1853 இராமச்சந்திர தொண்டைமான் புதுக்கோட்டையை ஆட்சி செய்து கொண்டிருந்த காலம் நாட்டின் பொருளாதார நிலை சீர்கேடடைந்து இருந்தது.நாட்டு மக்கள அதிருப்தியில் இருந்தனர்.அவர்களுக்கு எதிராக அரசு படையை பயன்படுத்தியது.அப்போது நாட்டு மக்களை காக்க விடிவெள்ளியாக வந்தவர் தான் வெங்கண்ணன் சேர்வைகாரர்.தொண்டைமானின் படைப்பிரிவின் தலைவராக இருந்ததால் தனக்கிருந்த செல்வாக்கை பயன்படுத்தி படைப்பிரிவினரில் ஒரு பகுதியை கிளர்ச்சி செய்யும் மக்களுக்கு ஆதரவாக திருப்பினார்.படைவீரர்களை பணிக்கு செல்லாதபடி தூண்டினார்.விவசாய மக்களை வரிகொடுக்க வேண்டாமென விழிப்புணர்வு செய்தார்.நிலமை மோசமாவதை உணர்ந்த தொண்டைமான் ஆங்கிலேயரின் உதவியை நாடினார்.1854ல் ஆங்கில ராணுவம் புதுக்கோட்டை வந்தது வெங்கண்ணர் அஞ்சாமல் போராடினார் இருப்பினும் நவீன ஆயுதங்கள் கொண்ட ஆங்கிலேயர்கள் கிளர்ச்சியை ஒடுக்கினர்.இதன் விளைவால் ஆங்கில ராணுவம் நிரந்தரமாக புதுக்கோட்டையில் நிறுத்தி வைக்கப்பட்டது.தொண்டைமானின் அதிகாரமும் குறைக்கப்பட்டது.வெங்கண்ணன் சேர்வைகாரர் கலகம் என வரலாற்று ஆசிரியர்களால் குறிப்பிடகப்படுகிறது.இவர் புதுக்கோட்டையை ஆண்ட அகமுடையார் குல பல்லவராயர் வழிவந்தோர் தற்கால தொண்டைமான்களுக்கு முன்னால் புதுக்கோட்டையை ஆட்சி செய்தவர்கள்.சிவந்தெழுந்த பல்லவராயர் புதுக்கோட்டையுடன் கிழவன் சேதுபதியின் ஆளுகையில் இருந்த சேது நாட்டின் சில பகுதிகளுக்கும் பிரதிநிதியாக இருந்தார்.இவரை நீக்கிவிட்டு தன்னுடைய கள்ளரின மனைவியின் அண்ணனான ரகுநாதராய தொண்டைமானுக்கு புதுக்கோட்டை பகுதியை வழங்கினார்.இவ்வாறு அரசு நீக்கப்பட்ட அகமுடையார்கள் படைத்தளபதியாகவும் படைப்பிரிவு தலைவர்களாகவும் வீரர்களாகவும் பணிபுரிந்தனர்.
This blog is all about THE AGAMUDAYAR HISTORY. THANKS to BROTHERS BALAMURUGAN AGAMUDAYAR, IMALATHITHAN AGAMUDAYAR, SAKTHI AGAMUDAYAR & SIVA AGAMUDAYAR for the infos.
