Monday, September 21

நைனப்பன் சேர்வை


'நைனப்பன் சேர்வை' நான் உங்களுக்கு ஒரு போட்டி வைக்கப் போகிறேன், ஏற்றுக்கொள்ளச் சம்மதமா? எனக் கேட்டார் பெரிய மருது பாண்டியர். 'சரி அரசே எதுவென்றாலும் நான் ஏற்றுக் கொள்கின்றேன். உங்கள் சித்தத்தை என் கடமையாக ஏற்றுக் கொள்கிறேன்” என்றார் நைனப்பர். போட்டி இதுதான். சிவகங்கைக்கும் கடியாவயல் என்னுமிடத்திற்கும் உள்ள தூரம் சுமார் 25 கிலோமீட்டர் ஆகும். இந்த 25 கி.மீட்டர் தூரத்திற்கும் பெரிய மருதுபாண்டியர் குதிரையில் இருந்தபடி போய் வருவார். ஆக மொத்தம் 50 கி.மீட்டர். இந்த தூரத்தை நைனப்ன் சேர்வை குதிரைக்குச் சமமாக ஓடிக்கடக்க வேண்டும். இதுதான் போட்டி. போட்டி தொடங்கியது. 'நைனப்பன் சேர்வை அவர்களே! நீங்கள் என் குதிரைக்கு முன்னதாக இரண்டு பல்லாங்கு தூரம் ஓடுங்கள். அதன் பிறகு நான் புறப்படுகின்றேன் என்றாராம். ஓடினார்.... பின்னாலேயே குதிரையும் பாய்ந்து வந்தது. அருகில் குதிரை வந்ததும் நைனப்பன் சேர்வை பெரிய மருது அவர்கள் அமர்ந்திருந்த குதிரையின் பின்னாலேயே நெருக்கமாக ஓடினார். குதிரை தன் இயல்பான வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தது. நைனப்பரும் ஓடினார். வழியில் பார்த்தவர்களெலலாம் படபடப்பாகப் பேசிக் கொண்டார்கள.
சிலர் என்ன இது கொடுமை! மனிதனையும் குதிரையையும் ஒன்றாக பாவிப்பார்? என பேசிக்கொண்டனர் . பலர் 'சரி அரசர் செய்தால் எதிலும் ஒரு நல்ல உள்நோக்கம் மறைந்திருக்கும.; நாட்டை நல்ல முறையில் ஆள்பவரும் மக்களைக் கண்ணாக மதித்து ஆள்பவரும் ஆனா மாமன்னர்கள் கொடுமையாக எதையும் செய்யமாட்டார்” என்று பேசிக் கொண்டனர்.ஓடிக் கொண்டிருந்த நைனப்பரின் காலில் ஒரு கருவேல முள் குத்திவிடுகிறது. போட்டி அவ்வளவுதான் என்றுதானே நினைப்பீர்கள், அதுதான் இல்லை. அந்த முள்ளை எடுப்பதற்காக உட்கார்ந்து நேரத்தைச் செலவிட்டால் குதிரை மறைந்துவிடுமே! என்று யோசிக்கும் நேரத்தில் நைனப்பர் தனது இடுப்பில் இருந்த 'வளரி” என்ற ஆயுதத்தால் முள் தைத்த காலை தூக்கி முள்ளை உள் நோக்கி அழுத்தினார். முள் கால் பாதத்திற்குள் நுழைந்துவிடுகிறது. வலியை பொறுத்துக் கொண்டு குதிரையோடு சேர்ந்து ஓடி கடியாவயலை அடைந்துவிடுகிறார். மறுபடியும் திரும்பிச் சிவகங்கை நோக்கி ஓட முயற்சித்த நைனப்பன் சேர்வையைத் தடுத்து அணைத்துக் கொண்டார் மாமன்னர் பெரியமருது பாண்டியர்.
