Sunday, August 9

மாமன்னர் பெரிய மருதுபாண்டியரின் மனைவிமார்கள் பிள்ளைகள் பட்டியல்



பெரிய பாண்டியருக்கு இராக்காத்தாள், கருப்பாயி ஆத்தாள், பொன்னாத்தாள்

ஆனந்தாயி ஆத்தாள், மீனாட்சி ஆத்தாள் ஆகிய ஐந்து மனைவிகள் 

இருந்தனர்.இவர்கள் அனைவரின் சிலைகளும் நரிக்குடி சத்திரத்தின் 

பின்புறமுள்ள வளாகத்தில் சிறு சிறு மண்டபங்களில் உள்ளன.


முதல் மனைவி இராக்காத்தாள் வாரிசுகள் :-


இவருக்கு குடைக்காதுடையார், முத்துச்சாமி, உடையணன், முள்ளிக்குட்டி 

சாமி ஆகிய 4 மகன்கள். குடைக்காதுடையார் 1794 ல் பரமக்குடி போரில் 

கொல்லப்பட்டார். முத்துச்சாமி 1801 விடுதலை போர் தொடங்குவதற்கு 

முன்னரே இயற்கை மரணம் அடைந்தார். இவரது வாரிசுகள் சிவகங்கைக்கும் 

மானாமதுரைக்கும் இடையேயுள்ள நெடுங்குளம் புகைவண்டி நிலையம் 

அருகே உள்ள வேம்பங்குடியில் இன்றும் வசித்து வருகின்றனர்.

இவ்வூரை சேர்ந்த திரு.ராமச்சந்திரன் சேர்வையிடம் ஒரு செப்பேடும் 'பெரிய 

மருது' என எழுதப்பட்ட 7 1/2 (ஏழரை) அங்குல நீளக்கத்தி ஒன்றும் தந்தத்தால் 

கைப்பிடி உள்ள எழுத்தாணி ஒன்றும் உள்ளன. இராக்காத்தாள் அவர்களின் 

மூன்றாவது மகன் உடையணனும், நான்காவது மகன் முள்ளிக்குட்டிசாமியும் 

1801 ல் நிகழ்ந்த விடுதலைப்போரில் பங்கெடுத்தமைக்காக ஆங்கிலேயரால் 

தூக்கிலிடப்பட்டனர்.


இரண்டாவது மனைவி கருப்பாயி ஆத்தாள் வாரிசுகள் :-



கருப்பாயி ஆத்தாளுக்கு கறுத்த தம்பி என்ற கறுத்த பாண்டியன், காந்தேரி 

ஆத்தாள், மருதாத்தாள் என்ற 3 குழந்தைகள். கருப்பாயி ஆத்தாள் முத்தூர் 

அரண்மனையில் வசித்து வந்தார். சிவகங்கை காளையார்கோயில் 

சாலையில் கொல்லங்குடி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வடக்கே 

ஒருமைல் தூரம் நடந்து சென்றால் முத்தூரை அடையலாம். முத்துப்போன்ற 

நெல்மணிகள் விளைவிற்கு பஞ்சமில்லாத ஊர் இதுவென்பதால் இவ்வூருக்கு 

இப்பெயர் வந்திருக்கலாம் என்று வெள்ளைத்தளபதி வெல்ஷ் தனது 

இராணுவ நினைவுகள் புத்தகத்தின் VOL 1 பக்கம் 125 ல் எழுதியுள்ளார்.

முத்தூர் அரண்மனை ஒரு ஓடையின் கரையில் அமைந்துள்ளது. 

