"அகமுடையார் பேரினம்"
தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களில் பல்வேறு பட்டப்பெயர்களுடன் பரவலாக வாழ்ந்து வருகின்றனர்.
தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில்
"நாயக்கர், பிள்ளை, செட்டியார், சேர்வை, உடையார், அதிகாரி என்ற ஆறு பட்டப்பெயர்களுடனும், பரவலாக வாழ்ந்து வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் வாழும் அகமுடையார் பேரினம் பலவேறு வரலாற்று அடையாளங்களையும். பல சான்றோர்களையும் ஈன்றுள்ளது.
தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய, பல்லவர் பேரரசுகளின் பாதுகாப்பு அரணாக விளங்கிய, மகாபலி சக்ரவர்த்தியின் வழிவந்த, தமிழக வீரவரலாற்று தொன்மைகளில் சரித்திரம் படைத்த, சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், ஆறகளூரை தலைநகராக வைத்து ஆட்சி செய்த "வாணக்கோவரையர்"களை இம்மண்ணுக்கு தந்தது சேலம் அகமுடையார் பேரினம்,
- சேலம், பாகல்பட்டி எனும் சிவபுரி ஜமீன்தாரும்,மேட்டூர் அணை உருவாவதற்கு முக்கிய காரண கர்த்தாவாக, 1896ம் ஆண்டு, மேட்டூர் அணை கட்டுவதற்கு, ஆங்கிலேய அரசாங்கம் முடிவு செய்த போது, நீர்வளம், அணையின் ஸ்திரத்தன்மை உள்ளிட்டவற்றை கண்டறிந்து, அணை கட்டுவதற்கான இடத்தை தேர்வு செய்து கொடுத்தவரும், மிகச்சிறந்த பொறியாளரும், முதுபெரும் தமிழறிஞருமான "பா.வே.மாணிக்க நாயக்கர்" அவர்களை இம்மண்ணுக்கு தந்தது சேலம் அகமுடையார் பேரினம்,
- சேலம் மாவட்டத்தில் நீதிக்கட்சியை வளர்த்தவரும், நீதிக்கட்சியின் முதன்மையான தலைவர்களில் ஒருவரும், முன்னாள் சபாநாயகர்-அமைச்சருமான க.இராசாராம் EX.MP, EX.MLA, அவர்களின் தந்தையுமான "கஸ்தூரி பிள்ளை" அவர்களை இம்மண்ணுக்கு தந்தது சேலம் அகமுடையார் பேரினம்,
- பழைய ஒருங்கிணைந்த சேலம் மாவட்டம், நாமக்கலில் பிறந்தவரும், பாகல்பட்டி ஜமீன்தார் பா.வே.மாணிக்க நாயக்கர் உறவினரும், தமிழக அரசவை கவிஞரும், மிகச்சிறந்த கவிஞரும், கதை ஆசிரியரும், சட்ட மேலவை (MLC) உறுப்பினருமான "நாமக்கல் கவிஞர்" இராமலிங்கம் பிள்ளை அவர்களை இம்மண்ணுக்கு தந்தது சேலம் அகமுடையார் பேரினம்,
- சேலம், செவ்வாய்பேட்டையின் மிகப்பெரிய வணிகர்களும், சேலம்-2, நெத்திமேடு, கரியப்பெருமாள் கோயில், ஞான தண்டாயுதபானி கோயில் ஆகியவற்றின் ஸ்தாபகர்களுமான "ஆ.நாகப்ப செட்டியார்- ஆ.பேரான் செட்டியார்" ஆகியோர்களை இம்மண்ணுக்கு தந்தது சேலம் அகமுடையார் பேரினம்,
- சேலம், செவ்வாய்பேட்டை, தலையாரி ஆறுமுகம் நாயக்கர் அவர்களின் மகளும், சேலம், அயோத்தியாப்பட்டிணம் இராமர் கோயில் கோபுரத்தை கட்டியவரான தாண்டராய நாயக்கர் அவர்களின் மனைவியும், செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோயிலின் ஸ்தாபகருமான "தா.மீனாட்சி அம்மாள்" அவர்களை இம்மண்ணுக்கு தந்தது சேலம் அகமுடையார் பேரினம்,
- சேலம் மாவட்டத்தில் நீதிக்கட்சியை வளர்த்தவரும், நீதிக்கட்சியின் முதன்மைத் தலைவர்களில் ஒருவருமான "கஸ்தூரி பிள்ளை" அவர்களின் அருமை மகனும்,திராவிடர் கழகத்தின் தலைவர் ஈ.வெ.ரா. பெரியார் அவர்களின் மாணவனும்,
- 1962 ஆம் ஆண்டு நடந்த "கிருஷ்ணகிரி" நாடாளுமன்றத் தேர்தலில் அத்தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவரும்,
