Monday, September 21

மான்பூண்டியாப் பிள்ளை

மாமுண்டியா பிள்ளை



தமிழகத்தைச் சேர்ந்த இசைக் கலைஞர் ஆவார். மிருதங்கம்கஞ்சிராதவில் எனும் தோல் கருவிகளை வாசிப்பதில் வல்லவராக விளங்கியவர்.

இசை வாழ்க்கை

மான்பூண்டியாப் பிள்ளை எனும் இயற்பெயர் கொண்ட இவர், பேச்சு வழக்கில் மாமுண்டியா பிள்ளை என அழைக்கப்பட்டார். மாரிமுத்து தவில்காரர் எனும் தவில் இசைக் கலைஞரிடம் தவில் வாசிக்கும் கலையைக் கற்றுகொண்டார்.
கஞ்சிராவினை வடிவமைத்தவர் மாமுண்டியா பிள்ளையாவார் கிராமிய இசையில் பயன்பட்ட இக்கருவியை தற்போதைய கஞ்சிரா உருவத்தில் செய்து கருநாடக இசைக் கச்சேரிகளில் உப தாள வாத்தியமாக வாசித்துப் பெருமை பெற்றவர் மாமுண்டியா பிள்ளை ஆவார். நாராயணசாமியப்பா எனும் கலைஞரின் ஊக்கப்படுத்துதலின் காரணமாக, ஆரம்பத்தில் இந்த வாத்தியக் கருவியினை பஜனைகளில் இசைத்தார் மாமுண்டியா பிள்ளை. பின்னர் பெரும் வரவேற்பினைப் பெற்று, கருநாடக இசைக் கச்சேரிகளின் பக்க வாத்தியங்களுள் ஒன்றாக கஞ்சிரா இடம்பெற்றது


இவரின் குறிப்பிடத்தக்க மாணவர்கள்

  • புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை
  • பழனி முத்தையா பிள்ளை (இவர், பழனி சுப்பிரமணிய பிள்ளையின் தந்தை)

பிற சிறப்புகள்
  • தவிலை அடிப்படையாகக் கொண்டு மிருதங்கம் வாசிக்கும் புதுக்கோட்டை பாணியினைக் கொண்டுவந்தவர் மாமுண்டியா பிள்ளை.

Sunday, September 20

அகமுடையார்


பொதுவாக அகமுடையார் என்பதன் பொருள் நில உடைமையாளர், நம்பிக்கைக்குரியவர், பரந்த சிந்தனையாளர் என்று பலவாறாக பொருளில் இலக்கியங்கள் ஊடாக அறிந்துகொள்ள முடிகிறது.மேலும் அகம்படியர் என்பதற்கு காவல் என்றே பொருள் உண்டு. அகமுடையார் குலத்தில் சேர்வை , தேவர்,உடையார்,பிள்ளை, முதலியார் உள்ளிட்ட இந்தப் பட்டங்களே பெரும்பான்மையான காணமுடிகிறது.
அகமுடையார்களில் "தேவர்" பட்டம் என்பது தமிழகத்தின் பெரும்பான்மை மாவட்டங்களில் வழங்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தின் நாகப்பட்டினம் - திருவாரூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வாழும் அகமுடையார்களுக்கு தேவர் பட்டமே. தஞ்சை டெல்டா பகுதிகளில் தேவர் பட்டம் கொண்டுள்ள அகமுடையார் இனத்தினர், ”பதினெட்டு கோட்டை பற்று அகமுடையார்” என்ற குலபிரிவை சார்ந்த்துள்ளனர். இதை தவிர்த்து, ”சித்தர் மரபு அகமுடையார்” மற்றும் ”தஞ்சை ராஜ வம்சத்து அகமுடையார்” என்ற பிரிவும் இன்றளவும் வேதாரண்யம் - முத்துப்பேட்டை போன்ற தஞ்சை கடலோர பகுதிகளில் வாழும் அகமுடையார் இன மக்களுக்கு உண்டு.
"கள்ளர்,மறவர்,கணத்ததோர் அகமுடையார் மெல்ல மெல்ல வெள்ளாளர் ஆனாரே" என்ற பாடல் வாயிலாக, போர்த்தொழிற்கு அடுத்த கட்ட நகர்வான வேளாண்மை தொழிலில் ஈடுபட ஆரம்பித்து, அதிலேயே நில நீட்சிகளோடு வாழ்ந்தவர்களின் வழித்தோன்றல்கள் அகம் உடையார் என அறியப்பட்டனர்.
அகமுடையார்களில் "முதலியார்" என்ற பட்டம் உடையவர்கள் வட தமிழகத்தில் பெரும்பான்மையாக செருமி வாழ்கின்றனர்.அகமுடைய முதலியார் என்பது போர்ப்படை தளபதிகளையே குறிக்கின்றது. முதலி என்பது ஒரு படையை தலைமைத்தாங்குகின்ற முதன்மையான தளபதி என்று பொருள் தருகிறது. வடதமிழகத்தில் வாழும் அகமுடையார்கள் அனைவருக்கும் பட்டம் என்பது முதலியார்,உடையார் மற்றும் பிள்ளை.

