பவானி ராஜேந்திரன் அவர்கள் 1954ஆம் ஆண்டு டிசம்பர் 10 அன்று மதுரை திருமங்கலத்தின் முன்னாள் எம்.எல்.ஏவான ரெத்தினசாமி தேவரின் மகளாக பிறந்தார்.இவருடைய கணவர் M.S.K.ராஜேந்திரன் அவர்கள் இராமநாதபுரம் எம்.எல்.ஏவாக இருந்தவர்.நாடாளுமன்ற எம்.பியாக இராமநாதபுரம் தொகுதியிலிருந்து 2004ஆம் ஆண்டு திமுக சார்பில் வெற்றி பெற்றார்.
This blog is all about THE AGAMUDAYAR HISTORY. THANKS to BROTHERS BALAMURUGAN AGAMUDAYAR, IMALATHITHAN AGAMUDAYAR, SAKTHI AGAMUDAYAR & SIVA AGAMUDAYAR for the infos.
Monday, September 21
பவானி ராஜேந்திரன்
பவானி ராஜேந்திரன் அவர்கள் 1954ஆம் ஆண்டு டிசம்பர் 10 அன்று மதுரை திருமங்கலத்தின் முன்னாள் எம்.எல்.ஏவான ரெத்தினசாமி தேவரின் மகளாக பிறந்தார்.இவருடைய கணவர் M.S.K.ராஜேந்திரன் அவர்கள் இராமநாதபுரம் எம்.எல்.ஏவாக இருந்தவர்.நாடாளுமன்ற எம்.பியாக இராமநாதபுரம் தொகுதியிலிருந்து 2004ஆம் ஆண்டு திமுக சார்பில் வெற்றி பெற்றார்.
எம்.எஸ்.கே.ராஜேந்திரன்
எம்.எஸ்.கே.ராஜேந்திரன் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார் மேலும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.1989 ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தேடுகபட்டார்.இவருடைய மனைவி பவானி ராஜேந்திரன் ஆவார்.
எம்.எஸ்.கே.சத்தியேந்திரன்
எம்.எஸ்.கே.சத்தியேந்திரன் ஒரு தமிழக அரசியல்வாதி ஆவார் திராவிட முன்னேற்ற கலகத்தை சேர்ந்தவர்.இவர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகவும் மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.1971தேர்தலில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார் 1980 தேர்தலில் வெற்றி பெற்று இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு இராமநாதபுரம் மக்களவை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.இவருடைய தம்பி இராஜேந்திரன் எம்ல்ஏவாகவும் தம்பியின் மனைவி பவானி ராஜேந்திரன் எம்பிஆகவும் பனி ஆற்றியுள்ளனர்
பொன் முத்துராமலிங்கம்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள இரும்பாடி என்ற சின்னக் கிராமம்தான் பொன் முத்துராமலிங்கத்தின் பூர்வீக ஊராகும்.இருப்பினும் தனது குடும்பத்தாருடன் மதுரை நரிமேடு பகுதியில்தான் பல காலமாக வசித்து வருகிறார் பொன் முத்துராமலிங்கம்.எம்.ஜி.ஆருக்கும் பொன் முத்துராமலிங்கத்திற்கும் நிறைய விசேஷம் உண்டு. எம்.ஜி. ஆரை எதிர்த்துத் தைரியமாக போட்டியிட்டு கடும் பீதியைக் கொடுத்தவர் பொன் முத்துராமலிங்கம். அவ்வளவு சுறுசுறுப்பான ஒருவர் பொன் முத்து.
1972ம் ஆண்டு அதிமுக ஆரம்பித்த புதிதில் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டவர். ஆனால் அதில் தோல்வி அடைந்தார்.மதுரையில் 1980ம் ஆண்டு மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட்டார் எம்.ஜி.ஆர். அப்போது அவரை எதிர்த்து பொன் முத்துவைத்தான் களம் இறக்கினார் கருணாநிதி. பொன் முத்துவும், எம்.ஜி.ஆரைக் கண்டு சற்றும் பயப்படாமல் சூறாவளி போல பிரசாரம் செய்தது அந்தக் காலத்து மதுரை மேற்குத் தொகுதியினருக்கு இன்னும் மறக்க முடியாத ஒரு விஷயம். தேர்தலில் வெற்றி எம்.ஜி.ஆருக்குத்தான்.
அடுத்து 1984ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் மதுரை மேற்கில் போட்டியிட்டு வென்றார். பின்னர் 1989ல் மீண்டும் போட்டியிட்டு வென்றார். இந்த முறை அவர் கருணாநிதி அமைச்சரவையிலும் இடம் பெற்றார்.
நன்றி ஒன் இந்தியா
பி.வி. இராஜேந்திரன்
பி.வி. இராஜேந்திரன் ஒரு தமிழ்நாடு அரசியல்வாதி காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.இவருடைய தந்தை பி.வி தேவர் ஆவார்.செப்டம்பர் 23 1955 அன்று பிறந்தார்.மனைவி வேதநாயகி மற்றும் இரு குழந்தைகள் உண்டு.வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் 1989 மற்றும் 1991இல் வெற்றி பெற்றார்.