- 1967 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் "சேலம்" நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவரும்,
- 1971 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் "சேலம்-2" சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவரும்,
- 1977 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் "சேலம்" நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி வாய்ப்பு தவறியவரும்,
- 1980 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் "பனைமரத்துப்பட்டி" சட்டமன்றத் தொகுதியில் அஇஅதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவரும்,
- 1984 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் "பனைமரத்துப்பட்டி" சட்டமன்றத் தொகுதியில் அஇஅதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவரும்,
- 1989 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் "சேலம்-2" சட்டமன்றத் தொகுதியில் அஇஅதிமுக (ஜானகி அணி) சார்பாக இரட்டை புறா சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பு தவறியவரும்,
- 1991 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் "பனைமரத்துப்பட்டி" சட்டமன்றத் தொகுதியில் அஇஅதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவரும்,
- 1962, 1967 ஆம் ஆண்டுகளில் 2 முறை நாடாளுமன்ற உறுப்பினருமான
- 1971, 1980, 1984, 1991 ஆம் ஆண்டுகளில் 4 முறை சட்டமன்ற உறுப்பினருமான,
- 1971 ஆம் ஆண்டு திமுக தலைமையிலான தமிழக அமைச்சரவையில் (01-07-1973 முதல்) பிற்படுத்தப்பட்டோர் நலன், (02-07-1973 முதல் 23-09-1975 வரை) தொழிலாளர் நலன், (24-09-1975 முதல்) போக்குவரத்து அமைச்சருமான,
- 1985 ஆம் ஆண்டு அஇஅதிமுக தலைமையிலான தமிழக அமைச்சரவையில் (03-03-1985 முதல் 21-10-1986 வரை) தொழில் துறை, (22-10-1986 முதல் 24-12-1987 வரை) தொழில் (ம) வேளாண்மை அமைச்சருமான,1991 ஆம் ஆண்டு அஇஅதிமுக தலைமையிலான தமிழக அமைச்சரவையில் (24-06-1991 முதல் 31-10-1991) உணவு (ம) கூட்டுறவு அமைச்சருமான(21-06-1980 முதல் 24-02-1985 வரை)
- தமிழக சட்டப்பேரவை தலைவராக (சபாநாயகராக) சட்டமன்றத்தை வழி நடத்தியவருமான, க.இராசாராம் EX.MP, EX.MLA, அவர்களை இம்மண்ணுக்கு தந்தது சேலம் அகமுடையார் பேரினம்.
- சேலம் மாநகரின் முதல் மேயர் "டாக்டர் சூடாமணி" அவர்களை இம்மண்ணுக்கு தந்தது சேலம் அகமுடையார் பேரினத்தின் உட்பிரிவான துளுவவேளாளர் குலம்.
- சேலம் ஆத்தூர் வட்டாரத்தின் அகமுடையார் சாதி பெரியதனமான "தியாகி சடையப்ப நாயக்கர்" அவர்களை இம்மண்ணுக்கு தந்தது சேலம் ஆத்தூர் அகமுடையார் பேரினம்.
- சேலம் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத்தில் இருந்து 1962 ஆம் ஆண்டு காங்கிரசு கட்சியின் சார்பில் போட்டியிட்டு ஆத்தூர் தொகுதியில் அகமுடையார் பேரினத்தில் இருந்து சட்டமன்றத்திற்கு சென்ற முதல் அகமுடையார் என்ற தகுதியை பெற்றவரும், தமிழக முன்னாள் முதல்வர் காமராசர் அவர்களின் நெருங்கிய நண்பருமான "அங்கமுத்து நாயக்கர்" அவர்களை இம்மண்ணுக்கு தந்தது சேலம் ஆத்தூர் அகமுடையார் பேரினம்.
