Friday, July 29

மாவீரன் வெங்கண்ணன் சேர்வைகாரர்


1853 இராமச்சந்திர தொண்டைமான் புதுக்கோட்டையை ஆட்சி செய்து கொண்டிருந்த காலம் நாட்டின் பொருளாதார நிலை சீர்கேடடைந்து இருந்தது.நாட்டு மக்கள அதிருப்தியில் இருந்தனர்.அவர்களுக்கு எதிராக அரசு படையை பயன்படுத்தியது.அப்போது நாட்டு மக்களை காக்க விடிவெள்ளியாக வந்தவர் தான் வெங்கண்ணன் சேர்வைகாரர்.தொண்டைமானின் படைப்பிரிவின் தலைவராக இருந்ததால் தனக்கிருந்த செல்வாக்கை பயன்படுத்தி படைப்பிரிவினரில் ஒரு பகுதியை கிளர்ச்சி செய்யும் மக்களுக்கு ஆதரவாக திருப்பினார்.படைவீரர்களை பணிக்கு செல்லாதபடி தூண்டினார்.விவசாய மக்களை வரிகொடுக்க வேண்டாமென விழிப்புணர்வு செய்தார்.நிலமை மோசமாவதை உணர்ந்த தொண்டைமான் ஆங்கிலேயரின் உதவியை நாடினார்.1854ல் ஆங்கில ராணுவம் புதுக்கோட்டை வந்தது வெங்கண்ணர் அஞ்சாமல் போராடினார் இருப்பினும் நவீன ஆயுதங்கள் கொண்ட ஆங்கிலேயர்கள் கிளர்ச்சியை ஒடுக்கினர்.இதன் விளைவால் ஆங்கில ராணுவம் நிரந்தரமாக புதுக்கோட்டையில் நிறுத்தி வைக்கப்பட்டது.தொண்டைமானின் அதிகாரமும் குறைக்கப்பட்டது.வெங்கண்ணன் சேர்வைகாரர் கலகம் என வரலாற்று ஆசிரியர்களால் குறிப்பிடகப்படுகிறது.இவர் புதுக்கோட்டையை ஆண்ட அகமுடையார் குல பல்லவராயர் வழிவந்தோர் தற்கால தொண்டைமான்களுக்கு முன்னால் புதுக்கோட்டையை ஆட்சி செய்தவர்கள்.சிவந்தெழுந்த பல்லவராயர் புதுக்கோட்டையுடன் கிழவன் சேதுபதியின் ஆளுகையில் இருந்த சேது நாட்டின் சில பகுதிகளுக்கும் பிரதிநிதியாக இருந்தார்.இவரை நீக்கிவிட்டு தன்னுடைய கள்ளரின மனைவியின் அண்ணனான ரகுநாதராய தொண்டைமானுக்கு புதுக்கோட்டை பகுதியை வழங்கினார்.இவ்வாறு அரசு நீக்கப்பட்ட அகமுடையார்கள் படைத்தளபதியாகவும் படைப்பிரிவு தலைவர்களாகவும் வீரர்களாகவும்  பணிபுரிந்தனர்.

No comments:

Post a Comment

Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...