Monday, January 16

வீராசுவாமி


கன்னட திரையுலகின் புகழ் பெற்ற தயாரிப்பாளரான வீராசுவாமி பிறந்தது  அன்றைய மதராஸ் வட ஆற்காட்டில் ஓட்டேரி என்னும் ஊரில் அகமுடையார் குலத்தில் நாகப்பா - காமாட்சியம்மாள் ஆகியோர்க்கு மகனாக  1932 ஏப்ரல் 17 அன்று பிறந்தார்.1950ல் சினிமா துறையில் சிறிய வேலையில் தொடங்கி பின்னர் 1955ல் தன்னுடைய நண்பரான கங்கப்பா என்பவருடன் சேர்ந்து உதயா பிக்ச்சர்ஸ் என்ற பெயரில் திரைப்பட விநியோகஸ்தராக  உயர்ந்தார்.1962இல் ஈஸ்வரி புரோடக்ஷனை நிறுவி 1971 குல கௌரவா எனும் திரைப்படத்தை ராஜ்குமாரை கதாநாயகனாக வைத்து வெளியிட்டார்,17 கன்னட திரைப்படங்கள்  1 தமிழ்(படிக்காதவன்) மற்றும் ஹிந்தி திரைப்படங்களை தயாரித்துள்ளார்.இவருடைய மகன் ரவிச்சந்திரன் புகழ் பெற்ற கன்னட நடிகர் ஆவர்.23 ஆகஸ்ட் 1992இல் இயற்கை எய்தினார்.

அ.சி.சுப்பையா

தமிழறிஞர் சுப்பையா

தஞ்சாவூர் மாவட்டத்தைச்  சேர்ந்த திருமக்கோட்டைக் கிராமத்தில் அ.சிதம்பர தேவருக்கும் மங்களதம்மாளுக்கும் 1881ஆம் ஆண்டு  டிசம்பர் 12ஆம் நாள் பிறந்தார்.இவர் தொடக்கக் கல்வியை சிங்கப்பூரில்  பயின்றார்.1894ஆம் ஆண்டு  தமிழ்நாடு திரும்பினார். தமிழ்நாட்டில் சிற்பம், சித்திரம், வைத்தியம், சோதிடம் போன்ற பல துறைகளில் தேர்ச்சிப் பெற்றார்.சுவாமி சதானந்தா அவர்களிடம்  சித்த மருத்துவ முறைகளிலும் பயிற்சி பெற்றார்.மகாத்மா சதாநந்த சாமியவர்களின் அருள் கிடைக்கப் பெற்றமையால், ஆத்மார்த்தமான உபதேசங்களையும், சில அபூர்வ மான வைத்திய முறைகளையும் கற்று, அவரின் ஆசீர்வாதத்தால் ஸ்ரீமதி அஞ்சலையம்மாளை திருமணம் செய்து 1901-ம் வரு­டம் சிங்கப்பூர் வந்தனர். வந்த சில தினங்களின் பின் அரசாங்கப் பதார்த்த பரிசீலனப் பகுதியிலும், சிப்பாய் கோல்பந்து விளையாட்டுப் பகுதியிலும் வேலை செய்த பின் சொந்த வேலைகளில் ஈடுபட்டு சித்திரம் சித்தரிப்பதிலும், சில்லறை கட்டிட வேலைகள் ஒப்பந்தத்திலும் இவ்வாறு பல வேலைகளிலும் சீவியம் நடத்தி வந்தனர். இவ்வாறான வி­யங்களிலும் பரோபகாரமான குணத்தினாலும், பிறர்மேல் வைத்த அன்பினாலும், இவர் பெயர் நம் மக்களுள் மாத்திரமன்றிப் பிறர் மக்களுள்ளும் பிரக்கியாதி பெற்றது. தேடிய திரவியங்களும்  வளரத்துவங்கின. தனலட்சுமியும் கண்ணோக்கினள். இவ்வாறான நிலைமை எய்திய பின்னர்  சிராங்கூன் ரோட்,251- நி. இல்லத்தில்  சித்த வைத்திய பாற்மேசி  எனும் காந்தரசக் கம்பெனியை ஸ்தாபகஞ் செய்து வைத்தியம் நடத்தினர். இவரின் கையால் மண்ணைக் கொடுத்தாலும் பொன் போன்ற  மருந்தானது. ஆகையினால்  இவருடைய வைத்திய நிலைமை மலாய் நாடுகளில் எவ்வளவு தூரம் எட்டுமோ, எத்தனை சந்து பொந்துகள் நுழையுமோ, அத்தனை இடங்களுக்கு எட்டியும், நுழைந்தும் வேலை செய்தமையால் அயல் நாடுகளெங்கணும் பரவத் துவங்கியது.

