Monday, January 2

அங்கம்போரா

அங்கம்போரா-பழந்தமிழரின் தற்காப்புக்கலை:




சோழர் ஆட்சி இலங்கையில் வலுவிலந்த காலத்தில் சிங்கள மன்னர்கள் ஆட்சி மீண்டும் இலங்கையில் தோன்றியது!
அகம்படி சாதியினரின் தொல் அரசகுடிச்சிறப்பையும் , போர்முறைகளையும் கண்ட சிங்கள அரசர்கள் அகம்படியினரை தங்கள் படையினுள் இணைத்துக்கொண்டனர்!
முதலாம் பராக்கிரமபாகுவின் (1153-1186) படையில் அகம்படியினர் பெருமளவிலான அகம்படியினர் இருந்தனர்
ஆதாரம்: நிகாய சங்கரகய (சிங்கள பழம் நூல்)
கம்பதெனிய,கம்பளை,கோட்டே ஆகிய ராசதானிகளும் அகம்படிகள் படையினராக இருந்துள்ளனர்
ஆதாரம்: மயூரசந்தேஸய (சிங்கள பழம் நூல்)
அகம்படியினர் போர்ப்படையில் இருந்ததோடு அரசர்களின் அரண்மனைகள்,கோட்டைகள் மற்றும் புத்த ஆலயங்களைப் பாதுக்காத்தனர்.
அவ்வகையில் புத்தரின் புனிதப்பல் இருந்த புகழ்பெற்ற புத்த ஆலயத்தை அகம்படியினர் பாதுகாத்தனர்
ஆதாரம்: அகம்படி உம்பிழ அயித்தன் கல்வெட்டு( இலங்கை-ஹிங்குறாக்கொடை) -காலம் கி.பி 1150
பலகாலம் தமிழகத்தை விட்டு இலங்கையில் தங்கியிருந்த அகம்படியினர் அங்கிருந்த பெண்களை மணந்து கொண்டு புதிய சாதியை உருவாக்கினர்.
அகம்படியினர் பலர் புத்த மத்தத்தையும் தழுவினர்.அகம்படியினருக்கும் இலங்கையில் உள்ள பெண்களுக்கும் பிறந்தவர்கள் புத்த மதத்தினராகவே வளர்ந்தனர்!
தமிழ்நாட்டில் வாழந்த அகம்படியினர் பின்னாட்களில் வேளாண்மையில் கவனம் செழுத்த ஆரம்பித்த போது தங்களுடைய அங்கப்போர்க்கலை பயிற்சியை முற்றிலும் மறந்து போயினர்.
அதே வேளையில் அகம்படியினர் தங்கள் தற்காப்புக்கலையை சேரநாட்டில் களரிப்பயிற்று என்ற பெயரிலும் இலங்கையில் அங்கம்போரா என்ற பெயரிலும் தொடர்ந்து வளர்த்தனர்.
துரதிஷ்டவசமாக சேர நாடு ,கேரளமாகி தாய்தமிழ்நாட்டில் இருந்து தனது அடையாளங்களை அறுத்துக் கொண்டது.இலங்கை அகம்படியார்களும் புத்தமதத்தில் இணைந்து தனிச்சாதியிலும் கலந்தனர்.
இன்று இவர்கள் இலங்கையில் ( அகம்போடா,ஹேவபொனெ என்ற சாதியின் பெயரால் அறியப்படுகிறார்கள்- இலங்கையில் இவர்கள் சத்திரிய வர்ணத்தவர்களாக அறியப்படுகிறார்கள்)
இலங்கையில் அங்கம்போரா தற்காப்புக்கலை தொடர்ந்து வளர்ந்தது.அங்கப் போர்முறை அதிநுட்பமானது என்பதால் பெளத்த சங்கங்கள் போன்ற தீவிரமான கட்டுப்பாடு மிக்க நிறுவனங்களால் மட்டுமே தொடர்ந்து பின்பற்றப்பட்டு வந்தது.
இலங்கையில் உள்ள பெளத்தர்களிடையே அங்கமன உனம்புவா, கெஹல் பண்ணா, கல்கோடா போன்ற சில குடும்பத்தவரிடம் மட்டும் அங்கப்போர் மரபுகள் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது!
அங்கமன உனம்புவா, கெஹல் பண்ணா, கல்கோடா போன்ற குடும்பங்கள் இன்றும் தங்களை அகம்படி வழியினர் என்றே அழைத்துக்கொள்கின்றனர்.அங்கமன உனம்புவா என்ற பெயரில் உள்ள அங்கமன என்பதே அகம்படி என்ற தமிழ்ச் சொல்லின் சிங்கள மொழியின் திரிந்த வடிவம் ஆகும்.
அங்கம்போரா(அங்கப்போர்) இலங்கையில் தொன்றுதொட்ட தற்காப்புக்கலை (30 ஆயிரம் வருடங்களுக்கு மேலான வரலாறு) என்று பின்னால் எழுதப்பட்ட புனைக்கருத்துக்கள் கூறினாலும்.அங்க
ம்போரா பற்றிய வரலாற்றுக் குறிப்புக்கள் 12ம் நூற்றாண்டில்(இலங்கையில் அகம்படியினரின் வருகைப்பின்பே ) கிடைக்கின்றன.
மேலும் அங்கம்போரா இன்று சிங்களத் தற்காப்புக்கலை என்று அறியப்பட்டாலும் அது இலங்கையில் இருந்த அகம்படியார்களால் உருவாக்கப்பட்டத
ென்பதை சிங்களர்களே மறுக்கவில்லை.
அங்கம்போரா -பழந்தமிழ்குடியினரான அகம்படியார்களால் உருவாக்கப்பட்ட தற்காப்புக்கலை என்பதை சிங்கள வரலாறு கட்டியம் கூறுகிறது!
அங்கம்போரா-பழந்தமிழரின் தற்காப்புக்கலை சிங்களர் வசம் சென்றது காலத்தின் கோலம்!



