கோவை இராமநாதபுரமும் ஒலம்பஸ் பேருந்து நிறுத்தமும்:
- ஒலிம்பிக்ஸ் பேருந்து நிறுத்தம் என்பதே உண்மையான பெயர். பெயர்க் காரணத்துக்கு உரியவர், ஒரு விளையாட்டு வீரர். சுமார் 70 ஆண்டு களுக்கு முன்பு ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்பட்டவர் நாகப்ப தேவர் (அகமுடையார்)
- ஆனால், இரண்டாம் உலகப் போர் குறுக்கிட்டதால் அப்போது ஒலிம்பிக்ஸ் போட்டி நடக்கவில்லை. அதற்கு அடுத்த முறையும் போரின் பாதிப்புகளால் ஒலிம்பிக் போட்டிகள் நடக்காமல் போனது இவரது துரதிருஷ்டம்.
- அப்போது கோவையின் கலெக்டராக இருந்த மோரிஸ் என்கிற ஆங்கிலேயர் இவருக்குப் பாராட்டு விழா நடத்தி, இவரது வீடு அருகே அமைந்திருந்த பேருந்து நிறுத்தத்துக்கு ‘ஒலிம்பிக்ஸ்’ என்று பெயரிட்டார். அதன் பின் ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியின் போதும், நாகப்பத் தேவர் தனது வீட்டின் முன் ஒலிம்பிக் கொடி ஏற்றி, ஒலிம்பிக் தீபத்தைத் தனது தெருவில் ஏந்தி வருவதை வழக்கமாக்கிக்கொண்டார். நிறைவேறாத ஒலிம்பிக் ஆசையுடனேயே கடந்த 2007-ம் ஆண்டு இறந்துவிட்டார் நாகப்பத் தேவர்.
- இவரின் நினைவாகவே கோவை இராமநாதபுரம் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு ஒலிம்பிக்ஸ் பேருந்து நிறுத்தம் என்ற பெயர் வைக்கப்பட்டது.நாளடைவில் இப்பெயர் ஒலிம்பஸ் என்று மக்களால் உச்சரிப்பு மாற்றி ஒலிக்கப்பட்டு இன்று ஒலிம்பஸ் பேருந்து நிலையம் என்றே வழங்கிவருகிறது.
- கோவை இராமநாதபுரத்தில் ஒரு தெருவிற்க்கு நாகப்ப தேவர் பெயரிடப்பட்டுள்ளது.
- நாகப்பத்தேவர் 2007ம் வருடம் இறந்து போனாலும் ஒலிம்பஸ் பேருந்து நிறுத்தம் அவரது நினைவைத் தாங்கி இப்போதும் நின்று கொண்டிருக்கிறது.
No comments:
Post a Comment