Saturday, July 25

கோயம்புத்தூர் வீர அகமுடையார்கள் பற்றிய செய்தி :



சாட்சிகாரன் காலில் விழுவதை விட சண்டைகாரன் காலில் விழுவது மேல் என்ற பழமொழிக்கு இணங்க குறிப்பிட்ட பகுதி மக்கள் கோயம்புத்தூரில் அதிக வாழ்நாள் வேண்டி குறிப்பிட்ட கடவுளை வணங்குகிறார்கள்.அதில் வித்தியாசம் என்னவெனில் அவர்கள் வணங்குவது சிவனோ விஷ்ணுவோ இல்லை எமன் மரணத்தின் கடவுளை வணங்குகிறார்கள். இருப்பினும் அவர்களுக்கு சிவன் தன்னுடைய பக்தரான மார்கண்டேயனை காப்பாற்றி சாகா வரம் கொடுத்தார் என்றாலும் தங்களுக்கு அதைபோல் செய்யமாட்டார் அதனால் சிவனை வழிபடுவதை காட்டிலும் எமனை வழிபடுகின்றனர் தங்களின் ஆத்மாவை விரைவில் எடுக்க வேண்டாம் என்று. இருப்பினும் எமனை கும்பிடும் வழக்கம் கோயம்புத்தூரில் எமதர்மராஜா கோயிலை வெள்ளளூரில் அகமுடையார் சமுதாயத்தை சேர்ந்தவர் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டிய பின்பே தொடங்கியது. அகமுடையார்கள் போர்களங்களில் வலிமையாக போராடும் குணத்தை உடையவர்கள் என்பதனால் திருமலை நாயக்கர் மற்றும் சேதுபதிகள் அகமுடையார்களை படைதளபதிகள் மற்றும் படைவிரர்களாக பணியமர்த்தினர்.கொங்கு மண்டலம் திருமலை நாயக்கரின் கீழே வந்த பொழுது படைவீரர்களாக இருந்த அகமுடையார்கள் சூளூர், இருகூர், இராமநாதபுரம், குறிச்சி, வெள்ளளூர், பொளுவம்பட்டி, பேரூர் போன்ற இடங்களுக்கு குடிபெயர்ந்தனர்.ஆனால் எமன் கோயம்புத்தூரில் குடியமர்ந்தது அகமுடையார் ஒருவரின் கனவிற்கு அப்புறம் தான்.சுமார் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு கோயம்புத்தூரில் உள்ள இராமநாதபுரத்தில் வாழ்ந்த நஞ்சப்ப தேவர் என்பவர் கனவில் எமன் தோண்றி தனக்கு நோயல் ஆற்றின் அருகே தனக்கு கோயில் கட்ட வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளார்.அதன்பிறகு வெள்ளளூரில் அந்த இடத்தை கண்ட தேவர் அது ஒரு விவசாய நிலம் என்றும் அதன் உரிமையாளர் அந்தனர் என்பதையும் அறிந்து கொண்டார் பின்னர் நடந்தவற்றை விளக்கி கூறவும் அவர் தனது இடத்தில் கட்டிக்கொள்ள அனுமதி அளித்தார்.பின்னர் அந்த இடத்தில் தேவர் கோயில் கட்டினார். மற்ற கடவுளை போல நல்ல நேரத்தில் பூஜைகள் நடைபெறுவது இல்லை ஞாயிறுதோறும் 12.30 மணிக்கு எம கண்ட நேரத்தில் தான் இங்கே பூஜைகள் நடைபெறுகின்றன.தெற்கு நோக்கி அவருக்கு பிடித்த திசையில் கையில் பாசக்கயிரோடு எருமை மாட்டின் மீது அமர்ந்த படி சிலை உள்ளது.


தமிழகத்தில் பெரும்பாலான அகமுடையாரின் நிலை..!


»»» சேர்வை பட்டம் போடும் அகமுடையார்கள் சேர்வை பட்டம் போடுபவர்கள் மட்டுமே அகமுடையார்கள் என்று நினைக்கின்றனர்

»»»
தேவர் பட்டம் போடும் அகமுடையார்கள் தேவர் பட்டம் போடுபவர்கள் மட்டுமே அகமுடையார்கள் என்று நினைக்கின்றனர்

»»»
முதலியார் பட்டம் போடும் அகமுடையார்கள் முதலியார் பட்டம் போடுபவர்கள் மட்டுமே அகமுடையார்கள் என்று நினைக்கின்றனர்

»»»
பிள்ளை பட்டம் போடும் அகமுடையார்கள் பிள்ளை பட்டம் போடுபவர்கள் மட்டுமே அகமுடையார்கள் என்று நினைக்கின்றனர்

»»»
உடையார் பட்டம் போடும் அகமுடையார்கள் உடையார் பட்டம் போடுபவர்கள் மட்டுமே அகமுடையார்கள் என்று நினைக்கின்றனர்

இன்னும் பல பட்டங்கள் அகமுடையானுக்கு உள்ளது...