சோழ மண்டல அகமுடையார்கள்

சோழ மண்டல அகமுடையார் பிரிவுகள் மற்றும் பட்டங்கள்:



1.கோட்டைபற்று அகமுடையார் - கீழ் தஞ்சை முழுக்க பரவி உள்ளனர்.
பட்டம் - தேவர் மற்றும் பிள்ளை
2.இரும்புதலை அகமுடையார் - தஞ்சாவூர்
பட்டம் - பிள்ளை
3.புண்ணியரசு நாட்டு அகமுடையார் - பட்டுக்கோட்டை
பட்டம் - தேவர்
4.பதினோரு நாட்டார் அகமுடையார் - பேராவூரணி
பட்டம் - தேவர், நாட்டார் மற்றும் சேர்வை
5.ராஜவம்சத்து அகமுடையார் - முத்துப்பேட்டை முதல் வேதாரண்யம்
பட்டம் - தேவர்
6.குருகுலத்தேவர் - வேதாரண்யம்
பட்டம் - தேவர்
தகவல் உதவி: மன்னார்குடி சிவா அகமுடையார்

Saturday, September 10

அகப்படை

படையை அதன் நிலை அடிப்படையில் இருபடைகளாக பிரிக்கலாம்
*அகப்படை
*மறப்படை


 
அகப்படை என்றால் மூலப்படை, அந்தரங்கமான சேனை அல்லது அணுக்கபடை.ஒரு நாட்டுக்கு இன்றியமையாத படைகளை மூலப்படை, கூலிப்படை, நாட்டுப்படை, காட்டுப்படை, துணைப்படை, பகைப்படை என ஆறு வகையாகச் சொல்வர்.
மூலப்படை என்பதற்கு தொல்படை என பொருளுண்டு
இவற்றில் தொல்படையான மூலப்படையே சிறப்பானது.
வள்ளுவர் மூலப்படையை தொல்படை என தனது குறளில் "
உலைவு இடத்து ஊறுஅஞ்சா வன்கண் தாலைவுஇடத்துக்
தொல்படைக்கு அல்லால் அரிது" குறிக்கிறார்.
விளக்கம்:போரில் வலிமை குன்றினாலும் இடையூறுகளுக்கு அஞ்சாத அஞ்சாமை தொன்றுதொட்டு பெருமையுடைய படைகளுக்கு அல்லாமல் முடியாது.

