Wednesday, January 4

நகைமுகன்

தனித்தமிழர் சேனை நிறுவனர்.



1972ல் பொறியியல் பட்டதாரி..
திராவிட மாணவர் கழகப்பொறுப்பாளர்..
பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர்களுடன் இடதுசாரி தத்துவத்தில் நம்பிக்கைகொண்டு தொடர்பு..
மேற்குவங்க இடதுசாரி இயக்கம்போல்
தமிழக அரசியலைப்படைக்க ஒத்த்க கருத்துள்ள நட்பு மற்றும் உறவுகளுடன் முயற்சி..
அகில இந்திய பார்வர்ட்பிளாக் கட்சித்தலைமையுடன் நெருக்கம்..
மத்திய அரசின் உயர்பதவியில் இருந்தபோதும் சமூகநீதியில் நம்பிக்கை கொண்டிருந்ததால் அகில இந்திய அளவில் "BAMSCEF" என்ற அமைப்பை திருவாளர்கள்:கன்சிராம்,சிம்ரத்சிங் மான்,லால்டெங்கா ,சந்திரசேகர் போன்றோருடன் சேர்ந்து உருவாக்கம்..
தமிழகத்தில்
திருவாளர்கள்:பி கே மூக்கையாத்தேவர்,
நல்லகண்ணு,ஆறுமுகசாமி,கா பா பழனி,அனந்தநாயகி,மணலி கந்தசாமி,தா பாண்டியன்,கூத்தகுடி சண்முகம்,அன்பில் தர்மலிங்கம்,கோவைச்செழியன்,மருத்துவர் இராமதாசு,பழ.நெடுமாறன்,கி.வீரமண
ி,அய்யணன் அம்பலம்,திருமாவ
ளவன்,தனியரசு..என அவரின் தொடர்புப்பட்டியல் தொடரும்..
திராவிடன் வீரம்,நகைமுகன் என்ற இதழ் நடத்தியவர்..
மண்ணின் மைந்தர் கொள்கையில் ஈர்க்கப்பட்டு மராட்டிய மாநில அரசியலில் இக்கொள்கையை நடைமுறைப்படுத்திட போராடிய சிவசேனாவின் பால்தாக்கரேயுடன் சந்தித்து,இலங்கையில் மண்ணைக்காக்கப்போராடும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக அறிக்கைவிடச்செய்தவர்...
தந்தை பெரியாரின் சிந்தனையை ஏற்று
பின்னர் கர்நாடகத்தமிழர்,இந்தியத்தமிழர்
,உலகத்தமிழர்..பிரச்சனைகளுக்காக குரல்கொடுத்து,ஆதரவு சக்திகளை ஒருங்கிணைத்தவர்...
1990ல் திமுக ஆட்சியில் தேசிய பாதுகாப்புச்சட்டத்தில் கைதாகி 169 நாட்கள் சிறை சென்றவர்.
1991ல் திமுக ஆட்சியை மத்திய அரசு கலைக்கக் காரணமாயிருந்தவர்..
திராவிட இயக்கம் நடத்தும் தலைமைகளுடன் அரசியல் தொடர்பு கொண்டிருந்தபோதி
லும்
சமூகநீதி, இன உணர்வு,மண்ணின் மைந்தர் போன்ற கொள்கைகளில் சமரசம் காட்டாதவர்..
அரசியல் மற்றும் அதிகார வர்க்கத்தில்
தமிழரல்லாதவர்களின் ஆதிக்கத்தை வெளிப்படையாக பேசியும் எழுதியும் வந்தவர்..அதனால் அவருக்கு உயர்மட்ட அதிகாரிகளின் தொடர்பு நெருக்கமாக இருந்தது..
நான்காம் தூண் என்ற நூலை எழுதியவர்..
அரசியலில் எதிர்கருத்துக்க
ொண்டவர்களிடமும் நட்பு பாராட்டியவர்..
பகுத்தறிவும்
காங்கிரஸ் எதிர்ப்பும் கொண்டிருந்தாலும்
அவரது நூலை வெளியிட்டவர்
காஞ்சி சங்கராச்சாரியார்..
பெற்றுக்கொண்டவர்
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்..
2009ல் ஈழப்பிரச்சனையில்
திமுக நிலைப்பாட்டில் வெறுத்து
அதிமுக தலைமைக்கு ஆதரவாக செயல்பட்டவர்..
விடுதலைப்புலிகளுக்கு மத உணர்வு இல்லை என்றாலும் இந்துமத அடையாளங்களை அழிக்கும் சிங்கள அரசியலை இந்திய பாஜக தலைமைகளுக்கு ஆதாரங்களைத்திரட்டி அத்வானி மூலம் தமிழீழத்துக்கு விடிவு கிடைக்க முயற்சித்தவர்..
திமுக எதிர்ப்பு உணர்வும்
தமிழரல்லாத அதிகாரிகளின் கோபமும்
இணைந்து இவர்மீது போலியாக 18 வழக்குகள் திட்டமிட்டு போடப்பட்டன..
பிணைபெற்று வரவர கைது நடவடிக்கை..
இதய நோயாளி
சக்கரை வியாதி
இரத்தக்கொதிப்பு
விபத்த்தில் கை முறிவு...
இத்தனையும் இருந்தும் அவரது துணிச்சல் மிக்க செயல்பாடுகள் 65 வயதுவரை மட்டும் இவ்வுலகில் அவரால் வாழமுடிந்தது..
சென்னை உயர்நீதிமன்ற சுவரொட்டி வழக்கு..
ஜெயலலிதா வழக்கில் கர்நாடக வழக்கறிஞர் ஆச்சாரியா வழக்கிலிருந்து விலக சட்டநெருக்கடி...
அவரது வாழ்க்கை சிவகங்கை மாவட்டம் ஆ.தெக்கூர் எனும் கிராமத்தில் தொடங்கி..
தமிழக அரசியலில் தலைப்புச்செய்தி
யாகி..
தமிழக அதிகாரிகளுடனான தொடர்பின் வழியாக பாதிக்கப்பட்டோருக்கு உதவும்கரமாகி..
எதிர்பாராத வகையில்
14.3.2016ல் மதுரையில் இயற்கை எய்தினார்.

