சோழ பேரரசின் கிழக்கு எல்லை வேதாரண்யம் மற்றும் கோடியக்கரைஉலகின் தலைசிறந்த கடற்படை சோழர்களின் கடற்படை. கோடியக்கரை என்பது சோழர்களின் ஒரு முக்கியமான துறைமுகம்.இது போர்படை துறைமுகமாக மட்டுமே இருந்தது.சோழர்களின் மிக முக்கிய படைகளில்கோட்டைபற்று தேவர்கள் ஒன்று.
கோட்டைபற்று அகமுடையார்களின் கோட்டை காக்கும் முறை:
கோட்டை என்பது மன்னனின் அரண்மனை ,கருவுலம்(கஜானா), ஆயுத கிடங்கு , அமைச்சர்கள் மற்றும் அரச குடும்பத்தினர்கள் ,அனைத்து தலைமை அலுவலகங்கள் அனைத்தும் உள்ளடங்கியது இதனைத்தையும் சுற்றி வானுயர்ந்த மதில் எழுப்ப பற்றிருக்கும்.அதன் பிறகு அகழி ஒன்று கோட்டையை சுற்றி தோண்ட பற்றிருக்கும் அதில் கொடிய முதலைகள் விட பற்றிருக்கும்.இப்படி பட்ட கோட்டை காவல் மற்றும் கோட்டையின் தினசரி செயல்பாடுகள் அனைத்தும். இவர்கள் வசமே இருந்தது .
வேல் ,வில்,அம்பு ,வாள் ,அரிவாள் ,கொதிக்கும் எண்ணெய்(மதில் மேல் ஏறி வருபவர்கள் மீது ஊற்ற), மற்றும் பல ஆயுதங்கள் கொண்டு கோட்டையை காத்தனர் கோட்டைக்குள் யார் எப்போது வர வேண்டும் என்று நிர்ணயக்கும் அதிகாரம் இவர்களிடம் மட்டுமே இருக்கும். இலச்சினை இல்லாத எவரும் கோட்டைக்குள் அனுமதிகவோ முக்கிய
அதிகாரிகளை பார்க்கவோ முடியாது.நாடு முற்றிலும் எதிரிகள் ஆக்ரமித்த
பிறகும்.கோட்டைக்குள் அவர்கள் நுழையாத படி அம்பு மழை போல்
எய்து எதிரிகளை விழ்த்தி கோட்டையை காத்தனர்.
No comments:
Post a Comment