அரண்மனை அரை ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டதாக தெரிகிறது. பூசை 

அறைதவிர பிறபகுதிகள் இடிந்து போய்விட்டதால் அந்த இடத்தில் ஊராட்சி 

ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தாய்சேய் நலவிடுதி, சத்துணவுமையம் முதலியன 

கட்டப்பட்டுள்ளன. அக்கட்டட வளாகங்களிடையே அரண்மனையின் பழைய 

செங்கல் தளவரிசையை காணமுடிகிறது. பரமக்குடி போர் முடிந்து திரும்பிய 

மருதிருவரும் படையினரும் சிறுவயல் சென்றடையும் முன் முத்தூர் 

அரண்மனையில் ஒரு நாள் தங்கி சென்றதாக வரலாறு உள்ளது. அத்தனை 

பேர் தங்கி செல்லும் அளவுக்கு முத்தூர் அரண்மனை அவ்வளவு பெரியதாய் 

இருந்திருக்கிறது.  கருப்பாயி ஆத்தாளின் ஒரே மகனான 

கறுத்தப்பாண்டியனை 1801 ல் விடுதலைப்போரில் பங்கேற்றதற்காக 

ஆங்கிலேயர் தூக்கிலேற்றினர்.


மூன்றாவது மனைவி பொன்னாத்தாளுக்கு பிள்ளைகள் இல்லை.



பொன்னாத்தாள் அவர்கள் மாமன்னர் மருதுபாண்டியர்கள் பிறந்த நரிக்குடி 

முக்குலத்தை சேர்ந்த உறவுக்கார பெண் ஆவார்.


நான்காவது மனைவி ஆனந்தாயி ஆத்தாள்:



கொல்லங்குடியில் தனக்கென்று கட்டப்பட்ட மாளிகையில் வசித்து வந்தார். 

இவருக்கு ஒரு மகன் பிறந்து இறந்து போய் விட்டதாகச் சொல்லப்படுகிறது.


ஐந்தாவது மனைவி மீனாட்சி ஆத்தாள் வாரிசுகள்:


மீனாட்சி ஆத்தாளுக்கு கவண்டன் கோட்டை துரை, தங்கம் என்ற 

பெரியதங்கம் என இரு பிள்ளைகள். மீனாட்சி ஆத்தாள் தனது தந்தையின் 

அரண்மனை உள்ள கவண்டன் கோட்டையில் தான் தன் மகள் தங்கத்துடன் 

தங்கி இருந்தார். 1794 ல் பரமக்குடி போரில் கவண்டன்கோட்டை துரை 

அவர்கள் இறந்துவிட்டதாக டாக்டர் ந.சஞ்சீவி அவர்கள் தனது மருதிருவர் 

புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். தன் கணவர் தூக்கிலிடப்பட்டதை அறிந்ததும் 

மகள் பெரிய தங்கத்துடன் தந்தையின் ஊரைவிட்டு கிளம்பிய 

மீனாட்சியாத்தாள் நரிக்குடியை அடுத்த வேலங்குடியில் குடியேறிவிட்டார்.


பெரியதங்கத்திற்கு இருபுதல்வர்களும் ஆதி வீரலட்சுமி என்ற 

சின்னதங்கமும் பிறந்தனர். ஆதிவீரலட்சுமி இந்த வேலங்குடிக்கு 3 கி.மீ 

தூரத்தில் உள்ள சீனிக்காரனேந்தலில் குடியேறினார். இவரது வழியினர் 

வேலங்குடி மற்றும் சீனிக்காரனேந்தலில் இன்றளவும் வசித்து வருகின்றனர்.

படம் :- நரிக்குடி சத்திரம் பள்ளி வளாகத்தில் இடியும் நிலையில் உள்ள 

மாமன்னர் பெரிய மருதுபாண்டியரின் இரண்டாவது மனைவி கருப்பாயி 

ஆத்தாள் அவர்களின் நினைவாலயம்

மாமன்னர் மருதுபாண்டியர்களால் சிவகங்கை சீமையில் உருவாக்கப்பட்ட ஊருணிகள், குளங்கள !


ஊருணிகள், குளங்கள:

1.சிவகங்கை முத்துப்பட்டி ஊருணி

2.
சிவகங்கை உடையார் சேர்வை ஊருணி


3.சிவகங்கை ஆத்தா ஊருணி


4.சிவகங்கை இலட்சுமி தீர்த்தம்


5.காளையார்கோயில் கோயில் உள் திருக்குளம்


6.காளையார்கோயில் ஆனை மடு


7.காளையார்கோயில் மருதவனப் பொய்கை


8.கொல்லங்குடி மருது ஊருணி


9.குன்றக்குடி மருதாபுரிக்குளம்


10.சிறுவயல் புலிக்குட்டியம்மன் கோயிலுக்காக ஒரு திருக்குளம்


11.சிறுவயல் கிருஷ்ணர் கோயிலுக்காக ஒரு குளம்


12.சிறுவயல் கிராம மக்களின் குடிநீருக்காக மாண்கொண்டான் பொயகை

ஊருணி


13.சிறுவயல் வண்ணார்குளம்


14.சங்கரமதி ஊருணி


15.தொண்டி கைக்களான் குளம் என்ற காளிகனத்தான்குளம்


16.நரிக்குடி ஊருணி

17.திருக்கோட்டியூர் திருக்குளம்


கேணிகள் :-


நரிக்குடியில் மருதுபாண்டியர் கிணற்றை பாண்டியன் கிணறு என்றே 
அழைக்கின்றனர். 

நரிக்குடியை போலவே பல இடங்களில் தாகம் தீர்த்திட 

தடாகம் மட்டுமில்லாமல் கிணறுகளும் தோண்ட செய்தனர் மாமன்னர் 

மருதுபாண்டியர்கள். சிவகங்கை - மானாமதுரைச் சாலையில் 

கீழவாணியங்குடி அருகிலும் சிவகங்கை - வரிச்சூர் சாலையில் 

முத்துப்பட்டிக்கு முன்னதாகவும் மருதுபாண்டியர் கிணறுகள் இருந்து 

தூர்ந்து போய் கிடக்கின்றன. 

திருப்பத்தூர் சுற்றிலும் மருதுபாணடியர்களால் கட்டப்பட்ட கிணறுக்கு காராளன் கிணறு என்றே பெயர்.

மாமன்னர் மருதுபாண்டியர்கள் மக்களின் 

குடிநீர் தேவைக்காக நகர்நடுவிலும் சாலையோரங்களிலும் கோயில்களை 

ஒட்டியும் வெட்டிய குளங்களும், மற்றும் கிணறுகளும் எண்ணற்றவை. 

ஆதாரப்பூர்வமாகத் தெரிந்த சில குளங்களும், கிணறுகளையுமே இங்கு 

குறிப்பிடப்பட்டுள்ளது.


வீரத்தை வளர்க்க வீர சங்கம் நிறுவிய மருது பாண்டியர்கள்

ஆங்கிலேயரின் ஆட்சிக்கு எதிராக வடக்கே சமஸ்தானங்கள் போர்க்கோலம் பூணும் முன்பே தமிழ் மண்ணில் ஒரு வீரியமான மக்கள் விடுதலை இயக்கம் நடைபெற்றது.மருது சகோதரர்களால்             வடிவமைக்கப்பட்ட மக்கள் இயக்கத்தினர் தங்களை வீர சங்கத்தினர் என அழைத்துக் கொண்டனர்.

