Friday, February 2

மதுரை சிதம்பர பாரதி சேர்வை


1905-ம் ஆண்டு ரங்கசாமி சேர்வை, பொன்னம்மாள் தம்பதியினருக்குப் பதினாறாவது குழந்தையாக மதுரை வடக்கு மாசி வீதியில் இருந்த ‘ராமாயணச் சாவடி’ என்னும் இல்லத்தில் பிறந்தார் சிதம்பர பாரதி. ஐந்தாவது வயதிலேயே தந்தை இறந்து போக படிப்பு பாதியிலேயே நின்றது. ஆரம்பத்தில் பாலகங்காதர திலகரின் தலைமையில் போராடிய தீவிரவாதிகளான வ.உ. சிதம்பரம் பிள்ளை, சுப்ரமணியம் சிவா ஆகியோரின் வன்முறைப் போராட்டத்தில் நம்பிக்கை கொண்டு அவர்களின் வழியில் இயங்கினார். வீர் சாவர்க்கர் எழுதிய ‘1857 – முதல் சுதந்தரப் போர்’ என்ற நூல் வெள்ளையரால் தடை செய்யப்பட்டிருந்தது. அதைப் படிப்பவர்களும் விநியோகிப்பவர்களும் தேசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அந்த நேரத்தில் அதை மொழிபெயர்க்கச் செய்து காங்கிரஸ் மாநாடுகளில் விநியோகித்தார் சிதம்பர பாரதி. அந்த ஆண்டு 1927. (மொழிபெயர்த்தவர் டி.வி.எஸ். குடும்பத்தைச் சேர்ந்த டாக்டர் சௌந்தரம்.) 1928-ல் சென்னையில் ‘தேசோபகாரி’ என்ற பத்திரிகையை நடத்தினார். 1922-லிருந்து 1942 வரையிலான காலகட்டத்தில் ஏழு முறை - மொத்தம் 14 ஆண்டுகள் - வடநாட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டார்.மதுரையில் காந்தி ஜெயந்தி விழா 1942 அக்டோபர் 2-ம் தேதி கொண்டாடப்பட்டது. ஆண் போராளிகள் பெரும்பாலானோர் சிறையில் இருந்த நிலையில் பெண் தொண்டர்கள் ஓர் ஊர்வலம் நடத்தினர். அந்த ஊர்வலத்தைக் கலைத்து அனைத்து பெண்களையும் கைது செய்து, காட்டுப் பகுதிக்குள் கொண்டு சென்று அவர்களை நிர்வாணமாக்கிவிட்டுத் திரும்பி விட்டனர் போலீசார். அருகிலிருந்த கிராமத்து மக்கள்தான் அந்தப் பெண்களுக்குத் துணி கொடுத்து மானத்தைக் காப்பாற்றினர். இந்தக் காரியத்தைச் செய்த போலீஸ் அதிகாரி விஸ்வனாதன் நாயரைப் பழிவாங்குவதற்காக மதுரை இளைஞர்கள் பலர் ஒன்று சேர்ந்து அவர் மீது திராவகம் வீசினார்கள். அது சம்பந்தமாகக் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சிதம்பர பாரதி. சிறையிலிருந்து வெளிவந்த பின் தன் உறவுக்காரப் பெண்ணான பிச்சை அம்மாளை மணந்தார். பதினைந்து சகோதர சகோதரிகளோடு பிறந்த சிதம்பர பாரதிக்கு ஒரே மகள். பெயர் சண்முகவல்லி.சுதந்தரத்துக்குப் பிறகு காங்கிரஸ் சார்பில் மானாமதுரை தொகுதியில் போட்டியிட்டு 1957-ல் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மதுரையில் அவருடைய ஆரப்பாளையம் இல்லத்தில் 1987 ஏப்ரல் 30-ம் தேதி 82-வது வயதில் காலமானார்.

