மாமுண்டியா பிள்ளை
தமிழகத்தைச் சேர்ந்த இசைக் கலைஞர் ஆவார். மிருதங்கம், கஞ்சிரா, தவில் எனும் தோல் கருவிகளை வாசிப்பதில் வல்லவராக விளங்கியவர்.
தமிழகத்தைச் சேர்ந்த இசைக் கலைஞர் ஆவார். மிருதங்கம், கஞ்சிரா, தவில் எனும் தோல் கருவிகளை வாசிப்பதில் வல்லவராக விளங்கியவர்.
இசை வாழ்க்கை
மான்பூண்டியாப் பிள்ளை எனும் இயற்பெயர் கொண்ட இவர், பேச்சு வழக்கில் மாமுண்டியா பிள்ளை என அழைக்கப்பட்டார். மாரிமுத்து தவில்காரர் எனும் தவில் இசைக் கலைஞரிடம் தவில் வாசிக்கும் கலையைக் கற்றுகொண்டார்.
கஞ்சிராவினை வடிவமைத்தவர் மாமுண்டியா பிள்ளையாவார் கிராமிய இசையில் பயன்பட்ட இக்கருவியை தற்போதைய கஞ்சிரா உருவத்தில் செய்து கருநாடக இசைக் கச்சேரிகளில் உப தாள வாத்தியமாக வாசித்துப் பெருமை பெற்றவர் மாமுண்டியா பிள்ளை ஆவார். நாராயணசாமியப்பா எனும் கலைஞரின் ஊக்கப்படுத்துதலின் காரணமாக, ஆரம்பத்தில் இந்த வாத்தியக் கருவியினை பஜனைகளில் இசைத்தார் மாமுண்டியா பிள்ளை. பின்னர் பெரும் வரவேற்பினைப் பெற்று, கருநாடக இசைக் கச்சேரிகளின் பக்க வாத்தியங்களுள் ஒன்றாக கஞ்சிரா இடம்பெற்றது
இவரின் குறிப்பிடத்தக்க மாணவர்கள்
- புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை
- பழனி முத்தையா பிள்ளை (இவர், பழனி சுப்பிரமணிய பிள்ளையின் தந்தை)
பிற சிறப்புகள்
- தவிலை அடிப்படையாகக் கொண்டு மிருதங்கம் வாசிக்கும் புதுக்கோட்டை பாணியினைக் கொண்டுவந்தவர் மாமுண்டியா பிள்ளை.
No comments:
Post a Comment