Friday, July 29

மலயா கணபதி




மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். 10 வயதிருக்கும் போது மலேசியா சென்றார்.கம்யூனிச சிந்தனையால் ஈர்க்கப்பட்டு தன்னை கம்யூனிச இயக்கத்தில் இணைத்து கொண்டார். 1936-38 வருடங்களில் சாதிய கொடுமைகளுக்கு எதிராக போராடினார். இந்த காலகட்டத்தில் தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது மலேயா தமிழர்கள் சார்பாக மூன்று பேரை தமிழகம் அனுப்பி போராட்டத்தில் கலந்து கொள்ள செய்தார்.இந்திய தேசிய ராணுவத்தில் பயிற்சியாளராகவும் இருந்தார் ஜப்பான் சரணடைந்ததை நேதாஜியிடம் கூறியவரும் இவரே. திராவிட இயக்க தலைவர்களாக மலாயாவில் முதலில் தோன்றியவர்கள் சிங்கை அகம்படியர் சங்கத்தை சேர்ந்தவர்களே. பின்னாளில் 'அகம்படியர் சங்கம்' 'தமிழர் மறுமலர்ச்சி கழகம்'(Tamil  Reform Society) என 1932இல் மாற்றம் பெற்றது.தமிழர்களின் கல்வி வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியது.இந்த சங்கம் முதலில் வெளியிட்ட வார பத்திரிகையே பின்னர் சிங்கையில் தமிழில் வெளியாகும் முதல் தினசரியாக 'தமிழ் முரசு' என வெளிவந்தது. சிங்கை அகம்படியர் மஹாஜன சங்கத்தின் தலைவராக இருந்த எ.சி.சுப்பையா அவர்களின் முயற்சியிலே ஆதி திராவிடர் சங்கம் நிறுவப்பட்டது.கணபதி அவர்களும் அகம்படியர் சங்கத்தின் பணியாற்றியிருக்கலாம் அதன் காரணமாகவே மிக பெரிய போராளியாக வந்தார் எனவும் கருதுகின்றனர். மலாயா மற்றும் சிங்கையில் இருந்த அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒன்றிணைத்து 'அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனம்' உருவாக்கப்பட்டது சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களை கொண்ட வலிமை மிக்க இயக்கத்தின் தலைவராக கணபதி இருந்தார். பல போராட்டங்களை நடத்தினார் 50000மக்கள் கலந்து கொண்ட மே தின அணிவகுப்பை நடத்தி காட்டினார். 1948இல் அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனத்தை தடை செய்வதாக அறிவித்தனர். சட்டத்திற்கு விரோதமாக கைத்துப்பாக்கி வைத்திருந்தார் என காரணம் காட்டி கைது செய்தனர் தூக்கு தண்டனையை கோலாலம்பூர் நீதிமன்றம் விதித்தது. தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியது நேரு ஆங்கில அரசிடம் பேசி தடுக்க முயன்றார் ஆங்கில அரசாங்கமும் நிறைவேற்ற வேண்டாமென தந்தி அனுப்பினர் பலன் இல்லை தூக்கு தண்டனையை நிறைவேற்றினர் தூக்கு கயிற்றை முத்தமிட்டு மடிந்தார் அந்த மாவீரன். கணபதியின் இறப்பிற்கு பின் வீரசேனனும் (சிங்கை தொழிலாளர் சங்க தலைவர்) சுட்டு கொள்ளபட்டார். கயிற்றில் தொங்கிய கணபதி என முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் இம்மாவீரனை பற்றி புத்தகம் எழுதியுள்ளார்.

கணபதி தேவர் என்ற அகமுடையார் தான் தொழிலாளர்களின் தோழனாகவும் ஆங்கிலேயர்கள் மற்றும் அடக்குமுறையாளர்களுக்கு எதிராக போராடிய முக்கிய சக்தியாக திகழ்ந்தவர்.