நன்றி:அரப்பா தியாகராஜன்

Tuesday, January 3

சித்தானந்த சுவாமிகள்

ஓம் ஸ்ரீ குரு சித்தானந்தா சுவாமிகள் 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் கடலூரில் பழந்தமிழ்குடியாம் அகமுடையார் இனத்தில் பிறந்தார்.சித்துகள் செய்வதிலேயே ஆனந்தம் கண்டவர் என்பதால்தான் அவருக்கு அத்தகைய பெயர் வழங்கப்பட்டு வந்தது.
அவரது வாழ்வு பல அபூர்வ சம்பவங்களை உள்ளடக்கியது.
புதுச்சேரியில் முத்தியால்பேட்டையை
அடுத்துள்ள கருவடிக் குப்பத்தில் சுவாமிகளின் சமாதித் திருக்கோவில் உள்ளது.



விளையாட்டாக சித்தானந்த சுவாமிகள் எது சொன்னாலும் அது உண்மையே ஆயிற்று. அவர் எங்கு நின்றாலும், எதைத் தொட்டாலும் அங்கே பொன் விளைந்தது. மக்கள் அவரை ஒருமுறை தரிசனம் செய்தால் அவர்கள் பிரச்சினைகள் சுலபத்தில் தீர்வு கண்டன.
புதுச்சேரியில் முத்தியால்பேட்டையில் வாழ்ந்து வந்தார் முத்துக்குமாரசாமிப் பிள்ளை. அவரது மனைவிக்குத் தீராத வயிற்றுவலி. யாரோ சொன்னார்கள்- சித்தானந்தர் வீட்டுக்குள் வந்தால் வயிற்றுவலிலி உடனே சரியாகிவிடும் என்று.
நம்பிக்கையோடு சித்தானந்தரைத் தேடி கடலூர் வந்தார் முத்துக்குமாரசாமிப் பிள்ளை. விஷயத்தைச் சொல்லிலி அவரைத் தன் வீட்டுக்கு வருமாறு அழைத்தார்.
சித்தானந்தர், "அதற்கென்ன புறப்படுவோம்' என உடன் கிளம்பினார். அவர் புதுச்சேரியில் பிள்ளை வீட்டுக்குள் நுழைந்த மறுகணம் பளிச் என்று வயிற்றுவலிலி முற்றிலுமாக நீங்கி எழுந்து உட்கார்ந்தாள் பிள்ளையின் மனைவி.
அதுவரை வயிற்றுவலிலியால் துடித்துக் கொண்டிருந்த அவள் அளவற்ற நிம்மதி அடைந்தாள். தெய்வம் அல்லவா மனித வடிவில் வந்திருக்கிறது!
சற்று யோசித்த அவள் சித்தானந்தரிடம் ஒரு வேண்டுகோளை வைத்தாள். "சாமீ! நீங்கள் எங்கள் வீட்டிலேயே சிலகாலம் தங்கலாகாதா?' என்பதே அந்த எளிய பெண்மணியின் வேண்டுகோள்.
இதற்கான காரணங்கள் இரண்டு. சுவாமிகள் தன் இல்லத்தில் தங்க வேண்டும் என உண்மையிலேயே பக்திப்பூர்வமாக அவள் விரும்பினாள் என்பது ஒன்று. சுவாமிகள் தன் வீட்டை விட்டுச் சென்றால் தன் கொடும் வயிற்றுவலிலி எங்கே மறுபடி வந்துவிடுமோ என அஞ்சினாள் என்பது இன்னொன்று.
அவள் எண்ணத்தைப் புரிந்துகொண்ட சுவாமிகள் நகைத்தார். ""மகளே! உன் வயிற்றுவலிலி மீண்டும் உன்னைத் துன்புறுத்தாது. அதற்குக் காரணமான தீய சக்திகள் வீட்டை விட்டு விலகி ஓடிவிட்டன. உனக்கு மறுபடி வயிற்றுவலிலி வருமோ என்ற அச்சம் தோன்றும்போதெல் லாம் பிறவிப்பிணி உள்பட எல்லாப் பிணிகளையும் போக்கக் கூடிய நமசிவாய மந்திரத்தை ஜெபிப்பாயாக. என்றாலும் உன் வேண்டுகோளுக்கு நான் உடன்படு கிறேன். உன் வீட்டிலேயே தங்குகிறேன்!'' என்றார் சுவாமிகள்.
முத்துகுமாரசாமிப் பிள்ளையும் அவர் மனைவி அன்னம்மாளும் அடைந்த ஆனந்தத்திற்கு ஓர் அளவு உண்டா என்ன? மாபெரும் சித்தராய் உலகோரால் கொண்டாடப்படும் ஒரு மகான் தங்கள் வீட்டிலேயே கொஞ்ச காலம் தங்கப் போகிறார்! பக்திப் பரவசத்தில் அவர்கள் தழுதழுத்தார்கள். தினமும் அந்த வீட்டில் நடந்தது ஆன்மிகச் சந்தைதான். நூற்றுக்கணக்கான மக்கள் சுவாமிகளைத் தேடி வந்தார்கள். ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொருவகை பிரச்சினை.
சுவாமிகளின் அருளுரையைக் கேட்டும், அவர் நிகழ்த்தும் அற்புதங்களைக் கண்டும் அவர்கள் மெய் சிலிர்த்தார்கள். எல்லாரிடமும் ஆசைகளைக் குறைத்துக் கொண்டு நேர்மையான வழியில் வாழுமாறு வலிலியுறுத்தினார் சுவாமிகள். தீய பழக்கங்களைத் தொலைத்துவிட்டு தூய வாழ்வுக்குத் திரும்பு மாறு கூறினார். அவரது அருளுரைகளுக்கு வசப்பட்டு மக்கள் மெல்ல மெல்ல நல்ல நெறிகளை அனுசரித்து வாழத் தலைப் பட்டார்கள். சுவாமிகளின் புகழ் மேலும் மேலும் பரவியது.
சித்தானந்தர் பற்பல உடல் பிணி களுக்கு மருத்துவம் செய்தார். அவருக்கு உடல்நோய்களைத் தீர்க்கும் மருத்துவம் தெரிந்திருந்தது. தமது அற்புத சக்தியினா லும் பலரது பிணிகளைக் குணப்படுத் தினார்.
எங்குசென்றாலும் அன்னம்மாளுக் கும் முத்துக்குமாரசாமிப் பிள்ளைக்கும் கொடுத்த வாக்குறுதிப்படி இரவு அவர்கள் வீட்டிற்குத் திரும்பிவிடுவார். சுவாமிகள்மேல் மட்டற்ற அன்பு செலுத் திய அந்த அபூர்வத் தம்பதிகள் அவரைத் தங்கள் பிள்ளைபோல் பார்த்துக் கொண்டார்கள். முத்துக்குமாரசாமிப் பிள்ளைக்கு சுவாமிகள் பிள்ளை ஆனார்! அன்னம்மாளின் வயிற்றில் பிறந்த பிள்ளை அல்ல என்றாலும் வயிற்றுவலிலி நீக்கிய பிள்ளை அல்லவா!
சித்தானந்தரின் மகிமைகளால் கவரப்பட்டு முத்தையா முதலியார் என்ப வர் அவரது தீவிர அன்பரானார். சித்தானந்தர் நினைவிலேயே தோய்ந்து அவரையே பக்திசெய்து வாழ்ந்து வந்தார்.