அவரது கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.
'நைனப்பன் சேர்வை உங்களின் வீரத்தை நமது சிவகங்கை சீமை மட்டுமல்ல இந்த உலகமே தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகத்தான் இந்தக் கடுமையான போட்டியை நான் வைத்தேன். நானும் காட்டில் பல சமயம் பல கிலோமீட்டர் தூரத்தைக் குதிரையைவிட வேகமாக ஓடியெல்லாம் கடந்திருக்கின்றேன். உங்களது வீரம் வாழ்க! வைத்தியரைக் கூப்பிடுங்கள் நைனப்பரின் காலில் இருக்கும் முள்ளை உடனே அகற்றுங்கள்” என்று கட்டளையிட்ட மன்னர் ஊரும் - உலகமும் அறியும் வண்ணம் நைனப்பன் சேர்வையைப் பாராட்டி மாலையும் மரியாதையும் பொன், பொருளும் வழங்கினார் மாமன்னர் பெரிய மருதுபாண்டியர். நைனப்பன் சேர்வை அவர்களிடம் இருந்த வளரி இன்று சிவகங்கை அருங்காட்சியில் உள்ளது. அதை அவரின் வாரிசுத்தாரர் கொடுத்துள்ளனர். இன்று அதன் வடிவம் மாறாமல் புதியதாக செய்யப்பட்டது போல் உள்ளது. ஒரு சமயம் மருதுபாண்டியருடன் சென்ற நைனப்பன் சேர்வைக்கு வேட்டைக்கு காட்டிற்குச் செல்ல ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. இருவரும் காட்டு வழியாக சென்று கொண்டிருந்தார்கள். அப்போது எதிர்பாராதவிதமாக புலிவொன்று புதரிலிருந்து வெளிப்பட்டு நைனப்பன் சேர்வையை நோக்கிப் பாயந்தது. புலியோடு போராடி அதனைக் கொன்றார். பிறகு அப்புலியின் பற்களைப் பிடுங்கிப் பெரிய மருதுபாண்டியர் அவர்களின் காலடியில் 'அரசே இது என் காணிக்கை” என்று கூறிப் புலிப் பற்களை வைத்தார். ஆனால் இப்படிப்பட்ட மாவீரனைப் புலியின் பல்பட்ட, நகம்பட்ட காயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவரைக் கொன்று வைத்தியர்களைத் தோல்வி அடையச் செய்தன. நைனப்பன் சேர்வை மறைந்த போது வைர நெஞ்சத்தை உடையவராக இருந்த மாமன்னர்கள் மருதுபாண்டியர் வாய்விட்டுக் கதறி அழுதார்கள்.
நைனப்பன் சேர்வையின் குடும்பத்திற்குத் தனது குடும்பத்தை போல் எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தார் பெரிய மருதுபாண்டியர். அவர் மனமுவந்து கொடுத்த சொத்துக்களை இன்றைய தினமும் நைனப்பன் சேர்வையின் சந்ததியார் அனுபவித்து வருகிறார்கள். சிவகங்கைக்கு அருகில் 12 கி.மீ. தூரத்தில் சாத்தரசன் கோட்டையில் வடபுறத்தில் ஒரு பெரிய ஊரணியை வெட்டி அந்த ஊரணிக்கு நைனப்பர் ஊரணி என்று அவர் பெயரில் இன்றும் அழைக்கப்படுகிறது.