Saturday, December 23

ராமசாமி சேர்வை


தென்னாட்டு வீர மருது பாண்டிய மன்னன் வரலாற்று கும்மியின் ஆசிரியர் ராமசாமி சேர்வை அகமுடையார் இனத்தவர்கள் பற்றிய சிறு குறிப்பை கூறுகிறார் (பெரும்பாலும் அகம்படியர்கள் தங்கள் வரலாற்றை எழுதவில்லை மிகச்சிலரே எழுதியுள்ளனர்) அதில் சேர சோழ பாண்டிய மன்னர் மூவரும் ஒரே ஷத்திரிய குலத்தில் உதித்தவர்கள் இவர்களின் வழித்தோன்றல்களான பல்லவர்களும் சித்தர்பிரான் சுந்தரானந்தர்,வங்கி மன்னன் கந்தவர்மன்,கலிங்கத்து கொற்றவன் கருணாகரன்,திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளல்,தொண்டைமண்டலச் சீமான் பச்சையப்ப முதலியார்,திருச்சிராப்பள்ளி தாயுமான சுவாமிகளும்,சிவகங்கை மருது சகோதரர்களும் இந்த வழித்தோன்றல் என்பது சரித்திரம் கண்ட உண்மையாகும்.சிதம்பரம் நடராஜ கோயிலில் சிவபக்தியில் சிறந்த ஏழாயிரம் அகம்படியார் அணுக்கத் தொண்டர்கள் சேவை செய்தனர்.

Saturday, December 2

சேர்வைகாரன்

1844ல் ஆங்கிலேயர்கள் வெளியிட்ட தமிழ் ஆங்கில அகராதியில் சேர்வைகாரன் என்றால் சேனாதிபதி படைதலைவன் என்றே பொருள் குறித்துள்ளனர்.முதன்மை அதிகாரம் பெற்றவர்களாகவே அகமுடையார்கள் காலம் காலமாக வாழ்ந்துள்ளனர்.சோழர் பாண்டியர் கால கல்வெட்டுகளில் ஆரம்பித்து சேதுபதிகள் காலம் வரை அகமுடையார்கள் முதன்மையானவர்களாகவே திகழ்ந்துள்ளனர். அகமுடையாரின் ஒரு பிரிவாக சேர்வைகாரன் என்பதை குறித்து வைத்துள்ளனர் ஆனால் இப்போது அவ்வாறு எந்த பிரிவும் இருப்பதாக தெரியவில்லை.தென் தமிழகத்தை பொறுத்த வரை அகமுடையார்கள் சேர்வை பட்டம் கொண்டவர்களாக உள்ளனர்.வயிரவன் சேர்வைகாரர்,வெள்ளையன் சேர்வைகாரர், மருது சேர்வைகாரர் போன்ற பெரும் புகழ்பெற்ற அகமுடையார்கள் சேர்வைகாரர் பட்டம் சூடியவர்களே.



இராஜ குல அகமுடையார்கள் சேர்வை, சேர்வார் மற்றும் சேர்வாரன் என்று அழைக்கபடுகின்றனர்.

Friday, December 1

முதல் சமபந்தி விருந்து

அகமுடையார்கள் ஹிந்து சமயத்தவர்களாக பெரும்பாண்மையாக இருந்தாலும் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதங்களை தழுவிய அகமுடையார்கள் உண்டு. 



கணகராய முதலியார் என்னும் அகமுடையார் புதுச்சேரி பகுதியில் பிரஞ்சுகாரர்களுடன் வணிகம் செய்தார் அவருக்கு உதவியாக அவர் மகன் வேலவேந்திர முதலியும் ஈடுபட்டுவந்தார் திடிரென்று அவர் இறந்துவிட்டார் இதனால் பெரிதும் துயருற்ற கணகராயர் தன் மகன் நினைவாக 1745 நவம்பர் 30ல் செய்ன்ட ஆண்டருஸ் சர்ச் அமைத்தார்.இந்நாளே முதல் முறையாக சாதி மதம் கடந்து சமபந்தி விருந்து தமிழகத்தில் நடைபெற்றது கணகராயரால். ஆணந்தரங்க பிள்ளை தனது நாட்குறிப்பில் சமபந்தி விருந்து குறித்து பதிவு செய்துள்ளார்.