THANKS: http://www.malaya-ganapathy.com/

சாத்தப்ப ஞானி



சிவகங்கை மாவட்டம் கோவனூரை சேர்ந்த வீரப்பன் சேர்வை அவர்களின் புதல்வரே சாத்தப்பன் சேர்வை.பின்னாளில் சிவகங்கை உருவாக காரணமானவரும் சிவகங்கை அரசர்களின்  ராஜகுருவாகவும்  விளங்கியவர்.சிறுவயதிலிருந்தே இறையுணர்வு அதிகம் உள்ளவராய் இருந்தார்.காட்டில்திரிந்து கொண்டிருந்த முனிவர்களுக்கு தண்ணீர் கொடுத்து உதவினார். அவரது இறையுணர்வை கண்ட முனிவர்கள் அதனை வெளிக்கொண்டு வர உபதேசம் செய்து சென்றனர்.பின்னர் மௌனகுருவிடம் உபதேசம் பெற்றார் தாயுமானவர் திருச்சபையில் தன்னை ஐக்கியப்படுத்தி கொண்டார் தாயுமானவரின் சீடர்களில் ஒருவராகவும் விளங்கினார்.கோவனூர் முருகன் கோயிலே கதியென கிடந்தவர் பின் பல தலங்களுக்கு சென்று சாத்தப்பன் ஞானி என அனைவராலும் போற்றப்பட்டார்.


முருகனின் மீது அளவில்லா பக்தி உடையவராக திகழ்ந்தார் நாட்டில் உள்ள முருகன் கோயிலில் எல்லாம் தன்னை ஐக்கியப்படுத்தி கொண்டார்.ஒரு முறை சசிவர்ண பெரிய உடையாத் தேவர் வேட்டைக்கு சென்ற போது நாவலடி ஊற்றில் தவம் செய்து கொண்டிருந்த சாத்தப்ப ஞானியரை கண்டு வணங்கினார்.சசிவர்ணரை கண்ட ஞானியார் நல்ல யோகமும் புதிய பட்டமும் வந்து யானை கட்டி சீமையாளுவாய் என விபூதி கொடுத்து அருளி தஞ்சை செல்லுமாறு உத்தரவு கொடுத்து அனுப்பினார்.மன்னரும் தஞ்சை சென்று அரண்மனையில் புலியை கொன்று மேலும் தஞ்சை படைகளின் உதவியுடன் ராமநாதபுரத்தில் அரசனாக இருந்த பவானி சங்கர தேவரை வென்றார்.பின்னர் ஞானியாரை வந்து சந்தித்தார் முன்னர் சந்தித்த இடத்தில் இருந்த ஊற்றில் திருக்குளம் வெட்டி சிவகங்கை என பெயரிட்டு குளத்தின் மேல் மூலையில் அரண்மனை கட்டி சீமை ஆள் என அருளினார்.அரசரும் அவ்வாறே செய்து தனது குருவான ஞானியருக்கு மடம் நிறுவி நிலங்களையும் சமயப்பணி சிறப்பாக செய்வதற்கு அளித்தார்.மேலும் சாத்தப்பர் அவர்களின் புதல்வரும் புகழ்பெற்ற சேது தளவாயான வைரவன் சேர்வைக்காரர் கட்டிய ராமநாதபுரம் அருகிலிருக்கும் பெறுவயலில் ரணபலி  முருகன் கோயிலுக்கு திருவெற்றியூரில் சில இடங்களை கொடுத்துள்ளார்.இன்று வரை இவ்வூரில் பிறக்கும் முதல் ஆண் குழந்தைக்கு சாத்தப்பையா என பெயர் வைக்கின்றனர்.
1961ஆம் ஆண்டு வரை சிவகங்கையின் மன்னர்களால் சிறப்பாக நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.குருவின் நினைவாக ஒவ்வொரு வருடமும் தைப்பூசத்தன்று படையல் வைத்து குரு பூஜை செய்து அன்னக்கொடி நட்டு அன்னதானமும் நடைபெறுகிறது..தற்போது மடத்தின் சொத்துகள் பலவும் பலரால் அக்கிரமிக்கப்பட்டுள்ளது.
மன்னர் சசிவர்ண தேவரவர்கள் காளையார்கோயிலில் தனது சிலையை நிறுவி அதற்கு எதிரே சாத்தப்ப ஞானியாரின் சிலையை நிறுவி உள்ளார்.

Wednesday, July 20

மருது பாண்டியர்கள் தூக்கிலிடப்பட்ட இடம் மற்றும் மருது பாண்டியர் மணி மண்டபம்

ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்த மருது சகோதரர்கள்  1801ஆம் ஆண்டு அக்டோபர் 24 அன்று சிவங்கங்கை  மாவட்டம் திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டனர்.


