பொட்டு அம்மான் (சண்முகலிங்கம் சிவசங்கரன்) விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ஆவர். விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான இவர் கடற்புலிகளின் தலைவரான கேணல் சூசையுடன் இணைந்து தாக்குதற் திட்டங்களைத் தயாரித்தவர்.
இந்தியப் பிரதமரான ராஜீவ் காந்தியின் படுகொலையில் இவரது பங்களிப்பு இருப்பதாக ஜெயின் கமிஷன் அறிக்கைகள் கூறுகின்றன.
எங்கள் கரிகாலனின் வலது கை நீதான் என்பதை உலகறியும் அதை வைத்து என்றுமே நீ பெருமைதேடியவனில்லை.
உன் மனைவி, மக்கள் யாரென்றுகூட எம்மக்களுக்கு தெரியாது
கரிகாலனின் ஒவ்வொரு வெற்றிக்கு பின்னும் ஆயிரமாயிரம் போராளிகள் அமைதியாக துணை நின்றார்கள். அவர்களுள் முதன்மையானவன் நீ.
எதிரிகளே அஞ்சி நடுங்கும் தமிழரின் உளவுப்பிரிவை கட்டியாண்டவன் நீ, அதை இன்றளவும் இயங்கவைதுக்கொண்டும் இருக்கிறாய்.
அன்று மணலாற்றில் முற்றுகைக்குள் இருந்தபோது தலைவர் சொன்னார் - " பொட்டு நிழல் போல பின்னால் இருக்கும் வரை பிரபாகரனுக்கு ஒன்றும் நிகழ்ந்து விடாது" என்று
அந்த நம்பிக்கை தான் இன்றும் இருக்கிறது பறந்த குருவி திரும்பும் போது எம்மக்களின் விடுதலையையும் உடன் கொண்டு வருமென்று !
No comments:
Post a Comment