Thursday, November 30

டி.ராஜரத்தினம்


அகமுடையார் இனத்தில் பிறந் திமுக சார்பில் ஶ்ரீபெரும்புதூர் தொகுதியில் 1967 மற்றும் 1971 பூந்தமல்லி தொகுதியில் 1977 மற்றும் 1980ல் வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக இருந்தவர்.

Sunday, November 19

சுபேதார் சுலைமான்

மாமன்னர் பெரிய மருது பாண்டியருக்கு காளையார் கோவிலில் உள்ள காளீஸ்வரருக்கு ஒரு ராஜகோபுரம் மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ளதைப் போல் கட்ட வேண்டும் என்ற ஆசை அதற்கான ஆயத்த வேலைகள் தொடர்ந்து செய்து கொண்டு இருக்கும் போது அஸ்திவாரம் தோண்டும் போது பிரச்சனைகள் கட்டிடம் கட்ட முடியாமல் நீர் ஊற்று அதிகரித்து கட்டிடம் கட்ட தடைப்பட்டது அந்த சமயத்தில் சிறிய வயதுடைய ஒரு முகமதியர் பெயர் சுலைமான் பக்கிரி என்பவர் அந்த இடத்திற்கு வந்தார் அவர் யார் தெரியுமா...? ஆற்காட்டு நவாப் முகமதலியின் படையில் பணி ஆற்றிய ஒரு தலைசிறந்த வீரன் தான் சுலைமான் இவன் காளையார் கோயில் மீது படையெடுக்க சரியான தருணத்தை கணக்கிடுவதற்காகவும் மருது பாண்டியர்களின் படையின் வலிமையை அறிந்து கொள்ளவும் அங்குள்ள மக்களின் மனநிலையை அறிந்து சரியான நேரத்தில் படையெடுக்க ஆற்காடு நவாப்பால் அனுப்பப்பட்ட ஒற்றன் ஆவான் சந்தர்ப்பம் கிடைக்குமாயின் மருது பாண்டியரைக் கொலை செய்வதற்குக் கூட சுலைமானுக்கு யோசனை சொல்லப்பட்டதாம் அந்த சமயத்தில் அங்கு வந்த சுலைமான் மருது பாண்டியருக்கு வணக்கம் சொல்லிவிட்டு அதிகமாக வரும் நீர் ஊற்றை தான் தடுத்துவிடுவதாகச் சொல்கிறான் அதுகேட்டு மன்னர் மருதிருவர் மன மகிழ்ச்சி அடைகிறார்கள் உடனே சுலைமானுக்கு நீர் ஊற்றை அடைக்க தேவையானவற்றை கொடுக்க வேலையாட்களிடம் பணித்தார்கள் மருது பாண்டியர்கள்...!

சுலைமான் பத்து வண்டி அளவு அயிரை மீன்கள் வேண்டும் என்றார் அடுத்த நாள் காளையார் கோயிலுக்கு அருகில் உள்ள எல்லாப் பகுதிகளுக்கும் செய்தி அனுப்பி அயிரை மீன்களையும் அஸ்திவாரம் தோண்டிய நீர் தேக்கிய பகுதிகளில் சுலைமான் ஆற்று மணலுடன் சேர்த்துப் போட்டதால் ஒவ்வொரு மீனும் மணலைகளைக் கவ்விக்கொண்டு நீர் ஊற்றை அடைத்தது அதன் பின்னர் நீரின் கசிவு ஏற்படாததால் கோபுரம் கட்டும் வேலை சுணக்கம் இல்லாமல் தொடர்ந்து நடைபெற்றது இதனை கண்ட மாமன்னர் பெரிய மருது பாண்டியருக்கு மட்டற்ற மகிழ்ச்சி சுலைமானிடம் உனக்கு என்ன வேண்டும் என மருதரசன் கேட்டார் அதற்கு சுலைமான் எதுவும் வேண்டாம் என மறுத்துவிட்டார் இந்த சுலைமான் பல மொழி பேசும் திறமை பெற்றவர் அத்தோடு வானத்தில் பறக்கும் பறவையை குறிதவறாது வேட்டையாடும் கலையை நன்கறிந்தவர் அத்துடன் மல்யுத்தம், சிலம்பு ஆட்டம் கற்றறிந்தவர் மகா புத்திசாலி
அப்படிப்பட்டவரை மருது பாண்டியர்கள் அவர்கள் தனது அரண்மனையிலேயே அதன் உள்ளே உள்ள குதிரை லாயத்தின் முழுப் பொறுப்பையும் கவனிக்க முழு அதிகாரத்தை சுலைமானுக்கு கொடுத்து கௌரவித்தார்...!