வீரர்கள் மண்ணில் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகிறார்கள்..!

அலங்காரத்தில் மருதரசர்கள்

 

மருது  சகோதரர்கள் நினைவுத் தூண், இடம்: திருப்பத்தூர்

 

                                   

                               

மருது பாண்டியர் நினைவு மண்டபம, இடம்: திருப்பத்தூர்



மருது பாண்டியர்களின் சிலை

நினைவு மண்டபத்திலுள்ள சின்ன மருது பாண்டியர் சிலை

 

நினைவு மண்டபத்திலுள்ள பெரிய மருது பாண்டியர் சிலை

 

 

 



 

Monday, July 18

மருது பாண்டியர் கட்டிய காளையார் கோயில் மற்றும் மருது பாண்டியர் கோயில்



“மருது பாண்டியர்கள் சரணடையவில்லை என்றால் காளையர் கோவிலை இடித்து விடுவோம்” என்று வெள்ளைக்காரன் எச்சரிக்க, எம்முயிரை விடக் கோவில்களே முக்கியமென்று கருதி சரணடைந்து தூக்கு மேடை ஏறிய தெய்வங்களே மருது சகோதரர்கள்.

காளையார் கோயில்



பெரிய மருதுவின் முயற்சியால், 157 அடியில், கோயிலின் 9 நிலைப் பெரிய கோபுரம், சோமேசர் திருமுன்னிலைக்கு (சந்நிதிக்கு) முன்னால் கட்டப்பட்டது. மதுரைக் கோயிலின் தெற்குக் கோபுரம் தவிர்த்து, மற்ற கோபுரங்கள் எல்லாம் காளீசர் கோபுரத்திலும் உயரம் குறைந்தவை தான். தெற்குக் கோபுரம் மட்டுமே 160 3/4 அடி உயரம் ஆகும். காளீசர் கோபுர உச்சியில் இருந்து கூர்ந்து பார்த்தால்  தெளிவான நாளில் மதுரைத் தெற்குக் கோபுரம் தெரியும்.

பழைய புகைப்படம் காளையார் கோயில் 

 


நாட்டுப் பாடல் ஒன்று,

"கருமலையிலே கல்லெடுத்து காளையார் கோவில் உண்டுபண்ணி மதுரைக் கோபுரம் தெரியக் கட்டிய மருது வாரதைப் பாருங்கடி"
என்று அவர்களின் பெருமை சொல்லும்.

மருது கட்டிய ராஜ கோபுரம்




கோயிலுக்கு வேண்டிய செங்கல்களை மானாமதுரைக்கு அருகில் உள்ள செங்கோட்டைச் சூளையில் உருவாக்கி, மக்களின் முயற்சியால், பல்லாயிரக் கணக்கானவர் வரிசையாய் நின்று, அஞ்சல் முறையில், செங்கோட்டை – மானாமதுரை – முடிக்கரை – காளையார் கோவில் என்ற (13 மைல்) வழியில் கொண்டு வரப் பட்டது. இது போன்ற கட்டுமான உத்தி (நாட்டு மக்கள் எல்லோரும் சேர்ந்து கட்டும் உத்தி) அதுவரையில் யாராலும் செய்யப் பட்டதில்லை.



இந்தக் கட்டுமானம் பற்றியே சிவகங்கையில் பல் வேறு கதைகள் உண்டு.காளீசர் கோயிலில் பெரிய மருது தேரமைத்த கதையும், அதன் ஆசாரி பெரிய மருதுவிடம் இருந்து முடிவாங்கி ஒருநாள் மன்னரான கதையும், பின்னால் தேரோட்டம் முடியும் போது ஈகம் – தியாகம் – செய்து ஆசாரி உயிர்கொடுத்த கதையும் நம் மனத்தை ஈர்க்கும் அடுத்த பதிவில் பார்ப்போம்.1789 திசம்பரில் தொடங்கி 1794 ஆண்டிற்குள் இந்த ஆலயத் திருப்பணி முடிந்தது.

காளையார் கோயிலில் உள்ள மருதரசர்கள் சிலை 


மருது திருக்கோயில்:

 

குரு பூஜையின் போது

கோயிலின் எதிரே மருது பாண்டியர்கள் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் திருக்கோயில் எழுப்பப்பட்டுள்ளது.

