This blog is all about THE AGAMUDAYAR HISTORY. THANKS to BROTHERS BALAMURUGAN AGAMUDAYAR, IMALATHITHAN AGAMUDAYAR, SAKTHI AGAMUDAYAR & SIVA AGAMUDAYAR for the infos.
Friday, February 23
Wednesday, February 21
Thursday, February 8
Wednesday, February 7
அம்மணி அம்மாள்
அம்மணி அம்மாள் பழந்தமிழ் குடியான அகமுடையார் இனத்தில் பிறந்தவர் திருவண்ணாமலையில் வாழ்ந்த பெண் சித்தராவார்.திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோயில் வடக்கு கோபுரத்தினை கட்டிய பெருமை உடையவர்.
இவருடைய ஜீவ சமாதி திருவண்ணாமலை ஈசான்ய லிங்க கோயிலின் எதிரே அமைந்துள்ளது.இவர் திருவண்ணாமலை அருகேயுள்ள சென்ன சமுத்திரம் என்ற ஊரில் பிறந்தவர் திருவண்ணாமலை அருணாச்சலேசுவர் கோயிலின்
வடக்குக் கோபுரம் பாதி மட்டுமே கட்டப்பட்ட நிலையைக் கண்டு, அதனைக் கட்ட
எண்ணம் கொண்டார். இதற்காகப் பக்தர்கள், செல்வந்தர்களின் உதவியை நாடி
கோபுரத்தினைக் கட்டி முடித்தார். திருவண்ணாமலையின் வடக்குக் கோபுரம்
அம்மணியம்மாள் கோபுரம் என்றே அழைக்கப்படுகின்றது.
இவர் பூமிக்குள் புதைந்திருக்கும் புதையலையே அறிந்து கொள்ளும் வல்லமை வாய்ந்தவர் என்று கூறிகின்றார்கள்.அம்மணியம்மாளின் இயற்பெயர் அருள்மொழியாகும். இவர் திருவண்ணாமலை அருகேயுள்ள சென்ன சமுத்திரம் என்ற கிராமத்தில் பிறந்தவர். சைவக் கடவுளான சிவபெருமான் மீது அளவற்ற பக்தியைக் கொண்டிருந்தார். பெற்றோருடன் ஒரு முறை அண்ணாமலைக்கு வந்த போது, மீண்டும் கிராமத்திற்குத் திரும்ப மறுத்து அண்ணாமலையிலேயே தங்கிவிட்டார். அதன் பிறகு பருவம் வந்த போதும் திருமணம் செய்து கொள்ளாமல் துறவியாக வாழ்ந்தார்.நமசிவாய மந்திரத்தினை உச்சரித்து திருநீறு தந்து எண்ணற்றவர்களின் நோய்களையும், வாழ்க்கைப் பிரச்சனைகளையும் தீர்த்து வைத்தார். அண்ணாமலையார் கோயிலின் வடக்குக் கோபுரம் பாதி கட்டப்பட்ட நிலையில் இருப்பது கண்டு மனம் வருந்தினார். பின் தாமே முன்வந்து கோபுரத்தினைக் கட்ட முடிவு செய்தார். அதற்கான பொருட் செலவுகளை நன்கொடைகள் மூலம் பெற்றார். ஒரு முறை செல்வந்தர் ஒருவரின் வீட்டிற்குச் சென்று கோபுரத்தினைக் கட்ட பணம் கேட்ட பொழுது, அச்செல்வந்தர் பணத்தினை வைத்துக் கொண்டு தன்னிடம் பணமே இல்லையென்றார். ஆனால் அண்ணாமலையாரின் அருள் பெற்ற அம்மணி அம்மாள், அச்செல்வந்தரிடம் இருக்கும் தொகையைச் சரியாகக் கூறி அப்பணத்தினை நன்கொடையாகக் கேட்டார். தன்னிடம் இருப்பதை அறிந்து சரியாகக் கூறும் அம்மாளை வணங்கி அச்செல்வந்தர் பணத்தினைக் கொடுத்ததாக ஒரு தொன்மக் கதையுண்டு.
