Sunday, August 9

மாமன்னர் சின்னமருது பாண்டியரின் பெண்டு, பிள்ளைகள்!


மாமன்னர் சின்ன மருதுபாண்டியருக்கு வீராயி ஆத்தாள், மீனாட்சி ஆத்தாள், வைராத்தாள் ஆகிய மூன்று மனைவியராவர். இரண்டாவது, மூன்றாவது மனைவியரின் பிள்ளைகள் இருந்ததாக எந்த வரலாற்றாசிரியரும் குறிப்பிடவில்லை.

முதல் மனைவி வீராயி ஆத்தாளுக்கு சிவத்த தம்பி (சமாலி உடையார்), சிவஞானம், முத்துவடுகு என்ற துரைச்சாமி என மூன்று மைந்தர்கள் மட்டுமே.முதல் இரு மைந்தர்களுக்கூம் விடுதலைப்போர் காலகட்டத்திற்கு முன்பே திருமணமாகிவிட்டது.

சிவத்த தம்பியின் மைந்தன் பெயர் முத்துச்சாமி, சிவத்த தம்பியும், அவரது மைந்தர், முத்துச்சாமியும் மற்றும் சிவஞானமும் 1801 ல் விடுதலைப் போரில் ஈடுபட்டமைக்காக ஆங்கிலேயர்களால் தூக்கிலேற்றப்பட்டனர்.

15
வயதான துரைசாமி கடைசியாக பிடிபட்டு நாடு கடத்தப்பட்டார்.
கடைசிமகனான அவரை நாடு கடத்திய செய்தியை வெள்ளைத்தளபதி வெல்ஷ் தனது இராணுவ நினைவுகள் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
பேராசிரியர் இராக்கப்பன் அவர்களும் தனது அறிக்கையில் துரைசாமி பற்றி கடைசி செய்தி குறிப்பிட்டுள்ளார்.

அவ்வறிக்கையின்படி "துரைசாமி எந்த வாரிசையும் விட்டு செல்லவில்லை. உறுதிக்கோட்டையில் சின்னமருதுபாண்டியர் கட்டிய அரண்மனைகள் அவரது மகன்களான சிவத்ததம்பி, சிவஞானம் ஆகிய இருவரது வாரிசுகளால் மட்டுமே அனுபவிக்கப்பட்டு வந்தன். துரைச்சாமிக்கு வாரிசுகள் இருந்திருந்தால் அவர்களும் உரிமை கொண்டாடி உறுதிக்கோட்டை அரண்மனையில் குடியேறியிருப்பார்கள்.

எனவே 1821 ல் பினாங்கு தீவிலிருந்து திரும்பிய துரைசாமி உறுதிக்கோட்டை வரவில்லை. மதுரை வந்து அங்கேயே தங்கிவிட்ட துரைசாமி மணம் செய்து கொண்டோ அல்லது மணம் செய்து கொள்ளாமலோ காலங்கழித்து அங்கேயே வாரிசின்றி காலமானார்" எனத் தெரிகிறது.


No comments:

Post a Comment

Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...