இவருடைய அதிர்ஷ்டத்தோடு குணமும் மனமும் கூடிக் கொண்டன. கைபாகம் செய்பாகமும் முறை தவறாமல் நிறைவேறியது. தமது வைத்திய சாலையை மென்மேலும் விருத்தியாக்குவதற்கு நினைத்துத் தனிக் கட்டிடங்களாகச் சொந்தத்தில் மேல் கண்ட சிராங்கூன் ரோட், 233, 235-நிம்பர்களில்  மிகவும் விமர்சையாய் நடத்தி வருகின்றார். தனத்துக்கேற்ற குணம்போல் இம்மலாய் நாட்டிலும் சரி, அயல்நாடுகளிலும் சரி பொதுஜன நன்மையின் பொருட்டு எத்தனையோ வி­யங்கள் புரிந்திருக்கின்றன. அவைகளியவையுங் கூற நமது சரித்திரமிடங்கொடாததினால், சிலதை மாத்திரம் இங்கு குறிப்பிடு கின்றோம். சிங்கை விவேகானந்த சங்கம், ஆதித்திராவிட சங்கம், முதலிய சங்கங்களின ஸ்தாபகராயும், சில சங்கங்களின் அங்கத்தவராயும், எவரும் விரும்பத்தக்கவாறு தொண்டு புரிந்திருக்கின்றார்.


ஏ.ஆர்.பெருமாள்

அருப்புக்கோட்டை ராமுத்தேவர் - பாக்கியம் அம்மாள் ஆகியோரின் புதல்வராக 17.5.1921ல் ஏ.ஆர்.பெருமாள் பிறந்தார்.



அகில இந்திய பார்வர்ட் ப்ளாக்கின் தலைவராக இருந்தவர். பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வரலாற்றை முழுமையாக எழுதியவர். 12 வயதில் இருந்து தேவரோடு பயனித்தவர் அன்றைய இராமநாதபுரம் மாவட்டத்தின் காரியாபட்டி தொகுதியின் எம்.எல்.ஏ வாக இருமுறை வென்றவர்.



1937 சட்டபேரவை தேர்தல் சமயம் முத்துராமலிங்க தேவர் அருப்புக்கோட்டை அகம்படியர் மஹாலில் தங்கியிருந்த நேரம் செய்தி கேட்டு மக்கள் கூடி விட்டனர் பின்னர் தேவர் வெளியே வந்து மக்களை வணங்கி விட்டு காரில் ஏறி சென்றார் அக்காலத்தில் தலைவர்களின் பெயரை கூறி விட்டு ஜே என்று கூறுவது வழக்கு.கூட்டத்தில் ஒரு சிறுவன் மட்டும் இவ்வாறு கூறிக்கொண்டு தேவரின் காரை பின்தொடர்ந்து வர.சற்று தூரம் சென்று காரை நிறுத்தி விட்டு அச்சிறுவனை காரில் ஏற்றி யாரப்பா நீ என கேட்க நான் அருப்புக்கோட்டை ராமு தேவரின் புதல்வர் பெருமாள் என தேவரிடம் கூறினான் சிறுவன்.அந்த சிறுவனே பின்னாளில் (அருப்புக்கோட்டை ராமுத்தேவர் பெருமாள்)  எ.ஆர்.பெருமாள் என  அழைக்கப்பட்டார்.



பசும்பொன் தேவர் தனது சொத்தில் ஒரு பகுதியை வழங்கும் அளவுக்கு தேவரின் நம்பிக்கைக்குரியவராய் விழங்கினார்.அச்சொத்தை அவர் தேவர் பெயரில் இயங்கும் தரும ஸ்தாபனம் ஒன்று நிறுவி இனைத்து விட்டார்.தேவர் தனது சொத்தை 16 பேருக்கு பிரித்தளித்தார் இதில் 12 பேர் ஸ்தாபனத்தில் இனைத்து விட்டனர்.முத்துராமலிங்க தேவரின் மறைவிற்கு பின் கட்சியை வலுப்படுத்த பாண்டி மண்டலத்தின் குக்கிராமங்கள் வரை சென்று தேவர் புகழ் பரப்பினார்.