1772ல் சிவகங்கை ராஜா முத்துவடுகநாதர் கொல்லப்பட்டதற்கு பிறகு ஊராளிகள்(ஊர் தலைவர்கள்) மூலம் சங்கத்துக்கு ஆள் சேர்த்தனர். சங்கத்தை ஒருங்கிணைக்க திண்டுக்கல் முதல் நாகர்கோவில் வரை பெரிய மருது பயணம் மேற்கொண்டார். கேரளாவில் உள்ள மடப்புரிக்கு சென்ற மருது, அங்கிருந்து திண்டுக்கல்லுக்கு நூற்றுக்கணக்கான மலபார் வீரர்களுடன் எழுச்சிமிக்க நடைபயணம் மேற்கொண்டார். தோளுயர்த்தி,நெஞ்சை நிமிர்த்திவந்த அந்த படைக்கு உணவு வழங்குவதை தடுக்க ஆங்கிலேயர் சாலைகளை மூடினர். ஆனால், கடல் வழியாக தொண்டி துறைமுகத்துக்கு உணவு வரவழைக்கப்பட்டது. சங்கத்தின் ஆயுத தேவைக்காக மேலூரிலும் தாரமங்கலத்திலும் இரு துப்பாக்கி தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டன.இவ்வாறு தீவிரமாகவும் ரகசியமாகவும் வீரசங்கம் செயல்பட்டது.திப்பு மீது போர் தொடுக்க 5.3.1799ல் ஆங்கிலேய படைகள் மைசூருக்கு சென்ற நிலையில் தமிழக ராணுவ கிடங்குகளில் இருந்து துப்பாக்கி,வெடிமருந்து,உணவுப்பொருட்களை வீர சங்கத்தினர் கைப்பற்றினர். முத்துக்கருப்பன்,சிங்கம் செட்டி போன்றோர் அபிராமம், கமுதி, முதுகுளத்தூர்,கொக்குளம், சிக்கல் ராணுவ கிடங்குகளை தாக்கினர். மேஜர் பானர்மேன் தலைமையிலான படை பாலமநேரியில் சிங்கம்செட்டியை பிடித்து தூக்கிலிட்டது. அவரது தலையை ஈட்டியில் குத்தி முச்சந்தியில் நட்டனர்.நெல்லை வீர சங்கத்துக்கு தலைமை வகித்த வீரபாண்டிய கட்டப்பொம்மன் 1799 ஜூனில் சாப்டூர்,ஏழாயிரம்பண்ணை, காடல்குடி,குளத்தூர் பகுதி தலைவர்களை சங்கத்தில் சேர வேண்டுகோள் விடுத்தார். செவத்தையா,வீரபாண்டிய நாயக்கர்,வீரபத்திரபிள்ளையை இளவரசநல்லூருக்கு அனுப்பி அங்குள்ள கள்ளர்கள் ஆதரவm பெற்றார்.     1.6.1799ல் பாலமநேரியில் நடந்த சண்டையில் மருது சகோதரர்களுடன் வீர சங்கத்தினரும் சமராடினர்.இதற்கிடையே புரட்சிப்படையை சேர்ந்த 42 பேருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது.இதில் 8 பேர் தாராபுரத்திலும், 7பேர் சதியமங்கலத்திலும், 6 பேர் கோயமுத்தூரிலும் மக்கள் நடுவே தூக்கில் இடப்பட்டனர். 16.10.1799ல் கட்டபொம்மன் தூக்கில் இடப்பட்ட பின்
சின்ன மருது நெல்லை பகுதி வீரசங்கத்துக்கு தலைமை பொறுப்பேற்றார். கட்டப்பொம்மன் தம்பி குமாரசாமி செவத்தையா உட்பட 17 வீரசங்கத்தினர் நெல்லையில் சிறைப்படுத்தப்பட்ட போது 200 வீரர்கள் முருக பக்தர் வேடம் புனைந்தும், வாழை இலை, விறகு விற்பவர்போல் நடித்தும் அவர்களை சிறைமீட்டனர்.

சின்ன மருது 1801ல் தூக்கிலிடப்பட்ட பின்னரும் வீர சங்கத்தின் தொண்டு தொடர்ந்தது. ஊர்தோறும் கத்தி சண்டை, கம்பு சண்டை, மல் யுத்தம் என பயிற்சிகள் களம்கட்டின.மதுரை, திண்டுக்கல், குமரி பகுதிகளை விட நெல்லை பகுதியில் ஏராளமானோர் சங்கத்தில் இணைந்தனர். குறிப்பாக நாங்குநேரி மறுகால் குறிச்சியில் ஊரே ஒட்டுமொத்தமாக சங்கத்தில் இணைந்தது. எங்கும் எழுச்சியும் கிளர்ச்சியும் நிகழ்ந்தவண்ணமிருந்தன. இதையடுத்து அப்போதைய கவர்னர் எட்வர்ட் கிளைவ் மல் யுத்தம்,கொரில்லா பயிற்சிகளை நடத்தினால் கடும் தண்டனை விதிக்கப்படும்என அரசாணை கொண்டுவந்தார். கிழக்கிந்தி கம்பெனி படையினர் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி நூற்றுக்கணக்கானோரை கைது செய்தனர். பலரும் தூக்கிலிடப்பட்டனர்.
ஆனாலும் விடுதலை உணர்வு அடங்கவில்லை இறுதியாக வீர சங்கத்தின் உறுப்பினர்கள், குடும்பத்தினர் 74 பேருக்கு தீவாந்தர தண்டனை விதித்தனர். இவர்களில் பெரிய மருதுவின் மகனான 15 வயது துரைச்சாமியும் அடக்கம். தென் தமிழகத்தில் வீறு கொண்டெழுந்த வீரசங்கம்,

இந்த தீவாந்தர தண்டனைக்கு பின்பு கொஞ்சம், கொஞ்சமாக வலுவிழந்து இறுதியில் வீழ்ந்தது.வீழ்ந்தாலும் விருச்சமாக வளர்ந்து நிற்கின்றது மருதரசர்களின் புகழ்.

