Sunday, August 2

பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்

தமிழ்நாட்டில் இராமேசுவரம் தீவில் அமைந்துள்ள பாம்பன் என்ற ஊரில் பிறந்து வடமொழி,தென்மொழி இரண்டிலும் புலமைபெற்று ஆறுமுகனை வழிபட்டு வந்த ஓர் தமிழ்த்துறவி ஆவார்.திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் வழியில் சித்திரக் கவிகள் எழுதியுள்ளார். தனது வாழ்நாள் முழுவதும் தமிழுக்கும் சைவ நெறியாகிய குகப்ரம்ம நெறிக்கும் தனது பாடல்களாலும்,சாத்திரங்களாலும் தொண்டாற்றினார். முருகனின்
வழிபாடாக இவர் இயற்றிய பாடல்கள் 6666. இவை ஆறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவரியற்றிய சண்முக கவசம் புகழ்பெற்றது. பாம்பன் சுவாமிகள் மே 30, 1929 அன்று சமாதி அடைந்தார்.அவரது சமாதி கோவில் சென்னை ,திருவான்மியூரில் உள்ளது.



வாழ்க்கைக் குறிப்பு:

பழந்தமிழ்க் குடியான அகம்படியர் குடியில் சாத்தப்பப் பிள்ளை என்பாருக்கும் செங்கமலம் என்பாருக்கும் மகனாக தோராயமாக 1850 ஆம் ஆண்டு இராமேசுவரத்தை அடுத்த பாம்பனில் பிறந்தார்.இவரது இயற்பெயர்
அப்பாவு என்பதாகும். 1866 ஆம் ஆண்டு உள்ளூர் கிருத்துவப் பள்ளியில் பயின்றார். முனியாண்டிப் பிள்ளை என்பாரிடம் தமிழ் கற்றார்.சிறுவயதில் இவருக்கு கந்தர் சஸ்டிக் கவசம் மிகவும் ஈர்த்த நூலாகும்.இதுவே இவர் பின்னாளில் சண்முக கவசம் இயற்ற தூண்டுதலாக இருந்தது.சேது மாதவ அய்யர் என்பாரிடம் வடமொழியும் கற்கலானார்.தமது 12,13 வயதிலேயே கவிபாடும் திறமை பெற்றிருந்தார். இவருடைய முதல் பாடல் ஆசுகவியாக உருவாகிய "கங்கையைச் சடையில் பதித்து" எனத் தொடங்குவது. அருணகிரிநாதரை ஞானகுருவாகக் கொண்ட இவர் பின்னாளில் உபய அருணகிரிநாதர்என்ற பெயரும் பெற்றார்.இவருக்கு அகவை 25ஐ எட்டிய பொழுது மதுரை சின்னக்கண்ணு பிள்ளை மகளாகிய காளிமுத்தம்மாளை 1878ஆம் ஆண்டு வைகாசித்திங்களில் இராமநாதபுரத்தில் திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு முருகையபிள்ளைசிவஞானாம்பாள், குமரகுருதாசபிள்ளை என மூன்று மகவுகள் பிறந்தனர்.1894ஆம் ஆண்டு இராமநாதபுரத்திலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிரப்பன்வலசை என்ற ஊரில் நிட்டையில் இறங்கினார். 35 நாட்கள் அருந்தவம் புரிந்த நிலையில் இவருக்கு முருகப் பெருமானே உபதேசம் நல்கியதாக இவரது சீடர்கள் நம்புகின்றனர். இவரது கனவுகளில் முருகன் வழிநடத்துவதாகவும் அவர்கள் நம்புகின்றனர். இவ்வாறான வழிகாட்டலில் அவர் சென்னை சென்றார். அங்கிருந்து பல தலங்களுக்கு சமயப் பயணங்கள் மேற்கொண்டார்.அப்போது அவருடன் பழகிய திரு. வி. க இவ்வாறு கூறுகிறார் "குமரகுரு திருவல்லிக்கேணியில் தங்கியிருந்தபோது நாடோறும் மாலை வேளையில் கடற்கரை செல்வர்.அவருடன் யானும் போவேன். அடிகள் வடமொழி உபநிடதக் கருத்துக்களைத் தமிழில் விளக்குவர். சாத்திர நுட்பங்களை எளிதில் வெளியிடுவர்"
திரு.வி.க.வாழ்க்கை குறிப்பு பக்கம் 127. 1923ஆம் ஆண்டு திசம்பர் 27அன்று சென்னை தம்பு செட்டி வீதியில் சென்று கொண்டிருந்த சுவாமிகள் மீது, குதிரை வண்டிச்சக்கரம் இடது கணைக்கால் மீது ஏறியதால் கால் எலும்பு முறிந்து சுவாமிகள் பொதுமருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். இந்த விபத்து நடந்த போது பாம்பன் சுவாமிகளின் வயது 73.ஆங்கிலேய மருத்துவர்களால் குணமடைவது கடினம் என்று கூறி கைவிடப்பட்டார்.அங்கு தொடர்ந்து சண்முகக் கவசம் பாடிவந்தமையால் மயில் வாகனத்தில் வந்த முருகன் அருளால் கால் எலும்பு சேர்ந்ததால் அந்நாள் மயூர சேவன விழா என ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் சிறப்பாக நடைபெறுகிறது. சென்னை மருத்துவமனையில் "மன்ரோ வார்டில்" பாம்பன் சுவாமிகளின் திருவுருவப்படம் மாட்டப்பட்டு    நோயாளிகளால் வழிபடப்படுகிறார். 1926 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17 அன்று உயில் எழுதி மகா தேஜோ மண்டலசபை அமைப்பு நடைமுறையை ஏற்படுத்தினார். மே 30 , 1929 அன்று காலை 7.15 மணிக்குச் சுவாமிகள் சமாதியடைந்தார்கள். சுவாமிகள் திருமேனி அலங்கரிக்கப்பட்ட புஷ்பவிமானத்தில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு மே 31 , 1929 திருவான்மியூரில் சமாதி அமைக்கப்பட்டது.