அம்மணி அம்மாள் 17ம் நூற்றாண்டின் இறுதியில் ஜீவ சமாதியடைந்தார்.இவரது சமாதி ஈசான்ய லிங்க சன்னதிக்கு எதிரில் அமைந்துள்ளது.இந்த மடத்தில் தீபத்திருவிழா வழிபாடு சிறப்பாகும்.திருவண்ணாமலையில் தீபம் ஏற்றியதும், அம்மணி அம்மாளின் ஜீவசமாதியில்
நெய்தீபம் ஏற்றப்படும். மடத்தின் முன்பு பக்தர்கள் தீபம் ஏற்படுத்தி
வழிபடுகின்றார்கள்.இம்மடத்தில் கொடுக்கப்படும் விபூதி பிரசாதம் புகழ்பெற்றது
அம்மணி அம்மாள் |
அம்மணி அம்மன் கோபுரம் (171 அடி உயரம்) |
இவர் பூமிக்குள் புதைந்திருக்கும் புதையலையே அறிந்து கொள்ளும் வல்லமை வாய்ந்தவர் என்று கூறிகின்றார்கள்.அம்மணியம்மாளின் இயற்பெயர் அருள்மொழியாகும். இவர் திருவண்ணாமலை அருகேயுள்ள சென்ன சமுத்திரம் என்ற கிராமத்தில் பிறந்தவர். சைவக் கடவுளான சிவபெருமான் மீது அளவற்ற பக்தியைக் கொண்டிருந்தார். பெற்றோருடன் ஒரு முறை அண்ணாமலைக்கு வந்த போது, மீண்டும் கிராமத்திற்குத் திரும்ப மறுத்து அண்ணாமலையிலேயே தங்கிவிட்டார். அதன் பிறகு பருவம் வந்த போதும் திருமணம் செய்து கொள்ளாமல் துறவியாக வாழ்ந்தார்.நமசிவாய மந்திரத்தினை உச்சரித்து திருநீறு தந்து எண்ணற்றவர்களின் நோய்களையும், வாழ்க்கைப் பிரச்சனைகளையும் தீர்த்து வைத்தார். அண்ணாமலையார் கோயிலின் வடக்குக் கோபுரம் பாதி கட்டப்பட்ட நிலையில் இருப்பது கண்டு மனம் வருந்தினார். பின் தாமே முன்வந்து கோபுரத்தினைக் கட்ட முடிவு செய்தார். அதற்கான பொருட் செலவுகளை நன்கொடைகள் மூலம் பெற்றார். ஒரு முறை செல்வந்தர் ஒருவரின் வீட்டிற்குச் சென்று கோபுரத்தினைக் கட்ட பணம் கேட்ட பொழுது, அச்செல்வந்தர் பணத்தினை வைத்துக் கொண்டு தன்னிடம் பணமே இல்லையென்றார். ஆனால் அண்ணாமலையாரின் அருள் பெற்ற அம்மணி அம்மாள், அச்செல்வந்தரிடம் இருக்கும் தொகையைச் சரியாகக் கூறி அப்பணத்தினை நன்கொடையாகக் கேட்டார். தன்னிடம் இருப்பதை அறிந்து சரியாகக் கூறும் அம்மாளை வணங்கி அச்செல்வந்தர் பணத்தினைக் கொடுத்ததாக ஒரு தொன்மக் கதையுண்டு.
Friday, February 2
மதுரை சிதம்பர பாரதி சேர்வை
1905-ம் ஆண்டு ரங்கசாமி சேர்வை, பொன்னம்மாள் தம்பதியினருக்குப் பதினாறாவது குழந்தையாக மதுரை வடக்கு மாசி வீதியில் இருந்த ‘ராமாயணச் சாவடி’ என்னும் இல்லத்தில் பிறந்தார் சிதம்பர பாரதி. ஐந்தாவது வயதிலேயே தந்தை இறந்து போக படிப்பு பாதியிலேயே நின்றது. ஆரம்பத்தில் பாலகங்காதர திலகரின் தலைமையில் போராடிய தீவிரவாதிகளான வ.உ. சிதம்பரம் பிள்ளை, சுப்ரமணியம் சிவா ஆகியோரின் வன்முறைப் போராட்டத்தில் நம்பிக்கை கொண்டு அவர்களின் வழியில் இயங்கினார். வீர் சாவர்க்கர் எழுதிய ‘1857 – முதல் சுதந்தரப் போர்’ என்ற நூல் வெள்ளையரால் தடை செய்யப்பட்டிருந்தது. அதைப் படிப்பவர்களும் விநியோகிப்பவர்களும் தேசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அந்த நேரத்தில் அதை மொழிபெயர்க்கச் செய்து காங்கிரஸ் மாநாடுகளில் விநியோகித்தார் சிதம்பர பாரதி. அந்த ஆண்டு 1927. (மொழிபெயர்த்தவர் டி.வி.எஸ். குடும்பத்தைச் சேர்ந்த டாக்டர் சௌந்தரம்.) 1928-ல் சென்னையில் ‘தேசோபகாரி’ என்ற பத்திரிகையை நடத்தினார். 