அகமுடைய வள்ளல்




பச்சையப்ப முதலியார் 1754 ஆம் ஆண்டு பெரியபாளையத்தில் பிறப்பதற்கு முன்பே அவரது தந்தை விஸ்வநாத முதலியார் காலமாகிவிட்டிருந்தார்.வறுமையில் வாடும் குடும்பம் சென்னையைத் தஞ்சமடைந்தது.அப்போதைய கிழக்கிந்தியக் கம்பெனியின் வெள்ளைக்கார துரைகளுக்கு துபாஷியாக(கணக்குப் பிள்ளை / மொழி பெயர்ப்பாளர் / செயலாளர்)இருந்த நாராயண பிள்ளையிடம் உதவியாளராகச் சேர்ந்தார் பச்சையப்ப முதலியார்.சிறுவனாக நாராயண பிள்ளையின் உதவியாளராக சேர்ந்த பச்சையப்ப
முதலியார், நாராயண பிள்ளை திடீரென்று மரணமடைந்ததும்,தனது 16ஆவது வயதில் பெüனி துரையின் துபாஷியாக உயர்ந்தார்.பெüனி துரை சென்னையின் மேயராக நியமிக்கப்பட்டபோது,பச்சையப்ப முதலியாரின் செல்வாக்கும் இமயமாக உயர்ந்தது.சென்னையின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவராகவும்,அதிகார பலம் மிக்கவராகவும் பச்சையப்ப முதலியார் திகழ்ந்தார்.பெரும் தனவந்தராக இருந்தாலும் மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தவர் பச்சையப்ப முதலியார்.அதிகாலையில் எழுந்து கூவம் ஆற்றில் நீராடி (அப்போதெல்லாம் கூவம் சாக்கடையாக இருக்கவில்லை) கோமளீஸ்வரன்பேட்டை ஆலயத்திலும்,கந்தகோட்டத்திலும் சாமி கும்பிட்டுவிட்டுத்தான் தனது அன்றாட அலுவல்களைத்தொடங்குவார்.அடிக்கடி காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கும்,சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கும் சென்று வருவார். அதேபோல,சாமி தரிசனம் செய்ய தஞ்சாவூருக்கும் அவ்வப்போது சென்று வருவதும் வழக்கம்.1794 மார்ச் 21 ஆம் நாள்,திருவையாற்றில் தனது 40வது வயதில் அவர் காலமானார். உயில் எழுதி வைத்து இறந்த வெகு சில இந்தியர்களில் பச்சையப்ப முதலியாரும் ஒருவர்.இந்து மதத்தைப் பரப்பவும்,பாதுகாக்கவும் நடத்தப்படும் செயல்பாடுகளுக்கு நாலரை லட்சம் ரூபாயும், இந்து இளைஞர்களின் ஆங்கில படிப்புக்கு உதவ ஏழு லட்சம் ரூபாயும்,தனது உயிலில் ஒதுக்கி இருந்தார்.அவர் 1794இல் விட்டுச் சென்ற சொத்தின் மதிப்பு ஏறத்தாழ 17லட்சம் ரூபாய். 1990இல் அதன் மதிப்பு 4,500 கோடி ரூபாயாகக்கணக்கிடப்பட்டுள்ளது. பச்சையப்ப முதலியாரின் சொத்துகளை நிர்வகித்து வரும் பச்சையப்பன் அறக்கட்டளை,ஆறு கல்லூரிகளையும்,ஒரு தொழிற்கல்வி நிலையத்தையும்,
16 பள்ளிகளையும் நடத்தி வருகிறது.



Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...