தமிழறிஞர் சுப்பையா |
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருமக்கோட்டைக் கிராமத்தில் அ.சிதம்பர தேவருக்கும் மங்களதம்மாளுக்கும் 1881ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் நாள் பிறந்தார்.இவர் தொடக்கக் கல்வியை சிங்கப்பூரில் பயின்றார்.1894ஆம் ஆண்டு தமிழ்நாடு திரும்பினார். தமிழ்நாட்டில் சிற்பம், சித்திரம், வைத்தியம், சோதிடம் போன்ற பல துறைகளில் தேர்ச்சிப் பெற்றார்.சுவாமி சதானந்தா அவர்களிடம் சித்த மருத்துவ முறைகளிலும் பயிற்சி பெற்றார்.மகாத்மா சதாநந்த சாமியவர்களின் அருள் கிடைக்கப் பெற்றமையால், ஆத்மார்த்தமான உபதேசங்களையும், சில அபூர்வ மான வைத்திய முறைகளையும் கற்று, அவரின் ஆசீர்வாதத்தால் ஸ்ரீமதி அஞ்சலையம்மாளை திருமணம் செய்து 1901-ம் வருடம் சிங்கப்பூர் வந்தனர். வந்த சில தினங்களின் பின் அரசாங்கப் பதார்த்த பரிசீலனப் பகுதியிலும், சிப்பாய் கோல்பந்து விளையாட்டுப் பகுதியிலும் வேலை செய்த பின் சொந்த வேலைகளில் ஈடுபட்டு சித்திரம் சித்தரிப்பதிலும், சில்லறை கட்டிட வேலைகள் ஒப்பந்தத்திலும் இவ்வாறு பல வேலைகளிலும் சீவியம் நடத்தி வந்தனர். இவ்வாறான வியங்களிலும் பரோபகாரமான குணத்தினாலும், பிறர்மேல் வைத்த அன்பினாலும், இவர் பெயர் நம் மக்களுள் மாத்திரமன்றிப் பிறர் மக்களுள்ளும் பிரக்கியாதி பெற்றது. தேடிய திரவியங்களும் வளரத்துவங்கின. தனலட்சுமியும் கண்ணோக்கினள். இவ்வாறான நிலைமை எய்திய பின்னர் சிராங்கூன் ரோட்,251- நி. இல்லத்தில் சித்த வைத்திய பாற்மேசி எனும் காந்தரசக் கம்பெனியை ஸ்தாபகஞ் செய்து வைத்தியம் நடத்தினர். இவரின் கையால் மண்ணைக் கொடுத்தாலும் பொன் போன்ற மருந்தானது. ஆகையினால் இவருடைய வைத்திய நிலைமை மலாய் நாடுகளில் எவ்வளவு தூரம் எட்டுமோ, எத்தனை சந்து பொந்துகள் நுழையுமோ, அத்தனை இடங்களுக்கு எட்டியும், நுழைந்தும் வேலை செய்தமையால் அயல் நாடுகளெங்கணும் பரவத் துவங்கியது.
இவருடைய
அதிர்ஷ்டத்தோடு குணமும் மனமும் கூடிக் கொண்டன. கைபாகம் செய்பாகமும் முறை
தவறாமல் நிறைவேறியது. தமது வைத்திய சாலையை மென்மேலும் விருத்தியாக்குவதற்கு
நினைத்துத் தனிக் கட்டிடங்களாகச் சொந்தத்தில் மேல் கண்ட சிராங்கூன் ரோட், 233, 235-நிம்பர்களில் மிகவும் விமர்சையாய் நடத்தி வருகின்றார். தனத்துக்கேற்ற குணம்போல் இம்மலாய் நாட்டிலும் சரி, அயல்நாடுகளிலும் சரி பொதுஜன நன்மையின் பொருட்டு எத்தனையோ வியங்கள் புரிந்திருக்கின்றன. அவைகளியவையுங் கூற நமது சரித்திரமிடங்கொடாததினால், சிலதை மாத்திரம் இங்கு குறிப்பிடு கின்றோம். சிங்கை விவேகானந்த சங்கம், ஆதித்திராவிட சங்கம், முதலிய சங்கங்களின ஸ்தாபகராயும், சில சங்கங்களின் அங்கத்தவராயும், எவரும் விரும்பத்தக்கவாறு தொண்டு புரிந்திருக்கின்றார்.
No comments:
Post a Comment