Monday, September 21

சின்ன மருது மகன் துரைச்சாமி

துரைச்சாமி சிவகங்கைச் சீமையில் ஆங்கிலக் கிழக்கந்தியக் கம்பெனியர்க்கு எதிராக 1785 முதல் 1801 முடியப் போராடிய சின்ன மருதுவின் மகன்.

வாழ்க்கைச் சுருக்கம்

சின்ன மருது மகன் துரைச்சாமியின் இயற்பெயர் முத்து வடுக நாத துரை என்றும் பின்னர் அப்பெயர் துரைச்சாமி என மருவியது என்றும் சிவகங்கை அம்மானை எனும் நூல் மூலம் அறியமுடிகிறது. துரைச்சாமி உட்பட 11 பேரைப் பிடித்துக்கொடுத்தால் 1000 கூலிச்சக்கரங்கள் ( 18ம் நூற்றாண்டு நாணயம்) பரிசாக வழங்க்கப்படும் என்று ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனித் தளபதி கர்னல் அக்னியூ 1801, அக்டோபர் 1 இல் சிவகங்கை குடிமக்களுக்கு ஒரு பொது அறிவிப்பை பிரகடனப்பத்தினார். மருது சகோதரர்கள் 1801, அக்டோபர் 24 இல் தூக்கிலிடப்பட்ட பின்னர் 15 வயதே ஆன துரைச்சாமி உட்பட 73 பேர் மலேயாவின் பிரின்ஸ் ஆப் வேல்ஸ் தீவிற்கு (இன்றைய பினாங்கு) 1802, பெப்ரவரி 11 இல் நாடுகடத்தப்பட்டனர்.

பினாங்கில் துரைச்சாமி

1818 ஆம் ஆண்டு தளபதி வெல்ஸ் (Colonel Welsh) பினாங்குக்குச் சென்றபோது உடல் நலம் குன்றிய தோற்றத்துடன் காணப்பட்ட துரைச்சாமியைக் காண நேரிட்டது. துரைச்சாமியின் இத்தோற்றம் வெல்ஸ் தம் இதயத்தில் கத்தி பாய்ந்தது போன்று இருந்தது என குறிப்பிடுகின்றார்.

துரைச்சாமியின் இறுதி நாட்கள்

1891, மே 18 ஆம் நாள் துரைச்சாமியின் மகன் மருது சேர்வைகாரன் என்பான் மதுரைக் கலக்டரிடம் ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்த மனுவில் துரைச்சாமியின் இறுதி நாட்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். துரைச்சாமி பினாங்கிலிருந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்டார். அவர் ஆங்கில அரசிடம் பாதுகாப்புக் கோரி மதுரையில் தங்கியிருக்க அனுமதி கேட்டிருந்தார். ஆனால் திடீரென துரைச்சாமி நோய்வாய்ப்பட்டு சிவகங்கைக்கு கொண்டுவரப்பட்டு அங்கு காலமானார் என்று அவரது மகன் குறிப்பிடுகின்றார்.

ஜம்புத் தீவு பிரகடனம்



ஜம்புத் தீவு பிரகடனம்

ஜம்புத் தீவு பிரகடனம் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கிழக்கிந்தியக் கம்பெனி வரிவசூலை ஆற்காட்டு நவாப்பிடமிருந்து பெற்று நேரடியாக வரி வசூலை நடத்திய காலத்தில், தமிழக சிற்றரசர்கள் பரவலாக எதிர்ப்பு தெரிவித்து அங்காங்கே ஆங்கிலேயரை எதிர்த்து போர் நடத்தினர். மதுரை நாயக்கர்கள் 72 பாளையங்களாக பிரித்து ஆட்சி செய்த பகுதியில் சிவகங்கைப் பாளையத்தின் பாளையக்காரர் முத்துவடுகநாதர் கொல்லப்பட்ட பின் அவரின் தளபதிகள் மருதிருவர் ஆட்சிப் பொறுப்பேற்றனர். அக் காலம், ஆங்கிலேயரின் படைத்தளபதி கர்னல் அக்னியூ விட்ட அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து திருச்சியில் சின்ன மருது வெளியிட்ட மறுப்பு அறிப்புதான் ஜம்புத் தீவு பிரகடனம். இந்த அறிக்கை, 1801 ஆம் ஆண்டு சூன் மாதம் 12 ஆம் தேதி திருச்சிக் கோட்டையில் ஒட்டப்பட்டுப் பின், சூன் மாதம் 16 ஆம் தேதி ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டது.