முதலிலியாரின் மனைவிக்குத் திடீரென்று கடும் பிரசவ வலி எடுத்தது. அப்போது அவள் பட்ட வேதனையையும் அந்த வலியால் அவள் அலறிய அலறலையும் காணவும் கேட்கவும் சகிக்காத முதலியார் மருத்துவரைத் தேடிப் போவதற்கும் முன்பாக சுவாமிகளைத் தேடிவந்தார். ""என்ன செய்வேன். இப்படித் துடிக்கி றாளே அவள்! மருத்துவரைப் பார்ப்பதற் கும்முன் தங்கள் ஆசிகளைப் பெறவந் தேன்'' என்று மனம்குமுறிப் பதறினார்.
அமைதியாக முதலியாரைப் பார்த்த சுவாமிகள், ""ஆனந்தன் என்று பெயர் வை!'' என்றார். முதலிலியாருக்கு ஒன்றும் புரியவில்லை. ""என்ன சொல்கிறீர்கள் சுவாமி?'' என்று கேட்டார் அவர்.
""உன் மனைவியின் பிரசவ வலிலி நின்று விட்டது. அவள் இப் போது மிகுந்த மகிழ்ச்சியோடு உன் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறாள். சுகப் பிரசவம் ஆகி யிருக்கிறது. ஆண்குழந்தை பிறந்திருக் கிறது. இனி நீ ஆனந்தமாக இருக்கப் போகிறாய். அதனால்தான் அந்தக் குழந்தைக்கு ஆனந்தன் என்று பெயர் வை என்றேன். இனி மருத்துவர் எதற்கு? நேரே வீட்டுக்குப் போ! மனைவியைக் கவனி!'' என்று திருநீறு கொடுத்து அனுப்பினார் சுவாமிகள்.
வீட்டுக்கு ஓடிய முதலிலியாருக்கு உண்மை யிலேயே ஆனந்த அதிர்ச்சி காத்திருந்தது. பக்கத்தில் கொழுகொழுவென்று ஓர் ஆண் குழந்தை சிரித்துக் கொண்டிருக்க, மனைவி வாயெல்லாம் பல்லாக அவரை வரவேற்றாள். தம் ஞானக் கண்ணால் அனைத்தையும் உணர்ந்துசொல்லும் சுவாமிகளின் ஆற்றல்
முதலியாரைப் பரவசத்தில் ஆழ்த்தியது. அவர் சுவாமிகள்மேல் கொண்ட பக்தி மேலும் வலிலிமைப்பட்டது.
ஒருநாள் சுவாமிகள் குயவர்பாளையத்தைச் சேர்ந்த ஒரு பக்தர் வீட்டிற்குச் சென்றுவிட்டுத் திரும்பி வந்துகொண்டிருந்தார். வழியிலிலிருந்த சாராயக் கடை ஒன்றின் வாசலிலில் ஒரு குடிகாரன் அவரை வழிமறித்தான்.
""சாமீ! ஆன்மிகமெல்லாம் பேசறீங்களாமே? கொஞ்சம் சாராயம் குடிச்சுப் பாருங்க. நல்லா ஆன்மிகம் பேச வரும்!'' என்று அவரைக் கிண்டல் செய்தான். அவனைத் தவிர்த்துவிட்டுப் போக முனைந்தார் அவர். ஆனால் அவனோ மறுபடி மறுபடி வழிமறித்து சாராயம் குடிக்கு மாறு வற்புறுத்தினான்.
கெடுதலைத் தனக்குத்தானே வரவழைத்துக் கொள்வதென அவன் முடிவு செய்திருக்கிறபோது அதை யார்தான் தடுக்க முடியும்? சுவாமிகள் ""சரி, சாராயம் கொடு!'' என்றார். நிகழவிருக்கும் விபரீதத்தை உணராமல், சாராயக் கடைக்காரரிடம் ""சாமிக்கு வேண்டும் மட்டும் சாராயம் கொடு!'' என்றான் அவன்.
சுவாமிகள் மெல்லிலிய முறுவலுடன் சாராயம் குடிக்கலானார். திரும்பத் திரும்ப சாராயத்தை வாங்கிக் குடித்துக் கொண்டே இருந்தார். ஒரு பீப்பாய் சாராயம் காலிலியாயிற்று!
கடைக்காரன் வெலவெலத்துப் போனான். சுவாமிகளைப் பற்றி ஏற்கெனவே அறிந்திருந்த அவன் முகத்தில் அச்சம் பரவியது.
ஆனால் சுவாமிகளிடம் எந்தத் தள் ளாட்டமும் இல்லை. ஏதோ பசித்த குழந்தை பாலைக் குடிப்பது மாதிரி குடித்துக் கொண்டே இருந்தார்.