காலப் போக்கில் மருது சகோதரர்களின் உண்மையான உணர்வுகளும் சிறந்த சிந்தனைகளும் அவர்களுக்கு மக்களிடத்தில் அவர்கள் காட்டும் அன்பையும் நேரில் பார்த்த பொழுது சுபேதார் சுலைமான் மனம் மாறினார் அவர் உளவாளியாக வந்த ஆற்காட்டருக்கு எந்த தகவலும் அனுப்பவில்லை இப்படிப் பல மாதங்கள் உருண்டோடின ஒரு நாள் பெரிய மருது பாண்டியர் சிவகங்கைக்கு அரசு வேலையாக சென்றிருந்தார் சின்ன மருது பாண்டியர் அவரின் நம்பிக்கைக்கு உரிய கரடிக் கறுத்தானைக் கூட்டிக் கொண்டு காளையார் கோயிலுக்கு சென்றார் (இந்தக் கரடி கறுத்தான் தான் பின்னாளில் வெள்ளையனின் பொருளுக்கு ஆசைப்பட்டு சின்ன மருது பாண்டியரை துப்பாக்கியால் சுட்டு காலை உடைத்து ஒரு மிருகம் போல வேட்டையாடி வெள்ளையனுக்கு காட்டிக் கொடுத்தவன்) அங்கு ஒரு வெள்ளை புறா பறந்து சென்றது சின்ன மருது பாண்டியர் தனது வளரியை எடுத்து பறந்து கொண்டிருந்த புறாவை நோக்கி வீசினார் குறிதவறாது புறா மீது வளரி தாக்கி புறா கீழே விழுந்து கொண்டிருந்தது அது தரையில் விழு முன் சுலைமான் புறாவை தனது கையில் பிடித்தார் அதை அருகில் இருந்து பார்த்த சின்ன மருது பாண்டியருக்கு ஒரே ஆச்சரியம் வளரியால் வீழ்த்திய புறாவை இடையிலேயே பிடிப்பவன் தனக்கு அடுத்து இந்த கரடி கறுத்தான் ஒருவனே ஆனால் இந்த வித்தை சுலைமானுக்கு எப்படித் தெரியும் என்று அப்பொழுது கறுத்தான் சுலைமானின் கையிலிருந்து புறாவைக் கவனித்தான் அதன் கால்களில் ஒரு துண்டுச் சீட்டு இருந்தது அதை உடனே சின்ன மருதுவும் நோக்கினார் அதன் எழுத்து உருது மொழியில் இருந்தது அதில் ஆற்காட்டான் எப்பொழுது காளையார் கோயிலுக்கு படையெடுத்து வரலாம் என சுலைமானின் யோசனையைக் கேட்டு எழுதி இருந்தது...!