கருப்பசேர்வை



கருப்பசேர்வை கொங்கு நாட்டு ஓடாநிலைக் கோட்டை பாளையக்காரர் தீரன் சின்னமலையிடம் படைத் தலைவராக இருந்தவர். தீரன் சின்னமலையிடம் திறை வசூலிக்க வந்த சங்ககிரி திவான் மீராசாகிப்பின் படை வீரர்களை கருப்பசேர்வை விரட்டியடித்தார். மைசூர் மன்னர் திப்பு சுல்தானுடன் கூட்டணி சேர்ந்து, சின்னமலை மற்றும் கருப்பசேர்வை, கம்பெனி ஆட்சிக்கு எதிராக பெரும்படை திரட்டிப் போரிட்டனர். கம்பெனிப் படைகளுக்கு எதிராக, 1801இல் ஈரோடு காவிரிக் கரையிலும், 1802இல் ஓடாநிலைக் கோட்டையிலும், 1804-ல் அரச்சலூரிலும் நடந்த போர்களில் கருப்பசேர்வை தலைமையிலான தீரன் சின்னமலை படைகள் பெரும் வெற்றி பெற்றன.

கள்ளிக் கோட்டையிலிருந்து பெரும் அளவில் வந்த ஆங்கிலேய பீரங்கிப் படைகள் ஓடாநிலைக் கோட்டையைத்தகர்த்து, சின்னமலையுடன் கருப்பசேர்வையையும் கைது செய்த, ஆங்கிலேயப் படைகள் சங்ககிரிக் கோட்டையில்இருவரையும் 31 ஆகஸ்டு 1805 அன்று தூக்கிலிட்டனர்.

மான்பூண்டியாப் பிள்ளை

மாமுண்டியா பிள்ளை



தமிழகத்தைச் சேர்ந்த இசைக் கலைஞர் ஆவார். மிருதங்கம்கஞ்சிராதவில் எனும் தோல் கருவிகளை வாசிப்பதில் வல்லவராக விளங்கியவர்.

இசை வாழ்க்கை

மான்பூண்டியாப் பிள்ளை எனும் இயற்பெயர் கொண்ட இவர், பேச்சு வழக்கில் மாமுண்டியா பிள்ளை என அழைக்கப்பட்டார். மாரிமுத்து தவில்காரர் எனும் தவில் இசைக் கலைஞரிடம் தவில் வாசிக்கும் கலையைக் கற்றுகொண்டார்.
கஞ்சிராவினை வடிவமைத்தவர் மாமுண்டியா பிள்ளையாவார் கிராமிய இசையில் பயன்பட்ட இக்கருவியை தற்போதைய கஞ்சிரா உருவத்தில் செய்து கருநாடக இசைக் கச்சேரிகளில் உப தாள வாத்தியமாக வாசித்துப் பெருமை பெற்றவர் மாமுண்டியா பிள்ளை ஆவார். நாராயணசாமியப்பா எனும் கலைஞரின் ஊக்கப்படுத்துதலின் காரணமாக, ஆரம்பத்தில் இந்த வாத்தியக் கருவியினை பஜனைகளில் இசைத்தார் மாமுண்டியா பிள்ளை. பின்னர் பெரும் வரவேற்பினைப் பெற்று, கருநாடக இசைக் கச்சேரிகளின் பக்க வாத்தியங்களுள் ஒன்றாக கஞ்சிரா இடம்பெற்றது


இவரின் குறிப்பிடத்தக்க மாணவர்கள்

  • புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை
  • பழனி முத்தையா பிள்ளை (இவர், பழனி சுப்பிரமணிய பிள்ளையின் தந்தை)

பிற சிறப்புகள்
  • தவிலை அடிப்படையாகக் கொண்டு மிருதங்கம் வாசிக்கும் புதுக்கோட்டை பாணியினைக் கொண்டுவந்தவர் மாமுண்டியா பிள்ளை.