ஆனால் அவர் குடித்த சாராயத்தின் போதையெல்லாம் குடிகாரன் உடலிலில் ஏறிக் கொண்டிருந்தது. தன் போதையைக் கட்டுப் படுத்த இயலாத அவன் தள்ளாடினான்; தடுமாறினான்; வாய்குழறினான்; மயக்கம் போட்டுக் கீழே சரிந்தான். அளவற்ற போதை காரணமாக அவன் நாடித் துடிப்பு மெல்ல மெல்லக் குறைந்துகொண்டிருந்தது.
கடைக்காரன் சுவாமிகளின் காலிலில் விழுந்து மன்னிப்பு வேண்டினான். ""என்னை ஏதும் சபித்துவிடாதீர்கள். நான் பிள்ளை குட்டிக் காரன்!'' என்று அழுதான். ""நீ என்னப்பா செய்வாய்? அவன் சொன்னபடி நீ செய்தாய். அவ்வளவுதானே?'' என்ற சுவாமிகள் தன்னை வம்புசெய்த குடிகாரனை ஒரு பார்வை பார்த்து விட்டு, வேகமாக முத்துக்குமாரசாமிப் பிள்ளை இல்லத்தை நோக்கி நடையைக் கட்டினார்.
திகிலடைந்த கடைக்காரன் உடனே ஓடிப் போய் அந்தக் குடிகாரனின் உறவினர்களுக்குத் தகவல் சொன்னான். அவர்கள் வந்து பார்ப் பதற்குள் நிலைமை மோசமாகியிருந்தது.
அளவற்ற போதை தலைக்கேற அவன் பிழைப் பதே சிரமம் என்பதை உறவினர்கள் உணர்ந் தார்கள்.
மருத்துவரிடம் போகலாம் என்று ஒருவர் சொன்னதைக் கேட்டு, அந்தப் பைத்தியக்காரத் தனத்தைச் செய்யவேண்டாம் என்று கண்டித் தாள் அந்தக் குடிகாரனின் மனைவி. தன் கண வனை அள்ளித் தோள்மேல் சுமந்துகொண்டு சுவாமிகளைத் தேடி ஓடினாள் அவள். கூட்டம் அவளைப் பின்தொடர்ந்தது.
சுவாமிகளிடம், ""ஐயா, எனக்கு நீங்கள்தான் மாங்கல்யப் பிச்சை தரவேண்டும்!'' எனத் தன் கணவனை அவர் காலிலில் கிடத்தித் தானும் விழுந்து வணங்கினாள்.
மக்கள் வெள்ளம் என்ன நடக்கப் போகிறதோ என அச்சத்தோடு பார்த்துக் கொண்டிருந்தது. சுவாமிகளின் கருணை மனம் உருகியது.
""டேய். போதையில் கிடந்தது போதும்; எழுந்திரு.'' என்று ஆணையிட்டார் அவர்.
அடுத்த கணம் வாரிச்சுருட்டிக் கொண்டு
அவன் எழுந்து நின்றான்.
""சாமி... என்னை மன்னிச்சுடுங்க சாமி!'' என மறுபடி அவர் காலிலில் விழுந்து பணிந் தான். இனிமேல் சாராயம் குடிப்ப தில்லை என்று மனைவிக்கு சத்தியம் செய்து தரச்சொன்னார் சுவாமிகள். அவன்
அப்படியே சத்தியம் செய்துகொடுத்தான். மனைவி கண்ணீர் மல்க சுவாமிகளுக்கு நன்றி தெரிவித்து விடைபெற்றாள்.
சித்தர்களின் உணவைப் பற்றி என்ன சொல்வது? அவர்களில் சிலர் பல மாதங்கள் சாப்பிடாமலே இருப்பதுண்டு. சிலர் பசி வந்தால் கல்லைக் கடித்துச் சாப்பிட்டுப் பசி ஆறுவதுண்டு! சித்தானந்த சுவாமிகள் எப்போது சாப்பிடுகிறார்- எதைச் சாப்பிடு கிறார் என்றெல்லாம் அதிகம் பேர் எதுவும் அறியவில்லை. அவர் சாப்பிடுவதுண்டா, காற்றையே உணவாய்க் கொள்கிறாரா என்றுகூட சிலர் சந்தேகம் கொண்டதுண்டு.
ஆனால் முத்தையா முதலிலியாரின் மனைவி அவர்மேல் தன் பிள்ளைபோல் பாசம் வைத்தி ருந்தாள். ""உடலைப் பராமரிக்காமல் என்ன தியானம் வேண்டிக் கிடக்கிறது? கொஞ்சம் சாப்பிட்டுவிட்டுப் பிறகு இந்த தியானத்தை எல்லாம் வைத்துக் கொள்ளக் கூடாதா?'' என்று அடிக்கடி அவள் அங்கலாய்ப்பாள். தன் வயிற்று வலிலியை நீக்கியவரின் வயிற்றுப் பசியை நீக்குவதைத் தன் கடமைபோல் மேற்கொண்டிருந்தவள் ஆயிற்றே!