தினமும் பயிற்சி செய்து நீண்ட காலமாக நிலைத்திருக்கும் படை அகப்படை.

மூலப்படை என்பது அரசரின் முன்னோரை தொடங்கி வரும் சேனை.இப்படையின் சிறப்பானது அரசன் மீது கொண்டுள்ள அன்பும் போரில் வலிமை குன்றினாலும் பயந்து விலகாத வீரமுமாகும்.

இராமாயணத்தில் மூலபல வதைபடலத்தில் இந்திரஜித்தின் இறப்பிற்கு பின் தாங்கள் போர்புரிய செல்வதாக மூலப்படயினர் கூறினர் இராவணன் இராமனையும் இலக்குவனையும் கொல்லும் படி கேட்டுகொள்கிறான்.மூலப்படை வருவதை கண்டு வானரபடை ஓட்டம் பிடித்தனர்.ஜாம்பவான் பயந்து ஓடியதற்கு அவமானபடுகிறார்.வீபஷணன் மூலப்படை பற்றியும் அதன் வலிமை பற்றியும் இராமனுக்கு சொல்கிறான்.இந்த அதிசய போரை சிவபெருமான், பிரம்மன் மற்றும் தேவர்கள் பார்க்கிறார்கள்.மூலப்படையை இராமன் அழித்ததை உலகமே கண்டு வியந்தது என கம்பர் கூறுகிறார்.

பரிமேலழகர் "மூலப்படை அறுவகை படையுள்ளும் சிறப்புடையது" என கூறுகிறார்.

யது குல மருதரசர்


மருது பாண்டியர்களின் வீரம் மற்றும் கொடை தன்மை பற்றி தெரிந்த அளவுக்கு அவர்களுடைய தமிழ் பற்றை பற்றி பலர் அறியவில்லை புலவர் பலர் கூடி அமர்ந்து தமிழ் வளர்க்க தமிழ் சங்கம் நிறுவியிருந்தனர்.வடமொழியில் அமைந்த வானர வீர புராணத்தை தமிழ் மொழியில் மாற்ற உதவினர்.இப்புராணம் தலபுராணமாக மானாமதுரையில் இருக்கும் சிவதலத்திற்கு பாடபெற்றது. அப்புராணத்தை தமிழ் மொழியில் மாற்றி அமைத்த புலவர் கடவுளை பற்றிய பாடலுக்கு பின் மருதுவை பற்றி கூறுகிறார் அதில் பகைவர்க்குச் சிங்கத்தை போன்றவன்(அடையலர் கேசரி) கல்வி மற்றும் செல்வம் உடையவன் காளையார் கோயிலில் கோபுரம் மற்றும் தேர் செய்தவன் உடையார் வேளின் புதல்வன் விசுவை மருது அரசர் உதவ வானரவீர புராணத்தை வடமொழியிலிருந்து தமிழ்மொழியில் எழுதியது மதுரை தெய்வசிகாமணியின் புதல்வர் என தம்மை பற்றி ஆசிரியர் கூறுகிறார். அடுத்து புராணத்தின் இறுதி பாடலில் மானாமதுரை வாழ்க(இந்து நன்நகரம்) வீற்றிருக்கும் இறைவன் இறைவியான சோமேசர் ஆனந்தவள்ளி வாழ்க என கூறி மருதரசரை பற்றி கற்பகம் போன்ற கொடைக்கை உடைய யது குலத்தை சேர்ந்த மருதரசர் அவரின் மைந்தர்கள் கிளைகள் சார்ந்தோர் வாழ்க வாழ்க என புராணத்தை நிறைவு செய்கிறார்.