1922-லிருந்து 1942 வரையிலான காலகட்டத்தில் ஏழு முறை - மொத்தம் 14 ஆண்டுகள் - வடநாட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டார்.மதுரையில் காந்தி ஜெயந்தி விழா 1942 அக்டோபர் 2-ம் தேதி கொண்டாடப்பட்டது. ஆண் போராளிகள் பெரும்பாலானோர் சிறையில் இருந்த நிலையில் பெண் தொண்டர்கள் ஓர் ஊர்வலம் நடத்தினர். அந்த ஊர்வலத்தைக் கலைத்து அனைத்து பெண்களையும் கைது செய்து, காட்டுப் பகுதிக்குள் கொண்டு சென்று அவர்களை நிர்வாணமாக்கிவிட்டுத் திரும்பி விட்டனர் போலீசார். அருகிலிருந்த கிராமத்து மக்கள்தான் அந்தப் பெண்களுக்குத் துணி கொடுத்து மானத்தைக் காப்பாற்றினர். இந்தக் காரியத்தைச் செய்த போலீஸ் அதிகாரி விஸ்வனாதன் நாயரைப் பழிவாங்குவதற்காக மதுரை இளைஞர்கள் பலர் ஒன்று சேர்ந்து அவர் மீது திராவகம் வீசினார்கள். அது சம்பந்தமாகக் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சிதம்பர பாரதி. சிறையிலிருந்து வெளிவந்த பின் தன் உறவுக்காரப் பெண்ணான பிச்சை அம்மாளை மணந்தார். பதினைந்து சகோதர சகோதரிகளோடு பிறந்த சிதம்பர பாரதிக்கு ஒரே மகள். பெயர் சண்முகவல்லி.சுதந்தரத்துக்குப் பிறகு காங்கிரஸ் சார்பில் மானாமதுரை தொகுதியில் போட்டியிட்டு 1957-ல் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மதுரையில் அவருடைய ஆரப்பாளையம் இல்லத்தில் 1987 ஏப்ரல் 30-ம் தேதி 82-வது வயதில் காலமானார்.
Saturday, December 23
ராமசாமி சேர்வை
தென்னாட்டு வீர மருது பாண்டிய மன்னன் வரலாற்று கும்மியின் ஆசிரியர் ராமசாமி சேர்வை அகமுடையார் இனத்தவர்கள் பற்றிய சிறு குறிப்பை கூறுகிறார் (பெரும்பாலும் அகம்படியர்கள் தங்கள் வரலாற்றை எழுதவில்லை மிகச்சிலரே எழுதியுள்ளனர்) அதில் சேர சோழ பாண்டிய மன்னர் மூவரும் ஒரே ஷத்திரிய குலத்தில் உதித்தவர்கள் இவர்களின் வழித்தோன்றல்களான பல்லவர்களும் சித்தர்பிரான் சுந்தரானந்தர்,வங்கி மன்னன் கந்தவர்மன்,கலிங்கத்து கொற்றவன் கருணாகரன்,திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளல்,தொண்டைமண்டலச் சீமான் பச்சையப்ப முதலியார்,திருச்சிராப்பள்ளி தாயுமான சுவாமிகளும்,சிவகங்கை மருது சகோதரர்களும் இந்த வழித்தோன்றல் என்பது சரித்திரம் கண்ட உண்மையாகும்.சிதம்பரம் நடராஜ கோயிலில் சிவபக்தியில் சிறந்த ஏழாயிரம் அகம்படியார் அணுக்கத் தொண்டர்கள் சேவை செய்தனர்.
Subscribe to:
Posts (Atom)
Featured post
மலயா கணபதி
மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...
-
பொதுவாக அகமுடையார் என்பதன் பொருள் நில உடைமையாளர், நம்பிக்கைக்குரியவர், பரந்த சிந்தனையாளர் என்று பலவாறாக பொருளில் இலக்கியங்கள் ஊடாக அ...
-
ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்த மருது சகோதரர்கள் 1801ஆம் ஆண்டு அக்டோபர் 24 அன்று சிவங்கங்கை மாவட்டம் திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டனர். வீ...
-
கோவையின் வளர்ச்சிக்கு அகமுடையார் இன மக்கள் பெரும் பங்காற்றியிருக்கிறார்கள் அகமுடையார் குடியேற்றங்கள் சேர நாட்டில் ஏற்பட்ட குழப்ப காலத்தில் ...