மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். 10 வயதிருக்கும் போது மலேசியா சென்றார்.கம்யூனிச சிந்தனையால் ஈர்க்கப்பட்டு தன்னை கம்யூனிச இயக்கத்தில் இணைத்து கொண்டார். 1936-38 வருடங்களில் சாதிய கொடுமைகளுக்கு எதிராக போராடினார். இந்த காலகட்டத்தில் தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது மலேயா தமிழர்கள் சார்பாக மூன்று பேரை தமிழகம் அனுப்பி போராட்டத்தில் கலந்து கொள்ள செய்தார்.இந்திய தேசிய ராணுவத்தில் பயிற்சியாளராகவும் இருந்தார் ஜப்பான் சரணடைந்ததை நேதாஜியிடம் கூறியவரும் இவரே. திராவிட இயக்க தலைவர்களாக மலாயாவில் முதலில் தோன்றியவர்கள் சிங்கை அகம்படியர் சங்கத்தை சேர்ந்தவர்களே. பின்னாளில் 'அகம்படியர் சங்கம்' 'தமிழர் மறுமலர்ச்சி கழகம்'(Tamil Reform Society) என 1932இல் மாற்றம் பெற்றது.தமிழர்களின் கல்வி வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியது.இந்த சங்கம் முதலில் வெளியிட்ட வார பத்திரிகையே பின்னர் சிங்கையில் தமிழில் வெளியாகும் முதல் தினசரியாக 'தமிழ் முரசு' என வெளிவந்தது. சிங்கை அகம்படியர் மஹாஜன சங்கத்தின் தலைவராக இருந்த எ.சி.சுப்பையா அவர்களின் முயற்சியிலே ஆதி திராவிடர் சங்கம் நிறுவப்பட்டது.கணபதி அவர்களும் அகம்படியர் சங்கத்தின் பணியாற்றியிருக்கலாம் அதன் காரணமாகவே மிக பெரிய போராளியாக வந்தார் எனவும் கருதுகின்றனர். மலாயா மற்றும் சிங்கையில் இருந்த அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒன்றிணைத்து 'அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனம்' உருவாக்கப்பட்டது சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களை கொண்ட வலிமை மிக்க இயக்கத்தின் தலைவராக கணபதி இருந்தார். பல போராட்டங்களை நடத்தினார் 50000மக்கள் கலந்து கொண்ட மே தின அணிவகுப்பை நடத்தி காட்டினார். 1948இல் அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனத்தை தடை செய்வதாக அறிவித்தனர். சட்டத்திற்கு விரோதமாக கைத்துப்பாக்கி வைத்திருந்தார் என காரணம் காட்டி கைது செய்தனர் தூக்கு தண்டனையை கோலாலம்பூர் நீதிமன்றம் விதித்தது. தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியது நேரு ஆங்கில அரசிடம் பேசி தடுக்க முயன்றார் ஆங்கில அரசாங்கமும் நிறைவேற்ற வேண்டாமென தந்தி அனுப்பினர் பலன் இல்லை தூக்கு தண்டனையை நிறைவேற்றினர் தூக்கு கயிற்றை முத்தமிட்டு மடிந்தார் அந்த மாவீரன். கணபதியின் இறப்பிற்கு பின் வீரசேனனும் (சிங்கை தொழிலாளர் சங்க தலைவர்) சுட்டு கொள்ளபட்டார். கயிற்றில் தொங்கிய கணபதி என முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் இம்மாவீரனை பற்றி புத்தகம் எழுதியுள்ளார்.
கணபதி தேவர் என்ற அகமுடையார் தான் தொழிலாளர்களின் தோழனாகவும் ஆங்கிலேயர்கள் மற்றும் அடக்குமுறையாளர்களுக்கு எதிராக போராடிய முக்கிய சக்தியாக திகழ்ந்தவர்.
THANKS: http://www.malaya-ganapathy.com/