- 1977 ஆம் ஆண்டு ஆத்தூர் சட்டமன்றத்தில் ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு மூன்றாம் இடம் பிடித்து தோல்வி அடைந்தவரும், சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சியின் முதல் சேர்மனுமான ஏ.எஸ்.சின்னச்சாமி அவர்களை இம்மண்ணுக்கு தந்தது சேலம், ஆத்தூர் அகமுடையார் பேரினம்.
- சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சியின் முன்னாள் சேர்மனுமான டாக்டர் மாணிக்கம் அவர்களை இம்மண்ணுக்கு தந்தது சேலம், ஆத்தூர் அகமுடையார் பேரினத்தின் உட்பிரிவான துளுவவேளாளர் குலம்.
- சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டம், பேளூர் ஊரை பூர்வீகமாக கொண்டவரும், மெகா டிவியின் உரிமையாளரும், தமிழ்நாடு காங்கிரசு கட்சியின் முன்னாள் தலைவரும்,
- 1991 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் "தர்மபுரி" நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரசு கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றி வாய்ப்பு வெற்றி பெற்றவரும்,
- 2004 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் "சேலம்" நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரசு கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவரும்,
- 17-01-1993 முதல் 16-05-1996 வரை காங்கிரசு கட்சி தலைமையிலான மத்திய அரசின் "நலத்துறை இணை அமைச்சருமான,
- கே.வி.தங்கபாலு EX.MP, அவர்களை இம்மண்ணுக்கு தந்தது சேலம் அகமுடையார் பேரினத்தின் உட்பிரிவான துளுவவேளாளர் குலம்.
இவர்களை போல் ஏராளமான முன்னோடிகளை பட்டியலிட முடியும். ஆனால் பக்கம்தான் பத்தாது.
- சேலம் மாவட்டத்தில் அகமுடையார் பேரினம் பரவலாக வாழ்ந்து வந்தாலும் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தனிப் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர்.
- சேலம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி 1957 ஆம் ஆண்டு இரட்டைத் தொகுதியாக உருவாக்கப்பட்டது.
- 1957,1962, 1967, 1971, 1977,1980, 1984, 1989, 1991, 1996, 2001, 2006, 2011, 2016 என
- 14 சட்டமன்ற பொதுத்தேர்தல்களை சந்தித்துள்ளது.
- 14 சட்டமன்ற பொதுத்தேர்தல்களில் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு சென்றது அகமுடையார் பேரினத்தில் ஒருவர் மட்டுமே,
- 1962 ஆண்டு நடந்த ஆத்தூர் சட்டமன்ற பொதுத்தேர்தலில் காங்கிரசு கட்சியின் சார்பாக திமுக வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்ட வெற்றி பெற்றவர் "அங்கமுத்து நாயக்கர்"
1962 ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில்
போட்டியிட்ட வேட்பாளர்கள்- 5,
மொத்த வாக்காளர்கள் - 88,586.
பதிவான வாக்குகள்- 61,766.
செல்லாதவை - 1,830.
1) அங்கமுத்து நாயக்கர் (காங்) - 23,542,
2) சிவபெருமாள் (திமுக) - 19,811,
3) சுப்ரமணியம் (த.தே.க) - 13,686,
4) சரவணபடையாட்சி(சுதந்தி) - 1,888,
5) இரங்கசாமி (சுயே) - 1,009,
1977 ஆம் ஆண்டு நடந்த ஆத்தூர் சட்டமன்ற பொதுத்தேர்தலில் ஜனதா கட்சி சார்பாக காங்கிரசு, அஇஅதிமுக கட்சிகளை எதிர்த்து போட்டியிட்டு மூன்றாம் இடம் பிடித்து வெற்றி வாய்ப்பை இழந்தவர் அகமுடையாரான ஏ.எஸ். சின்னசாமி அவர்கள்,
1977 ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில்
போட்டியிட்ட வேட்பாளர்கள்- 4
மொத்த வாக்காளர்கள் - 1,10,029,
1) சி.பழனிமுத்து (காங்) - 19,040,
2) பி.கந்தசாமி (அஇஅதிமுக) - 18,693,
3) ஏ.எஸ்.சின்னசாமி (ஜனதா) - 16,860,
4) டி.பெருமாள் (திமுக) - 9,306,
14 சட்டமன்ற பொதுத்தேர்தல்களில் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டது இருவர் மட்டுமே, இருவரில் ஒருவர் மட்டும் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு சென்றார்.
