அன்றைய இந்தியாவின் புகழ்பெற்ற மருத்துவர் குருசாமி முதலியார் மைசூர் மாகாணத்தின் நிலமங்களா என்னும் ஊரில் 1880இல் பழந்தமிழ்க்குடியாம் அகமுடையார் இனத்தில் ராமசாமி முதலியார் என்னும் புகழ்பெற்ற கட்டிட கான்ட்ராக்டரின் மகனாக பிறந்தார்.மைசூரில் பள்ளிக்கல்வியை முடித்தவர் பெங்களூர் மத்திய கல்லூரியில் B.A பட்டம் பெற்றார்.ராஜாஜி இவருடைய கல்லூரி நண்பர்.
பின்னர் மெட்ராஸ் மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பில் சேர்ந்தார்.முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று தஞ்சை மருத்துவ கல்லூரியில் பணியாற்றினார்.சில ஆண்டுகள் கழித்து மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.ஆங்கில மருத்துவர்கள் மட்டுமே வழங்கப்பட்ட மிகவும் மதிக்கத்தக்க பதவி குருசாமி முதலியார் அவர்களுக்கு வழங்கப்பட்டது முதல் இந்தியராக தெரபாட்டிக்ஸ் பேராசியராக நியமிக்கப்பட்டார்.1950 களில் influenza மெட்ராஸில் மிக அதிகமாக பரவி உயிர் பலிகளை வாங்கிக்கொண்டிருந்த நேரம் ஒரு பேட்டியின் போது எல்கோசின் என்ற மாத்திரையின் மூலம் influenza வை குணப்படுத்தலாம் என கூறினார்.உடனே அந்த மாத்திரையை மக்கள் அதிகளவு வாங்கி குணமடைந்தனர் இதை பல மருத்துவர்கள் மருத்துவ நெறிகளுக்கு புறம்பாக குருசாமி முதலியார் கூறியுள்ளார் என சாடினார் மக்களின் நலனை காட்டிலும் மருத்துவ நெறி பெரியது இல்லை என் கூறி மக்களின் மருத்துவராக தனது இறுதி காலம் வரை பணியாற்றினார்.