  அகமுடையார் குல பிரிவுகள்

  1. ராஜகுலம்
  2. புண்ணியரசு நாடு
  3. கோட்டைப்பற்று (பதினெட்டு கோட்டைப்பற்று)
  4. இரும்புத்தலை
  5. ஐவளிநாடு
  6. நாட்டுமங்களம்
  7. ராஜபோஜ
  8. ராஜவாசல்
  9. கலியன்
  10. சானி
  11. மலைநாடு
  12. பதினொரு நாடு
  13. துளுவ வேளாளர் அல்லது துளுவன்

அகமுடையார் குல பட்டங்கள்

  1. தேவர்
  2. சேர்வை
  3. பிள்ளை
  4. முதலியார்
  5. உடையார்
  6. தேசிகர்
  7. அதிகாரி
  8. மணியக்காரர்
  9. பல்லவராயர்
  10. நாயக்கர்
  11. ரெட்டி
  12. செட்டியார்
இதை தவிர்த்த ஏனைய பட்டங்கள்
  1. வானவர்
  2. பொறையர்
  3. வில்லவர்
  4. உதயர்
  5. மலையன்
  6. மலையான்
  7. வானவன்
  8. வானவராயன்
  9. வல்லவராயன்
  10. பனந்த்தாரன்
  11. பொறையான்
  12. மலையமான்
  13. தலைவன்
  14. மனியக்காரான்
  15. பூமியன்
  16. கோளன்
  17. நாகன்
  18. பாண்டியன்
  19. கொங்கன்
  20. அம்பலம்
  21. நாட்டான்மை


  • தமிழகம் மற்றும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திர,கேரளா உள்ளிட்ட தென்னிந்தியா முழுவதும் பலவேறு பட்டப்பெயர்களுடன் வசித்து வருகின்றனர். இதைதவிர்த்து, இலங்கை, மலேசியா, பர்மா, சிங்கப்பூர் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பெரும்பாலான அகமுடையார் குலத்தினர் பல தலைமுறைகளாக பூர்வீகமாக வசித்து வருகின்றனர். தமிழகத்தின் அனைத்து பகுதியிகளிலும் அகமுடையார் இனத்தினர் பரந்து விரிந்து வாழ்ந்து வருகின்றனர்.


"பெரும்பாலும் அகமுடையார் இனத்தினரின் பட்டங்களையும், பட்ட பெயர்களையும் வைத்து பலவாறு தமிழகம் முழுவதும் சிதறிக் கிடக்கின்றனர்"


  • தென் தமிழகத்தில் அகமுடையார்களை சேர்வை என்றும் மேலும் முதலியார்,பிள்ளை என்ற பட்டங்களுடன் வட தமிழகத்திலும், தேவர்,பிள்ளை,அதிகாரி,உடையார்,நாயக்கர், தேசிகர் போன்ற பல பட்ட பெயர்களுடன் மத்திய தமிழகத்திலும் அறியபடுகின்றனர்.
அகமுடைய தேவர்:
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கோயம்புத்தூர், திண்டுக்கல், திருப்பூர், விருதுநகர், திருநெல்வேலி, மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் தேவர் என்ற பட்டப் பெயரை தாங்கி அகமுடையார் குலத்தினர் அறியபடுகின்றனர்.
அகமுடைய சேர்வை:
இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் சேர்வை என்ற பட்ட பெயரை தாங்கி அகமுடையார் குலத்தினர் அறியபடுகின்றனர்.
அகமுடைய முதலியார்,துளுவவேள்ளார் ,உடையார் மற்றும் பிள்ளை:
காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சென்னை, பெரம்பலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் முதலியார் என்ற பட்ட பெயரை தாங்கி அகமுடையார் குலத்தினர் அறியபடுகின்றனர்.


ஜாம்புவானோடை சிவராமன்


பிரிட்டிஷ் ஆட்சி முடிவுக்கு வந்து, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் கஷ்டங்களை அனுபவிக்க, பெருமுதலாளிகள்,நிலச்சுவான்தார்கள் ,ஜமீன்தார்கள் அதிகாரத்திலும் , ஆணவத்திலும் மிதந்து ,பாட்டாளிகளை கொடுமைப்படுத்தி வந்த காலம் .ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை காக்கும் போர்க்குரலாக பொதுவுடமை இயக்கம் மற்றும் விவசாய சங்கங்கள் போராடி வந்தன. ஒரு கட்டத்தில் இயக்கங்கள் தடை செய்யப்பட தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டு மக்கள் நலப்போராட்டங்களில் ஈடுபட்டு வந்த வாட்டாகுடி இரணியன், ஆம்பலாபட்டு ஆறுமுகம், ஜாம்புவானோடை சிவராமன் போன்றோருக்கு எதிராக காவல்துறை தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தது.துரோகிகளால் காட்டிக் கொடுக் கப்பட்டு ஜாம்புவானோடை சிவ ராமன் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். மணலி கந்தசாமி தலைமறை வாக இருக்கும் இடத்தை காட்டிக் கொடுத்தால் விட்டு விடுவதாக ஆசை வார்த்தை காட்டியபோது, தெரியாது என மறுத்துவிட்டார். நீ ஓடி தப்பித்து போய் விடு என காவல்துறை அதிகாரிகள் சொன்னபோது, `சிவராமன் தப்பி ஓடினான். சுட்டுக்கொன்றோம் என்று சொல்வாய். நான் ஒன்றும் கோழை அல்ல. தப்பி ஓட... என்று கூறி நெஞ்சில் சுடு... ஏவல்துறையே... என்று கூறி நெஞ்சில் குண்டு தாங்கி வீரமரணத்தை தழுவினார் தியாகி ஜாம்புவானோடை சிவராமன் 

