Monday, August 10

பிற்கால சோழர்கள் படை


பிற்கால சோழர்கள் தங்களுடைய ஆட்சிக்குட்பட்ட பிற நாடுகளில் வேளிர் படை, அகம்படியர் படை இவர்களை பாதுகாப்பிற்காகவும், நிர்வாகத்திற்காகவும் அமர்த்தியுள்ளார்கள்.அகம்படியர் மைசூர், வாராங்கல், முதல் இலங்கை வரை இருந்துள்ளனர்.அகம்படியர்கள் தஞ்சையில் தேவர் என்றும் பிள்ளை என்றும் அழைக்கப்படுவார்கள்.தென்பாண்டி மண்டலத்தில் சேர்வை,தேவர்,பிள்ளை என்றும் அழைக்கப்படுவார்கள்.
தொண்டைமண்டலதில் முதலியார்,உடையார்,நாயக்கர் என்றும் அழைக்கபடுவார்கள்.அதாவது அரசு நிர்வாகத்தில் இருப்பவர்கள் பிள்ளை என்றும், போர் மற்றும் இராணுவத்தில், காவல் கடமையில் இருப்பவர்கள் தேவர்கள்,நாயக்கர்கள் என்று அழைக்கபட்டனர்.நிர்வாகம் மற்றும் காவல் கடமையில் இருப்பவர்கள் முதலியார் மற்றும் சேர்வை என அழைக்கப்பட்டனர்.


வளரி


வேட்டையாட மட்டுமே பயன்படுத்தபட்ட வளரி என்னும் ஆயுதம் பண்டை காலத்தில் போர்களங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.கடைசியாக வளரியை வெள்ளையர்க்கு எதிரான போரில் மருது பாண்டியர்கள் பயன்படுத்தினார்கள்.

வளரி என்ற ஆயுதத்தை வைத்துக்கொண்டு வெள்ளையரை அச்சுறுத்தியவர்கள் மருது பாண்டிய மன்னர்கள். இலக்கைத் தாக்கிவிட்டு, எய்தவன் கைக்கே வந்துசேரும் வளரி இருக்கும் வரை மருது பாண்டியர்களை யாரும் வெல்ல முடியாது என்பார்கள். அதனால்தான் மருது பாண்டியரின் ஆயுதக் கிடங்கைக் கைப்பற்றியதும் வளரியைத் தேடித்தேடி அழித்தனர்.


Sunday, August 9

தீ பாய்ந்த அம்மன்!

கணவனும் மனைவியுமான இருவர் பிழைப்பு தேடி தங்கள் ஊரான கோசுகொண்டுவை விட்டு புறப்பட்டு வந்தவர்கள் வழியில் மருதுபாண்டியர்களின் நரிக்குடி சத்திரத்தில் தங்கியிருந்தனர்.
நேரமோ நள்ளிரவு.அவர்களின் நாய் மட்டுமே அவர்களுக்கு துணை.
அந்த நேரம் அங்கு வந்த கயவர் கூட்டம் நயவஞ்சகத் திட்டம் ஒன்றினை தீட்டியது.

கணவரிடம் நயமாக பேகி பேச்சுக் கொடுத்து கொண்டே காட்டு பக்கம் கூட்டி சென்று நாடான் ஊருணி எனும் குளத்தருகில் கொன்று போட்டனர்.
சென்ற கணவன் திரும்பாதது கண்டு மனைவி துடித்தாள்.
நாய் வழி காட்டிட கடைசியில் அது நின்ற இடத்தில் கணவனின் பிணத்தை கண்டாள்.நரிக்குடி சத்திரத்திற்கு திரும்பி வந்து நடந்த துயரை சொல்லி புலம்பினாள். அங்கிருந்தவர்கள் மன்னரிடம் சென்று முறையிட சொன்னார்கள்.சிவகங்கை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தாள்.

கண்ணீரும் கம்பலையுமாக தம் முன் நிற்கும் பெண்ணை கண்ட மருதரசர்கள் ''உற்ற துன்பம் என்ன?'' என்று உசாவி முடிக்கும் முன்பே ''அரசே பிழைக்க வழி தேடி வந்தால் உயிருக்கே உலை வைத்து விட்டார்களே! இந்த நாட்டில் ஊருக்கு ஊர் கொலைக்களம் என்று தெரிந்திருந்தால் வேறெங்காவது போயிருப்போமே! இது தான் உங்கள் நாட்டில் நீதியா?'' என்று கண்ணகி போல் தன் ஆவேசத்தை கொட்டி தீர்த்தாள்.