சுவாமிகள் எப்போதாவது அவளிடம் வசமாக மாட்டிக் கொள்வார். அவளது தாயன் பைப் பார்த்துச் சிரித்துக்கொள்வார். சாப்பிட்டு விட்டுப் போகும்படி அவள் வற்புறுத்தும்போது சிலநேரம் சரி என்று சாப்பிட உட்கார்வார்.
முத்தையா முதலிலியார் வீட்டில் ஒரு கருங்கல் உண்டு. அம்மிக்கல் மாதிரி சற்று சமதளமாக உள்ள கருங்கல் அது. அதில் இலை எதுவும் போடாமல் கழுவிவிட்டு உணவு பரிமாறச் சொல்வார்.
சுவாமிகள் ஏன் இப்படியெல்லாம் சொல்கி றார் என்ற விசித்திரங்களை யார்தான் அறிய முடியும்? சுவாமிகள் கல்லிலில் சாப்பிடுவதை எண்ணி அந்தப் பெறாத தாயின் மனம் உருகும். ஆனால் என்ன செய்வது? கருங்கல்லிலில் பரிமாற மறுத்தால், அவர் சாப்பிடா மலே போய்விட்டால் அது இன்னும் சங்கடமல்லவா?
உளுந்து வடை, சுண்டல் போன்றவைதான் அவருக்கு விருப்பமான உணவு வகை. அவற்றை ஏதோ சாப்பிட்டேன் என்று கொறித்துவிட்டு எழுந்துவிடுவார்.
அவர் தனக்காகச் சாப்பிடாமல் வேறு யாருக்காகவோ சாப்பிடுவதாகத் தோன்றும். சாப்பிட்ட நாட்களிலும் சரி; சாப்பிடாத நாட்களிலும் சரி- உடல் ஆரோக்கியத்திலோ சுறுசுறுப்பான நடையிலோ சுவாமிகளிடம் எந்த வித்தியாசத்தையும் காணமுடியாது.
அவர் மற்ற எல்லாரையும்போல அல்ல; மற்ற எல்லாரையும்விட அதிக ஆரோக்கியத்தோடு இருந்தார்.
'சாப்பிடும்போது வேறு யாருக்கோ சாப்பிடுவது மாதிரி சாப்பிடுகிறார். அது மாதிரி அவர் சாப்பிடாத காலங்களில் அவருக் காக வேறு யாரோ சாப்பிடுகிறார்களோ என்னவோ!' என்று நினைத்து வியந்து கொள்வாள் முதலிலியாரின் மனைவி.
சுவாமிகள் சாப்பிடப் பயன்படுத்திய அந்தக் கருங்கல்லுக்கு ஒரு தனி மகிமை வந்தது. பிரசவ வலிலியால் அவதிப்படுபவர்கள் அந்தக் கல்லிலில் சற்று நேரம் உட்கார்ந்தால் போதும். வலிலி விரைவில் நீங்கி சுகப் பிரசவம் நடந்தது! பிரசவத்திற்குக் காத்திருக்கும் பெண்களெல்லாம் முதலியார் மனைவியின் அனுமதியைப் பெற்று, அந்தக் கல்லில் சற்றுநேரம் பிரார்த்தனையோடு அமர்ந்து விட்டுச் செல்வார்கள்.
ராமாயண காலத்தில் ராமன் கால்பட்ட கல்லிலிலிலிருந்து அகலிலிகை உயிர்த்தெழுந்தாள். இக்கலிகாலத்தில் சுவாமிகளின் கைபட்ட கல் பல உயிர்கள் வலிலியின்றிப் புவியில் எழ உதவியது.
சுவாமிகள்மேல் ஒரு குயவனுக்கு மிகுந்த அன்பு. அவர் பெருமையை உணர்ந்திருந்த அவன் அடிக்கடி அவரைத் தேடிவருவான்.
அவரது அருளுரைகளில் மனம் ஈடுபட்டு கேட்டுக் கொண்டிருப்பான். தன் வீட்டாரிடம் சுவாமிகளின் மகிமைகள் பற்றி ஓயாமல்
சொல்லிலிக் கொண்டிருப்பான்.
அவனுக்கு வாழ்நாளில் ஒரே ஒரு ஆசை. சுவாமிகள் என்றாவது ஒரு நாள் தன் வீட்டில் விருந்து சாப்பிட வேண்டும் என்பதுதான் அது. ராமன் சாப்பிடப் போகும் விருந்துக்காக சபரி காத்திருந்த மாதிரி அவனும் பிரார்த்தனை செய்துகொண்டு காத்திருந்தான்.