வாட்டாக்குடி இரணியன்


இவர் இயற்பெயர் வெங்கடாச்சலம் தேவர். இவர் இளம் வயதில் சிங்கப்பூர் சென்று அங்கு பணி செய்யும் பொழுது பொதுவுடைமை கொள்கையில் ஈர்க்கப்பட்டு தனது பெயரை இரணியன் என்று மாற்றிக் கொண்டு போசினால் கவரப்பட்டு இந்திய தேசிய இராணுவத்தில் பணி செய்து பின் தனது 28வது வயதில் 1948ல் சொந்த ஊர் திரும்பினார். அப்பொழுது காங்கிரசின் ஆட்சியில் முதலாளித்துவம் வளர்ந்து தொழிலாளர்கள் பல இன்னல்களைக் கண்டனர். இதனைப் பார்த்ததும் பல தொழிலாளர்களை ஒற்றுமைப்படுத்தி முதலாளித்துவத்திற்கு எதிராக பல போராட்டங்களை செய்து தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டு வந்தார். பல குள்ளநரி முதலாளிகள் இவரின் மேல் பல பொய்யான வழக்குகளை பதிவு செய்து காவல் துறையினால் தேடப்பட்டார். பின் இவர் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். காவல்துறை இவரை கைதுசெய்த போது இவருடன் இருந்த ஆம்லாப்பட்டு ஆறுமுகம் என்பவரை காவல்துறை உன்மீது வழக்கு ஏதும் இல்லை சென்றுவிடு என்று கூறியும் இரணியனிடம் கொண்ட நட்பினால் பிரியாமல் இருக்க இருவரையும் சுட்டு கொன்றது காவல்துறை. இந்த ஆம்லாப்பட்டு ஆறுமுகம் என்பவர் ஒரு தாழ்த்தப்பட்ட பிரிவினர். போசின் தலைமையை ஏற்றுக் கொண்ட இரணியன் சாதிபார்க்கவில்லை. தனது இறதி மூச்சுள்ள வரை நாட்டிற்காக மட்டும் பாடுபட்ட வீரர் அவர் தனது 30வது வயதில் இறந்தார்.வாடியக்காடு ஜமீன் (அ) மதுக்கூர் ஜமீனை எதிர்த்து தான் “வாட்டாக்குடி இரணியன்” போராடினார்.

Saturday, September 19

பொட்டு அம்மான்


பொட்டு அம்மான் (சண்முகலிங்கம் சிவசங்கரன்) விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ஆவர். விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான இவர் கடற்புலிகளின் தலைவரான கேணல் சூசையுடன் இணைந்து தாக்குதற் திட்டங்களைத் தயாரித்தவர்.
இந்தியப் பிரதமரான ராஜீவ் காந்தியின் படுகொலையில் இவரது பங்களிப்பு இருப்பதாக ஜெயின் கமிஷன் அறிக்கைகள் கூறுகின்றன.

எங்கள் கரிகாலனின் வலது கை நீதான் என்பதை உலகறியும் அதை வைத்து என்றுமே நீ பெருமைதேடியவனில்லை.

உன் மனைவி, மக்கள் யாரென்றுகூட எம்மக்களுக்கு தெரியாது

கரிகாலனின் ஒவ்வொரு வெற்றிக்கு பின்னும் ஆயிரமாயிரம் போராளிகள் அமைதியாக துணை நின்றார்கள். அவர்களுள் முதன்மையானவன் நீ.

எதிரிகளே அஞ்சி நடுங்கும் தமிழரின் உளவுப்பிரிவை கட்டியாண்டவன் நீ, அதை இன்றளவும் இயங்கவைதுக்கொண்டும் இருக்கிறாய்.

அன்று மணலாற்றில் முற்றுகைக்குள் இருந்தபோது தலைவர் சொன்னார் - " பொட்டு நிழல் போல பின்னால் இருக்கும் வரை பிரபாகரனுக்கு ஒன்றும் நிகழ்ந்து விடாது" என்று

அந்த நம்பிக்கை தான் இன்றும் இருக்கிறது பறந்த குருவி திரும்பும் போது எம்மக்களின் விடுதலையையும் உடன் கொண்டு வருமென்று !

ஏ. ஆர். ரகுமான்



அ. இர. ரகுமான் (அல்லா இரக்கா இரகுமான், பிறப்பு: ஜனவரி 6, 1966), புகழ் பெற்ற இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். பல இந்தி, தமிழ், ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல் என அழைக்கப்படுகிறார். ஆஸ்கார் விருது, கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது , தேசியத் திரைப்பட விருது போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றவர். ஹாலிவுட் திரைப்படமான ஸ்லம் டாக் மில்லியனியர் என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக ஆஸ்கார் விருதுகளை வென்றிருக்கிறார். மேலும் இத்திரைப்பட இசைக்காக இவருக்கு 2008 ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருதும் , பாஃப்டா விருதும் கிடைத்தன. இவ்விரு விருதுகளைப் பெற்ற முதலாவது இந்தியரும் இவரேயாவார். இவருக்கு 2010-ஆம் ஆண்டில் இந்திய அரசின் பத்ம பூசண் விருது அளிக்கப்பட்டது. இவர் ஆசியாவின் மொசார்ட்என்று அழைக்கப்படுகிறார்.
2009ஆம் ஆண்டு 81ஆம் ஆஸ்கார் விருதுகளுக்காக அமைத்த மாபெரும் மேடையில் அவரது தாய் மொழியான தமிழில் 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று அவர் அடிக்கடி உச்சரிக்கும் மந்திர சொல்லைப் பாடினார்.