கேட்ட பார்த்திபர்கள் அவளையும் உடன் அழைத்துக் கொண்டு கொலைபட்ட இடம் நோக்கி விரைந்தனர். அதற்குள் கயவர்கள் பிடிபட்டனர். உரிய விசாரணைக்கு பிறகு தண்டனை வழங்கப்பட்டது. தாயினும் மேலாக பார்த்துக் கொள்வதாக பாண்டியர்கள் கூறியும் அப்பெண் மறுத்து தன் கணவனுடன் தீப் புகுந்தாள்.

தீப்புகும் முன் தன் சேலையும், கருகமணி, காதோலையும் கருகாதிருக்குமென்று உரைத்து விட்டுத் தீப்புகுந்தாள். உடல் கருகிய பின் கருகாதிருந்த பொருட்கள் சேகரிக்கப்பட்டு மருதிருவர் குடும்பத்தினரால் நரிக்குடி முக்குளத்தில் பாதுகாக்கப்பட்டன.

கள ஆய்வுக்கு சென்ற போது அப்பெண்ணை தீப்பாய்ந்த அம்மனாக போற்றி அவர் சிதையிலிருந்து எரியாமலிருந்து எடுத்ததாக கூறப்படும் கீழ்க்கண்டவற்றை நார்ப்பெட்டியில் பரணில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது என்றும் விசேட நாட்களில் அதை எடுத்து வீட்டு பெண்கள் வழிபடுவர் என்றும் மருதரசர்களின் வாரிசுதாரர்கள் கூறினர்.

பெரிய மருதுபாண்டியர்கள் வழியினரான முக்குளம் முன்னால் கர்ணம் முத்துக்கருப்பன் சேர்வை இல்லத்தில் உள்ள அந்த நார்ப்பெட்டியில் வைத்துப் போற்றிக் காக்கப் படுபவை :-

1.
பதினாறு முழ வெள்ளைப்புடவை.
2.
கருகமணி.
3.
காதோலை.
4.
கணவர் அணிந்திருந்த வட்டுடை.
5.
ஒரு நீளமான பை.
6.
வெட்டப் பயன்படுத்திய அரிவாள்.
7.
இவற்றை கட்டிய கொச்சக்கயிறு ஆகியவை.

அன்று மருதுபாண்டியர்களின் ஆட்சிக் காலத்தில் நாட்டில் அமைதியைக் குலைக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் சில துரோகிகளின் தூண்டுதலின் பேரில் கயவர்கள் செய்த கொடூரச் செயல்களினால் ஒரு பத்தினிப் பெண் பாதிக்கப்பட்டாள்.

இன்று மருதரசர்களின் அடையாளங்களை அழிக்க பல துரோகிகள் முயன்று கொண்டேயிருக்கின்றனர். எத்தனை நாள் தான் துரோகிகளின் ஆட்டம் நிலைக்கும் என பார்க்கலாம்.

மாமன்னர் சின்னமருது பாண்டியரின் பெண்டு, பிள்ளைகள்!


மாமன்னர் சின்ன மருதுபாண்டியருக்கு வீராயி ஆத்தாள், மீனாட்சி ஆத்தாள், வைராத்தாள் ஆகிய மூன்று மனைவியராவர். இரண்டாவது, மூன்றாவது மனைவியரின் பிள்ளைகள் இருந்ததாக எந்த வரலாற்றாசிரியரும் குறிப்பிடவில்லை.

முதல் மனைவி வீராயி ஆத்தாளுக்கு சிவத்த தம்பி (சமாலி உடையார்), சிவஞானம், முத்துவடுகு என்ற துரைச்சாமி என மூன்று மைந்தர்கள் மட்டுமே.முதல் இரு மைந்தர்களுக்கூம் விடுதலைப்போர் காலகட்டத்திற்கு முன்பே திருமணமாகிவிட்டது.

சிவத்த தம்பியின் மைந்தன் பெயர் முத்துச்சாமி, சிவத்த தம்பியும், அவரது மைந்தர், முத்துச்சாமியும் மற்றும் சிவஞானமும் 1801 ல் விடுதலைப் போரில் ஈடுபட்டமைக்காக ஆங்கிலேயர்களால் தூக்கிலேற்றப்பட்டனர்.