Friday, July 29

மாவீரன் வெங்கண்ணன் சேர்வைகாரர்


1853 இராமச்சந்திர தொண்டைமான் புதுக்கோட்டையை ஆட்சி செய்து கொண்டிருந்த காலம் நாட்டின் பொருளாதார நிலை சீர்கேடடைந்து இருந்தது.நாட்டு மக்கள அதிருப்தியில் இருந்தனர்.அவர்களுக்கு எதிராக அரசு படையை பயன்படுத்தியது.அப்போது நாட்டு மக்களை காக்க விடிவெள்ளியாக வந்தவர் தான் வெங்கண்ணன் சேர்வைகாரர்.தொண்டைமானின் படைப்பிரிவின் தலைவராக இருந்ததால் தனக்கிருந்த செல்வாக்கை பயன்படுத்தி படைப்பிரிவினரில் ஒரு பகுதியை கிளர்ச்சி செய்யும் மக்களுக்கு ஆதரவாக திருப்பினார்.படைவீரர்களை பணிக்கு செல்லாதபடி தூண்டினார்.விவசாய மக்களை வரிகொடுக்க வேண்டாமென விழிப்புணர்வு செய்தார்.நிலமை மோசமாவதை உணர்ந்த தொண்டைமான் ஆங்கிலேயரின் உதவியை நாடினார்.1854ல் ஆங்கில ராணுவம் புதுக்கோட்டை வந்தது வெங்கண்ணர் அஞ்சாமல் போராடினார் இருப்பினும் நவீன ஆயுதங்கள் கொண்ட ஆங்கிலேயர்கள் கிளர்ச்சியை ஒடுக்கினர்.இதன் விளைவால் ஆங்கில ராணுவம் நிரந்தரமாக புதுக்கோட்டையில் நிறுத்தி வைக்கப்பட்டது.தொண்டைமானின் அதிகாரமும் குறைக்கப்பட்டது.வெங்கண்ணன் சேர்வைகாரர் கலகம் என வரலாற்று ஆசிரியர்களால் குறிப்பிடகப்படுகிறது.இவர் புதுக்கோட்டையை ஆண்ட அகமுடையார் குல பல்லவராயர் வழிவந்தோர் தற்கால தொண்டைமான்களுக்கு முன்னால் புதுக்கோட்டையை ஆட்சி செய்தவர்கள்.சிவந்தெழுந்த பல்லவராயர் புதுக்கோட்டையுடன் கிழவன் சேதுபதியின் ஆளுகையில் இருந்த சேது நாட்டின் சில பகுதிகளுக்கும் பிரதிநிதியாக இருந்தார்.இவரை நீக்கிவிட்டு தன்னுடைய கள்ளரின மனைவியின் அண்ணனான ரகுநாதராய தொண்டைமானுக்கு புதுக்கோட்டை பகுதியை வழங்கினார்.இவ்வாறு அரசு நீக்கப்பட்ட அகமுடையார்கள் படைத்தளபதியாகவும் படைப்பிரிவு தலைவர்களாகவும் வீரர்களாகவும்  பணிபுரிந்தனர்.

