Monday, March 6

M.D.தியாகராஜ பிள்ளை


திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற  தொகுதியில் 1952,1957,1962 ஆகிய தேர்தல்களில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்றுள்ளார்.1958ல் அகமுடையார் மாநில சங்கத்தை சென்னையில் நிறுவி சமூக தொண்டாற்றினார்.

கோ.ஐய்யப்பன்

கடலூர் சட்டமன்ற உறுப்பினராக 2006-2011 வரை திமுக சார்பில் இருந்தவர்.

Wednesday, February 22

வீ .நாராயணசாமி அகம்படியர்



மதுரை ஜில்லா ஹிந்துமகாசபை மாகாண கமிட்டி மெம்பராக இருந்து பல நற்காரியங்கள் செய்தவர்.

Thursday, February 9

மருது பாண்டியரிடம் இருந்த கமுதி கோட்டை


கமுதி கோட்டை சுமார் 300 வருடங்களுக்கு முன்பு உடையத்தேவர் என்னும் விஜய ரகுநாத சேதுபதியால் பிரெஞ்சு பொறியாளர்களை கொண்டு  கட்டப்பதாகும்.மருது பாண்டியர் கையில் இக்கோட்டை சில காலம் இருந்தது அப்போது ஊமைத்துரை இக்கோட்டையில் தங்கி இருந்ததாகவும் நம்பபடுகிறது.பாஞ்சாலகுருச்சியின் வீழ்ச்சிக்கு பின்னர் ஆங்கிலேயரின் கைகளுக்கு சென்றது.


கமுதி கோட்டை மேடு மருது சிலைகள் 



Saturday, January 28

கோவை அகமுடையார் பிரிவுகள்

கோவையின் வளர்ச்சிக்கு அகமுடையார் இன மக்கள் பெரும் பங்காற்றியிருக்கிறார்கள் அகமுடையார் குடியேற்றங்கள் சேர நாட்டில் ஏற்பட்ட குழப்ப காலத்தில் இருந்து தொடங்குகிறது பின்னர் மதுரை ராமநாதபுரம் ஆற்காடு பகுதியில் இருந்து குடியேற்றங்களும் நாயக்கர் படையில் வந்தவர்கள் சேதுபதிகளிடம் ஏற்பட்ட மோதலினால்  குடியேறியவர்கள் பஞ்ச கால குடியேற்றம் என ஒவ்வொரு காலகட்டங்களிலும் கொங்கு பகுதியில் அகமுடையார் குடியேற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது.

இரத்தின சபாபதி முதலியார்  இவருடைய பெயரில் அமைந்துள்ளதே ஆர்.எஸ்.புரம்

அகமுடையார் சமூகத்தினர் அகம்படிய தேவர் என்றும் வெற்றிலைக்கார தேவர் சமூகம் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

அகமுடையரில் ஒரு பிரிவினர்  எமதர்மரை  குல தெய்வமாக வணங்குகின்றனர்.


பிரிவுகள்:


1.ராஜ  குல அகமுடையார் 
2.துளுவ வேளாள அகமுடையார் 
3.கோட்டை பற்று அகமுடையார்
4.இரும்புத்தலை அகமுடையார் 
5.ஐவளி நாடு அகமுடையார்


கோவை பகுதியில் வெள்ளலூர்,சூலூர்,இருகூர், பள்ளபாளயம்,ஒட்டபாளயம்,இராசிபாளயம்,உடையாம்பாளயம்,ஆண்டிபாளையம் போன்ற இடங்களில் வசிக்கின்றனர்

பொள்ளாச்சி பகுதியில் ஒத்தக்கால் மண்டபம், கிணத்துக்கிடவு,பொள்ளாச்சி,குறும்ப பாளையம்,செல்லம்பாளையம்,செட்டிப்பாளையம் போன்ற இடங்களில் வசிக்கின்றனர்

உடுமலை  பகுதியில் கண்ணாடிபுதூர்,ஆண்டிபாளையம்

திருப்பூர் பகுதியில் திருப்பூர்,பெரிச்சம்பாளையம், மங்கலம், செட்டிபாளையம்,கருவலம்பபாளையம்

மேலும் கோதவாடி,தேவன்பாடி, வீரப்பகவுண்டன்புதூர்,தென்னம்பாளையம்,குறும்பபாளையம்,எம்மாண்டாம்பாளையம்,செட்டிக்காபாளையம் போன்ற இடங்களில் வசிக்கின்றனர்.

ராமலிங்க செட்டியார் கோவையின் முதல் எம்.பி

பட்டங்கள்:


தேவர்
சேர்வை
முதலியார்
மணியகாரன்
செட்டியார்
கொங்கன்
குடகன்
வேந்தன்
மலையான்
புலவர்
உதியன்
வாத்தியார்
கணக்கன்

சிவகங்கை அகமுடையார் பிரிவுகள்

சிவகங்கை என்றாலே நினைவுக்கு வருபவர்கள் மருது பாண்டியர்களும் அவர்களின் ஆங்கிலேய எதிர்ப்பு போராட்டங்களுமே.


ஆவாரங்காடு பகுதியில் உள்ள கலைஅரங்கம் மேல் உள்ள மருதிருவர் சிலைகள்


சிவங்ககை மாவட்டங்களில் அகமுடையார் இன மக்கள் பெருந்தொகையினராய் வாழ்கின்றனர். சிவகங்கை, மானாமதுரை, தேவகோட்டை,காரைக்குடி மற்றும் திருப்பத்தூர் என மாவட்டத்தின் அனைத்து பகுதியிலும் பரவி வாழ்கின்றனர்.


கோட்டைப்பற்று அகமுடையார் திருமண மண்டபம்


1.ராஜகுல அகமுடையார்
2.ராஜபோஜ அகமுடையார்
3.ராஜவாசல் அகமுடையார்
4.கோட்டைப்பற்று அகமுடையார்

பிரிவுகள் இப்பகுதியில் காணப்படுகின்றனர்.

மானாமதுரை வட்டம் வீரநாரயண தேவன்பட்டியில் உள்ள மருதிருவர் சிலைகள்

Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...