15
வயதான துரைசாமி கடைசியாக பிடிபட்டு நாடு கடத்தப்பட்டார்.
கடைசிமகனான அவரை நாடு கடத்திய செய்தியை வெள்ளைத்தளபதி வெல்ஷ் தனது இராணுவ நினைவுகள் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
பேராசிரியர் இராக்கப்பன் அவர்களும் தனது அறிக்கையில் துரைசாமி பற்றி கடைசி செய்தி குறிப்பிட்டுள்ளார்.

அவ்வறிக்கையின்படி "துரைசாமி எந்த வாரிசையும் விட்டு செல்லவில்லை. உறுதிக்கோட்டையில் சின்னமருதுபாண்டியர் கட்டிய அரண்மனைகள் அவரது மகன்களான சிவத்ததம்பி, சிவஞானம் ஆகிய இருவரது வாரிசுகளால் மட்டுமே அனுபவிக்கப்பட்டு வந்தன். துரைச்சாமிக்கு வாரிசுகள் இருந்திருந்தால் அவர்களும் உரிமை கொண்டாடி உறுதிக்கோட்டை அரண்மனையில் குடியேறியிருப்பார்கள்.

எனவே 1821 ல் பினாங்கு தீவிலிருந்து திரும்பிய துரைசாமி உறுதிக்கோட்டை வரவில்லை. மதுரை வந்து அங்கேயே தங்கிவிட்ட துரைசாமி மணம் செய்து கொண்டோ அல்லது மணம் செய்து கொள்ளாமலோ காலங்கழித்து அங்கேயே வாரிசின்றி காலமானார்" எனத் தெரிகிறது.


மாமன்னர் பெரிய மருதுபாண்டியரின் மனைவிமார்கள் பிள்ளைகள் பட்டியல்



பெரிய பாண்டியருக்கு இராக்காத்தாள், கருப்பாயி ஆத்தாள், பொன்னாத்தாள்

ஆனந்தாயி ஆத்தாள், மீனாட்சி ஆத்தாள் ஆகிய ஐந்து மனைவிகள் 

இருந்தனர்.இவர்கள் அனைவரின் சிலைகளும் நரிக்குடி சத்திரத்தின் 

பின்புறமுள்ள வளாகத்தில் சிறு சிறு மண்டபங்களில் உள்ளன.


முதல் மனைவி இராக்காத்தாள் வாரிசுகள் :-


இவருக்கு குடைக்காதுடையார், முத்துச்சாமி, உடையணன், முள்ளிக்குட்டி 

சாமி ஆகிய 4 மகன்கள். குடைக்காதுடையார் 1794 ல் பரமக்குடி போரில் 

கொல்லப்பட்டார். முத்துச்சாமி 1801 விடுதலை போர் தொடங்குவதற்கு 

முன்னரே இயற்கை மரணம் அடைந்தார். இவரது வாரிசுகள் சிவகங்கைக்கும் 

மானாமதுரைக்கும் இடையேயுள்ள நெடுங்குளம் புகைவண்டி நிலையம் 

அருகே உள்ள வேம்பங்குடியில் இன்றும் வசித்து வருகின்றனர்.

இவ்வூரை சேர்ந்த திரு.ராமச்சந்திரன் சேர்வையிடம் ஒரு செப்பேடும் 'பெரிய 

மருது' என எழுதப்பட்ட 7 1/2 (ஏழரை) அங்குல நீளக்கத்தி ஒன்றும் தந்தத்தால் 

கைப்பிடி உள்ள எழுத்தாணி ஒன்றும் உள்ளன. இராக்காத்தாள் அவர்களின் 

மூன்றாவது மகன் உடையணனும், நான்காவது மகன் முள்ளிக்குட்டிசாமியும் 

1801 ல் நிகழ்ந்த விடுதலைப்போரில் பங்கெடுத்தமைக்காக ஆங்கிலேயரால் 

தூக்கிலிடப்பட்டனர்.


இரண்டாவது மனைவி கருப்பாயி ஆத்தாள் வாரிசுகள் :-



கருப்பாயி ஆத்தாளுக்கு கறுத்த தம்பி என்ற கறுத்த பாண்டியன், காந்தேரி 

ஆத்தாள், மருதாத்தாள் என்ற 3 குழந்தைகள். கருப்பாயி ஆத்தாள் முத்தூர் 

அரண்மனையில் வசித்து வந்தார். சிவகங்கை காளையார்கோயில் 

சாலையில் கொல்லங்குடி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வடக்கே 

ஒருமைல் தூரம் நடந்து சென்றால் முத்தூரை அடையலாம். முத்துப்போன்ற 

நெல்மணிகள் விளைவிற்கு பஞ்சமில்லாத ஊர் இதுவென்பதால் இவ்வூருக்கு 

இப்பெயர் வந்திருக்கலாம் என்று வெள்ளைத்தளபதி வெல்ஷ் தனது 

இராணுவ நினைவுகள் புத்தகத்தின் VOL 1 பக்கம் 125 ல் எழுதியுள்ளார்.