Friday, July 29
மாவீரன் வெங்கண்ணன் சேர்வைகாரர்
1853 இராமச்சந்திர தொண்டைமான் புதுக்கோட்டையை ஆட்சி செய்து கொண்டிருந்த காலம் நாட்டின் பொருளாதார நிலை சீர்கேடடைந்து இருந்தது.நாட்டு மக்கள அதிருப்தியில் இருந்தனர்.அவர்களுக்கு எதிராக அரசு படையை பயன்படுத்தியது.அப்போது நாட்டு மக்களை காக்க விடிவெள்ளியாக வந்தவர் தான் வெங்கண்ணன் சேர்வைகாரர்.தொண்டைமானின் படைப்பிரிவின் தலைவராக இருந்ததால் தனக்கிருந்த செல்வாக்கை பயன்படுத்தி படைப்பிரிவினரில் ஒரு பகுதியை கிளர்ச்சி செய்யும் மக்களுக்கு ஆதரவாக திருப்பினார்.படைவீரர்களை பணிக்கு செல்லாதபடி தூண்டினார்.விவசாய மக்களை வரிகொடுக்க வேண்டாமென விழிப்புணர்வு செய்தார்.நிலமை மோசமாவதை உணர்ந்த தொண்டைமான் ஆங்கிலேயரின் உதவியை நாடினார்.1854ல் ஆங்கில ராணுவம் புதுக்கோட்டை வந்தது வெங்கண்ணர் அஞ்சாமல் போராடினார் இருப்பினும் நவீன ஆயுதங்கள் கொண்ட ஆங்கிலேயர்கள் கிளர்ச்சியை ஒடுக்கினர்.இதன் விளைவால் ஆங்கில ராணுவம் நிரந்தரமாக புதுக்கோட்டையில் நிறுத்தி வைக்கப்பட்டது.தொண்டைமானின் அதிகாரமும் குறைக்கப்பட்டது.வெங்கண்ணன் சேர்வைகாரர் கலகம் என வரலாற்று ஆசிரியர்களால் குறிப்பிடகப்படுகிறது.இவர் புதுக்கோட்டையை ஆண்ட அகமுடையார் குல பல்லவராயர் வழிவந்தோர் தற்கால தொண்டைமான்களுக்கு முன்னால் புதுக்கோட்டையை ஆட்சி செய்தவர்கள்.சிவந்தெழுந்த பல்லவராயர் புதுக்கோட்டையுடன் கிழவன் சேதுபதியின் ஆளுகையில் இருந்த சேது நாட்டின் சில பகுதிகளுக்கும் பிரதிநிதியாக இருந்தார்.இவரை நீக்கிவிட்டு தன்னுடைய கள்ளரின மனைவியின் அண்ணனான ரகுநாதராய தொண்டைமானுக்கு புதுக்கோட்டை பகுதியை வழங்கினார்.இவ்வாறு அரசு நீக்கப்பட்ட அகமுடையார்கள் படைத்தளபதியாகவும் படைப்பிரிவு தலைவர்களாகவும் வீரர்களாகவும் பணிபுரிந்தனர்.
மலயா கணபதி
மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். 10 வயதிருக்கும் போது மலேசியா சென்றார்.கம்யூனிச சிந்தனையால் ஈர்க்கப்பட்டு தன்னை கம்யூனிச இயக்கத்தில் இணைத்து கொண்டார். 1936-38 வருடங்களில் சாதிய கொடுமைகளுக்கு எதிராக போராடினார். இந்த காலகட்டத்தில் தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது மலேயா தமிழர்கள் சார்பாக மூன்று பேரை தமிழகம் அனுப்பி போராட்டத்தில் கலந்து கொள்ள செய்தார்.இந்திய தேசிய ராணுவத்தில் பயிற்சியாளராகவும் இருந்தார் ஜப்பான் சரணடைந்ததை நேதாஜியிடம் கூறியவரும் இவரே. திராவிட இயக்க தலைவர்களாக மலாயாவில் முதலில் தோன்றியவர்கள் சிங்கை அகம்படியர் சங்கத்தை சேர்ந்தவர்களே. பின்னாளில் 'அகம்படியர் சங்கம்' 'தமிழர் மறுமலர்ச்சி கழகம்'(Tamil Reform Society) என 1932இல் மாற்றம் பெற்றது.தமிழர்களின் கல்வி வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியது.இந்த சங்கம் முதலில் வெளியிட்ட வார பத்திரிகையே பின்னர் சிங்கையில் தமிழில் வெளியாகும் முதல் தினசரியாக 'தமிழ் முரசு' என வெளிவந்தது. சிங்கை அகம்படியர் மஹாஜன சங்கத்தின் தலைவராக இருந்த எ.சி.சுப்பையா அவர்களின் முயற்சியிலே ஆதி திராவிடர் சங்கம் நிறுவப்பட்டது.கணபதி அவர்களும் அகம்படியர் சங்கத்தின் பணியாற்றியிருக்கலாம் அதன் காரணமாகவே மிக பெரிய போராளியாக வந்தார் எனவும் கருதுகின்றனர். மலாயா மற்றும் சிங்கையில் இருந்த அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒன்றிணைத்து 'அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனம்' உருவாக்கப்பட்டது சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களை கொண்ட வலிமை மிக்க இயக்கத்தின் தலைவராக கணபதி இருந்தார். பல போராட்டங்களை நடத்தினார் 50000மக்கள் கலந்து கொண்ட மே தின அணிவகுப்பை நடத்தி காட்டினார். 1948இல் அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனத்தை தடை செய்வதாக அறிவித்தனர். சட்டத்திற்கு விரோதமாக கைத்துப்பாக்கி வைத்திருந்தார் என காரணம் காட்டி கைது செய்தனர் தூக்கு தண்டனையை கோலாலம்பூர் நீதிமன்றம் விதித்தது. தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியது நேரு ஆங்கில அரசிடம் பேசி தடுக்க முயன்றார் ஆங்கில அரசாங்கமும் நிறைவேற்ற வேண்டாமென தந்தி அனுப்பினர் பலன் இல்லை தூக்கு தண்டனையை நிறைவேற்றினர் தூக்கு கயிற்றை முத்தமிட்டு மடிந்தார் அந்த மாவீரன். கணபதியின் இறப்பிற்கு பின் வீரசேனனும் (சிங்கை தொழிலாளர் சங்க தலைவர்) சுட்டு கொள்ளபட்டார். கயிற்றில் தொங்கிய கணபதி என முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் இம்மாவீரனை பற்றி புத்தகம் எழுதியுள்ளார்.
கணபதி தேவர் என்ற அகமுடையார் தான் தொழிலாளர்களின் தோழனாகவும் ஆங்கிலேயர்கள் மற்றும் அடக்குமுறையாளர்களுக்கு எதிராக போராடிய முக்கிய சக்தியாக திகழ்ந்தவர்.
THANKS: http://www.malaya-ganapathy.com/
சாத்தப்ப ஞானி
சிவகங்கை மாவட்டம் கோவனூரை சேர்ந்த வீரப்பன் சேர்வை அவர்களின் புதல்வரே சாத்தப்பன் சேர்வை.பின்னாளில் சிவகங்கை உருவாக காரணமானவரும் சிவகங்கை அரசர்களின் ராஜகுருவாகவும் விளங்கியவர்.சிறுவயதிலிருந்தே இறையுணர்வு அதிகம் உள்ளவராய் இருந்தார்.காட்டில்திரிந்து கொண்டிருந்த முனிவர்களுக்கு தண்ணீர் கொடுத்து உதவினார். அவரது இறையுணர்வை கண்ட முனிவர்கள் அதனை வெளிக்கொண்டு வர உபதேசம் செய்து சென்றனர்.பின்னர் மௌனகுருவிடம் உபதேசம் பெற்றார் தாயுமானவர் திருச்சபையில் தன்னை ஐக்கியப்படுத்தி கொண்டார் தாயுமானவரின் சீடர்களில் ஒருவராகவும் விளங்கினார்.கோவனூர் முருகன் கோயிலே கதியென கிடந்தவர் பின் பல தலங்களுக்கு சென்று சாத்தப்பன் ஞானி என அனைவராலும் போற்றப்பட்டார்.