இந்தச் செய்தியை படித்தமட்டில் சின்ன மருதுவுக்கு கோபம் எல்லை மீறிப் போய்விட்டது அடேய் ராஜதுரோகி உன்னை எனது அண்ணன் பெரிய மருது பாண்டியர் எப்படியெல்லாம் உயர்வாக நடத்துகிறார் அதற்கு நீ காட்டும் நன்றிக் கடன் இது...? என ஏக வசனத்தில் பேசிக் கொண்டிருந்தார் இது கண்டு சுலைமானுக்கு மிகுந்த மனவேதனை அடைந்தார் உடனே மன்னர் அவர்களே நான் சொல்லும் விளக்கத்தினை தயவுசெய்து செவிமடுத்துக் கேட்கவும் நான் ஒற்றனாய் வந்தது உண்மை ஆனால் இங்கு உங்களையும் பெரிய மன்னரையும் கண்டவுடன் அவர் ஆட்சியையும் அவர் நாட்டு மக்கள் மீது கொண்ட அன்பை பார்த்த பின்பு நான் வந்த வேலையை மறந்தேன் அத்தோடு ஆற்காட்டருக்கு எந்த பதிலும் அனுப்பவில்லை அதனால் தான் அவர்கள் எனது நோக்கம் அறிய புறா மூலம் தூதுவிட்டுள்ளனர் என்றார் சின்ன மருது பாண்டியர் எந்த விளக்கத்தையும் கேட்பதாக இல்லை உடனே அவருக்குத் தெரிந்த கத்திச் சண்டை, குத்துச் சண்டை, மல்யுத்தம் போன்ற வீர விளையாட்டில் எப்படியும் சுலைமானின் உயிரைப் போக்க வேண்டும் என முடிவு செய்தார் அதற்கு சுலைமானும் சளைக்காமல் சின்னமருதுவுக்கு சமமாக அவரும் ஈடு கொடுத்து சமாளித்தார் ஆனால் கடைசியில் சின்ன மருது பாண்டியர் அவர்களின் மர்ம அடி  நெற்றியில் பட்டு அக்கணமே சுலைமானின் உயிர் பிரிந்தது...!

சிவகங்கையில் உள்ள பெரிய மருது பாண்டியருக்கு இந்த துயரமான செய்தி கிடைத்தவுடன் மிகவும் மன வேதனைப்பட்டார் மனம் மாறிய சுலைமானை சின்ன மருது கொன்றுவிட்டானே என அப்பொழுது உள்ள அரசியல் சூழ்நிலையில் அப்படி ஒரு செயலை சின்ன மருது செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது போலும் தனது உண்மையான ஊழியன் என எண்ணப்பட்ட கரடிக் கறுத்தான் மருது பாண்டியரைக் காட்டிக் கொடுத்தான் ஆனால் ஒற்றனாய் வந்த சுலைமான மருதுவுக்கு அதரவாக இருந்துள்ளார் இது காலத்தின் கோலம் தானே பெரிய மருதுவின் மனம் அம்மாவீரனுக்கு அவரின் ஞாபகமாக பட்டரைக் கண்மாய் என்ற ஊரில் ஒரு பெரிய சமாதி ஒன்றைக் கட்டினார் அத்தோடு அவரின் சந்ததியினருக்கு பல நிலங்களை தானமாக கொடுத்தாராம் அந்த நினைவிடத்தில் இன்றும் விவசாய காலம் ஆரம்பிக்கும் பொழுதும் பின் அறுவடை நடைபெறும் காலத்திலும் சுபேதார் சுலைமானின் சமாதியில் காணிக்கை செலுத்தி அவரின் நினைவாக எல்லா சமூகத்தினரும் வணங்கிச் செல்வது அங்கு வழக்கமாக கொண்டுள்ளனர் இச்செய்தியை மறைந்த முன்னாள் அமைச்சர் தா. கிருஷ்ணன் அவர்கள் மருதுபாண்டியர் நினைவு நாளில் சொல்லக் கேட்டது...!



சுபேதார் சுலைமானின் சமாதி


பட்டரை கண்மாய் கிராமத்தில் மாமன்னர் பெரிய மருது பாண்டியரால் கட்டப்பட்ட சுலைமான் சமாதி தற்போது அவர்களது வாரிசுதார்களின் வசம் உள்ளது அவர்கள் தான் பராமரிப்பு செய்கிறார்கள்...!!!


தகவல் மற்றும் புகைப்பட உதவி: மருது பிரசன்னா அகமுடையார்

Wednesday, November 8

மாமன்னர் மருதுபாண்டியர்கள்

மருதுபாண்டியர்கள்

ஆங்கிலேயரை எதிர்த்து வீரமரணம் அடைந்த மருதுபாண்டியர்களின் இறுதி நொடி பொழுதினை மருதுபாண்டியர்கள் அரசு விழாவன்று ஓவியமாக வெளியிட்டு மாமன்னர் மருதரசர்களின் தியாகங்களை நினைவு கூர்ந்தனர் மருது வரலாறு மீட்புகுழுவினர்.



புகைப்பட உதவி:மருது பிரசன்னா

Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...