அந்த இருவர்களுக்கு பிறகு ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் எந்த அரசியல் கட்சிகளும் அகமுடையார் பேரினத்திற்கு போட்டியிட வாய்ப்பளிக்கவில்லை.
சேலம் மாவட்டத்தில் பரவலாக வாழும் அகமுடையார் உறவுகள், பாண்டிய, சோழ மண்டலங்களில் வாழும் அகமுடையார் உறவுகளுடன் திருமண உறவோ, சங்கங்களுடனான பிணைப்போ, அரசியல் கூட்டோ இல்லாமல் தனிமைப்பட்டு நிற்கின்றனர்.
இந்த தனிமையை பயன்படுத்தி "முக்குலத்தோர்-தேவரினம்" என்ற இல்லாத முகமுடியை காட்டி, சேலம் மாவட்ட அகமுடையார்களிடம் பல ஆண்டுகாலம் ஏமாற்றி வருகின்றனர் கள்ளர் மறவர் சமுகத்தினர்.
அகமுடையார் பேரினத்தின் ஒற்றை அடையாளமான மாமன்னர் மருதுபாண்டியர்களை திட்டமிட்டு மறைத்து, அகமுடையார் பேரினத்தின் அடையாளமாக "மறவரான பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்" அவர்களை முன்னிறுத்தி, அகமுடையார் பேரினத்தின் தனித்தன்மையை தொடர்ந்து அழித்து வருகின்றனர். இதற்கு சில அகமுடையார் உறவுகளும் விலை போயுள்ளனர்.
இனிவரும் காலங்களிலாவது சேலம் மாவட்ட அகமுடையார் உறவுகள், முக்குலத்தோர்-தேவரினம் என்ற மாய அரசியலில் மயங்காமல் அகமுடையார் பேரினத்திற்கான தனி அகமுடையார் அரசியலை முன்னெடுங்கள்,
நமது வழிபாட்டு தெய்வங்கள் மறவர் சமூகத்தினரான பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்கள் இல்லை,
நமது வழிபாட்டு நாள் அக்-30 இல்லை, நமது புண்ணியபூமி பசும்பொன் இல்லை.
நமது வழிபாட்டு தெய்வங்கள் அகமுடையார் பேரினத்தில் தோன்றிய "மாமன்னர் மருதுபாண்டியர்கள்" மட்டுமே,
நமது வழிபாட்டு நாள் அக்-24, 27 மட்டுமே,
நமது புண்ணியபூமி சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர், காளையார்கோவில் மட்டுமே,
இனிவரும் காலங்களில் சேலம் மாவட்ட அகமுடையார் உறவுகள்,
வரலாற்றில் எங்கும் இல்லாத முக்குலத்தோர்- தேவரினம் என்ற மாய அரசியலில் சிக்காமல்,
அகமுடையார் பேரினத்திற்கான தனி அரசியலை முன்னேடுத்து பயணிக்கவும்.
அகமுடையார் பேரினமாக ஒன்றிணைவோம்.
இனி இறுதி பக்கத்திற்கு வருவோம். சேலம் மாவட்ட அகமுடையார் வரலாற்றை விவரிக்க வேண்டுமென்றால் விரிவாக எழுத வேண்டும். ஆனால் இந்த குறுங்கட்டுரையில் அனைத்தையும் பதிவிட இடம் கொள்ளாது. தனி நூலாகத்தான் வெளியிட வேண்டும்.