முருகனின் மீது அளவில்லா பக்தி உடையவராக திகழ்ந்தார் நாட்டில் உள்ள முருகன் கோயிலில் எல்லாம் தன்னை ஐக்கியப்படுத்தி கொண்டார்.ஒரு முறை சசிவர்ண பெரிய உடையாத் தேவர் வேட்டைக்கு சென்ற போது நாவலடி ஊற்றில் தவம் செய்து கொண்டிருந்த சாத்தப்ப ஞானியரை கண்டு வணங்கினார்.சசிவர்ணரை கண்ட ஞானியார் நல்ல யோகமும் புதிய பட்டமும் வந்து யானை கட்டி சீமையாளுவாய் என விபூதி கொடுத்து அருளி தஞ்சை செல்லுமாறு உத்தரவு கொடுத்து அனுப்பினார்.மன்னரும் தஞ்சை சென்று அரண்மனையில் புலியை கொன்று மேலும் தஞ்சை படைகளின் உதவியுடன் ராமநாதபுரத்தில் அரசனாக இருந்த பவானி சங்கர தேவரை வென்றார்.பின்னர் ஞானியாரை வந்து சந்தித்தார் முன்னர் சந்தித்த இடத்தில் இருந்த ஊற்றில் திருக்குளம் வெட்டி சிவகங்கை என பெயரிட்டு குளத்தின் மேல் மூலையில் அரண்மனை கட்டி சீமை ஆள் என அருளினார்.அரசரும் அவ்வாறே செய்து தனது குருவான ஞானியருக்கு மடம் நிறுவி நிலங்களையும் சமயப்பணி சிறப்பாக செய்வதற்கு அளித்தார்.மேலும் சாத்தப்பர் அவர்களின் புதல்வரும் புகழ்பெற்ற சேது தளவாயான வைரவன் சேர்வைக்காரர் கட்டிய ராமநாதபுரம் அருகிலிருக்கும் பெறுவயலில் ரணபலி முருகன் கோயிலுக்கு திருவெற்றியூரில் சில இடங்களை கொடுத்துள்ளார்.இன்று வரை இவ்வூரில் பிறக்கும் முதல் ஆண் குழந்தைக்கு சாத்தப்பையா என பெயர் வைக்கின்றனர்.
1961ஆம் ஆண்டு வரை சிவகங்கையின் மன்னர்களால் சிறப்பாக நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.குருவின் நினைவாக ஒவ்வொரு வருடமும் தைப்பூசத்தன்று படையல் வைத்து குரு பூஜை செய்து அன்னக்கொடி நட்டு அன்னதானமும் நடைபெறுகிறது..தற்போது மடத்தின் சொத்துகள் பலவும் பலரால் அக்கிரமிக்கப்பட்டுள்ளது.
மன்னர் சசிவர்ண தேவரவர்கள் காளையார்கோயிலில் தனது சிலையை நிறுவி அதற்கு எதிரே சாத்தப்ப ஞானியாரின் சிலையை நிறுவி உள்ளார்.
Wednesday, July 20
மருது பாண்டியர்கள் தூக்கிலிடப்பட்ட இடம் மற்றும் மருது பாண்டியர் மணி மண்டபம்
ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்த மருது சகோதரர்கள் 1801ஆம் ஆண்டு அக்டோபர் 24 அன்று சிவங்கங்கை மாவட்டம் திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டனர்.
வீரர்கள் மண்ணில் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகிறார்கள்..!
வீரர்கள் மண்ணில் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகிறார்கள்..!
அலங்காரத்தில் மருதரசர்கள் |
மருது சகோதரர்கள் நினைவுத் தூண், இடம்: திருப்பத்தூர் |
மருது பாண்டியர் நினைவு மண்டபம, இடம்: திருப்பத்தூர் |
மருது பாண்டியர்களின் சிலை |
நினைவு மண்டபத்திலுள்ள சின்ன மருது பாண்டியர் சிலை |
நினைவு மண்டபத்திலுள்ள பெரிய மருது பாண்டியர் சிலை |
Monday, July 18
மருது பாண்டியர் கட்டிய காளையார் கோயில் மற்றும் மருது பாண்டியர் கோயில்
“மருது பாண்டியர்கள் சரணடையவில்லை என்றால் காளையர் கோவிலை இடித்து விடுவோம்” என்று வெள்ளைக்காரன் எச்சரிக்க, எம்முயிரை விடக் கோவில்களே முக்கியமென்று கருதி சரணடைந்து தூக்கு மேடை ஏறிய தெய்வங்களே மருது சகோதரர்கள்.