வாழ்க்கைக் குறிப்பு


ரகுமான் ஜனவரி 6, ஆம் திகதி தமிழ்நாட்டில் சென்னையில் பிறந்தவர். இயற்பெயர் திலீப்குமார். இசையுலகப் பயணம் ஆரம்பித்தது 1985 இல். இவரின் குடும்பம் இசை சார்ந்தது. இவரின் தந்தை சேகர் மலையாள திரைப்படத்துறையில் பணியாற்றியவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்தார்.அதன் பின் குடும்பத்தில் வருமானம் இல்லாத நிலையில் தன் தந்தையின் இசைக்கருவிகளை வாடகைக்குவிட்டு அந்த வருமானத்தில் கஷ்டத்தோடு பியானோ, ஹார்மோனியம் மற்றும் கிதார் வாசிக்க கற்று கொண்டார். தன்ராஜ் மாஸ்டரிடம் முறைப்படி இசை கற்றுக் கொண்டார். 11 வயதில் இளையராஜா இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காக சேர்ந்தார். பின்னர் எம். எஸ். விஸ்வநாதன், ரமேஷ் நாயுடு, ஜாகீர் உசேன் மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன்உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடன் பணியாற்றினார். டிரினிட்டி காலேஜ் ஆப் மியூசிக் கல்லூரியில் கிளாசிக்கல் மியூசிக்கில் பட்டம் பெற்றார்.
இவரது மனைவி பெயர் ஷெரினா பானு. காதிஜா, கீமா, அமின் என மூன்று குழந்தைகள் உள்ளனர்.
1992 இல் தனது வீட்டிலேயே மியூசிக் ரெக்கார்டிங் தியேட்டர் அமைத்தார். இதே ஆண்டு வெளியான மணிரத்தினத்தின் ரோஜா திரைப்படம், இவருடய வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பிரபலமாயின. இவருக்கு முதல் தேசியவிருது வாங்கித் தந்தது. பின்னர் 1997ல் மின்சாரக்கனவும், 2002 லகான் இந்தி படமும், 2003ல் கன்னத்தில் முத்தமிட்டால் படமும் இவருக்கு தேசிய விருகள் வாங்கி தந்தன.
முதல் படம் ஜப்பானில் வெற்றி பெற்று இவரது புகழ் உலகமெங்கும் பரவத் தொடங்கியது. 2005 இவரால் வாங்கப்பட்ட ஏ.எம் ஸ்டுடியோ ஆசியாவிலே நவீன தொழிநுட்ப ரெகார்டிங் ஸ்டுடியோவாக உள்ளது.

இசையில் ஆரம்ப காலம்

ரகுமான் தனது ஒன்பதாவது வயதில் தந்தையை இழந்ததால், விளம்பரங்களுக்கு இசையமைத்தார். திரிலோக் மற்றும் சாரதா ஆகியோருடன் இணைந்து விளம்பரப் படங்களை இவர் தயாரித்தார். அதன் மூலம் ரகுமான் வெகுவாக அறியப்பட்டார்.பூஸ்ட்,ஏசியன் பெயின்ட்ஸ்,ஏர்டெல்,லியோ காபி ஆகிய 300க்கும் மேற்பட்ட விளம்பரப்படங்களுக்கு ரகுமான் இசையமைத்தார்.

இவர் பெற்ற விருதுகள்

  • இசைத்துறையில் ஏ.ஆர். ரகுமானின் 20 ஆண்டுகால பங்களிப்பை பெருமைபடுத்தும் வகையில் அவருக்கு, அமெரிக்காவின் பெர்க்லீ இசைப் பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்க உள்ளது.
  • 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த இசையமைப்பாளருக்காகவும் சிறந்த பாடலுக்காகவும் ஆஸ்கார் விருதுகளைப் பெற்றுள்ளார்.
  • இவர் மொரீசியசு நாட்டின் விருது, மலேசிய விருது, லாரன்ஸ் ஆலிவர் விருது, தேசிய திரைப்பட விருது, இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது, தமிழக அரசு திரைப்பட விருது (ஆறு முறை), பிலிம்பேர் விருது (13 முறை), பிலிம்பேர் சவுத் விருது (12 முறை - அதில் 9 முறை தொடர்ந்து பெற்றார்), ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகத்தின் சிறப்பு விருது, 2009ஆம் ஆண்டு வெளியான "ஸ்லம்டாக் மில்லினியர்" படத்திற்காக கோல்டன் குளோப் விருது, பெப்டா விருது ஆகியவற்றை பெற்றுள்ளார்.
  • மிடில்செக்ஸ் பல்கலைக்கழகமும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகமும் வழங்கிய மதிப்புறு முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார்.
  • ரங் தே பசந்தி, லகான், சாத்தியா, தால் ஆகிய திரைப்படங்களுக்காக ஐ.ஐ.எஃப்.ஏ விருது பெற்றுள்ளார்.
  • சிகரமாக, இந்திய குடிமக்களுக்கான மூன்றாம் உயரிய விருதான பத்ம பூசண் விருது 2010-ஆம் ஆண்டு இவருக்கு அளிக்கப்பட்டது. 2010ஆம் ஆண்டில் இவருக்கு இந்திரா காந்தி தேசிய ஒருமைப்பாடு விருதும் வழங்கப்பட்டது.
  • ஸ்வரலயா யேசுதாஸ் விருது(2006), மத்தியப்பிரதேச அரசின் லதா மங்கேஷ்கர் விருது (2004) ஆகிய மாநில விருதுகளைப் பெற்றுள்ளார்.
  • ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகம் இவருக்கு உலக பங்களிப்புக்கான மதிப்புறு விருதை வழங்கியுள்ளது.


