Saturday, July 25

கோயம்புத்தூர் வீர அகமுடையார்கள் பற்றிய செய்தி :



சாட்சிகாரன் காலில் விழுவதை விட சண்டைகாரன் காலில் விழுவது மேல் என்ற பழமொழிக்கு இணங்க குறிப்பிட்ட பகுதி மக்கள் கோயம்புத்தூரில் அதிக வாழ்நாள் வேண்டி குறிப்பிட்ட கடவுளை வணங்குகிறார்கள்.அதில் வித்தியாசம் என்னவெனில் அவர்கள் வணங்குவது சிவனோ விஷ்ணுவோ இல்லை எமன் மரணத்தின் கடவுளை வணங்குகிறார்கள். இருப்பினும் அவர்களுக்கு சிவன் தன்னுடைய பக்தரான மார்கண்டேயனை காப்பாற்றி சாகா வரம் கொடுத்தார் என்றாலும் தங்களுக்கு அதைபோல் செய்யமாட்டார் அதனால் சிவனை வழிபடுவதை காட்டிலும் எமனை வழிபடுகின்றனர் தங்களின் ஆத்மாவை விரைவில் எடுக்க வேண்டாம் என்று. இருப்பினும் எமனை கும்பிடும் வழக்கம் கோயம்புத்தூரில் எமதர்மராஜா கோயிலை வெள்ளளூரில் அகமுடையார் சமுதாயத்தை சேர்ந்தவர் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டிய பின்பே தொடங்கியது. அகமுடையார்கள் போர்களங்களில் வலிமையாக போராடும் குணத்தை உடையவர்கள் என்பதனால் திருமலை நாயக்கர் மற்றும் சேதுபதிகள் அகமுடையார்களை படைதளபதிகள் மற்றும் படைவிரர்களாக பணியமர்த்தினர்.கொங்கு மண்டலம் திருமலை நாயக்கரின் கீழே வந்த பொழுது படைவீரர்களாக இருந்த அகமுடையார்கள் சூளூர், இருகூர், இராமநாதபுரம், குறிச்சி, வெள்ளளூர், பொளுவம்பட்டி, பேரூர் போன்ற இடங்களுக்கு குடிபெயர்ந்தனர்.ஆனால் எமன் கோயம்புத்தூரில் குடியமர்ந்தது அகமுடையார் ஒருவரின் கனவிற்கு அப்புறம் தான்.சுமார் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு கோயம்புத்தூரில் உள்ள இராமநாதபுரத்தில் வாழ்ந்த நஞ்சப்ப தேவர் என்பவர் கனவில் எமன் தோண்றி தனக்கு நோயல் ஆற்றின் அருகே தனக்கு கோயில் கட்ட வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளார்.அதன்பிறகு வெள்ளளூரில் அந்த இடத்தை கண்ட தேவர் அது ஒரு விவசாய நிலம் என்றும் அதன் உரிமையாளர் அந்தனர் என்பதையும் அறிந்து கொண்டார் பின்னர் நடந்தவற்றை விளக்கி கூறவும் அவர் தனது இடத்தில் கட்டிக்கொள்ள அனுமதி அளித்தார்.பின்னர் அந்த இடத்தில் தேவர் கோயில் கட்டினார். மற்ற கடவுளை போல நல்ல நேரத்தில் பூஜைகள் நடைபெறுவது இல்லை ஞாயிறுதோறும் 12.30 மணிக்கு எம கண்ட நேரத்தில் தான் இங்கே பூஜைகள் நடைபெறுகின்றன.தெற்கு நோக்கி அவருக்கு பிடித்த திசையில் கையில் பாசக்கயிரோடு எருமை மாட்டின் மீது அமர்ந்த படி சிலை உள்ளது.


No comments:

Post a Comment

Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...