இனி இந்த கட்டுரையின் இறுதி பகுதிக்கு வருவோம்.
சேலம் மாவட்டத்தில் பல்வேறு பட்டப்பெயர்களில் பரந்து வாழும் அகமுடையார் உறவுகளை ஒன்றிணைக்க,
1996 ஆம் ஆண்டு "சேலம் மாவட்ட அகமுடையார் சமூக நல இளைஞர் சங்கம்" என்ற பெயரில் அரசு பதிவு செய்யப்பட்டு அமைப்பு தொடங்கப்பட்டது.
# 1996 இல் முதல் தொடக்க விழா, 27-10-1996 ஞாயிற்றுக்கிழமை, ஆத்தூர் நகரில், மேட்டுத் தெரு, இராமர் பஜனை மடத்தில் நடைபெற்றது.
# 1997 இல் 2 ஆம் ஆண்டு விழா 05-10-1997 ஞாயிற்றுக்கிழமை, சேலம் மாநகரில் விஜயராகவாச்சாரியார் மகாலில் நடைபெற்றது.
"சேலம் மாவட்ட அகமுடையார் சமூக நல இளைஞர் சங்கம்" என்ற பெயர் மாற்றப்பட்டு,
1998 முதல் சேலம் மாவட்ட அகமுடையார் கல்வி அறக்கட்டளையாக மாற்றப்பெற்றது.
# 1998 இல் 3 ஆம் ஆண்டு விழா, 04-10-1998 ஞாயிற்றுக்கிழமை, சேலம் மாநகரில், அரிசிப்பாளையம், தேவாங்கர் திருமண மண்பத்தில் நடைபெற்றது.
# 1999 இல் 4 ஆம் ஆண்டு விழா, 24-10-1999 ஞாயிற்றுக்கிழமை, ஆத்தூர் வீரகனூர், சரஸ்வதி பள்ளி, நாயுடுகள் சங்க திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
# 2000 இல் 5 ஆம் ஆண்டு விழா, 01-10-2000 ஞாயிற்றுக்கிழமை, ஆத்தூர் நகரில் நகராட்சி அண்ணா கலையரங்கில் நடைபெற்றது.
# 2001 இல் 6 ஆம் ஆண்டு விழாவும், மாமன்னர் மருதுபாண்டியர் 200 வது ஆண்டு நினைவு விழாவும், 07-10-2001 ஞாயிற்றுக்கிழமை, சேலம் மாநகரில், பொன்னம்மாப்பேட்டை தெய்வநாயகம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
# 2002 இல் 7 ஆம் ஆண்டு விழா, 19-10-2002 சனிக்கிழமை, ஆத்தூர் நகரில், நகராட்சி அண்ணா கலையரங்கில் நடைபெற்றது.
# 2003 இல் 8 ஆம் ஆண்டு விழா, 12-10-2003 ஞாயிற்றுக்கிழமை, சேலம் மாநகரில், பெரமனூர் JVR கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.
# 2004 இல் 9 ஆம் ஆண்டு விழா, 17-10-2004 ஞாயிற்றுக்கிழமை, சேலம் மாநகரில், பெரமனூர் JVR கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.
2005 இல், ஆண்டு விழா தவிர்க்க முடியாத் காரணத்தால் நடைபெறாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
# 2006 இல் 10 ஆம் ஆண்டு விழா, 22-01-2006 ஞாயிற்றுக்கிழமை, ஆத்தூர் நகரில், நகராட்சி அண்ணா கலையரங்கில் நடைபெற்றது.
# 2007 இல் 11 ஆம் ஆண்டு விழா, 21-01-2007 ஞாயிற்றுக்கிழமை, ஆத்தூர் நகரில், நகராட்சி அண்ணா கலையரங்கில் நடைபெற்றது.
# 2008 இல் 12 ஆம் ஆண்டு விழா, 24-02-2008 ஞாயிற்றுக்கிழமை, ஆத்தூர் நகரில், நகராட்சி அண்ணா கலையரங்கில் நடைபெற்றது.
# 2009 இல் 13 ஆம் ஆண்டு விழா, 04-01-2009 ஞாயிற்றுக்கிழமை, சேலம் மாநகரில் விஜயராகச்சாரியார் மகால்-ஆர்டி பார்த்தசாரதி அரங்கில் நடைபெற்றது.
