Friday, August 7

நாட்டுப்புறப் பாடல்களில் மருது பாண்டியர் வரலாறு


சிவகங்கைப் பகுதியில் வழங்கப்படும் கும்மிப் பாடல்களில் மருது பாண்டியர் வீரம், திருப்பணி, அரண்மனை கட்டியமை ஆகிய வரலாற்றுச் செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


"எள்ளைக் கழுவி இலையில் இட்டால்
கையில் எடுத்து எண்ணெயாய்த் தான் பிழிஞ்சு
உள்ளம் மகிழ உணவருந்தும் - மன
ஊக்கம் மிகக் கொண்ட பாண்டியனார் - மருதுபாண்டியனார்"

என்ற கும்மிப் பாடல் மருது பாண்டியரின் வலிமையை உணர்த்துகிறது.

"கருமலையிலே கல்லெடுத்து
காளையார் கொண்டு சேர்த்து
மருதைக் கோபுரம் தெரியக்கட்டிய
மருது வாராரு பாருங்கடி
குலவை போட்டு கும்மி அடியுங்கடி
கூடி நின்று கும்மி கொட்டுங்கடி"

என்ற பாடலில் இருந்த கருமலையிலிருந்து கல்லெடுத்து வந்து சிவன் கோயிலை மருது பாண்டியர் கட்டினார் என்ற வரலாறு தெரிய வருகிறது.

"செல்வம் மிகுந்த சிறுவயலில் - மன்னன்
சின்ன மருதுக்கு அரண்மனையாம்
சிவகங்கை அரண்மனைக்கு ஒப்பாக
சிறுவயல் தன்னில் மருதிருவர்
நவகோண அரண்மனை ஆசாரம் வாழ்ந்து
நாளும் உள்ளம் மகிழ்திருந்தார்"

No comments:

Post a Comment

Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...