Saturday, February 23

அன்பழகன் சேர்வை

  • ஒருங்கினைந்த இராமநாதபுரம் (இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர்) மாவட்ட அதிமுகவின் முதல் மாவட்ட செயலாளர்.

  •  இராமநாதபுரத்தின் பாராளுமன்ற உறுப்பினர்.

  •  இளையான்குடியின் சட்டமன்ற உறுப்பினர்.

சென்னை மாகாணத் தமிழர் முதல் மாநாடு

  • சென்னை மாகாணத் தமிழர் முதல் மாநாடு தலைமை தாங்கியவர் அகமுடையார் குலத்தோன்றல் உமாமகேஷ்வரன் பிள்ளை



  • இரண்டாவது மாநாடு தலைமை தாங்கியவர்அகமுடையார் குலத்தோன்றல் நாடிமுத்து பிள்ளை

பொன்முடி தேவர்



  • பல்லடம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மூன்று முறை சூலூர் சேர்மேனாக பணியாற்றியவர்

  • சூலூர் பல்லடம் திருப்பூர் பகுதிகளில் திமுகவை வளர்த்தவர்

மீனாட்சி அம்மனை குலதெய்வமாக வணங்கும் அகமுடையார் கூட்டங்கள்

கோவையில் மீனாட்சி அம்மனை குலதெய்வமாக வணங்கும் அகமுடையார் கூட்டங்கள்:

பெருமாள் தேவன் கூட்டம் 
புதூராங் கூட்டம் 
அட்டாளஞ் செட்டி கூட்டம் 
கோட்டான் கூட்டம்
குயிலாங் கூட்டம் 




இத்தெய்வத்திற்கு திருக்கல்யாணம் செய்வதை மரபாக கொண்டுள்ளனர் கோவில் சூலூரில் உள்ளது.

மருது பாண்டியர் பற்றி பாண்டித்துரை தேவரின் கவிதை

மருது பாண்டியர் காலத்தில் சாந்து புலவரால் இயற்றபட்ட மயூரகிரி புராணம் பின்னர் 1908ஆம் வருடம் பதிப்பித்து வெளியிட்டனர் இதற்கு நான்காம் தமிழ்சங்கம் அமைத்த பாண்டித்துரை தேவர் அவர்களின் சாற்றுக்கவி 


தமிழ்கூத்தன்

சிலம்பு வாத்தியார் ஓடாத்தூர் முருகேசன் - தன்டம்மாள் தம்பதியினருக்கு மகனாக ஓர் குக்கிராமத்தில் பிறந்து, மதுரை கோர்ட்ஸ் பஞ்சாலையில் கூலித்தொழிலாளியாக வேலைசெய்தார். தமிழ் மீதுள்ள பற்றால் தொலைநிலைக்கல்வியாக பி.லிட் புலவர் பட்டம்பெற்று முனைவர் படிப்பை முடித்தார். இவர் கூடப்பிறந்த 4சகோதரர்களுக்கும் பொறுப்புள் அண்ணனாக நடந்து அவர்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டார். தமிழ்நாடு முற்போக்கு கவிஞர் பேரவை தொடங்கி தமிழுக்கு தொண்டாற்றிய அறிஞர்களுக்கு பாராட்டு விழாநடத்தினார். தமிழகத்தில் இவரைத் தெரியாத கவிஞர்களே இல்லையென்னும் அளவிற்கு பிரபலமானவர்.



தேசிய விருதுபெற்ற கவிஞர்.வைரமுத்துவை அழைத்து திருப்பரங்குன்றத்தில்  பாராட்டு விழா நடத்தியவர்.1983 ஜுலை இனக்கலவரத்தின்போது ஈழத்தமிழர் மீதான இனக்கொலையை கண்டித்து திபகுவில் கடையடைப்பு போராட்டம் நடத்தினார். தீப்பந்த ஊர்வலம் நடத்தியவர்.திருப்பரங்குன்றம் முருகன் கோவிலை பூட்டு போட்டு போராட்டம் நடத்தியவர். கவிஞர்.காசிஆனந்தன்,ஈழவேந்தன், மாவீரன்.மதுரை S.முத்து அவர்களை எங்கள் ஊருக்கு அழைத்து 83 காலகட்டத்தில் பட்டினிப்போராட்டம் நடத்தியவர்.



தமிழீழத்தேசியதலைவரின் ஆரம்பகால நண்பர். நம்பிக்கைக்குரிய தகவலாளியாக செயல்பட்டவர்.புலிகளின் திருநகர் முகாமுக்கு பொறுப்பாளாராக செயப்பிரகாஷ் அவர்களோடு செயல்பட்டவர். எங்கள் ஊரில் சாதி மத வேறுபாடின்றி அனைத்து தரப்பு மக்களோடும் பழகிய பண்பாளர். தீவீர புலிகளின் ரசிகர்." சாகுறதுக்குள்ள ஈழத்த பார்க்கனும்"ன்னு என்னிடம் அடிக்கடி சொல்லுவார்.வாழ்க்கையில் பலருக்கு ஏணியாகவும்,முன்னத்தி ஏர் போல செயல்பட்டவர். கவிஞர்.மீரா அவர்களின் நெருங்கிய நண்பர். "காவல்கோட்டம்" நாவல் எழுதி சாகித்ய அகாடமி விருது பெற்ற முன்னனி படைப்பாளி அண்ணன் சு.வெங்கடேசன் அவர்களை உருவாக்கிய,செதுக்கிய சிற்பியும் இவரே!

நன்றி: திலீபன் செந்தில் 

Thursday, February 21

பெருமழைப்புலவர் சோமசுந்தரனார்


இன்றைய திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகிலுள்ள மேலைப்பெருமழை ஊரில் வசித்த வேலுத்தேவர் மற்றும் சிவகாமியம்மாள் ஆகியோருக்கு பிறந்த சோமசுந்தரனார் தமிழ் மொழியில் பெரும் புலமை உள்ளவராய் விளங்கினார். 




முதன் முதலில் உரை எழுதிய நூல் திருவாசகம் பின்னர் சைவ சித்தாந்த நூல்பதிப்புக் கழகத்தின் சார்பில் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, மணி மேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவகசிந்தாமணி, சிறுகாப்பியங்களான உதயணகுமாரகாவியம், நீலகேசி, பரிபாடல், ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, பெருங்கதை உள்ளிட்ட ஏராளமான நூல்களுக்கு உரை எழுதினார். அவர் ஊரின் பெயரால் பெருமழைப்புலவர் என்றே அழைக்கப்பட்டார்.  சென்ற நூற்றாண்டின் இணையற்ற உரையாசிரியராய் விளங்கினார்.

Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...