Friday, September 18

எஸ். ஏ. கணபதி தேவர்



எஸ். ஏ. கணபதி அல்லது மலாயா கணபதி (பிறப்பு:1912 - இறப்பு:மே 4, 1949) என்பவர் மலாயாவைச் சேர்ந்த தொழிற்சங்கப் போராட்டவாதி. சமூக நீதி செயல்பாட்டாளர். தொழிலாளர் உரிமைகளுக்காகப் போராடியவர்.இந்திய தேசிய இராணுவத்தில் சேவை செய்தவர். அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவராக இருந்தவர்.
அன்றைய மலாயாவின் பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராட்டம் செய்து தூக்கிலிடப்பட்டவர்.மலாயா கண்டெடுத்த மாபெரும் புரட்சித் தலைவர்களில் ஒருவர்

வாழ்க்கை சுருக்கம்

எஸ். ஏ. கணபதி இளம் வயதிலேயே மலாயா தொழிற் சங்க இயக்கத்தின் தேசிய தலைவரானார். அவரின் சாதனை இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவின்கவனத்தையே ஈர்த்தது. எஸ். ஏ. கணபதியின் உரிமைப் போராட்டங்கள் பிரித்தானியர்களின் நலன்களுக்குப் பெரும் இடையூறுகளாக அமைந்தன. அவரை அனைத்துலகப் பார்வையில் இருந்து அகற்றுவதற்கு பிரித்தானியர்கள் முடிவு செய்தனர்.
சிலாங்கூர் மாநிலத்தில் ரவாங், பத்து ஆராங் என இரு நகரங்கள் உள்ளன. இந்த நகரங்களுக்கு மத்தியில் வாட்டர்பால் தோட்டம் (Waterfall Estate) இருக்கிறது. அங்கே கணபதி கைது செய்யப்பட்டார். கைத்துப்பாக்கியும் துப்பாக்கி குண்டுகளும் வைத்திருந்தார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
உடனடியாக, அவர் அங்கிருந்து கோலாலம்பூருக்கு கொண்டு வரப்பட்டார். அவரைக் காப்பாற்ற ஜவஹர்லால் நேரு புதுடில்லியில் இருந்து பல முயற்சிகளை மேற்கொண்டார்.
நேருவின் நண்பர் வி. கே. கே. கிருஷ்ண மேனன் லண்டனில் முயற்சிகளை மேற்கொண்டார். இருப்பினும் இந்தியாவின் முயற்சிகள் வெற்றி பெறவில்லை. விசாரணை செய்யப்பட்டு இரண்டே மாதங்களில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு எஸ். ஏ. கணபதி கோலாலம்பூர், புடு சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார். எஸ். ஏ. கணபதி தூக்கில் இடப்பட்டதை எதிர்த்து இந்திய அரசாங்கம் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தது.
எஸ். ஏ. கணபதி தூக்கிலடப்பட்ட செய்தியைப் பிரித்தானிய அரசாங்கத்தின் காலனி ஆட்சிகளுக்கான அமைச்சர் வில்லியம்ஸ் டேவிட் ரீஸ், நாடாளுமன்ற மக்களவையில் அறிவித்தார். எஸ். ஏ. கணபதியின் வழக்கில் நீதி மதிப்பீட்டாளர்களாக இருந்த ஓர் ஐரோப்பியரும் ஓர் இந்தியரும் ஒரு சேர தூக்குத் தண்டனைக்கு முடிவு எடுத்தனர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

வாழ்க்கை வரலாறு

எஸ். ஏ. கணபதி தமிழ்நாடு, தஞ்சாவூர், தம்பிக்கோட்டை கிராமத்தில் 1912ஆம் ஆண்டு பிறந்தார். தந்தையாரின் பெயர் ஆறுமுக தேவர். தாயாரின் பெயர் வைரம்மாள். எஸ். ஏ. கணபதிக்கு பத்து வயதாக இருக்கும் போது சிங்கப்பூருக்கு வந்தார். தம் தொடக்கக் கல்வியை சிங்கப்பூரில் பெற்றார். இளம் வயதிலேயே அரசியலிலும் தீவிர ஈடுபாடு காட்டினார்.
ஜப்பானியர் காலத்தின் போதுதான் இந்திய தேசிய விடுதலைக்காக நேத்தாஜி சுபாஷ் சந்திரபோஸ் மலாயாவுக்கு வந்து இந்திய தேசிய ராணுவத்தைஅமைத்தார். அப்போது சிங்கப்பூரில் இயங்கி வந்த ஆசாத் ஹிந்த் சர்க்கார் தற்காலிக சுதந்திர அரசாங்கத்தை இந்திய தேசிய ராணுவத்தினர் (Indian National Army) நடத்தி வந்தனர். அதில் எஸ். ஏ. கணபதி ஓர் அதிகாரியாகவும் பயிற்றுநராகவும் சேவை செய்தார். மேலும் மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் Malaya Communist Party (MCP) கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த “முன்னணி” இதழின் ஆசிரியராகவும் பணி புரிந்தார். இந்தக் கட்டத்தில் அகில மலாயா பொதுத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்