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் தமிழ் மாநில காங்கிரசு சார்பில் 1996ஆம் ஆண்டு வெற்றி பெற்றார்.
நைனப்பன் சேர்வை
'நைனப்பன் சேர்வை' நான் உங்களுக்கு ஒரு போட்டி வைக்கப் போகிறேன், ஏற்றுக்கொள்ளச் சம்மதமா? எனக் கேட்டார் பெரிய மருது பாண்டியர். 'சரி அரசே எதுவென்றாலும் நான் ஏற்றுக் கொள்கின்றேன். உங்கள் சித்தத்தை என் கடமையாக ஏற்றுக் கொள்கிறேன்” என்றார் நைனப்பர். போட்டி இதுதான். சிவகங்கைக்கும் கடியாவயல் என்னுமிடத்திற்கும் உள்ள தூரம் சுமார் 25 கிலோமீட்டர் ஆகும். இந்த 25 கி.மீட்டர் தூரத்திற்கும் பெரிய மருதுபாண்டியர் குதிரையில் இருந்தபடி போய் வருவார். ஆக மொத்தம் 50 கி.மீட்டர். இந்த தூரத்தை நைனப்ன் சேர்வை குதிரைக்குச் சமமாக ஓடிக்கடக்க வேண்டும். இதுதான் போட்டி. போட்டி தொடங்கியது. 'நைனப்பன் சேர்வை அவர்களே! நீங்கள் என் குதிரைக்கு முன்னதாக இரண்டு பல்லாங்கு தூரம் ஓடுங்கள். அதன் பிறகு நான் புறப்படுகின்றேன் என்றாராம். ஓடினார்.... பின்னாலேயே குதிரையும் பாய்ந்து வந்தது. அருகில் குதிரை வந்ததும் நைனப்பன் சேர்வை பெரிய மருது அவர்கள் அமர்ந்திருந்த குதிரையின் பின்னாலேயே நெருக்கமாக ஓடினார். குதிரை தன் இயல்பான வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தது. நைனப்பரும் ஓடினார். வழியில் பார்த்தவர்களெலலாம் படபடப்பாகப் பேசிக் கொண்டார்கள.
சிலர் என்ன இது கொடுமை! மனிதனையும் குதிரையையும் ஒன்றாக பாவிப்பார்? என பேசிக்கொண்டனர் . பலர் 'சரி அரசர் செய்தால் எதிலும் ஒரு நல்ல உள்நோக்கம் மறைந்திருக்கும.; நாட்டை நல்ல முறையில் ஆள்பவரும் மக்களைக் கண்ணாக மதித்து ஆள்பவரும் ஆனா மாமன்னர்கள் கொடுமையாக எதையும் செய்யமாட்டார்” என்று பேசிக் கொண்டனர்.ஓடிக் கொண்டிருந்த நைனப்பரின் காலில் ஒரு கருவேல முள் குத்திவிடுகிறது. போட்டி அவ்வளவுதான் என்றுதானே நினைப்பீர்கள், அதுதான் இல்லை. அந்த முள்ளை எடுப்பதற்காக உட்கார்ந்து நேரத்தைச் செலவிட்டால் குதிரை மறைந்துவிடுமே! என்று யோசிக்கும் நேரத்தில் நைனப்பர் தனது இடுப்பில் இருந்த 'வளரி” என்ற ஆயுதத்தால் முள் தைத்த காலை தூக்கி முள்ளை உள் நோக்கி அழுத்தினார். முள் கால் பாதத்திற்குள் நுழைந்துவிடுகிறது. வலியை பொறுத்துக் கொண்டு குதிரையோடு சேர்ந்து ஓடி கடியாவயலை அடைந்துவிடுகிறார். மறுபடியும் திரும்பிச் சிவகங்கை நோக்கி ஓட முயற்சித்த நைனப்பன் சேர்வையைத் தடுத்து அணைத்துக் கொண்டார் மாமன்னர் பெரியமருது பாண்டியர்.
அவரது கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.
அவரது கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.