சுவாமிகள் எங்கு போனாலும் அங்கே போய் அவரது அருள்பொலிலியும் திருமுகத்தை மனதில் உள்வாங்கிக் கொண்டான் அவன். சுவாமிகள் உபதேசம் செய்யும் நேரங்களில் ஐயப்ப சாமி மாதிரி குத்துக் காலிலிட்டு அமர்வதை யும் நன்கு கவனித்துப் பார்த்துக் கொண்டான்.
அவனிடம் ஒரு கலை குடியிருந்தது. மண்ணால் பொம்மை செய்யும் கலை. அச்சு அசல் சுவாமிகளைப்போலவே ஒரு பொம்மையை உருவாக்கினான். நெற்றியில் குங்குமம். முகத்தில் தாடி. கழுத்தில் ருத்திராட்ச மாலை.
அவன் கலைத்திறனோடு உருவாக்கிய சிலை மட்டுமல்ல அது; பக்திப் பெருக்கோடு உரு வாக்கியதும்கூட. அவனது பக்தியை மெச்சி சுவாமிகளே அந்த மண்பொம்மையில் ஊடுருவி அமர்ந்துகொண்டார் என்றுதான் பார்த்தவர் களுக்குத் தோன்றியது. சுவாமிகளைச் சிறிய வடிவில் நேரில் பார்ப்பதைப்போல் பார்த்தவர் கள் மயங்கினார்கள். அந்தச் சிலையைப் பார்த்து கன்னத்தில் போட்டுக்கொண்டார்கள்.
சுவாமிகளிடம் ஒருநாள் தன் வீட்டுக்கு விருந்துண்ண வரவேண்டும் என்று விண்ணப் பித்தான். அவர் அவன் முதுகில் தட்டிக் கொடுத் தார். ஜாதி மத வேறுபாடுகளை ஒருபோதும் அவர் பாராட்டியதில்லை. நாளையே வருகி றேன் என்றார்.
அந்தக் குயவன் அளவற்ற ஆனந்தம் அடைந்தான். மறுநாள் விருந்துக்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செய்யலானான்.
அந்த வீடே விழாக்கோலம் பூண்டது.
மறுநாள் காலை சுவாமிகள் வருகை தந்த போது, வாயிலிலில் முழங்காலிலிட்டு அமர்ந்து சுவாமிகளைப் பார்த்தவாறே கண்ணீர் பெருக்கினான் அவன். அந்த எளிய குயவனின் உள்ளார்ந்த பக்தியைக் கண்டு சுற்று வட்டாரமே வியந்தது. குயவன் வீட்டில் ஊர் முழுவதும் குழுமி விட்டது. சுவாமிகள் ஆஞ்சனேயரை ராமபிரான் தழுவிக் கொண்ட மாதிரி அவனை அள்ளித் தழுவிக் கொண்டார்.
""அன்பனே, உள்ளே வா'' என அவனோடு வீட்டுக்குள் நடந்தார்.
அன்றுதான் சுவாமிகள் அத்தனை சாப்பாடு சாப்பிட்டதை எல்லாரும் பார்த்தார்கள். சுவாமிகள் அவன் தந்த உணவையா உண்டு கொண்டிருந்தார்? அவனது தூய பக்தியை அல்லவா மனமாரப் பருகிக் கொண்டிருந்தார்!
விருந்து முடிந்ததும் சுவாமிகளை விழுந்து வணங்கி அவன் தான் உருவாக்கிய சிலையை அவர் கைகளில் கொடுத்தான். அச்சு அசலாக சுவாமிகளைப்போலவே அமைந்திருந்த அந்தச் சிலையைப் பார்த்து கூட்டம் கைதட்டி ஆர்ப் பரித்தது.
சிலையை மறுபடி மறுபடி பார்த்த சுவாமி கள் அருட்புன்னகை புரிந்தார். ""தோலால் மூடப்பட்ட கூடு, மண்ணால் செய்யப்பட்ட கூடு!'' எனத் தம்மையும் அந்தச் சிலையை யும் காட்டிக் காட்டி குறிப்பிட்டார். ""சிலையை நானாக எண்ணிக் கொள்ளுங்கள்!'' என்றார். விரைவில் தான் உலகை விட்டு மறையப் போகிறோம் என்பதை அவர் சூசகமாக உணர்த்தினார். அப்படியும் அவரது குறிப்பை யாரும் புரிந்துகொள்ளவில்லை.
