Thursday, August 6

முஸ்லிம் ஜமாத்தார் பங்கேற்ற கோயில் கும்பாபிஷேகம்

JANUARY 28, 2011

கம்பத்தில் சாந்தகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில், முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள் பங்கேற்றது மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கியது. கம்பம் ராஜகுல அகமுடையார் சமுதாயத்திற்கு சொந்தமான சாந்தகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக யாகசாலை பூஜைகள் நடந்தன. காலை முதல் சிறப்பு பூஜைகளும், ஆராதனைகளும் நடந்தது. கும்பாபிஷேகத்திற்கான நிகழ்ச்சிகள் துவங்கி 10.45 மணிக்கு கும்பிஷேகம் நடந்தது. கும்பத்தில் புனித நீர் ஊற்றிய போது, வானில் கருடன் பறந்து வட்டமிட்டது பக்தர்களை பரவசப்படுத்தியது. கும்பாபிஷேகத்தில் கம்பம் முஸ்லிம் ஜமாத் தலைவர் கே.எம். அப்பாஸ் தலைமையில் ஜமாத் நிர்வாகிகள் பங்கேற்றனர். ஜமாத் நிர்வாகிகளை, விழாக்குழுவினர் பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர். கோயில் வளாகத்தில் அமர்ந்து கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை ஜமாத் நிர்வாகிகள் பார்த்தனர். ஜமாத் நிர்வாகிகள் கும்பாபிஷேகத்தில் பங்கேற்றது, மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாய் விளங்கியது. ஏற்பாடுகளை கமிட்டி தலைவர் மாணிக்கம் செய்திருந்தார்.

THANKS TO DINAMALAR


No comments:

Post a Comment

Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...