Monday, January 16

ஏ.ஆர்.பெருமாள்

அருப்புக்கோட்டை ராமுத்தேவர் - பாக்கியம் அம்மாள் ஆகியோரின் புதல்வராக 17.5.1921ல் ஏ.ஆர்.பெருமாள் பிறந்தார்.



அகில இந்திய பார்வர்ட் ப்ளாக்கின் தலைவராக இருந்தவர். பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வரலாற்றை முழுமையாக எழுதியவர். 12 வயதில் இருந்து தேவரோடு பயனித்தவர் அன்றைய இராமநாதபுரம் மாவட்டத்தின் காரியாபட்டி தொகுதியின் எம்.எல்.ஏ வாக இருமுறை வென்றவர்.



1937 சட்டபேரவை தேர்தல் சமயம் முத்துராமலிங்க தேவர் அருப்புக்கோட்டை அகம்படியர் மஹாலில் தங்கியிருந்த நேரம் செய்தி கேட்டு மக்கள் கூடி விட்டனர் பின்னர் தேவர் வெளியே வந்து மக்களை வணங்கி விட்டு காரில் ஏறி சென்றார் அக்காலத்தில் தலைவர்களின் பெயரை கூறி விட்டு ஜே என்று கூறுவது வழக்கு.கூட்டத்தில் ஒரு சிறுவன் மட்டும் இவ்வாறு கூறிக்கொண்டு தேவரின் காரை பின்தொடர்ந்து வர.சற்று தூரம் சென்று காரை நிறுத்தி விட்டு அச்சிறுவனை காரில் ஏற்றி யாரப்பா நீ என கேட்க நான் அருப்புக்கோட்டை ராமு தேவரின் புதல்வர் பெருமாள் என தேவரிடம் கூறினான் சிறுவன்.அந்த சிறுவனே பின்னாளில் (அருப்புக்கோட்டை ராமுத்தேவர் பெருமாள்)  எ.ஆர்.பெருமாள் என  அழைக்கப்பட்டார்.



பசும்பொன் தேவர் தனது சொத்தில் ஒரு பகுதியை வழங்கும் அளவுக்கு தேவரின் நம்பிக்கைக்குரியவராய் விழங்கினார்.அச்சொத்தை அவர் தேவர் பெயரில் இயங்கும் தரும ஸ்தாபனம் ஒன்று நிறுவி இனைத்து விட்டார்.தேவர் தனது சொத்தை 16 பேருக்கு பிரித்தளித்தார் இதில் 12 பேர் ஸ்தாபனத்தில் இனைத்து விட்டனர்.முத்துராமலிங்க தேவரின் மறைவிற்கு பின் கட்சியை வலுப்படுத்த பாண்டி மண்டலத்தின் குக்கிராமங்கள் வரை சென்று தேவர் புகழ் பரப்பினார்.



முத்துராமலிங்க தேவர் பெயரில் மூன்று கல்லூரிகள் அமைத்திடவும்,கோரிப்பாளையம் தேவர் சிலை மற்றும் முதுகளத்தூர் கலவரத்தினால் பாதிக்க பட்டவர்களை விடுதலை செய்யவும் மூக்கையா தேவரோடு இனைந்து பணியாற்றினார்.அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களோடு இனக்கமாக இருந்த காரணத்தினால் தேவர் ஜெயந்தியை அரசு விழாவாக  அறிவிக்கவும் மாவட்டத்திற்கு தேவர் பெயரை சூட்டவும் காரணமாக இருந்தவர்.



அருப்புக்கோட்டை பெரிய தெரு பதினெட்டு தலைக்கட்டு அகம்படியர் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட அகம்படியர் மஹாலில் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தியவர் மேலும் தேவரின் வெண்கலச்சிலையை மஹாலில் திறந்து வைத்தார்.பசும்பொன் தேவர் திருமண மண்டபம் கட்டியவர்.



ஏ.ஆர் அவர்களுக்கு முன்று மகன்களும் மூன்று மகள்களும் உள்ளனர்.உடல்நலக்குறைவின் காரணமாக 21.4.1998இல்  இயற்கை எய்தினார்.

No comments:

Post a Comment

Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...