ஒருநாள் முத்துக்குமாரசாமிப் பிள்ளையை அழைத்தார் சுவாமிகள். ""வரும் வெள்ளிக் கிழமை எனக்குக் கல்யாணம் நடக்கப் போகிறது. நம் அன்பர்கள் எல்லாரையும் முத்தியால்பேட்டையில் உள்ள சிங்காரத் தோட்டத்திற்கு வரச் சொல்லி விடுங்கள்!'' என்று உத்தரவிட்டார்.
பிள்ளைக்கு ஏதோ புரிந்தது; புரியாதது போலவும் இருந்தது. புரிந்துகொண்ட உண்மை யைப் புரிந்து கொள்வதில் விருப்பம் இல்லாமல் இருந்தார் அவர். விழிநீரைத் துடைத்துக் கொண்டு அன்பர்கள் அனைவருக்கும் செய்தி சொல்லி அனுப்பினார்.
அந்த நாளும் வந்தது. எல்லாருமே நடக்கப் போவதை உணர்ந்து கண்ணீர் பெருக்கிக் கொண்டிருந்தனர். ஆராதனைக்குரிய மங்கலப் பொருட்கள் வந்து குவிந்திருந்தன. கூட்டம் வெள்ளம்போல் கூடியிருந்தது. விறுவிறு வென்று நடந்து தோட்டத்திற்குள் வந்த சுவாமிகள், தம் அன்பரான சொக்கலிலிங்கம் பிள்ளை என்பவரை அழைத்தார். தாம் பயன் படுத்திய கைக்கடிகாரத்தையும் தம்முடைய பாதுகைகளையும் அவரிடம் கொடுத் தார்.
""நீ வைத்துக்கொள். எனக்கு கைக் கடிகாரம் தேவைப்படாது. நான் காலத் தைக் கடக்கப் போகிறேன். பாதுகை களும் தேவைப்படாது. மண்ணில் நடக்கத்தான் பாதுகை தேவை. ஆகாயத்தில் நடக்கப் பாதுகைகள் எதற்கு?''
அவர் சொன்னதைக் கேட்டு கூட்டம் விம்மியது. மங்கல காலங்களில் அழுவது சரியல்ல என்று கூட்டத்தினருக்கு உணர்த்திய அவர், தாம் உடலை உகுத்தாலும் சூட்சும ரூபமாக அவர்களுக்கு என்றும் வழிகாட்டுவோம் என்று உறுதியளித்தார்.
கூட்டம் ஒருவாறு தன் துயரத்தைக் குறைத் துக்கொண்டது. அபிஷேக ஆராதனைகளை எந்தெந்த வகையில் செய்யவேண்டும் என்று விரிவாக உணர்த்திய அவர், பத்மாசனத்தில்
அமர்ந்து நிஷ்டையில் ஆழ்ந்தார்.
ஆராதனைகள் தொடங்கின. கற்பூர ஆரத்தி காட்டும்போது சுவாமிகளின் ஆன்மா அவரது உடல் கூட்டிலிலிருந்து விடுதலை பெற்றிருந்தது. செய்தி கேட்டு மக்கள் ஆயிரக்கணக்கில் குழுமத் தொடங்கினார்கள்.
 சுவாமிகளின் திருமேனியைச் சமாதிக்கு எடுத்துச் செல்ல யத்தனிக்கையில் ஓர் அபூர்வ நிகழ்ச்சி நடந்தது. சுவாமிகள் மறுபடி உயிர்த் தெழுந்தார்! அவரைச் சுற்றி ஒரு புனித ஒளி கண்ணைக் கூசவைக்கும் வகையில் படர்ந்திருந்தது. ""ஆராதனைகளைச் செய்யும்போது இன்னின்ன செயல்களை
அவசரத்தில் செய்யாமல் விட்டுவிட்டீர்கள்.
அவற்றையும் பொறுமையாகச் செய்து உடலைச் சமாதி செய்வியுங்கள்!'' என்று அறிவுறுத்திய சுவாமிகள், மீண்டும் தன் உயிரை உகுத்தார்!
திகைப்படைந்த மக்கள் மறுபடி ஆராதனைகளை முறைப்படி செய்து, அவரது திரு மேனியை அவர் சொன்னவாறே முத்துக் குமாரசாமிப் பிள்ளை தோட்டத்திற்கு ஊர்வல மாக எடுத்துச் சென்றார்கள். அங்கே அவரது உடலை மண்ணில் வைத்து மூடி சமாதி எழுப்பினார்கள்.
அந்தச் சமாதியில் இருந்தும், தன்னை பக்தியுடன் எண்ணுபவர்கள் நெஞ்சங்களில் இருந்தும் வேண்டியவர்க்கு வேண்டி யதை வழங்கியவாறு தொடர்ந்து அருளாட்சி நடத்திக் கொண்டிருக்கிறார் சுவாமிகள்!