Sunday, September 20

அகமுடையார்


பொதுவாக அகமுடையார் என்பதன் பொருள் நில உடைமையாளர், நம்பிக்கைக்குரியவர், பரந்த சிந்தனையாளர் என்று பலவாறாக பொருளில் இலக்கியங்கள் ஊடாக அறிந்துகொள்ள முடிகிறது.மேலும் அகம்படியர் என்பதற்கு காவல் என்றே பொருள் உண்டு. அகமுடையார் குலத்தில் சேர்வை , தேவர்,உடையார்,பிள்ளை, முதலியார் உள்ளிட்ட இந்தப் பட்டங்களே பெரும்பான்மையான காணமுடிகிறது.
அகமுடையார்களில் "தேவர்" பட்டம் என்பது தமிழகத்தின் பெரும்பான்மை மாவட்டங்களில் வழங்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தின் நாகப்பட்டினம் - திருவாரூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வாழும் அகமுடையார்களுக்கு தேவர் பட்டமே. தஞ்சை டெல்டா பகுதிகளில் தேவர் பட்டம் கொண்டுள்ள அகமுடையார் இனத்தினர், ”பதினெட்டு கோட்டை பற்று அகமுடையார்” என்ற குலபிரிவை சார்ந்த்துள்ளனர். இதை தவிர்த்து, ”சித்தர் மரபு அகமுடையார்” மற்றும் ”தஞ்சை ராஜ வம்சத்து அகமுடையார்” என்ற பிரிவும் இன்றளவும் வேதாரண்யம் - முத்துப்பேட்டை போன்ற தஞ்சை கடலோர பகுதிகளில் வாழும் அகமுடையார் இன மக்களுக்கு உண்டு.
"கள்ளர்,மறவர்,கணத்ததோர் அகமுடையார் மெல்ல மெல்ல வெள்ளாளர் ஆனாரே" என்ற பாடல் வாயிலாக, போர்த்தொழிற்கு அடுத்த கட்ட நகர்வான வேளாண்மை தொழிலில் ஈடுபட ஆரம்பித்து, அதிலேயே நில நீட்சிகளோடு வாழ்ந்தவர்களின் வழித்தோன்றல்கள் அகம் உடையார் என அறியப்பட்டனர்.
அகமுடையார்களில் "முதலியார்" என்ற பட்டம் உடையவர்கள் வட தமிழகத்தில் பெரும்பான்மையாக செருமி வாழ்கின்றனர்.அகமுடைய முதலியார் என்பது போர்ப்படை தளபதிகளையே குறிக்கின்றது. முதலி என்பது ஒரு படையை தலைமைத்தாங்குகின்ற முதன்மையான தளபதி என்று பொருள் தருகிறது. வடதமிழகத்தில் வாழும் அகமுடையார்கள் அனைவருக்கும் பட்டம் என்பது முதலியார்,உடையார் மற்றும் பிள்ளை.

  அகமுடையார் குல பிரிவுகள்

  1. ராஜகுலம்
  2. புண்ணியரசு நாடு
  3. கோட்டைப்பற்று (பதினெட்டு கோட்டைப்பற்று)
  4. இரும்புத்தலை
  5. ஐவளிநாடு
  6. நாட்டுமங்களம்
  7. ராஜபோஜ
  8. ராஜவாசல்
  9. கலியன்
  10. சானி
  11. மலைநாடு
  12. பதினொரு நாடு
  13. துளுவ வேளாளர் அல்லது துளுவன்

அகமுடையார் குல பட்டங்கள்

  1. தேவர்
  2. சேர்வை
  3. பிள்ளை
  4. முதலியார்
  5. உடையார்
  6. தேசிகர்
  7. அதிகாரி
  8. மணியக்காரர்
  9. பல்லவராயர்
  10. நாயக்கர்
  11. ரெட்டி
  12. செட்டியார்
இதை தவிர்த்த ஏனைய பட்டங்கள்
  1. வானவர்
  2. பொறையர்
  3. வில்லவர்
  4. உதயர்
  5. மலையன்
  6. மலையான்
  7. வானவன்
  8. வானவராயன்
  9. வல்லவராயன்
  10. பனந்த்தாரன்
  11. பொறையான்
  12. மலையமான்
  13. தலைவன்
  14. மனியக்காரான்
  15. பூமியன்
  16. கோளன்
  17. நாகன்
  18. பாண்டியன்
  19. கொங்கன்
  20. அம்பலம்
  21. நாட்டான்மை


  • தமிழகம் மற்றும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திர,கேரளா உள்ளிட்ட தென்னிந்தியா முழுவதும் பலவேறு பட்டப்பெயர்களுடன் வசித்து வருகின்றனர். இதைதவிர்த்து, இலங்கை, மலேசியா, பர்மா, சிங்கப்பூர் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பெரும்பாலான அகமுடையார் குலத்தினர் பல தலைமுறைகளாக பூர்வீகமாக வசித்து வருகின்றனர். தமிழகத்தின் அனைத்து பகுதியிகளிலும் அகமுடையார் இனத்தினர் பரந்து விரிந்து வாழ்ந்து வருகின்றனர்.


