Thursday, February 21

பெருமழைப்புலவர் சோமசுந்தரனார்


இன்றைய திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகிலுள்ள மேலைப்பெருமழை ஊரில் வசித்த வேலுத்தேவர் மற்றும் சிவகாமியம்மாள் ஆகியோருக்கு பிறந்த சோமசுந்தரனார் தமிழ் மொழியில் பெரும் புலமை உள்ளவராய் விளங்கினார். 




முதன் முதலில் உரை எழுதிய நூல் திருவாசகம் பின்னர் சைவ சித்தாந்த நூல்பதிப்புக் கழகத்தின் சார்பில் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, மணி மேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவகசிந்தாமணி, சிறுகாப்பியங்களான உதயணகுமாரகாவியம், நீலகேசி, பரிபாடல், ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, பெருங்கதை உள்ளிட்ட ஏராளமான நூல்களுக்கு உரை எழுதினார். அவர் ஊரின் பெயரால் பெருமழைப்புலவர் என்றே அழைக்கப்பட்டார்.  சென்ற நூற்றாண்டின் இணையற்ற உரையாசிரியராய் விளங்கினார்.

No comments:

Post a Comment

Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...