நன்றி:நக்கீரன்

S.ராமலிங்கம் அகமுடையார்

புதுச்சேரி மாநிலத்தில் முதன் முதலில் அகமுடையார் வேளாளர் சங்கத்தை உருவாக்கியவர் நீதிபதி S.ராமலிங்கம் அகமுடையார்

Monday, January 2

B.M.சுந்தரவதன முதலியார்


தமிழ்நாட்டில் முதல் முதலில்
துளுவவேளாளர் சங்கத்தை உருவாக்கி அதன் மூலம் அகமுடையார் (துளுவ வேளாளர்) சமுதாயத்தை ஒருங்கிணைத்து முதல் மாநாட்டை நடத்தியவர் டாக்டர் B.M.சுந்தரவதனன் முதலியார்.


T.G.ஜெயராமன் அகமுடையார்

நேதாஜியின் இந்திய ராணுவப்படைக்கு அறைக்கூவல் விடுத்த போது வேலூர் மாவட்டத்திலே முதல் ஆளாய் ரத்தத்தில் கையெழுத்திட்டு நேதாஜி படையில் சேர்ந்தவர்.


ராக்கெட் மற்றும் பாராசூட் பிரிவில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றியவர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர்.



இவரது சேவையை பாராட்டி, மத்திய அரசு தாமரை பட்டையமும் விருதும் அளித்து கெளரவித்தது. பாரத் ரத்னா மேதகு முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் APJ அப்துல்கலாம் நேதாஜியின் இந்திய ராணுவப்படையில் பணியாற்றியதற்கு "நாட்டிற்கு உழைத்த விடுதலை வீரர் எனவும் விடுதலை போராட்ட தியாகி" எனவும் கௌரவப்படுத்தினார்

பாலசுப்பிரமணிய முதலியார்

அண்ணாவின் அரசியல் குரு:

அண்ணாவின் அரசியல் குரு பி.பா என்கிற
பாலசுப்பிரமணியன் முதலியார்



13 வருடம் சண்டே அப்சர்வர் என்ற ஆங்கில பத்திரிகை நடந்தியவர் பெரியாருக்கு முன்பாகவே அண்ணா பொதுவாழ்க்கைக்கு அரசியல் குரு ஆவார் .


இன்று அண்ணாவை அனைவருக்கும் தெரியும் அவரை உருவாக்கிய இவரை?


இந்த அகமுடையாரின் புகழ் பரவ செய்வோம் போற்றுவோம்.



தொண்டை மண்டல அகமுடையார்கள்

தொண்டை மண்டல அகமுடையார் பிரிவுகளும் பட்டங்களும்:


1.விழுப்புரம் மாவட்டம்
1திருவெண்ணெய் நல்லூரில் - கோட்டை
பற்று அகமுடையார்
பட்டம்:- பிள்ளை, # உடையார் , ( துளுவ
வேளாளர் )
2.திருக்கோவிலூர் மற்றும் திருவண்ணாமலை
வட்டாரத்தில் மலைமான் ( மலைநாட்டு )
அகமுடையார்.
பட்டம்:- # பிள்ளை, உடையார், நாயக்கர்,
முதலியார்
3.கடலூர், விழுப்புரம், புதுச்சேரி வட்டாரத்தில் - துளு நாடு இரும்புத் தலைவேளிர் அகமுடையார் ,
பட்டம்:- # பிள்ளை , முதலியார், உடையார்,
( துளுவ வேளாளர் )
4.வேலூர் மாவட்டம் & சென்னை,
காஞ்சிபுரம் - கோட்டை பற்று அகமுடையார் மற்றும் துளு நாடு வேளீர் அகமுடையார்
பட்டம்:- # முதலியார், உடையார், பிள்ளை
( துளுவ வேளாளர் )
5.பெங்களூர் மற்றும் ஆந்திர மாநிலத்தில் -
சேர வம்ச ஐவளி நாட்டு அகமுடையார்
பட்டம்:- முதலியார், இராவ், ரெட்டி,
( துளுவ வேளாளர் )
நன்றி அண்ணன் : ஜெயகாந்தன் அகமுடையார் நெல்லிக்குப்பம

Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...