"பெரும்பாலும் அகமுடையார் இனத்தினரின் பட்டங்களையும், பட்ட பெயர்களையும் வைத்து பலவாறு தமிழகம் முழுவதும் சிதறிக் கிடக்கின்றனர்"


  • தென் தமிழகத்தில் அகமுடையார்களை சேர்வை என்றும் மேலும் முதலியார்,பிள்ளை என்ற பட்டங்களுடன் வட தமிழகத்திலும், தேவர்,பிள்ளை,அதிகாரி,உடையார்,நாயக்கர், தேசிகர் போன்ற பல பட்ட பெயர்களுடன் மத்திய தமிழகத்திலும் அறியபடுகின்றனர்.
அகமுடைய தேவர்:
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கோயம்புத்தூர், திண்டுக்கல், திருப்பூர், விருதுநகர், திருநெல்வேலி, மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் தேவர் என்ற பட்டப் பெயரை தாங்கி அகமுடையார் குலத்தினர் அறியபடுகின்றனர்.
அகமுடைய சேர்வை:
இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் சேர்வை என்ற பட்ட பெயரை தாங்கி அகமுடையார் குலத்தினர் அறியபடுகின்றனர்.
அகமுடைய முதலியார்,துளுவவேள்ளார் ,உடையார் மற்றும் பிள்ளை:
காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சென்னை, பெரம்பலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் முதலியார் என்ற பட்ட பெயரை தாங்கி அகமுடையார் குலத்தினர் அறியபடுகின்றனர்.


ஜாம்புவானோடை சிவராமன்


பிரிட்டிஷ் ஆட்சி முடிவுக்கு வந்து, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் கஷ்டங்களை அனுபவிக்க, பெருமுதலாளிகள்,நிலச்சுவான்தார்கள் ,ஜமீன்தார்கள் அதிகாரத்திலும் , ஆணவத்திலும் மிதந்து ,பாட்டாளிகளை கொடுமைப்படுத்தி வந்த காலம் .ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை காக்கும் போர்க்குரலாக பொதுவுடமை இயக்கம் மற்றும் விவசாய சங்கங்கள் போராடி வந்தன. ஒரு கட்டத்தில் இயக்கங்கள் தடை செய்யப்பட தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டு மக்கள் நலப்போராட்டங்களில் ஈடுபட்டு வந்த வாட்டாகுடி இரணியன், ஆம்பலாபட்டு ஆறுமுகம், ஜாம்புவானோடை சிவராமன் போன்றோருக்கு எதிராக காவல்துறை தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தது.துரோகிகளால் காட்டிக் கொடுக் கப்பட்டு ஜாம்புவானோடை சிவ ராமன் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். மணலி கந்தசாமி தலைமறை வாக இருக்கும் இடத்தை காட்டிக் கொடுத்தால் விட்டு விடுவதாக ஆசை வார்த்தை காட்டியபோது, தெரியாது என மறுத்துவிட்டார். நீ ஓடி தப்பித்து போய் விடு என காவல்துறை அதிகாரிகள் சொன்னபோது, `சிவராமன் தப்பி ஓடினான். சுட்டுக்கொன்றோம் என்று சொல்வாய். நான் ஒன்றும் கோழை அல்ல. தப்பி ஓட... என்று கூறி நெஞ்சில் சுடு... ஏவல்துறையே... என்று கூறி நெஞ்சில் குண்டு தாங்கி வீரமரணத்தை தழுவினார் தியாகி ஜாம்புவானோடை சிவராமன் 

