மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பெரிய மருது சிலை |
மதுரை மீனாட்சி அம்மனின் மீது அளவில்லா பக்தி கொண்டவர்களாக மருது பாண்டியர்கள் திகழ்ந்தனர்.மதுரை மீனாட்சி திருக்கோயிலில் சேர்வைக்காரர் மண்டபம் கட்டினார்கள்.திருகல்யாண மண்டபத்தையும் பழுது நீக்கி கட்டினார்.மருது குடும்பத்தினரின் சிலைகள் இம்மண்டபத்தில் உள்ளது.அன்னை மீனாட்சியின் சன்னதியில் 1008 திருவிளக்குகளை கொண்ட இரு திருவாட்சி விளக்குகளை அமைத்து என்றென்றும் ஒளியூட்டி நிற்குமாறு செய்தனர்.இந்த தீபங்களுக்கு நெய் வார்க்க ஆவியூர் என்ற கிராமத்தை மானியமாக விட்டனர்.அன்னையின் பூசைக்காக உப்பிலிக்குண்டு,கடம்பங்குளம்,சீகனேந்தல்,மாங்குளம்,மங்கையேந்தல்,புவனேந்தல் முதலிய கிராமங்களை மானியமாக விட்டனர்.
No comments:
Post a Comment