Sunday, September 20

வாட்டாக்குடி இரணியன்


இவர் இயற்பெயர் வெங்கடாச்சலம் தேவர். இவர் இளம் வயதில் சிங்கப்பூர் சென்று அங்கு பணி செய்யும் பொழுது பொதுவுடைமை கொள்கையில் ஈர்க்கப்பட்டு தனது பெயரை இரணியன் என்று மாற்றிக் கொண்டு போசினால் கவரப்பட்டு இந்திய தேசிய இராணுவத்தில் பணி செய்து பின் தனது 28வது வயதில் 1948ல் சொந்த ஊர் திரும்பினார். அப்பொழுது காங்கிரசின் ஆட்சியில் முதலாளித்துவம் வளர்ந்து தொழிலாளர்கள் பல இன்னல்களைக் கண்டனர். இதனைப் பார்த்ததும் பல தொழிலாளர்களை ஒற்றுமைப்படுத்தி முதலாளித்துவத்திற்கு எதிராக பல போராட்டங்களை செய்து தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டு வந்தார். பல குள்ளநரி முதலாளிகள் இவரின் மேல் பல பொய்யான வழக்குகளை பதிவு செய்து காவல் துறையினால் தேடப்பட்டார். பின் இவர் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். காவல்துறை இவரை கைதுசெய்த போது இவருடன் இருந்த ஆம்லாப்பட்டு ஆறுமுகம் என்பவரை காவல்துறை உன்மீது வழக்கு ஏதும் இல்லை சென்றுவிடு என்று கூறியும் இரணியனிடம் கொண்ட நட்பினால் பிரியாமல் இருக்க இருவரையும் சுட்டு கொன்றது காவல்துறை. இந்த ஆம்லாப்பட்டு ஆறுமுகம் என்பவர் ஒரு தாழ்த்தப்பட்ட பிரிவினர். போசின் தலைமையை ஏற்றுக் கொண்ட இரணியன் சாதிபார்க்கவில்லை. தனது இறதி மூச்சுள்ள வரை நாட்டிற்காக மட்டும் பாடுபட்ட வீரர் அவர் தனது 30வது வயதில் இறந்தார்.வாடியக்காடு ஜமீன் (அ) மதுக்கூர் ஜமீனை எதிர்த்து தான் “வாட்டாக்குடி இரணியன்” போராடினார்.

No comments:

Post a Comment

Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...