காளையார் கோயில் |
பெரிய மருதுவின் முயற்சியால், 157 அடியில், கோயிலின் 9 நிலைப் பெரிய கோபுரம், சோமேசர் திருமுன்னிலைக்கு (சந்நிதிக்கு) முன்னால் கட்டப்பட்டது. மதுரைக் கோயிலின் தெற்குக் கோபுரம் தவிர்த்து, மற்ற கோபுரங்கள் எல்லாம் காளீசர் கோபுரத்திலும் உயரம் குறைந்தவை தான். தெற்குக் கோபுரம் மட்டுமே 160 3/4 அடி உயரம் ஆகும். காளீசர் கோபுர உச்சியில் இருந்து கூர்ந்து பார்த்தால் தெளிவான நாளில் மதுரைத் தெற்குக் கோபுரம் தெரியும்.
பழைய புகைப்படம் காளையார் கோயில் |
நாட்டுப் பாடல் ஒன்று,
"கருமலையிலே கல்லெடுத்து காளையார் கோவில் உண்டுபண்ணி மதுரைக் கோபுரம் தெரியக் கட்டிய மருது வாரதைப் பாருங்கடி"
என்று அவர்களின் பெருமை சொல்லும்.
மருது கட்டிய ராஜ கோபுரம் |
கோயிலுக்கு வேண்டிய செங்கல்களை மானாமதுரைக்கு அருகில் உள்ள செங்கோட்டைச் சூளையில் உருவாக்கி, மக்களின் முயற்சியால், பல்லாயிரக் கணக்கானவர் வரிசையாய் நின்று, அஞ்சல் முறையில், செங்கோட்டை – மானாமதுரை – முடிக்கரை – காளையார் கோவில் என்ற (13 மைல்) வழியில் கொண்டு வரப் பட்டது. இது போன்ற கட்டுமான உத்தி (நாட்டு மக்கள் எல்லோரும் சேர்ந்து கட்டும் உத்தி) அதுவரையில் யாராலும் செய்யப் பட்டதில்லை.
இந்தக் கட்டுமானம் பற்றியே சிவகங்கையில் பல் வேறு கதைகள் உண்டு.காளீசர் கோயிலில் பெரிய மருது தேரமைத்த கதையும், அதன் ஆசாரி பெரிய மருதுவிடம் இருந்து முடிவாங்கி ஒருநாள் மன்னரான கதையும், பின்னால் தேரோட்டம் முடியும் போது ஈகம் – தியாகம் – செய்து ஆசாரி உயிர்கொடுத்த கதையும் நம் மனத்தை ஈர்க்கும் அடுத்த பதிவில் பார்ப்போம்.1789 திசம்பரில் தொடங்கி 1794 ஆண்டிற்குள் இந்த ஆலயத் திருப்பணி முடிந்தது.
காளையார் கோயிலில் உள்ள மருதரசர்கள் சிலை |
மருது திருக்கோயில்:
குரு பூஜையின் போது |
கோயிலின் எதிரே மருது பாண்டியர்கள் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் திருக்கோயில் எழுப்பப்பட்டுள்ளது.
கோயிலில் உள்ள மருது சிலை |
Sunday, July 17
Thursday, July 14
Subscribe to:
Posts (Atom)
Featured post
மலயா கணபதி
மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...
-
பொதுவாக அகமுடையார் என்பதன் பொருள் நில உடைமையாளர், நம்பிக்கைக்குரியவர், பரந்த சிந்தனையாளர் என்று பலவாறாக பொருளில் இலக்கியங்கள் ஊடாக அ...
-
ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்த மருது சகோதரர்கள் 1801ஆம் ஆண்டு அக்டோபர் 24 அன்று சிவங்கங்கை மாவட்டம் திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டனர். வீ...
-
கோவையின் வளர்ச்சிக்கு அகமுடையார் இன மக்கள் பெரும் பங்காற்றியிருக்கிறார்கள் அகமுடையார் குடியேற்றங்கள் சேர நாட்டில் ஏற்பட்ட குழப்ப காலத்தில் ...