முத்துராமலிங்க தேவர் பெயரில் மூன்று கல்லூரிகள் அமைத்திடவும்,கோரிப்பாளையம் தேவர் சிலை மற்றும் முதுகளத்தூர் கலவரத்தினால் பாதிக்க பட்டவர்களை விடுதலை செய்யவும் மூக்கையா தேவரோடு இனைந்து பணியாற்றினார்.அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களோடு இனக்கமாக இருந்த காரணத்தினால் தேவர் ஜெயந்தியை அரசு விழாவாக  அறிவிக்கவும் மாவட்டத்திற்கு தேவர் பெயரை சூட்டவும் காரணமாக இருந்தவர்.



அருப்புக்கோட்டை பெரிய தெரு பதினெட்டு தலைக்கட்டு அகம்படியர் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட அகம்படியர் மஹாலில் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தியவர் மேலும் தேவரின் வெண்கலச்சிலையை மஹாலில் திறந்து வைத்தார்.பசும்பொன் தேவர் திருமண மண்டபம் கட்டியவர்.



ஏ.ஆர் அவர்களுக்கு முன்று மகன்களும் மூன்று மகள்களும் உள்ளனர்.உடல்நலக்குறைவின் காரணமாக 21.4.1998இல்  இயற்கை எய்தினார்.

கந்தசாமி முதலியார்

 

நாடக கலையை வளர்த்தெடுத்தவர்களில் முக்கியமானவர் கந்தசாமி முதலியார் அவர்கள்.புகழ் பெற்ற நடிகர் எம்.கே.ராதா அவர்களின் தந்தை.எம்.ஜீ.ஆர் அவர்களை திரையுலகிற்கு அறிமுக படுத்தியவர்.








 

Sunday, January 8

R.V.ஜானகி ராமன்

புதுச்சேரியின் முதல்வராக 1996-2000 வரை இருந்தவர்.தொடர்ந்து ஐந்து முறை (1985,1990,1991,1996,2001) நெல்லித்தோப்பு தொகுதியில் திமுக சார்பில் வெற்றி பெற்றவர் அகமுடையார் இனத்தை சேர்ந்த ஜானகி ராமன் அவர்கள்.

ஓம் சக்தி சேகர்

அகமுடையார் இனத்தை சேர்ந்த ஓம் சக்தி சேகர் அவர்கள்
புதுச்சேரி மாநில சட்டமன்ற உறுப்பினராக இரண்டு முறை நெல்லித்தோப்பு தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்றுள்ளார் 2006 மற்றும் 2011.

Wednesday, January 4

நகைமுகன்

தனித்தமிழர் சேனை நிறுவனர்.



