கல்வி நிலையங்களிலும் ஜாதிப் பாகுபாடு தலைவிரித்தாடிய அந்த காலகட்டத்தில், தனது பள்ளியில் அனைத்து ஜாதிகளைச் சேர்ந்தவர் களையும் சேர்த்துக்கொண்டார். 1957-ல் பெண் கல்விக்காக கல்லூரி ஒன்றைத் தொடங்கினார். அது தற்போது அவிநாசிலிங்கம் மனை யியல் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக உள்ளது. இவர் எழுதிய திருக்கேதாரம் என்ற பயண நூல் மிகவும் பிரசித்தம். மேலும் பொருளா தாரம், காந்தியின் கல்விக் கொள்கை குறித்தும் எழுதியுள்ளார்.1946-ல் சென்னை சட்டமன்ற மேலவை உறுப்பினராகத் தேர்ந் தெடுக்கப்பட்டார். டி. பிரகாசம், ஓ.பி. ராமசாமி ரெட்டியார் ஆகியோரின் சென்னை மாகாண அமைச்சரவையில் கல்வியமைச்சராகப் பணியாற்றினார். பள்ளிகளில் தமிழை பயிற்று மொழியாகக் கொண்டு வந்தார். 1946-ல் தமிழ் வளர்ச்சிக் கழகத்தை நிறுவினார். இந்த அமைப்பு, தமிழில் முதன் முறையாக பத்து அதிகாரங்கள் கொண்ட என்சைக்ளோபீடியாவை வெளியிட்டது.நூலகங்களை சீரமைத்தார். பாரதியார் பாடல்களை தேசிய மயமாக்கினார். ஆறாம் வகுப்பிலிருந்து திருக்குறளைப் பாடத்திட்டத் தின் ஓர் அங்கமாக அறிமுகம் செய்தார். 1952-ல் திருப்பூர் நாடாளு மன்ற தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.1958 முதல் 1964 வரை மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றினார். 1975-ல் இவரது தலைமையிலான ஒரு குழு சிறுவர் கலைக்களஞ்சியம் ஒன்றை வெளியிட்டது. சிறந்த விவசாயக் கொள்கை மட்டுமே வெற்றிகரமான தொழில்மயமாக்கலுக்கு நம்மை இட்டுச் செல்லும் என்று நம்பினார்.1970-ம் ஆண்டு இவருக்கு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது, ஜி.டி. பிர்லா விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. சமூக சீர்திருத்தவாதி, சமூக சேவகர், விடுதலைப் போராட்ட வீரர், தமிழ் வளர்ச்சிக்கு பெரும் தொண்டாற்றியவர், சிறந்த அரசியல்வாதி, தலைசிறந்த கல்வியாளர் எனப் பன்முகப் பரிமாணம் கொண்ட டி.எஸ். அவிநாசிலிங்கம் செட்டியார், 1991-ம் ஆண்டு, நவம்பர் மாதம், 88-வது வயதில் காலமானார்.
- ராஜலட்சுமி சிவலிங்கம்
No comments:
Post a Comment