சுவாமிகள் இயற்றிய பாடல்கள்:

*
சண்முக கவசம்
*
பஞ்சாமிருத வண்ணம்
*
குமரகுருதாச சுவாமிகள் பாடல் -1266
*
ஸ்ரீமத் குமார சுவாமியம் (குமார நாயகன் திருவிளையாடல்) - 1192
*
திருவலங்கற்றிரட்டு(பல சந்தப் பரிமளம்) - 1135
*
திருப்பா (திட்ப உரை) -1101
*
காசியாத்திரை(வடநாட்டு யாத்திரை அனுபவம்) - 608
*
சிறு நூற்றிரட்டு (சண்முக கவசம் முதலிய பத்து) - 258
*
சீவயாதனா வியாசம் (சீவகாருண்யம்- புலால் மறுப்பு) - 235
*
பரிபூரணானந்த போதம்
(
சிவசூரியப் பிரகாசம் உரை) - 230
*
செக்கர் வேள் செம்மாப்பு - 198
*
செக்கர் வேள் இறுமாப்பு - 64
*
தகராலய ரகசியம் (சதானந்த சாகர
உரை)- 117
*
குமரவேள் பதிற்றுப் பத்தந்தாதி -100
*
சேந்தன் செந்தமிழ்
(
வடமொழி கலவாத் தனித் தமிழ்)- 50
*
குமாரஸ்தவம் 44
*
தென்னாட்டுத் திருத்தலதரிசனம்
(
கட்டளைக் கலித்துறை) 35
*
பத்துப் பிரபந்தம் (சித்திரக் கவிகள்) 30
*
ஆனந்தக்களிப்பு 30
*
சமாதான சங்கீதம் 1
*
சண்முக சகச்சிர நாமார்ச்சனை 2
ஆகப் பாடல்கள் 6666.

சுந்தரானந்தர்


சுந்தரானந்தர் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சித்தர் . போகமுனி என்னும் சித்தரின் மாணாக்கர்.கிஷ்கிந்தையில் வாழ்ந்த நவகண்ட ரிஷியின் பேரன் என்றும்,அகமுடையார் குலத்தை சேர்ந்தவர் என்றும் போகர் சொல்கிறார்.


வரலாறு:

இவர் மிகவும் அழகான தோற்றத்தைக் கொண்டிருந்ததால் சுந்தரானந்தர் என்று அழைக்கப் பட்டார்.இவருக்கு வல்லப சித்தர் என்கிற பெயரும் உண்டு. இவர் தனது இளமைக்காலத்தில் பெற்றோர் விருப்பப்படி இல்லறவாழ்க்கையை மேற்கொண்டார் என்றும்,சட்டை முனியால் ஆட்கொள்ளப்பட்டு பின்னர் அவருடனே சென்றதாகவும் சொல்லப்படுகிறது.இவர் அகத்தியர் பூசித்த லிங்கத்தை வாங்கி அதை சதுரகிரியில் பிரதிட்டை செய்து வழிபட்டுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. சுந்தரானந்தர் மதுரை நகரின் வீதிகளில் ஆணைப் பெண்ணாக்கியும்,பெண்ணை ஆணாக்கியும்,ஊனமுற்றவர்களை குணப்படுத்தியும்,திடிரென மறைந்தும் பல சித்துக்கள் செய்ததை மக்கள் மன்னனிடம் தெரிவிக்க சித்தரை அரண்மனைக்கு அழைத்துவர ஆள் அனுப்ப, சுந்தரானந்தர் அரசன் தன்னை வந்து பார்க்கும்படி சொல்லி அனுப்பினார் சித்தரைப் பார்க்க அரசர் வந்தார்.அப்போது ஒருவன் கையில் கரும்புடன் நிற்க சித்தருடன் பேசிக்கொண்டிருந்த அரசன்,சித்தரே இவன் கையில் இருக்கும் கரும்பை அந்தக் கல்யானை உண்ணும்படியாகச் செய்யுங்கள் என்றார். சித்தர்
கரும்பை வாங்கி கல்யானையிடம் கொடுத்து கண்சிமிட்டினார்.யானை கரும்பை பெற்று உண்டது.மீண்டும் கல் யானையாக மாறியது. அதைக் கண்ட அனைவரும் அதிசயப்பட்டனர். அன்பும் பக்தியும் பெருக்கெடுத்தோட சித்தரின் காலில் விழுந்து மன்னர் வணங்கினார் என்று செவிவழிச் செய்திகள் சித்தரை பற்றி உள்ளது.

சமாதி:

இவர் மதுரையிலே
சமாதியடைந்ததாக சொல்லப்
படுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இவருக்கு தனி சந்நிதி அமைந்திருக்கிறது.

நூல்கள்:

இவர் இயற்றிய நூல்கள்
*சோதிட காவியம்
*வைத்தியத் திரட்டு
*தண்டகம்
*முப்பு
*சிவயோக ஞானம்
*அதிசய காராணம்
*பூசா விதி
*தீட்சா விதி
*சுத்த ஞானம்
*கேசரி
*வாக்கிய சூத்திரம்
*காவியம்
*விச நிவாரணி

இவர் பதினென் சித்தர்களில் ஒருவர்


பச்சையப்ப முதலியார்



பச்சையப்பா முதலியார்(1754-1794) தென்னிந்தியாவில்குறிப்பாகதமிழகத்தின் கல்வி
வளர்ச்சிக்கு வழிகோலிய கொடை வள்ளல் . சென்னைக்கு வடமேற்கில்
சுமார்23 கி.மீ. தொலைவிலிருக்கும் பெரியபாளையம் என்ற ஊரில் பிறந்தவர். இவர் தந்தையார் அகம்படியார் வகுப்பினராகிய காஞ்சி விசுவநாத முதலியார்தாயார்
பூச்சியம்மாள் ஆவர்.

இளமைக்காலம்;


இவர்தாய் வயிற்றில் இருக்கும்போதே இவர் தந்தையார் இறந்துவிட்டார். கணவரையிழந்த பூச்சியம்மாள் தம் பெண்மக்கள் இருவருடன் பெரியபாளையத்திற்குச்
சென்றுகுடியேறிக் குடும்ப நண்பரான ரெட்டி இராயர் என்பாரின் ஆதரவிலிருந்து வருகையில் பச்சையப்பர் பிறந்தார். தம் ஐந்தாம் வயதில் ரெட்டி இராயரையும்
இழந்தார். வறுமையில் வாடிய குடும்பம் சென்னைக்கு வந்து குடியேறினர். செல்வரும்
வணிகருமான நாராயணப்பிள்ளை என்பவர் இக்குடும்பத்திற்கு ஆதரவு அளித்தார். பச்சையப்பர் ஆங்கிலம் எழுதப்படிக்கவும்கணக்கும்வணிக முறையும் கற்றார்.

கொடை;


பள்ளியில் படித்துக் கொண்டிருக்க வேண்டிய பருவத்திலேயே பச்சையப்பர் வாழ்க்கைக்கு வழிதேடும் முயற்சியில் ஈடுபட்டார். மொத்த வணிகர்களுக்குச் சரக்கு வாங்கியும்விற்றுக் கொடுக்கும் முகவராக பணியாற்றினர். இத்தொழில் இவர் மொழிபெயர்ப்பாளர் ஆவதற்கு வாய்ப்பளித்தது. தம் பதினாறாம் வயதிலேயே கொடை வள்ளலானார் . அறப்பணிகளுக்குக் கொடை வழங்கலாயினர்.குடும்பப்புரவலர் நாராயணப் பிள்ளையின் செல்வாக்கால் நிக்கலசு என்ற ஏற்றுமதி வணிகருக்கு மொழிபெயர்ப்பாளராக பணிப்பொறுப்பினைப் பெற்றார். சில ஆண்டுகளில் சிறிது செல்வம் திரண்டது. தம் தமக்கையின் மகளான அய்யம்மாளைத் திருமணம் செய்து கொண்டார்.