பட்டங்களினால் சிதறிக்கிடக்கும் ஒரே இனம் அகமுடையான் மட்டுமே..!

அகமுடையார் வரலாறு அறிவோம்



 எம்.ஆர்.மாயாண்டி சேர்வை




அகமுடையார் பேரினத்திற்காக அமைப்பு நடத்திய முன்னோர்களை நமது சொந்தங்கள் எத்தனை பேர்கள் அறிவீர், அகமுடையார் சமுதாயத்திற்காக 1975 ஆம் ஆண்டு மதுரையில் இருந்து "அகில இந்திய அகமுடையார் மகாசபை" என்ற அமைப்பை உருவாக்கி சிறப்பாக சமுதாய தொண்டாற்றியவர் திருமங்கலம் எம்.ஆர்.மாயாண்டி சேர்வை அவர்கள் ஆவார். "அகில இந்திய அகமுடையார் மகாசபை" அமைப்பின் நிறுவனராகவும், தலைவராகவும் சிறப்பாக தனது ஆயுள் உள்ளவரை செயலாற்றினார்.மேலும் இந்து மகாசபையின் மதுரை மாவட்ட தலைவராக இருந்தார். இவர் மிக சிறந்த ஓவியரும் ஆவர்.



மருது பாண்டியர்கள் 


மருதரசர்கள் திருவுருவ படத்தை சிம்மாசனத்தில் உள்ளவாறு  முதன்முதலில் வரைந்தவரும் இவரே.


நந்திதேவர்


நந்திதேவர் வரலாறு

           சிவன் கோவிலுக்கு சென்றிருப்பீர்கள் அங்கு வாசலில் நந்தி சிலை இருக்கும். இந்த நந்தி சிலை ஏன் வைக்கப்பட்டிருக்கிறது. இதன் வரலாறு பூலோகத்தில் சிவாதர் என்ற சிவபக்தர் வாழ்ந்தார். அவரது மனைவி சித்திரவதி. இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் சிவாதர் சிவனை நினைத்து தவம் செய்தார். தவத்தால் மனம் குளிந்த சிவன் அவரது எண்ணம் நிறைவேற ஆசிர்வதித்தார். காலங்கள் கழிந்தது.ஒரு நாள் சிவதார் நிலத்தை உழும்போது தங்கபேழை ஒன்றை கண்டார்.அதில் தங்கவிகரகம் போன்ற காளைக்கன்று வடிவிலான குழந்தை ஒன்று இருந்தது.அந்த குழந்தைக்கு நந்தி என்று பெயர் வைக்குமாறு சிவதார் காதில் சிவபெருமான ஓதினார்.நந்தி சிறு வயதிலேயே சாஸ்திரம், வேதங்களை கற்று 7வயதிலேயே ஞான பண்டிதராக விளங்கினார். இவர் மீது பற்று கொண்ட சிவன் நந்தி தேவர் எனஅழைக்குமாறு அசீரியாக ஒலித்தார்.நந்தி தேவருக்கு சுயஞ்சை என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தனர்.நந்திதேவரின் கால்கள், சமம், விசாரம்,சந்தோஷம், சாதுசங்கமம் எனும் நான்குவிதமாக குணத்தை வெளிப்படுத்துகிறது. சிவன் இவன் மீது தீவிர பற்று கொண்டதால், அவருக்கு நிகரான பலம் பெற்றவராகவே நந்திதேவர் கருதப்படுகிறார். தூய்மையான
வெண்மை நிறம் கொண்டவர் நந்திதேவர்.
இவர் அகம்படியர் (சைவம்) என்ற இனத்தை சேர்ந்தவர். அகம்படியர் என்ற சொல்லுக்கு காவல் என்ற பொருளும் உண்டு. அதனால் தான் சிவன் கோவிலில் நுழைவாயிலில்
நந்தி தேவர் காவல் தெய்வமாக நிற்கிறார். இவரிடம் உத்தரவு பெற்று தான்
சிவனை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம்.
பிரதோஷ நாட்களில் துர்தேவதைகளின் நடமாட்டம் அதிகம் இருக்கும். இதனால் தீமைகள் அதிகம் நடக்கும் இதற்காகத்தான்
நந்தியின் கொம்பில் நின்று சிவபெருமான் நடனமாடுகிறார். புரிந்துவிட்டதா? இனி யாராவது நீங்கள் செல்லும் வழியில் நின்றால், நந்தி மாதிரி குறுக்கே நிற்காதே என்று கூறாதீர்கள். அவர்கள் உங்களை காப்பவர் என்று சொல்லாமல் சொல்வதாகத்தான் பொருள்படும்.

 

Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...