிலிருந்து சேரன்,மலையன்,வானவராயன்,மலையமான்,மலைராயன்,வானகோவரயன்,மலைராயன்,குறு வழுதி,மகதை நாடாழ்வான்,செம்பை நாயகன்,பொன் தின்னன் முதலிய பல பெயர்களால் அழைக்கபட்டனர்.

Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...