வணிகம்;


1776 இல் செங்கல்பட்டு மாவட்டத்தில் வரிவசூல் செய்தல்நவாப்பின் (Nawab)
அலுவலாளர்களுக்குச் சம்பளத்தை ஒப்படைப்பு செய்தல் முதலிய
ஒப்பந்தத்தொழில் ஆங்கிலநிறுவனத்தாருக்கு வரவேண்டிய தானிய
வரியை (மேல்வாரங்கள்) எனும் தானிய வரியை பணமாக்கித் தரும் குத்தகைத்தொழில்ஆங்கில வணிகர்கட்கும்கருநாடக நவாப்பு அதிகாரிகளுக்கும் இடையேயும் முகவராக
இருந்து கொடுக்கல் வாங்கல் செய்தல் முதலிய தொழில்களை மேற்கொண்டார் .வரிவசூல் செயலில் இவர்ஆங்கிலேயர்களின் நன்மதிப்பைப் பெற்றார். குறுகிய காலத்திலேயே,சென்னை மாகாணத்தின் சிறந்த மொழிபெயர்ப்பாளராக திகழ்ந்தார்.

அரசுப்பணி;


தனது 28வது வயதில்ஆங்கிலேய நிறுவனத்தில் முக்கியபதவி வகித்த
இராபர்ட் யோசப்பு சலிவன் (sulivan) என்பவரின் முதன்மை மொழிபெயர்ப்பாளராக
ஆங்கில அரசுப்பணி ஏற்றார்.அதனாலும் பேரும்,பெருஞ்செல்வமும் பெற்றார்.சலிவனின் அரசியல் அலுவல்களில் பேருதவிப் புரிந்தார். தஞ்சாவூர் அரசருக்கு மொழிபெயர்ப்பாளராகவும்,வங்கியராகவும் இருந்து,
சென்னைமாகாணத்திற்கு சரியான முறையில்கப்பம் கட்ட துணைப்புரிந்தார். 1784 இல்
தஞ்சாவூரில் குடியேறினார். தஞ்சை அரசருக்குச் சென்னை அரசாங்கத்தாரால் தொல்லை நேராமல் காத்தார். அதனால் அரசர் இவரை திவான் போன்று போற்றி,பச்சைப்பருக்கு உரிமைகளையும்,சிறப்புகளையும் செய்தார்.

மறுமணம்;


பச்சையப்பரின் முதல் மனைவிக்கு மகப்பேறின்மையால்,வேதாரணியத்தைச் சேர்ந்த
பழனியாயி என்ற நங்கையை,இரண்டாம் மனைவியாகத் திருமணம் செய்து கொண்டார்.
பழனியாயிக்கு ஒரு பெண் மகவுப்பிறந்தது. பச்சையப்பருக்கு 1791 இல் பக்கவாத நோயிற்கு உள்ளானார்.எனினும்தன் வங்கிமுகமைத் தொழில்களைத் தொடர்ந்து நடத்தி வந்தார்.


இறுதிக்காலம்;


1794 பிப்ரவரியில்இவரின் உடல்நிலை மிகவும் சீரற்றது. எனவேகும்பகோணத்தில் கட்டத்தொடங்கிய,சத்திர வேலையை விரைந்து முடிக்க அங்கு சென்றார். கும்பகோணத்தில்,மார்ச்சு மாதம் 22 நாளில்தம் உயிலை எழுதி முடித்தார் .திருவையாற்றில் இறக்க விரும்பி அங்கு விரைந்தார்.அதன்படிமார்ச்சு மாதம் 31ஆம்
நாளில் மரணமடைந்தார். இவர் இறப்பிற்கு அடுத்து,பழனியாயியும் அடுத்தாற்போல்
இவர்களுடைய மகளும் இறந்தனர்.

சொத்து;


பச்சையப்பர் ஈட்டிய பொருள் எத்தனை இலகரங்கள் என வரையறத்து அறியப்படவில்லை.இவரே தம் காலத்தில் அறப்பணிகளுக்கு ஆயிரக்கணக்கில்
செலவிட்டார். இவர் இறந்தபின்இவர் சுற்றத்தாரும்பேராசைச்காரர் சிலரும் செய்த மோசடிகள்வழக்குகள் முதலியவற்றால் அளவற்ற சொத்துக்கள் மறைந்தன. இவர் காலத்தின் பின்இவர் பொருளெனக் கண்டறியப்பட்ட தொகை வட்டி முதலுடன் கூடிய
தொகை சுமார் எட்டு இலட்சங்கள் ஆகும்.இத்தொகையை மூலப்பொருளாகக்
கொண்டு பச்சையப்பன் அறநிலைக்காப்பாளர்கள்அறப்பணிகளையும்,கல்விப் பணிகளையும்நடத்தி வருகின்றனர்.