மலயா கணபதி




மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். 10 வயதிருக்கும் போது மலேசியா சென்றார்.கம்யூனிச சிந்தனையால் ஈர்க்கப்பட்டு தன்னை கம்யூனிச இயக்கத்தில் இணைத்து கொண்டார். 1936-38 வருடங்களில் சாதிய கொடுமைகளுக்கு எதிராக போராடினார். இந்த காலகட்டத்தில் தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது மலேயா தமிழர்கள் சார்பாக மூன்று பேரை தமிழகம் அனுப்பி போராட்டத்தில் கலந்து கொள்ள செய்தார்.இந்திய தேசிய ராணுவத்தில் பயிற்சியாளராகவும் இருந்தார் ஜப்பான் சரணடைந்ததை நேதாஜியிடம் கூறியவரும் இவரே. திராவிட இயக்க தலைவர்களாக மலாயாவில் முதலில் தோன்றியவர்கள் சிங்கை அகம்படியர் சங்கத்தை சேர்ந்தவர்களே. பின்னாளில் 'அகம்படியர் சங்கம்' 'தமிழர் மறுமலர்ச்சி கழகம்'(Tamil  Reform Society) என 1932இல் மாற்றம் பெற்றது.தமிழர்களின் கல்வி வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியது.இந்த சங்கம் முதலில் வெளியிட்ட வார பத்திரிகையே பின்னர் சிங்கையில் தமிழில் வெளியாகும் முதல் தினசரியாக 'தமிழ் முரசு' என வெளிவந்தது. சிங்கை அகம்படியர் மஹாஜன சங்கத்தின் தலைவராக இருந்த எ.சி.சுப்பையா அவர்களின் முயற்சியிலே ஆதி திராவிடர் சங்கம் நிறுவப்பட்டது.கணபதி அவர்களும் அகம்படியர் சங்கத்தின் பணியாற்றியிருக்கலாம் அதன் காரணமாகவே மிக பெரிய போராளியாக வந்தார் எனவும் கருதுகின்றனர். மலாயா மற்றும் சிங்கையில் இருந்த அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒன்றிணைத்து 'அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனம்' உருவாக்கப்பட்டது சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களை கொண்ட வலிமை மிக்க இயக்கத்தின் தலைவராக கணபதி இருந்தார். பல போராட்டங்களை நடத்தினார் 50000மக்கள் கலந்து கொண்ட மே தின அணிவகுப்பை நடத்தி காட்டினார். 1948இல் அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனத்தை தடை செய்வதாக அறிவித்தனர். சட்டத்திற்கு விரோதமாக கைத்துப்பாக்கி வைத்திருந்தார் என காரணம் காட்டி கைது செய்தனர் தூக்கு தண்டனையை கோலாலம்பூர் நீதிமன்றம் விதித்தது. தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியது நேரு ஆங்கில அரசிடம் பேசி தடுக்க முயன்றார் ஆங்கில அரசாங்கமும் நிறைவேற்ற வேண்டாமென தந்தி அனுப்பினர் பலன் இல்லை தூக்கு தண்டனையை நிறைவேற்றினர் தூக்கு கயிற்றை முத்தமிட்டு மடிந்தார் அந்த மாவீரன். கணபதியின் இறப்பிற்கு பின் வீரசேனனும் (சிங்கை தொழிலாளர் சங்க தலைவர்) சுட்டு கொள்ளபட்டார். கயிற்றில் தொங்கிய கணபதி என முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் இம்மாவீரனை பற்றி புத்தகம் எழுதியுள்ளார்.

கணபதி தேவர் என்ற அகமுடையார் தான் தொழிலாளர்களின் தோழனாகவும் ஆங்கிலேயர்கள் மற்றும் அடக்குமுறையாளர்களுக்கு எதிராக போராடிய முக்கிய சக்தியாக திகழ்ந்தவர்.