1972ல் பொறியியல் பட்டதாரி..
திராவிட மாணவர் கழகப்பொறுப்பாளர்..
பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர்களுடன் இடதுசாரி தத்துவத்தில் நம்பிக்கைகொண்டு தொடர்பு..
மேற்குவங்க இடதுசாரி இயக்கம்போல்
தமிழக அரசியலைப்படைக்க ஒத்த்க கருத்துள்ள நட்பு மற்றும் உறவுகளுடன் முயற்சி..
அகில இந்திய பார்வர்ட்பிளாக் கட்சித்தலைமையுடன் நெருக்கம்..
மத்திய அரசின் உயர்பதவியில் இருந்தபோதும் சமூகநீதியில் நம்பிக்கை கொண்டிருந்ததால் அகில இந்திய அளவில் "BAMSCEF" என்ற அமைப்பை திருவாளர்கள்:கன்சிராம்,சிம்ரத்சிங் மான்,லால்டெங்கா ,சந்திரசேகர் போன்றோருடன் சேர்ந்து உருவாக்கம்..
தமிழகத்தில்
திருவாளர்கள்:பி கே மூக்கையாத்தேவர்,
நல்லகண்ணு,ஆறுமுகசாமி,கா பா பழனி,அனந்தநாயகி,மணலி கந்தசாமி,தா பாண்டியன்,கூத்தகுடி சண்முகம்,அன்பில் தர்மலிங்கம்,கோவைச்செழியன்,மருத்துவர் இராமதாசு,பழ.நெடுமாறன்,கி.வீரமண
ி,அய்யணன் அம்பலம்,திருமாவ
ளவன்,தனியரசு..என அவரின் தொடர்புப்பட்டியல் தொடரும்..
திராவிடன் வீரம்,நகைமுகன் என்ற இதழ் நடத்தியவர்..
மண்ணின் மைந்தர் கொள்கையில் ஈர்க்கப்பட்டு மராட்டிய மாநில அரசியலில் இக்கொள்கையை நடைமுறைப்படுத்திட போராடிய சிவசேனாவின் பால்தாக்கரேயுடன் சந்தித்து,இலங்கையில் மண்ணைக்காக்கப்போராடும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக அறிக்கைவிடச்செய்தவர்...
தந்தை பெரியாரின் சிந்தனையை ஏற்று
பின்னர் கர்நாடகத்தமிழர்,இந்தியத்தமிழர்
,உலகத்தமிழர்..பிரச்சனைகளுக்காக குரல்கொடுத்து,ஆதரவு சக்திகளை ஒருங்கிணைத்தவர்...
1990ல் திமுக ஆட்சியில் தேசிய பாதுகாப்புச்சட்டத்தில் கைதாகி 169 நாட்கள் சிறை சென்றவர்.
1991ல் திமுக ஆட்சியை மத்திய அரசு கலைக்கக் காரணமாயிருந்தவர்..
திராவிட இயக்கம் நடத்தும் தலைமைகளுடன் அரசியல் தொடர்பு கொண்டிருந்தபோதி
லும்
சமூகநீதி, இன உணர்வு,மண்ணின் மைந்தர் போன்ற கொள்கைகளில் சமரசம் காட்டாதவர்..
அரசியல் மற்றும் அதிகார வர்க்கத்தில்
தமிழரல்லாதவர்களின் ஆதிக்கத்தை வெளிப்படையாக பேசியும் எழுதியும் வந்தவர்..அதனால் அவருக்கு உயர்மட்ட அதிகாரிகளின் தொடர்பு நெருக்கமாக இருந்தது..
நான்காம் தூண் என்ற நூலை எழுதியவர்..
அரசியலில் எதிர்கருத்துக்க
ொண்டவர்களிடமும் நட்பு பாராட்டியவர்..
பகுத்தறிவும்
காங்கிரஸ் எதிர்ப்பும் கொண்டிருந்தாலும்
அவரது நூலை வெளியிட்டவர்
காஞ்சி சங்கராச்சாரியார்..
பெற்றுக்கொண்டவர்
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்..
2009ல் ஈழப்பிரச்சனையில்
திமுக நிலைப்பாட்டில் வெறுத்து
அதிமுக தலைமைக்கு ஆதரவாக செயல்பட்டவர்..
விடுதலைப்புலிகளுக்கு மத உணர்வு இல்லை என்றாலும் இந்துமத அடையாளங்களை அழிக்கும் சிங்கள அரசியலை இந்திய பாஜக தலைமைகளுக்கு ஆதாரங்களைத்திரட்டி அத்வானி மூலம் தமிழீழத்துக்கு விடிவு கிடைக்க முயற்சித்தவர்..
திமுக எதிர்ப்பு உணர்வும்
தமிழரல்லாத அதிகாரிகளின் கோபமும்
இணைந்து இவர்மீது போலியாக 18 வழக்குகள் திட்டமிட்டு போடப்பட்டன..
பிணைபெற்று வரவர கைது நடவடிக்கை..
இதய நோயாளி
சக்கரை வியாதி
இரத்தக்கொதிப்பு
விபத்த்தில் கை முறிவு...
இத்தனையும் இருந்தும் அவரது துணிச்சல் மிக்க செயல்பாடுகள் 65 வயதுவரை மட்டும் இவ்வுலகில் அவரால் வாழமுடிந்தது..
சென்னை உயர்நீதிமன்ற சுவரொட்டி வழக்கு..
ஜெயலலிதா வழக்கில் கர்நாடக வழக்கறிஞர் ஆச்சாரியா வழக்கிலிருந்து விலக சட்டநெருக்கடி...
அவரது வாழ்க்கை சிவகங்கை மாவட்டம் ஆ.தெக்கூர் எனும் கிராமத்தில் தொடங்கி..
தமிழக அரசியலில் தலைப்புச்செய்தி
யாகி..
தமிழக அதிகாரிகளுடனான தொடர்பின் வழியாக பாதிக்கப்பட்டோருக்கு உதவும்கரமாகி..
எதிர்பாராத வகையில்
14.3.2016ல் மதுரையில் இயற்கை எய்தினார்.

நன்றி:அரப்பா தியாகராஜன்

Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...