சிவகங்கை மாவட்டம் கோவனூரை சேர்ந்த வீரப்பன் சேர்வை அவர்களின் புதல்வரே சாத்தப்பன் சேர்வை.பின்னாளில் சிவகங்கை உருவாக காரணமானவரும் சிவகங்கை அரசர்களின் ராஜகுருவாகவும் விளங்கியவர்.சிறுவயதிலிருந்தே இறையுணர்வு அதிகம் உள்ளவராய் இருந்தார்.காட்டில்திரிந்து கொண்டிருந்த முனிவர்களுக்கு தண்ணீர் கொடுத்து உதவினார். அவரது இறையுணர்வை கண்ட முனிவர்கள் அதனை வெளிக்கொண்டு வர உபதேசம் செய்து சென்றனர்.பின்னர் மௌனகுருவிடம் உபதேசம் பெற்றார் தாயுமானவர் திருச்சபையில் தன்னை ஐக்கியப்படுத்தி கொண்டார் தாயுமானவரின் சீடர்களில் ஒருவராகவும் விளங்கினார்.கோவனூர் முருகன் கோயிலே கதியென கிடந்தவர் பின் பல தலங்களுக்கு சென்று சாத்தப்பன் ஞானி என அனைவராலும் போற்றப்பட்டார்.
முருகனின் மீது அளவில்லா பக்தி உடையவராக திகழ்ந்தார் நாட்டில் உள்ள முருகன் கோயிலில் எல்லாம் தன்னை ஐக்கியப்படுத்தி கொண்டார்.ஒரு முறை சசிவர்ண பெரிய உடையாத் தேவர் வேட்டைக்கு சென்ற போது நாவலடி ஊற்றில் தவம் செய்து கொண்டிருந்த சாத்தப்ப ஞானியரை கண்டு வணங்கினார்.சசிவர்ணரை கண்ட ஞானியார் நல்ல யோகமும் புதிய பட்டமும் வந்து யானை கட்டி சீமையாளுவாய் என விபூதி கொடுத்து அருளி தஞ்சை செல்லுமாறு உத்தரவு கொடுத்து அனுப்பினார்.மன்னரும் தஞ்சை சென்று அரண்மனையில் புலியை கொன்று மேலும் தஞ்சை படைகளின் உதவியுடன் ராமநாதபுரத்தில் அரசனாக இருந்த பவானி சங்கர தேவரை வென்றார்.பின்னர் ஞானியாரை வந்து சந்தித்தார் முன்னர் சந்தித்த இடத்தில் இருந்த ஊற்றில் திருக்குளம் வெட்டி சிவகங்கை என பெயரிட்டு குளத்தின் மேல் மூலையில் அரண்மனை கட்டி சீமை ஆள் என அருளினார்.அரசரும் அவ்வாறே செய்து தனது குருவான ஞானியருக்கு மடம் நிறுவி நிலங்களையும் சமயப்பணி சிறப்பாக செய்வதற்கு அளித்தார்.மேலும் சாத்தப்பர் அவர்களின் புதல்வரும் புகழ்பெற்ற சேது தளவாயான வைரவன் சேர்வைக்காரர் கட்டிய ராமநாதபுரம் அருகிலிருக்கும் பெறுவயலில் ரணபலி முருகன் கோயிலுக்கு திருவெற்றியூரில் சில இடங்களை கொடுத்துள்ளார்.இன்று வரை இவ்வூரில் பிறக்கும் முதல் ஆண் குழந்தைக்கு சாத்தப்பையா என பெயர் வைக்கின்றனர்.
1961ஆம் ஆண்டு வரை சிவகங்கையின் மன்னர்களால் சிறப்பாக நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.குருவின் நினைவாக ஒவ்வொரு வருடமும் தைப்பூசத்தன்று படையல் வைத்து குரு பூஜை செய்து அன்னக்கொடி நட்டு அன்னதானமும் நடைபெறுகிறது..தற்போது மடத்தின் சொத்துகள் பலவும் பலரால் அக்கிரமிக்கப்பட்டுள்ளது.
மன்னர் சசிவர்ண தேவரவர்கள் காளையார்கோயிலில் தனது சிலையை நிறுவி அதற்கு எதிரே சாத்தப்ப ஞானியாரின் சிலையை நிறுவி உள்ளார்.