வாட்டாக்குடி இரணியன்


இவர் இயற்பெயர் வெங்கடாச்சலம் தேவர். இவர் இளம் வயதில் சிங்கப்பூர் சென்று அங்கு பணி செய்யும் பொழுது பொதுவுடைமை கொள்கையில் ஈர்க்கப்பட்டு தனது பெயரை இரணியன் என்று மாற்றிக் கொண்டு போசினால் கவரப்பட்டு இந்திய தேசிய இராணுவத்தில் பணி செய்து பின் தனது 28வது வயதில் 1948ல் சொந்த ஊர் திரும்பினார். அப்பொழுது காங்கிரசின் ஆட்சியில் முதலாளித்துவம் வளர்ந்து தொழிலாளர்கள் பல இன்னல்களைக் கண்டனர். இதனைப் பார்த்ததும் பல தொழிலாளர்களை ஒற்றுமைப்படுத்தி முதலாளித்துவத்திற்கு எதிராக பல போராட்டங்களை செய்து தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டு வந்தார். பல குள்ளநரி முதலாளிகள் இவரின் மேல் பல பொய்யான வழக்குகளை பதிவு செய்து காவல் துறையினால் தேடப்பட்டார். பின் இவர் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். காவல்துறை இவரை கைதுசெய்த போது இவருடன் இருந்த ஆம்லாப்பட்டு ஆறுமுகம் என்பவரை காவல்துறை உன்மீது வழக்கு ஏதும் இல்லை சென்றுவிடு என்று கூறியும் இரணியனிடம் கொண்ட நட்பினால் பிரியாமல் இருக்க இருவரையும் சுட்டு கொன்றது காவல்துறை. இந்த ஆம்லாப்பட்டு ஆறுமுகம் என்பவர் ஒரு தாழ்த்தப்பட்ட பிரிவினர். போசின் தலைமையை ஏற்றுக் கொண்ட இரணியன் சாதிபார்க்கவில்லை. தனது இறதி மூச்சுள்ள வரை நாட்டிற்காக மட்டும் பாடுபட்ட வீரர் அவர் தனது 30வது வயதில் இறந்தார்.வாடியக்காடு ஜமீன் (அ) மதுக்கூர் ஜமீனை எதிர்த்து தான் “வாட்டாக்குடி இரணியன்” போராடினார்.

Saturday, September 19

பொட்டு அம்மான்


பொட்டு அம்மான் (சண்முகலிங்கம் சிவசங்கரன்) விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ஆவர். விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான இவர் கடற்புலிகளின் தலைவரான கேணல் சூசையுடன் இணைந்து தாக்குதற் திட்டங்களைத் தயாரித்தவர்.
இந்தியப் பிரதமரான ராஜீவ் காந்தியின் படுகொலையில் இவரது பங்களிப்பு இருப்பதாக ஜெயின் கமிஷன் அறிக்கைகள் கூறுகின்றன.

எங்கள் கரிகாலனின் வலது கை நீதான் என்பதை உலகறியும் அதை வைத்து என்றுமே நீ பெருமைதேடியவனில்லை.

உன் மனைவி, மக்கள் யாரென்றுகூட எம்மக்களுக்கு தெரியாது

கரிகாலனின் ஒவ்வொரு வெற்றிக்கு பின்னும் ஆயிரமாயிரம் போராளிகள் அமைதியாக துணை நின்றார்கள். அவர்களுள் முதன்மையானவன் நீ.

எதிரிகளே அஞ்சி நடுங்கும் தமிழரின் உளவுப்பிரிவை கட்டியாண்டவன் நீ, அதை இன்றளவும் இயங்கவைதுக்கொண்டும் இருக்கிறாய்.

அன்று மணலாற்றில் முற்றுகைக்குள் இருந்தபோது தலைவர் சொன்னார் - " பொட்டு நிழல் போல பின்னால் இருக்கும் வரை பிரபாகரனுக்கு ஒன்றும் நிகழ்ந்து விடாது" என்று

அந்த நம்பிக்கை தான் இன்றும் இருக்கிறது பறந்த குருவி திரும்பும் போது எம்மக்களின் விடுதலையையும் உடன் கொண்டு வருமென்று !

Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...