அகில மலாயா தொழிலாளர் சம்மேளனம்

இந்தச் சங்கம் பின்னர் அகில மலாயா தொழிலாளர் சம்மேளனம் என பெயர் மாற்றம் கண்டது. ஜவர்ஹலால் நேருவின் தலைமையில் புதுடில்லியில் நடைபெற்ற ஆசிய நாடுகளுக்கு இடையிலான நட்புறவு மாநாட்டில் மலாயாப் பேராளர்களில் ஒருவராக எஸ். ஏ. கணபதி கலந்து கொண்டார். 1948 ஆம் ஆண்டு மலாயாவின் அனைத்து இனங்களின் விடுதலைப் படையில் இணைந்தார்.
எஸ்.ஏ. கணபதியினால் வழிநடத்தப்பட்ட அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனம் மலாயாவின் உழைக்கும் வர்க்கத்தினரின் உரிமைகளுக்காகவும், மலாயாவின் அரசியல் விடுதலைக்காகவும் பெரும் போராட்டங்களை நடத்தியது. எஸ். ஏ. கணபதி ஊக்கமுடையவராகவும், செயல்பாட்டுத் திறன் மிக்கவராகவும் இருந்தார். இந்தப் பண்புகளே அவரை மலாயாவின் வலிமை மிக்க அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைமைத்துவத்திற்கு கொண்டு சென்றது.

மலாயாத் தொழிற்சங்கங்களின் உருவாக்கப் பின்புலம்

1900களில் மலாயா ரப்பர் தோட்டங்களில் வேலை செய்த தொழிலாளர்களில் 92 விழுக்காட்டினர் தென்னிந்தியாவில் இருந்து வந்தவர்கள். 1928 ஆம் ஆண்டு முதல் 1937 வரை ரப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக 50 காசு தரப்பட்டது. அந்தக் காலக்கட்டத்தில் அந்தச் சம்பளமும் குறைக்கப்பட்டு 40 காசாகக் கொடுக்கப் பட்டது. அதனால் பிரச்னைகள் ஏற்பட்டன. அதற்கு தீர்வு காண 1939 ஜனவரி முதல் தேதியில் இருந்து பழைய 50 காசு சம்பளத்தைக் கொடுக்கத் தோட்ட நிர்வாகங்கள் ஒப்புக் கொண்டன.
சீனத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக 60 காசில் இருந்து 70 காசு வரை கொடுக்கத் தோட்ட நிர்வாகங்கள் முன் வந்தன. சீனத் தொழிலாளர்களுக்கும் இந்தியத் தொழிலாளர்களுக்கும் இடையிலேயே பாரபட்சம் காட்டப்பட்டது. ஒரே அளவுள்ள வேலை. ஆனால், ஏற்றத் தாழ்வான சம்பள முறை. இதைக் கண்டித்து சிலாங்கூர், கிள்ளானில் வாழ்ந்த இந்தியர்கள் கிள்ளான் வட்டார இந்தியத் தொழிற்சங்கத்தை உருவாக்கினார்கள். இது 1940இல் நடந்தது.

10 காசு சம்பள உயர்வு போராட்டம்

அந்த முதல் இந்தியத் தொழிற்சங்கத்திற்கு, அப்போது கோலாலம்பூரில் மிக முக்கியப் பிரமுகராக விளங்கிய ஆர். எச். நாதன் எனும் ஆர். ஹாலாசிய நாதன் தலையாய பங்கு வகித்தார். இவர் 1938இல் தமிழ் நேசன் நாளிதழின் ஆசிரியர் பகுதியில் பணிபுரிந்து வந்தார். கிள்ளான் வட்டார இந்தியத் தொழிலாளர்கள் 10 காசு சம்பள உயர்வு கோரிப் போராடினர். அப்போதைய தோட்ட நிர்வாகங்கள் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராகக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது.
நிர்வாகத்தினரின் அனுமதி இல்லாமல் தொழிலாளர்களின் நண்பர்கள், உறவினர்கள் தோட்டத்திற்குள் வருகை தரக்கூடாது. நிர்வாக அதிகாரிகளுக்கு எதிரில் மிதிவண்டியில் போகக்கூடாது எனும் அடிமைத்தனமான கட்டுப்பாடுகள். இந்தக் கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும்; சம்பளத்தில் 10 காசு உயர்த்தி 60 காசாகத் தர வேண்டும் என்று கிள்ளான் வட்டார இந்தியத் தொழிற்சங்கம் போராட்டத்தில் இறங்கியது.

வேலை நிறுத்தம்

1941 பிப்ரவரி மாதம் கிள்ளான் வட்டார இந்தியத் தோட்டத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர்கள் மீது திணிக்கப்படும் கட்டுப்பாடுகளைத் தளர்த்தவும்; 5 காசு சம்பள உயர்வு தரவும் தோட்ட நிர்வாகங்கள் முன்வந்தன. ஏறக்குறைய இரண்டு மாதங்கள் நடைபெற்ற அந்த வேலை நிறுத்தம் 1941 ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி முடிவுக்கு வந்தது. நாடு முழுமையும் இருந்த இந்தியத் தோட்டத் தொழிலாளர்களுக்கு அந்த வேலை நிறுத்தம் ஒரு புது விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
மலாயாவில் முதன்முறையாகப் பெரிய அளவில் நடைபெற்ற அந்த வேலை நிறுத்தத்திற்கு மூல காரணமாக இருந்த ஆர். எச். நாதனும், அவருக்கு உதவியாக இருந்த டி. சுப்பையா என்பவரும், 1941 மே மாதம் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.