கோயிலில் உள்ள மருது சிலை


வேற்று நாட்டவனும் அதிர்ந்து போன மருது பாண்டியர்களின் வீரம் தெறித்த இம்மண்ணில், கோயில் அறம் காக்க தன் இன்னுயிர் நீக்கினாரே! செத்தும் வாழும் வீரர்கள் துயில் பயிலும் ஜீவ சமாதி! கோயிலை நோக்கி தத்தமது சிரசுகள் இருக்கும்படிக்கு புதைக்குமாறு ஆங்கிலேயரிடம் சொன்னபடியாள்  புதைக்கப்பட்டது இவ்விடத்திலே! தரிசனம் செய்ய மறவாதீர்! நமது தூய்மையான அஞ்சலியும், சில துளி கண்ணீரும் இவ்வீரத் தமிழருக்கு, காளையார் கோயில் கட்டிய காளையருக்கு நாம் செலுத்தும் கடனாம்! நமது தேசத்தைக் காக்க இங்கே நமது வேண்டுதலை வைப்போம்! 

Sunday, July 17

அகமுடையார்?

அகமுடையார்கள் பற்றி அகமுடையார் அரண் நிறுவனரும் அகமுடையர்களை ஒருங்கிணைத்த பெருமைக்குரிய பாலமுருகன் அகமுடையார் அவர்களின் கருத்து

Thursday, July 14

முக்குலத்தோர் மற்றும் முதலியார் அரசியல் செய்யும் அகமுடையார்கள்

முக்குலத்தோர் அரசியல் செய்யும் அகமுடையார்கள்:

சேதுராமன் - அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைவர்
 


கருணாஸ் - முக்குலத்தோர் புலி படை தலைவர் 



முதலியார் அரசியல் செய்யும் அகமுடையார்:

 ஏ.சி.சண்முகம் - புதிய நீதி கட்சி நிறுவனர்

 

 

இராமநாதபுரமும் அகமுடையார்களும்

 