முத்தூர் அரண்மனை ஒரு ஓடையின் கரையில் அமைந்துள்ளது. 

அரண்மனை அரை ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டதாக தெரிகிறது. பூசை 

அறைதவிர பிறபகுதிகள் இடிந்து போய்விட்டதால் அந்த இடத்தில் ஊராட்சி 

ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தாய்சேய் நலவிடுதி, சத்துணவுமையம் முதலியன 

கட்டப்பட்டுள்ளன. அக்கட்டட வளாகங்களிடையே அரண்மனையின் பழைய 

செங்கல் தளவரிசையை காணமுடிகிறது. பரமக்குடி போர் முடிந்து திரும்பிய 

மருதிருவரும் படையினரும் சிறுவயல் சென்றடையும் முன் முத்தூர் 

அரண்மனையில் ஒரு நாள் தங்கி சென்றதாக வரலாறு உள்ளது. அத்தனை 

பேர் தங்கி செல்லும் அளவுக்கு முத்தூர் அரண்மனை அவ்வளவு பெரியதாய் 

இருந்திருக்கிறது.  கருப்பாயி ஆத்தாளின் ஒரே மகனான 

கறுத்தப்பாண்டியனை 1801 ல் விடுதலைப்போரில் பங்கேற்றதற்காக 

ஆங்கிலேயர் தூக்கிலேற்றினர்.


மூன்றாவது மனைவி பொன்னாத்தாளுக்கு பிள்ளைகள் இல்லை.



பொன்னாத்தாள் அவர்கள் மாமன்னர் மருதுபாண்டியர்கள் பிறந்த நரிக்குடி 

முக்குலத்தை சேர்ந்த உறவுக்கார பெண் ஆவார்.


நான்காவது மனைவி ஆனந்தாயி ஆத்தாள்:



கொல்லங்குடியில் தனக்கென்று கட்டப்பட்ட மாளிகையில் வசித்து வந்தார். 

இவருக்கு ஒரு மகன் பிறந்து இறந்து போய் விட்டதாகச் சொல்லப்படுகிறது.


ஐந்தாவது மனைவி மீனாட்சி ஆத்தாள் வாரிசுகள்:


மீனாட்சி ஆத்தாளுக்கு கவண்டன் கோட்டை துரை, தங்கம் என்ற 

பெரியதங்கம் என இரு பிள்ளைகள். மீனாட்சி ஆத்தாள் தனது தந்தையின் 

அரண்மனை உள்ள கவண்டன் கோட்டையில் தான் தன் மகள் தங்கத்துடன் 

தங்கி இருந்தார். 1794 ல் பரமக்குடி போரில் கவண்டன்கோட்டை துரை 

அவர்கள் இறந்துவிட்டதாக டாக்டர் ந.சஞ்சீவி அவர்கள் தனது மருதிருவர் 

புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். தன் கணவர் தூக்கிலிடப்பட்டதை அறிந்ததும் 

மகள் பெரிய தங்கத்துடன் தந்தையின் ஊரைவிட்டு கிளம்பிய 

மீனாட்சியாத்தாள் நரிக்குடியை அடுத்த வேலங்குடியில் குடியேறிவிட்டார்.


பெரியதங்கத்திற்கு இருபுதல்வர்களும் ஆதி வீரலட்சுமி என்ற 

சின்னதங்கமும் பிறந்தனர். ஆதிவீரலட்சுமி இந்த வேலங்குடிக்கு 3 கி.மீ 

தூரத்தில் உள்ள சீனிக்காரனேந்தலில் குடியேறினார். இவரது வழியினர் 

வேலங்குடி மற்றும் சீனிக்காரனேந்தலில் இன்றளவும் வசித்து வருகின்றனர்.

படம் :- நரிக்குடி சத்திரம் பள்ளி வளாகத்தில் இடியும் நிலையில் உள்ள 

மாமன்னர் பெரிய மருதுபாண்டியரின் இரண்டாவது மனைவி கருப்பாயி 

ஆத்தாள் அவர்களின் நினைவாலயம்

Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...