'நைனப்பன் சேர்வை உங்களின் வீரத்தை நமது சிவகங்கை சீமை மட்டுமல்ல இந்த உலகமே தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகத்தான் இந்தக் கடுமையான போட்டியை நான் வைத்தேன். நானும் காட்டில் பல சமயம் பல கிலோமீட்டர் தூரத்தைக் குதிரையைவிட வேகமாக ஓடியெல்லாம் கடந்திருக்கின்றேன். உங்களது வீரம் வாழ்க! வைத்தியரைக் கூப்பிடுங்கள் நைனப்பரின் காலில் இருக்கும் முள்ளை உடனே அகற்றுங்கள்” என்று கட்டளையிட்ட மன்னர் ஊரும் - உலகமும் அறியும் வண்ணம் நைனப்பன் சேர்வையைப் பாராட்டி மாலையும் மரியாதையும் பொன், பொருளும் வழங்கினார் மாமன்னர் பெரிய மருதுபாண்டியர். நைனப்பன் சேர்வை அவர்களிடம் இருந்த வளரி இன்று சிவகங்கை அருங்காட்சியில் உள்ளது. அதை அவரின் வாரிசுத்தாரர் கொடுத்துள்ளனர். இன்று அதன் வடிவம் மாறாமல் புதியதாக செய்யப்பட்டது போல் உள்ளது. ஒரு சமயம் மருதுபாண்டியருடன் சென்ற நைனப்பன் சேர்வைக்கு வேட்டைக்கு காட்டிற்குச் செல்ல ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. இருவரும் காட்டு வழியாக சென்று கொண்டிருந்தார்கள். அப்போது எதிர்பாராதவிதமாக புலிவொன்று புதரிலிருந்து வெளிப்பட்டு நைனப்பன் சேர்வையை நோக்கிப் பாயந்தது. புலியோடு போராடி அதனைக் கொன்றார். பிறகு அப்புலியின் பற்களைப் பிடுங்கிப் பெரிய மருதுபாண்டியர் அவர்களின் காலடியில் 'அரசே இது என் காணிக்கை” என்று கூறிப் புலிப் பற்களை வைத்தார். ஆனால் இப்படிப்பட்ட மாவீரனைப் புலியின் பல்பட்ட, நகம்பட்ட காயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவரைக் கொன்று வைத்தியர்களைத் தோல்வி அடையச் செய்தன. நைனப்பன் சேர்வை மறைந்த போது வைர நெஞ்சத்தை உடையவராக இருந்த மாமன்னர்கள் மருதுபாண்டியர் வாய்விட்டுக் கதறி அழுதார்கள்.
நைனப்பன் சேர்வையின் குடும்பத்திற்குத் தனது குடும்பத்தை போல் எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தார் பெரிய மருதுபாண்டியர். அவர் மனமுவந்து கொடுத்த சொத்துக்களை இன்றைய தினமும் நைனப்பன் சேர்வையின் சந்ததியார் அனுபவித்து வருகிறார்கள். சிவகங்கைக்கு அருகில் 12 கி.மீ. தூரத்தில் சாத்தரசன் கோட்டையில் வடபுறத்தில் ஒரு பெரிய ஊரணியை வெட்டி அந்த ஊரணிக்கு நைனப்பர் ஊரணி என்று அவர் பெயரில் இன்றும் அழைக்கப்படுகிறது.
கருப்பசேர்வை
கருப்பசேர்வை கொங்கு நாட்டு ஓடாநிலைக் கோட்டை பாளையக்காரர் தீரன் சின்னமலையிடம் படைத் தலைவராக இருந்தவர். தீரன் சின்னமலையிடம் திறை வசூலிக்க வந்த சங்ககிரி திவான் மீராசாகிப்பின் படை வீரர்களை கருப்பசேர்வை விரட்டியடித்தார். மைசூர் மன்னர் திப்பு சுல்தானுடன் கூட்டணி சேர்ந்து, சின்னமலை மற்றும் கருப்பசேர்வை, கம்பெனி ஆட்சிக்கு எதிராக பெரும்படை திரட்டிப் போரிட்டனர். கம்பெனிப் படைகளுக்கு எதிராக, 1801இல் ஈரோடு காவிரிக் கரையிலும், 1802இல் ஓடாநிலைக் கோட்டையிலும், 1804-ல் அரச்சலூரிலும் நடந்த போர்களில் கருப்பசேர்வை தலைமையிலான தீரன் சின்னமலை படைகள் பெரும் வெற்றி பெற்றன.
கள்ளிக் கோட்டையிலிருந்து பெரும் அளவில் வந்த ஆங்கிலேய பீரங்கிப் படைகள் ஓடாநிலைக் கோட்டையைத்தகர்த்து, சின்னமலையுடன் கருப்பசேர்வையையும் கைது செய்த, ஆங்கிலேயப் படைகள் சங்ககிரிக் கோட்டையில்இருவரையும் 31 ஆகஸ்டு 1805 அன்று தூக்கிலிட்டனர்.
Subscribe to:
Posts (Atom)
Featured post
மலயா கணபதி
மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...
-
பொதுவாக அகமுடையார் என்பதன் பொருள் நில உடைமையாளர், நம்பிக்கைக்குரியவர், பரந்த சிந்தனையாளர் என்று பலவாறாக பொருளில் இலக்கியங்கள் ஊடாக அ...
-
ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்த மருது சகோதரர்கள் 1801ஆம் ஆண்டு அக்டோபர் 24 அன்று சிவங்கங்கை மாவட்டம் திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டனர். வீ...
-
கோவையின் வளர்ச்சிக்கு அகமுடையார் இன மக்கள் பெரும் பங்காற்றியிருக்கிறார்கள் அகமுடையார் குடியேற்றங்கள் சேர நாட்டில் ஏற்பட்ட குழப்ப காலத்தில் ...