ராமநாதபுரம் மாவட்டம்  வாலாந்தரவையில் இருக்கும் மருதிருவர் சிலை

தமிழகம் முழுவதும் அகமுடையார் இனத்தினர் வசித்து வருகின்றனர் பெரும்பாண்மையாக வசித்து வரும் இடங்களில் ராமநாதபுரமும் ஒன்று.ராமநாதபுரம்பாண்டியர்கள்,பல்லவர்கள்,சோழர்கள்,வாணதிராயர்கள்,நாயக்கர்கள்,சேதுபதிகள்,நவாப் மற்றும் ஆங்கிலேயர்கள் என பலரது ஆளுகைக்குட்பட்டிருந்தது.அகமுடையார்கள் இப்பகுதியில் பூர்விகமாக பன்நெடுங்காலமாக வாழந்து வருகின்றனர்.கி.பி. 1628இல் கூத்தன் சேதுபதி கோயில் யானை மீதுஅமர்ந்து நகர்வலம் வந்தபோது தமது வலிமையை நிருபித்துக் காட்ட மன்னர் அமர்ந்து இருந்த யானையின் வாலைப் பிடித்து யானை மேலும் நகரவிடாமல் நிறுத்திவிட்டார் முத்து விஜயன் சேர்வை அன்பளிப்புகள் வழங்கி அவரைப் பாராட்டிய சேது மன்னர் அவருக்கு நாள்தோறும் கோயிலில் இருந்து உணவு வழங்க உத்திரவிட்டார்.இந்த வீரச்செயல் சிற்பமாக ராமேஸ்வரம் திருக்கோயிலில் உள்ளது.சேதுபதிகளின் நம்பிக்கைக்குரிய தளபதிகளாகவும் அமைச்சர்களாகவும் அகமுடையார்கள் விளங்கினர்.சேதுபதிகளுக்கும் அகமுடையர்களுக்கும் மோதல்களும் நிகழ்ந்துள்ளன இதனால் அகமுடையார்கள் வேறு இடங்களுக்குகுடிபெயர்ந்துள்ளனர்.படைவீரர்களாகவோ அல்லது வேறு காரணங்களுக்காக குடிபெயரும் போது ராமநாதபுரம் என தங்கள் ஊரின் பெயரை புதிதாக வந்த இடத்திற்கு சூட்டி உள்ளனர்.தமிழகத்தில் கோவை,தஞ்சை போன்ற பகுதிகளில் ராமநாதபுரம் உள்ளது மேலும் மலையாவிலும் உள்ளது.சொக்கப்பன் சேர்வைக்காரர்,கங்கையாடி பிள்ளை,பாண்டியூர் பெருமாள் சேர்வைக்காரர்,வைரவன் சேர்வைக்காரர்,ரெகுநாத காங்கேய சேர்வைக்காரர்,வெள்ளையன் சேர்வைக்காரர்,வணங்காமுடி பழனியப்பன் சேர்வை,மருது பாண்டியர்கள் மற்றும் முத்துஇருளப்ப பிள்ளை என அகமுடையார் குலத்திலே ராமநாதபுரத்தில் உதித்த சிறப்புவாய்ந்தவர்கள் பலர்.பாம்பன் ஸ்வாமிகளும் இம்மண்ணிலே அவதரித்தவரே.வைரவன் சேர்வை ரணபலி முருகன் கோயில் பெருவயலில் எழுப்பியுள்ளார்.வெள்ளையன் சேர்வை மிகுந்த போர் திறன் பெற்றிருந்தார் நாயக்கர்களும் மறவர்களும் அஞ்சும் அளவிற்கு வலிமையானவராக இருந்தார்.மதுரை கோட்டையை கைப்பற்ற மைசூர் அரசரின் பிரதிநிதியாக வந்த தளபதி கோப்புடன் சண்டையிட்டு வெற்றி பெற்று நாயக்க மன்னருக்கு சேதுபதியின் வேண்டுதலுக்கு இணங்க முடிசூட்டி வைத்தார்.வாணதிராயர்,பல்லவராயர்களுக்கு பிறகு அகமுடையார் இனத்தில் தோன்றிய ராஜதந்திரி என கூறலாம்.திருநெல்வேலி பாளையக்காரர்கள் மீது படையெடுத்து பலரை கைது செய்தார் இதனை விரும்பாத சேதுபதி சேர்வையை ராமநாதபுரத்திற்கு திரும்புமாறு கட்டளையிட்டார்.இது தனக்கு ஏற்பட்ட அவமானமாக கருதி சேதுபதியை மாற்றிவிட்டு வேறொரு சேதுபதிக்கு முடி சூட்டி வைத்தார்.தென் தமிழ்நாட்டு மக்களின் பஞ்சத்தைப் போக்க முல்லைப் பெரியார் அணைத் திட்டத்தை முதலில் வடிவமைத்தவர் பிரதானி முத்துஇருளப்ப பிள்ளையே.இவர் காலத்தில் ராமேஸ்வரம் திருக்கோயிலுக்கு பல திருப்பணிகள் செய்யப்பட்டது சொக்கத்தான் மண்டபம் இவர் கட்டியதே.இவருடைய திருஉருவ சிலையும் கோயிலில் உள்ளது.இவருடைய சமாதி இராமநாதபுரம் நீலகண்டி ஊரணியின் வடகரையில் இடிந்த நிலையில் சிறிய கோவில் போல உள்ளது.இவர்மீது புலவர்கள் பலர் செய்யுட்கள் இயற்றியுள்ளனர்.பெரிய சரவணக் கவிராயர் என்பவர் இவர்மீது ‘காதல்’ பிரபந்தம் இயற்றியுள்ளார்.

ராமேஸ்வரத்தில் உள்ள மருதராசர் சிலை


ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் மூன்று முறை(2காங்கிரஸ் 1சுயேட்சை) சண்முக ராஜேஸ்வர சேதுபதி வெற்றி பெற்றுள்ளார்.இதற்கு பின் தங்கப்பன்(திமுக),சத்தியேந்திரன்(திமுக),T.இராமசாமி(தொடர்ச்சியாக 3 முறை அதிமுக),M.S.K.இராஜேந்திரன்(திமுக) என 6 முறை அகமுடையர்களும் வெற்றிபெற்றுள்ளனர்.பின்னர் தென்னவன்(அதிமுக, இசை வேளாளர்)நான்கு முறை இஸ்லாமியர்களும் தற்போது மணிகண்டன்(அதிமுக, மறவர்) வெற்றிபெற்றுள்ளனர்.ராமநாதபுரம் நகராட்சியை பொறுத்த வரை ஒரு முறை தவிர அனைத்து முறையும் அகமுடையர்களே வெற்றி பெற்றுள்ளனர்.

Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...