# 2010 இல் 14 ஆம் ஆண்டு விழா, 24-01-2010 ஞாயிற்றுக்கிழமை, சேலம் மாநகரில், நான்கு ரோடு, சாமுண்டி வளாகம்- இலக்குமி அரங்கில் நடைபெற்றது.
# 2011 இல் 15 ஆம் ஆண்டு விழா, 13-02-2011 ஞாயிற்றுக்கிழமை, ஆத்தூர் நகரில், நகராட்சி அண்ணா கலையரங்கில் நடைபெற்றது.
# 2012 இல் 16 ஆம் ஆண்டு விழா, 11-03-2012 ஞாயிற்றுக்கிழமை, ஆத்தூர் நகரில், நகராட்சி அண்ணா கலையரங்கில் நடைபெற்றது.
# 2013 இல் 17 ஆம் ஆண்டு விழா, 03-02-2013 ஞாயிற்றுக்கிழமை, ஆத்தூர் நகரில் நகராட்சி அண்ணா கலையரங்கில் நடைபெற்றது.
# 2014 இல் 18 ஆம் ஆண்டு விழா, 02-02-2014 ஞாயிற்றுக்கிழமை, ஆத்தூர் நகரில், நகராட்சி அண்ணா கலையரங்கில் நடைபெற்றது.
# 2015 இல் 19 ஆம் ஆண்டு விழா, 15-02-2015 ஞாயிற்றுக்கிழமை, ஆத்தூர் நகரில், நகராட்சி அண்ணா கலையரங்கில் நடைபெற்றது.
# 2016 இல் 20 ஆம் ஆண்டு விழா, 14-02-2016 ஞாயிற்றுக்கிழமை, ஆத்தூர் நகரில், விநாயகபுரம், பாக்யா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
# 2017 இல் 21 ஆம் ஆண்டு விழா, 19-02-2017 ஞாயிற்றுக்கிழமை, ஆத்தூர் நகரில், விநாயகபுரம், பாக்யா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
# 2018 இல் 22 ஆம் ஆண்டு விழா, 11-03-2018 ஞாயிற்றுக்கிழமை, ஆத்தூர் நகரில், விநாயகபுரம், பாக்யா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
# 2019 இல் 23 ஆம் ஆண்டு விழா, 03-02-2019 ஞாயிற்றுக்கிழமை, ஆத்தூர் நகரில், விநாயகபுரம், பாக்யா திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற உள்ளது.
மேற்கண்ட சேலம் அகமுடையார் கல்வி அறக்கட்டளையை நடத்தும் நாயக்கர், பிள்ளை, செட்டியார், சேர்வை, அதிகாரி, உடையார் உள்ளிட்ட பட்டப்பெயர் கொண்ட வடமாவட்ட அகமுடையார் விழாவில் தொடக்கம் முதல் பல ஆண்டுகளாக சேர்வை, தேவர் பட்டப்பெயர் உடைய அகமுடையார் சமுதாய தலைவர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்து உள்ளனர்.
அகமுடையார் பேரினம் பட்டப்பெயரால் பிரிந்திருந்தாலும், இனத்தால் அகமுடையார் பேரினமாக ஒன்றிணைந்து வந்துள்ளனர்.
பட்டப்பெயர்களை மறந்து,
அகமுடையார் பேரினமாக ஒன்றிணைவோம்!
அந்நிகழ்விற்கான அழைப்பில் கீழே பதிவிடப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்டங்களில் வாழும் அகமுடையார் உறவுகள் இதனையே அழைப்பாக ஏற்று இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு வேண்டுகிறேன்.
அகமுடையார் வரலாற்று மீட்பு பணியில்,
மருதரசர்களின் போர்ப்படை வீரர்களில் ஒருவனாக,
சோ.பாலமுருகன் அகமுடையார்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
அகமுடையார் அரண்,
பேச : 63822 66931.
புலனம் (WhatsApp) எண் : 94429 38890.