அகமுடையார் சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்
தஞ்சை, :
அகமுடையார் சமுதாயத்தை மிகவும்பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் மாநில அரசு சேர்க்க வேண்டும் என்று மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தஞ்சையில் அகமுடையார் சங்க எழுச்சி மாநாடு நேற்று நடந்தது. நிறுவன தலைவர் பதி செந்தில்குமார் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் செல்லத்துரை, அகமுடையார் அரண் தலைவர் பாலமுருகன் முன்னிலை வகித்தனர். மாநாட்டு திடலில் சங்க கொடியை பொறியாளர் நடராஜன் ஏற்றினார். சங்க மாத இதழின் முதல் பிரதியை அனைத்துலக பிள்ளைமார் சங்கங்களின் கூட்டமைப்பு நிறுவன தலைவர் அருணாச்சலம் வெளியிட்டார். துணைத்தலைவர் செந்தில் பெற்று கொண்டார். அகமுடையார் முன்னோடிகளின் படத்தை திருச்சி, தஞ்சை அகமுடையார் கல்வி விருத்தி சங்க துணைத்தலைவர் பாஸ்கரன், சங்கர், மருதுபாண்டி திறந்து வைத்தனர்.
மருது சகோதரர்கள் அகமுடையார் நலச்சங்க தலைவர் செந்தில், மருது வாரிசு சங்கம் ராமசாமி, பொது செயலாளர் அரப்பா, ஓய்வுபெற்ற பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் ராமலிங்கம், தனித்தமிழர் சேனை நிறுவன தலைவர் நகைமுகன், மக்கள் தொடர்பு அலுவலர் கதிரேசன், மாநில நிர்வாகிகள் கார்த்திகேயன், தண்டபாணி சிறப்புரையாற்றினர். உறவுகளை ஒன்றிணைக்கும் வகையில் அகமுடையார்களை ஒன்றிைணக்கும் மாநாட்டு சிறக்க முயற்சி எடுத்த நிறுவன தலைவர் பதி செந்தில்குமாருக்கு பாராட்டு தெரிவிப்பது. அகமுடையார் சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் மாநில அரசு சேர்க்க வேண்டும். மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு வருமான உச்சவரம்பை உயர்த்த மத்திய அரசு அரசாணை வழங்க வேண்டும். கலெக்டர், காவல்துறை கண்காணிப்பாளர்கள், அரசு செயலாளர்கள், நீதிபதிகள், பல்கலைக்கழக துணை வேந்தர்கள் போன்ற பதவிகளில் அகமுடையார் சமுதாயத்துக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்.
தமிழகத்தின் உரிமை காக்க மாநில அரசு எடுத்து நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவிப்பது. தமிழகத்தின் இயற்கை வளங்கள் சுறண்டப்படுவதை தடுக்கும் வகையில் நியூட்ரினோ ஆய்வு மையம், மீத்தேன் வாயு திட்டம் போன்றவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் வாரிய தலைவராக பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தை சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும். திருவண்ணாமலையில் நவம்பரில் அடுத்த மாநாடு நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில துணைத்தலைவர் ராஜா நன்றி கூறினார்.
-DINAKARAN
No comments:
Post a Comment