THANKS: http://www.malaya-ganapathy.com/

சாத்தப்ப ஞானி



சிவகங்கை மாவட்டம் கோவனூரை சேர்ந்த வீரப்பன் சேர்வை அவர்களின் புதல்வரே சாத்தப்பன் சேர்வை.பின்னாளில் சிவகங்கை உருவாக காரணமானவரும் சிவகங்கை அரசர்களின்  ராஜகுருவாகவும்  விளங்கியவர்.சிறுவயதிலிருந்தே இறையுணர்வு அதிகம் உள்ளவராய் இருந்தார்.காட்டில்திரிந்து கொண்டிருந்த முனிவர்களுக்கு தண்ணீர் கொடுத்து உதவினார். அவரது இறையுணர்வை கண்ட முனிவர்கள் அதனை வெளிக்கொண்டு வர உபதேசம் செய்து சென்றனர்.பின்னர் மௌனகுருவிடம் உபதேசம் பெற்றார் தாயுமானவர் திருச்சபையில் தன்னை ஐக்கியப்படுத்தி கொண்டார் தாயுமானவரின் சீடர்களில் ஒருவராகவும் விளங்கினார்.கோவனூர் முருகன் கோயிலே கதியென கிடந்தவர் பின் பல தலங்களுக்கு சென்று சாத்தப்பன் ஞானி என அனைவராலும் போற்றப்பட்டார்.


முருகனின் மீது அளவில்லா பக்தி உடையவராக திகழ்ந்தார் நாட்டில் உள்ள முருகன் கோயிலில் எல்லாம் தன்னை ஐக்கியப்படுத்தி கொண்டார்.ஒரு முறை சசிவர்ண பெரிய உடையாத் தேவர் வேட்டைக்கு சென்ற போது நாவலடி ஊற்றில் தவம் செய்து கொண்டிருந்த சாத்தப்ப ஞானியரை கண்டு வணங்கினார்.சசிவர்ணரை கண்ட ஞானியார் நல்ல யோகமும் புதிய பட்டமும் வந்து யானை கட்டி சீமையாளுவாய் என விபூதி கொடுத்து அருளி தஞ்சை செல்லுமாறு உத்தரவு கொடுத்து அனுப்பினார்.மன்னரும் தஞ்சை சென்று அரண்மனையில் புலியை கொன்று மேலும் தஞ்சை படைகளின் உதவியுடன் ராமநாதபுரத்தில் அரசனாக இருந்த பவானி சங்கர தேவரை வென்றார்.பின்னர் ஞானியாரை வந்து சந்தித்தார் முன்னர் சந்தித்த இடத்தில் இருந்த ஊற்றில் திருக்குளம் வெட்டி சிவகங்கை என பெயரிட்டு குளத்தின் மேல் மூலையில் அரண்மனை கட்டி சீமை ஆள் என அருளினார்.அரசரும் அவ்வாறே செய்து தனது குருவான ஞானியருக்கு மடம் நிறுவி நிலங்களையும் சமயப்பணி சிறப்பாக செய்வதற்கு அளித்தார்.மேலும் சாத்தப்பர் அவர்களின் புதல்வரும் புகழ்பெற்ற சேது தளவாயான வைரவன் சேர்வைக்காரர் கட்டிய ராமநாதபுரம் அருகிலிருக்கும் பெறுவயலில் ரணபலி  முருகன் கோயிலுக்கு திருவெற்றியூரில் சில இடங்களை கொடுத்துள்ளார்.இன்று வரை இவ்வூரில் பிறக்கும் முதல் ஆண் குழந்தைக்கு சாத்தப்பையா என பெயர் வைக்கின்றனர்.
1961ஆம் ஆண்டு வரை சிவகங்கையின் மன்னர்களால் சிறப்பாக நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.குருவின் நினைவாக ஒவ்வொரு வருடமும் தைப்பூசத்தன்று படையல் வைத்து குரு பூஜை செய்து அன்னக்கொடி நட்டு அன்னதானமும் நடைபெறுகிறது..தற்போது மடத்தின் சொத்துகள் பலவும் பலரால் அக்கிரமிக்கப்பட்டுள்ளது.
மன்னர் சசிவர்ண தேவரவர்கள் காளையார்கோயிலில் தனது சிலையை நிறுவி அதற்கு எதிரே சாத்தப்ப ஞானியாரின் சிலையை நிறுவி உள்ளார்.

Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...