ஜப்பானியர் ஆட்சி

1941 டிசம்பர் மாதம் தொடங்கி 1945 வரையில் மலாயாவை ஜப்பானியர்கள் ஆட்சி செய்தனர். அந்தக் காலக்கட்டத்தில் தொழிற்சங்கங்கள் துடிப்புடன் செயல்படவில்லை. ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக இருந்தன. 1945 ஆம் ஆண்டு இறுதிவாக்கில் ஜப்பானியர்களின் ஆட்சி ஒரு முடிவிற்கு வந்தது. அதன் பின்னர் பல தொழிற்சங்கங்கள் மலாயாவின் பல பகுதிகளில் உருவாக்கம் பெற்றன. இந்தியர்கள் பலர் அந்தத் தொழிற்சங்கங்களில் முக்கிய பதவிகளை வகித்தனர்.
  • கெடா இந்தியர் தொழிலாளர் சங்கம் - ஏ.எம்.சாமி (தலைவர்)
  • பேராக் இந்தியத் தொழிலாளர் இயக்கம் - எம்.சி.பி.மேனன் (தலைவர்)
  • நெகிரி இந்தியர் தொழிலாளர் சங்கம் - கே.சௌத்ரி; பி.பி.நாராயணன் (தலைவர்)
  • சிலாங்கூர் தோட்டத் தொழிலாளர் சங்கம் - சி.வி.எச்.ஏ.மூர்த்தி (தலைவர்)

அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனம்

இவ்வாறு தோன்றிய தொழிற்சங்கங்களில் மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் உறுப்பினர்களும் இடம் பெற்று இருந்தனர். அவர்களும் இந்தத் தொழிற்சங்கங்களின் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டினர். மலாயா, சிங்கப்பூர் பெருநிலங்களில் இருந்த அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒன்றாக இணைத்து அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனம் (Pan Malaysian Federation of Trade Union) எனும் பெயரில் ஒரு தேசிய அமைப்பு உருவாக்கப்பட்டது.
இந்த அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனத்தின் முதல் மாநாடு 1946 மே மாதம் 15 ஆம் தேதி சிங்கப்பூர் சிலிகி சாலையில் இருந்த ஜனநாயக இளைஞர் கழக மண்டபத்தில் நடைபெற்றது. அதற்கு லூ சின் இங் என்பவர் தலைமை தாங்கினார். அந்த மாநாட்டிற்குப் பிறகு லூ சின் இங், பிரித்தானிய அதிகாரிகளால் கைது செய்யப்ப்பட்டு சீனாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

மலாயா கம்யூனிஸ்டு கட்சி

அதன் பின்னர் 1947 பிப்ரவரி மாதம் அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவராக எஸ். ஏ. கணபதி பொறுப்பேற்றார். அந்தச் சம்மேளனத்தின் மத்திய செயல்குழுவில் 4 சீனர்கள், 4 இந்தியர்கள், 2 மலாய்க்காரர்கள் இடம் பெற்றிருந்தனர். சிங்கப்பூர் துறைமுக தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் பி. வீரசேனன் அந்தத் தொழிற்சங்கத்தின் மத்திய செயலவை உறுப்பினர்களில் ஒருவர்.
அப்போது மலாயா கம்யூனிஸ்டு கட்சி தலைமறைவு இயக்கமாக இயங்கிக் கொண்டிருந்தது. நாட்டில் நிகழ்ந்த பற்பல குழப்பங்களுக்கு மலாயா கம்யூனிஸ்டு கட்சியே காரணமாகவும் இருந்தது. மலாயா கம்யூனிஸ்டு கட்சியுடன் தொடர்பு கொண்டு இயங்கிய தொழிற்சங்கங்களைக் காவல் துறையினர் மிக அணுக்கமாகக் கண்காணித்து வந்தனர். தொழிற்சங்க அலுவலகங்களில் சோதனைகளையும் மேற்கொண்டனர். சில தொழிற்சங்கவாதிகள் கைது செய்யப்பட்டு காவலில் தடுத்தும் வைக்கப்பட்டனர்.

அவசரகால பிரகடனம்

மலாயாவில் பல வேலை மறியல் போராட்டங்களை அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனம் முன் நின்று நடத்தி வந்தது. அதனால், 1946இல் மலாயா,சிங்கப்பூர் பெருநிலங்களில் இயங்கிய தொழிற்சங்கங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என அரசாங்கம் அறிவித்தது. தொழிற்சங்கங்க பதிவிற்காகத் தொழிற்சங்க சம்மேளனம் (Federation of Trade Union) இரண்டு ஆண்டுகள் காத்திருந்தது. இருப்பினும், தொழிற்சங்க சம்மேளனம் பதிவு செய்ய அனுமதிக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டது.
கடைசியில், 1948 ஜூன் 13இல் தொழிற்சங்க சம்மேளனம் மலாயாவில் ஒட்டு மொத்தமாகத் தடை செய்யப்படுவதாக அரசாங்கம் அறிவித்தது. ஆனால், சிங்கப்பூரில் தடை செய்யப்படவில்லை. ஆனால், சிங்கப்பூரிலும் அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனம் தடை செய்யப்பட வேண்டும் என ’சிங்கப்பூர் ஸ்ட்ரேயிட்ஸ் டைம்ஸ்’ நாளிதழ் (Singapore Straits Times) 19 ஜூன் 1948 இல் பிரித்தானிய அரசாங்கத்தை வலியுறுத்தித் தலையங்கம் எழுதியது.

