இயக்குனர் Sp.முத்துராமனின் வாழ்க்கையில் தேவரைப் பற்றிய அனுபவத்தைச் சொன்னது இது!. ஒரு முறை முத்துராமன் ஸ்டியோவிற்குள் நுழையும் போது தேவரின் கார் வெளியேறிக்கொண்டிருந்தது. முன் இருக்கையில் தேவர் அமர்ந்து கொண்டு இருப்பதைப் பார்த்த SPM தேவரைப்பார்த்து வணக்கம் சொன்னார்.அதை தேவர் கவனிக்கவில்லை. கார் கிளம்பிவிட்டது. ஆனால் SPM, தேவர் கவனிக்கவில்லை என்பதை கவனித்து விட்டதால் அவர் பதிலுக்கு வணக்கம் செலுத்தாததை பெரிதாக எண்ணாமல் செட்டில் தனது வேலையைக் கவனிக்க சென்று விட்டார். ஒரு பத்து நிமிடம் கழித்து மீண்டும் அந்த கார் அதே ஸ்டியோவில் நுழைந்தது. அதில் இருந்து இறங்கிய தேவர் நேராக முத்துராமன் இயக்கிக் கொண்டிருந்த படத்தளத்திற்குச் சென்று, முத்துராமனிடம், “தம்பி, மன்னிச்சிக்கோங்க!. நான் காரில் இருந்த போது நீங்கள் கும்பிட்டதை கவனிக்க வில்லை. டிரைவர் தம்பி சொன்னவுடம் ஓடி வருகிறேன்!. வணக்கம்! தம்பி!. “ என்றாராம். முத்துராமன் இதைச் சொல்லும் போதே அவருக்கு கொஞ்சம் வார்த்தைகள் தடுமாறின. எப்பேர்ப்பட்ட தயாரிப்பாளர், இந்தச் சம்பவம் நடக்கும் போது முத்துராமன் ஒரு சாதாரண இயக்குனராக மட்டுமே இருந்தார். பின்னர்தான் இரஜினியை வைத்து பல வெற்றிப் படங்களை இயக்கிய நட்சத்திர இயக்குனர் ஆனார். ஆனால் ஒரு சிறிய இயக்குனர் வணக்கம் சொன்னதற்கு, பதில் வணக்கம் தான் செலுத்தாததை ( தான் கவனிக்காமல் இருந்தால் கூட ) எண்ணி திரும்ப வந்து வணக்கம் சொன்னதை நினைத்தாலே, தேவரின் பண்பு வியக்க வைக்கிறது. இன்னொன்றையும் Sp.முத்துராமன் குறிப்பிட்டார். பொதுவாக, வினியோகஸ்தர்களுக்கு படத்திற்கு ஐந்தாண்டு உரிமை. அதற்க்குப் பின்னால் மீண்டும் அந்த உரிமையை தயாரிப்பாளர்கள், வேறு ஒரு வினியோகஸ்த்தருக்கு விற்பனை செய்வார்கள். இந்த முறையில் தயாரிப்பாளர்களுக்கு, மீண்டும் ஒரு வசூல் பார்க்க வாய்ப்பு. ஆனால் தேவர் அம்மாதிரி செய்வதில்லை. ஒரு முறை ஒரு வினியோகஸ்தருக்கு ஒரு படத்தை கொடுத்து விட்டால் அதோடு வெளியிடுவதற்கு உண்டான எல்லா உரிமையும் அந்தந்த வினியோகஸ்தர்களுக்கே!. இதற்கு தேவரின் வியாக்கியானம் என்னவென்றால் ‘ படத்தை வித்தாச்சி!. நடிகருங்க பணம் வாங்கியாச்சி!, எனக்கொரு லாபம் கிடைச்சாச்சி!, முருகனுக்கும் அவனுக்கு வேண்டிய லாபம் வந்தாச்சி!, அப்புறம் என்ன!’ என்பாராம். இதைச் சொல்லிய பிறகு SPM சொன்னது, இந்த மாதிரி அவர் செய்யாமல் இருந்தால் இன்றைக்கு தேவர் ஃபிலிம்ஸ் நஷ்டமடைந்து இருக்காது. அதை இந்த வருமானம் ஈடு கட்டி இருகும். தேவர் ஃபிலிம்ஸும் நொடித்திருக்காது!. நிஜம்தானே! எம்.ஜி.ஆர், இரஜினி படங்களின் ரீ கலக்ஷனே இன்றைய புதுப் படங்களின் வருமானத்தை மிஞ்சுமே!.
This blog is all about THE AGAMUDAYAR HISTORY. THANKS to BROTHERS BALAMURUGAN AGAMUDAYAR, IMALATHITHAN AGAMUDAYAR, SAKTHI AGAMUDAYAR & SIVA AGAMUDAYAR for the infos.
Wednesday, August 12
தேவரின் திருமுகமும், கொடு முகமும்!

Subscribe to:
Post Comments (Atom)
Featured post
மலயா கணபதி
மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...
-
பொதுவாக அகமுடையார் என்பதன் பொருள் நில உடைமையாளர், நம்பிக்கைக்குரியவர், பரந்த சிந்தனையாளர் என்று பலவாறாக பொருளில் இலக்கியங்கள் ஊடாக அ...
-
ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்த மருது சகோதரர்கள் 1801ஆம் ஆண்டு அக்டோபர் 24 அன்று சிவங்கங்கை மாவட்டம் திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டனர். வீ...
-
கோவையின் வளர்ச்சிக்கு அகமுடையார் இன மக்கள் பெரும் பங்காற்றியிருக்கிறார்கள் அகமுடையார் குடியேற்றங்கள் சேர நாட்டில் ஏற்பட்ட குழப்ப காலத்தில் ...
No comments:
Post a Comment