சிலம்பு வாத்தியார் ஓடாத்தூர் முருகேசன் - தன்டம்மாள் தம்பதியினருக்கு மகனாக ஓர் குக்கிராமத்தில் பிறந்து, மதுரை கோர்ட்ஸ் பஞ்சாலையில் கூலித்தொழிலாளியாக வேலைசெய்தார். தமிழ் மீதுள்ள பற்றால் தொலைநிலைக்கல்வியாக பி.லிட் புலவர் பட்டம்பெற்று முனைவர் படிப்பை முடித்தார். இவர் கூடப்பிறந்த 4சகோதரர்களுக்கும் பொறுப்புள் அண்ணனாக நடந்து அவர்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டார். தமிழ்நாடு முற்போக்கு கவிஞர் பேரவை தொடங்கி தமிழுக்கு தொண்டாற்றிய அறிஞர்களுக்கு பாராட்டு விழாநடத்தினார். தமிழகத்தில் இவரைத் தெரியாத கவிஞர்களே இல்லையென்னும் அளவிற்கு பிரபலமானவர்.
தேசிய விருதுபெற்ற கவிஞர்.வைரமுத்துவை அழைத்து திருப்பரங்குன்றத்தில் பாராட்டு விழா நடத்தியவர்.1983 ஜுலை இனக்கலவரத்தின்போது ஈழத்தமிழர் மீதான இனக்கொலையை கண்டித்து திபகுவில் கடையடைப்பு போராட்டம் நடத்தினார். தீப்பந்த ஊர்வலம் நடத்தியவர்.திருப்பரங்குன்றம் முருகன் கோவிலை பூட்டு போட்டு போராட்டம் நடத்தியவர். கவிஞர்.காசிஆனந்தன்,ஈழவேந்தன், மாவீரன்.மதுரை S.முத்து அவர்களை எங்கள் ஊருக்கு அழைத்து 83 காலகட்டத்தில் பட்டினிப்போராட்டம் நடத்தியவர்.
தமிழீழத்தேசியதலைவரின் ஆரம்பகால நண்பர். நம்பிக்கைக்குரிய தகவலாளியாக செயல்பட்டவர்.புலிகளின் திருநகர் முகாமுக்கு பொறுப்பாளாராக செயப்பிரகாஷ் அவர்களோடு செயல்பட்டவர். எங்கள் ஊரில் சாதி மத வேறுபாடின்றி அனைத்து தரப்பு மக்களோடும் பழகிய பண்பாளர். தீவீர புலிகளின் ரசிகர்." சாகுறதுக்குள்ள ஈழத்த பார்க்கனும்"ன்னு என்னிடம் அடிக்கடி சொல்லுவார்.வாழ்க்கையில் பலருக்கு ஏணியாகவும்,முன்னத்தி ஏர் போல செயல்பட்டவர். கவிஞர்.மீரா அவர்களின் நெருங்கிய நண்பர். "காவல்கோட்டம்" நாவல் எழுதி சாகித்ய அகாடமி விருது பெற்ற முன்னனி படைப்பாளி அண்ணன் சு.வெங்கடேசன் அவர்களை உருவாக்கிய,செதுக்கிய சிற்பியும் இவரே!
நன்றி: திலீபன் செந்தில்

No comments:
Post a Comment