பி. வீரசேனன்

அப்போது சிங்கப்பூர் தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவராகப் பி. வீரசேனன் என்பவர் இருந்தார். 1947ஆம் ஆண்டில் மட்டும் ஒரு வாரத்திற்கு இரண்டு எனும் எண்ணிக்கையில், 89 ரப்பர் தோட்ட வேலைநிறுத்தங்கள் நடைபெற்றன. அந்த வேலைநிறுத்தங்களுக்கு அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனம் முன்னோடியாக விளங்கியது. ’சிங்கப்பூர் ஸ்ட்ரேயிட்ஸ் டைம்ஸ்’ நாளிதழ் மலாயாவுக்கான பிரித்தானிய உயர் ஆணையர் சர் எட்வர்ட் ஜெண்ட்டிற்கு (Sir Edward Gent) நெருக்குதல்கள் கொடுத்தது. சர் எட்வர்ட் ஜெண்ட் ஓர் உயர் ஆணையராக இருந்தும் மலாயாவில் ஒரு நியாயமான மனிதராக நடந்து கொண்டார்.
எஸ். ஏ. கணபதியை சிங்கப்பூரில் கைது செய்ய வேண்டும் எனும் கோரிக்கையை நிராகரித்தவர். அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனம் மலாயாவில் மட்டுமே தடை செய்யப்பட வேண்டும்; சிங்கப்பூரில் அல்ல என்பதில் சர் எட்வர்ட் ஜெண்ட் பிடிவாதமாகவும் இருந்தார். இந்த அறிவிப்பிற்கு பின்னர் 1948 ஜூலை 4இல், அவர் லண்டன் திரும்பிய போது அவர் பயணம் செய்த விமானம் விபத்துக்குள்ளானது. அதில் அவர் இறந்து போனார். அந்த விமான விபத்தைப் பற்றிய மர்மங்கள் இன்னும் நீடிக்கின்றன.
மலாயா தொழிற்சங்க சம்மேளனத்தில் மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் ஊடுருவல் இருப்பதை அரசாங்கம் உணர்ந்து கொண்டது. அதனால், தொழிற்சங்க அலுவலகங்கள் அடிக்கடி சோதனையிடப்பட்டன. மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், தொழிற்சங்க அதிகாரிகள் நூற்றுக்கணக்கில் கைது செய்யப்பட்டனர். 1948 ஜூன் மாதம் 18 ஆம் தேதி நாடு முழுமையும் அவசரகாலம் பிரகடனம் செய்யப்பட்டது.

கணபதியின் கடைசிகாலம்

பிரித்தானிய அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் இறங்கிய மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் உறுப்பினர்கள் காட்டிற்குள் ஓடி மறைந்தனர். எஸ். ஏ. கணபதி பத்து ஆராங் நகரத்திற்கு அருகில் இருந்த வாட்டர்பால் தோட்டத்தில் கைது செய்யப்பட்டார். சட்டத்திற்குப் புறம்பாக ஒரு கைத்துப்பாக்கி, ஆறு சுற்றுத் துப்பாக்கிக் குண்டுகளையும் வைத்திருந்தார் என்று கணபதியின் மீது குற்றம் சாட்டப்பட்டது.
கோலாலம்பூர் நீதிமன்றம் கணபதிக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. இந்தியா, பிரிட்டன் ஆகிய நாடுகளின் தொழிற்சங்க இயக்கங்கள் மற்றும் உலகத் தொழிலாளர் சம்மேளனம் (World Federation of Trade Unions) எஸ். ஏ. கணபதிக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனைக்கு எதிர்ப்புத் தெரிவித்தன. மரணதண்டனை நிறைவேற்றப்படக்கூடாது என்றும் கேட்டுக் கொண்டன.

ஜவஹர்லால் நேரு வற்புறுத்தல்

இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு, இந்திய விடுதலை வீரர் நேதாஜி போன்றோரிடம் எஸ். ஏ. கணபதிக்கு நெருங்கிய தொடர்புகள் இருந்தன. 1945 ஆகஸ்டு 10ஆம் தேதி ஜப்பான் சரணடைந்த செய்தியை முதன்முதலில் நேதாஜிக்கு அறிவித்ததே எஸ். ஏ. கணபதிதான். சிங்கப்பூரில் இருந்து சிரம்பான்வந்து அந்தச் செய்தியை எஸ். ஏ. கணபதியும் லட்சுமிய்யாவும் நேதாஜியிடம் தெரிவித்தனர் என்று நம்பபடுகிறது.  ஜவஹர்லால் நேரு சிங்கப்பூர் வந்திருந்த போது எஸ். ஏ. கணபதியைச் சந்தித்துப் பேசி இருக்கிறார்.
கணபதியின் மரணதண்டனை நிறுத்தப்பட வேண்டும் என்று ஜவஹர்லால் நேரு நேரடியாகவும் பிரிட்டனுக்கான இந்திய்த் தூதர் வே. கி. கிருஷ்ண மேனன் மூலமாகவும் பிரித்தானிய பிரதமரை வற்புறுத்தினார். அதற்கு பிரித்தானிய பிரதமர் சம்மதம் தெரிவித்தார். முறையான உத்தரவு தொலைத்தந்தி வழி அனுப்பபட்டது. ஆனால், பலன் ஏதும் இல்லை.

Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...