கல்விப்பணிகள்;


கல்வி நிதிக்கென ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்துகிடைக்கும் வருமானத்தைக் கொண்டு
காஞ்சீபுரம் சிதம்பரம்சென்னை இம்மூன்று இடங்களில் மூன்று உயர்நிலைப் பள்ளிகளும்,சென்னையில் கல்லூரி ஒன்றும்,காஞ்சியில் ஒரு கல்லூரியும்
தொடங்கப்பட்டுஅவைகள் இன்றளவும் நடைபெற்று வருகின்றன.

இறைப்பணிகள்;


பச்சையப்ப முதலியார் மிகுந்த கடவுட் பற்றுடையவர். இவர் செய்த அறப்பணிகள் பல. காஞ்சீபுரத்து ஏகாம்பரேசுவரர் கோயில் உள்ள திருமண மண்டபம் கட்டினார்.
சிதம்பரத்தில் தேர் செய்துஆனித் திருமஞ்சனம் என்ற புதிய விழாவைத்
தோற்றுவித்தார். காசியிலும் ,தென்னாட்டில் சென்னை,கும்பகோணம்திருவையாறு,
தஞ்சாவூர்மதுரை முதலிய இடங்களிலுள்ள திருக்கோயில்களுக்கும்,பலவகையான கட்டளைகளைத் திட்டஞ்செய்து வைத்தார். பல இடங்களில் அன்னசத்திரங்கள் கட்டினார்.
சில இடங்களில் அக்கிரகாரம் கட்டினார். இவ்வாறாக இவர் பலப்பல அறப்பணிகளையும்கணக்கில் அடங்கா கொடைகளையும் தன் வாழ்நாளில் செய்தார்.


கோட்டைபற்று அகமுடையார்


சோழ பேரரசின் கிழக்கு எல்லை வேதாரண்யம் மற்றும் கோடியக்கரைஉலகின் தலைசிறந்த கடற்படை சோழர்களின் கடற்படை. கோடியக்கரை என்பது சோழர்களின் ஒரு முக்கியமான துறைமுகம்.இது போர்படை துறைமுகமாக மட்டுமே இருந்தது.சோழர்களின் மிக முக்கிய படைகளில்கோட்டைபற்று தேவர்கள் ஒன்று.


கோட்டைபற்று அகமுடையார்களின் கோட்டை காக்கும் முறை:


கோட்டை என்பது மன்னனின் அரண்மனை ,கருவுலம்(கஜானா), ஆயுத கிடங்கு , அமைச்சர்கள் மற்றும் அரச குடும்பத்தினர்கள் ,அனைத்து தலைமை அலுவலகங்கள் அனைத்தும் உள்ளடங்கியது இதனைத்தையும் சுற்றி வானுயர்ந்த மதில் எழுப்ப பற்றிருக்கும்.அதன் பிறகு அகழி ஒன்று கோட்டையை சுற்றி தோண்ட பற்றிருக்கும் அதில் கொடிய முதலைகள் விட பற்றிருக்கும்.இப்படி பட்ட கோட்டை காவல் மற்றும் கோட்டையின் தினசரி செயல்பாடுகள் அனைத்தும். இவர்கள் வசமே இருந்தது .
வேல் ,வில்,அம்பு ,வாள் ,அரிவாள் ,கொதிக்கும் எண்ணெய்(மதில் மேல் ஏறி வருபவர்கள் மீது ஊற்ற), மற்றும் பல ஆயுதங்கள் கொண்டு கோட்டையை காத்தனர் கோட்டைக்குள் யார் எப்போது வர வேண்டும் என்று நிர்ணயக்கும் அதிகாரம் இவர்களிடம் மட்டுமே இருக்கும். இலச்சினை இல்லாத எவரும் கோட்டைக்குள் அனுமதிகவோ முக்கிய
அதிகாரிகளை பார்க்கவோ முடியாது.நாடு முற்றிலும் எதிரிகள் ஆக்ரமித்த
பிறகும்.கோட்டைக்குள் அவர்கள் நுழையாத படி அம்பு மழை போல்
எய்து எதிரிகளை விழ்த்தி கோட்டையை காத்தனர்.



Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...