ஜம்புத் தீவு பிரகடனம்

ஜம்பு தீபகற்பத்திலுள்ள ஜம்புத் தீவில் வாழும் அந்தணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள், முசல்மான்கள் முதலான அனைத்துச் சாதியார்க்கும் தெரியப்படுத்தும் அறிவிப்பு என்னவென்றால், மேன்மை தாங்கிய நவாபு முகமது அலி அவர்கள் முட்டாள்தனமாக ஐரோப்பியர்களுக்கு நம்மிடையே இடங்கொடுத்து விட்டதன் காரணமாக இப்போது அவர் ஒரு விதவைபோல் ஆகிவிட்டார். ஐரோப்பியர்களோ தங்களுடைய வாக்குறுதிகளை மீறி அவருடைய அரசாங்கத்தையே தங்களுடையதாக ஆக்கிக் கொண்டு நாட்டு மக்கள் அனைவரையும் நாய்களாகக் கருதி ஆட்சியதிகாரம் செய்து வருகிறார்கள். உங்களிடையே ஒற்றுமையும் நட்பும் இல்லாத காரணத்தினால், ஐரோப்பியரின் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ள இயலாமல், உங்களுக்குள் ஒருவரை யொருவர் பழிதூற்றிக் கொண்டது மட்டுமின்றி, நாட்டையும் அந்நியரி டம் ஒப்படைத்து விட்டீர்கள். இந்த ஈனர்களால் இப்போது ஆளப்படும் பகுதிகளிலெல்லாம், மக்கள் பெரிதும் ஏழ்மையில் உழல்கிறார்கள்; சோற்றுக்குப் பதில் நீராகாரம்தான் உணவு என்று ஆகிவிட்டது. இப்படித் துன்பப்படுவது தெரிந்த போதிலும் எக்காரணங்களினால் இத்துன்பங்கள் ஏற்பட்டன என்பதைப் பகுத்தா ராயவும் புரிந்துகொள்ளவும் இயலாத நிலையில் மக்கள் இருக்கின்றனர். ஆயிரம் ஆண்டுகள் வாழ்வதாக இருந்தாலும் மனிதன் கடைசியில் செத்துத்தான் ஆகவேண்டும்ஆதலால் பாளையங்களில் உள்ள ஒவ்வொருவரும் போர்க்கோலம் பூண்டு ஒன்றுபட வேண்டும். இந்த ஈனர்களின் பெயர்கள் கூட நாட்டில் மிஞ்சியிருக்காமல் செய்யவேண்டும். அப்போதுதான் ஏழைகளும் இல்லாக் கொடுமையால் அல்லல் படுவோரும் வாழ முடியும். அதே நேரத்தில் இந்த ஈனர்களுக்கு தொண்டூழியம் செய்து நாயைப் போல சுகவாழ்வு வாழ விரும்புகிறவன் எவனாவது இருந்தால் அத்தகைய பிறவிகள் ஒழித்துக் கட்டப்பட வேண்டும்ஆதலால்….. மீசை வைத்துக் கொண்டிருக்கும் நீங்கள் எல்லோரும், அதாவது இராணுவம் அல்லது மற்ற தொழில்களில் ஈடுபட்டிருக்கும் நீங்கள் அனைவரும் மற்றும் ஈனமான அந்நியன் கீழ்த் தொண்டு புரியும் சுபேதார்கள், அவில்தார்கள், நாயக்கர்கள், சிப்பாய்கள் மற்றும் போர்க் கருவிகளைப் பயன்படுத்தும் அனைவரும் உங்களுக்கு வீரமிருந்தால் அதைக் கீழ்க்கண்டவாறு நீங்கள் வெளிப்படுத்த வேண்டும். ஐரோப்பியர்களாகிய இந்த ஈனர்களை எவ்விடத்தில் கண்டாலும் கண்ட இடத்தில் அவர்களை அழித்து விடவேண்டும்இந்த ஈனர்களுக்கு எவனொருவன் தொண்டூழியம் செய்கிறானோ அவனுக்கு இறந்தபின் மோட்சம் கிடையாது என்பதை நான் உறுதியாகக் கூறுவேன்இதை ஏற்றுக் கொள்ளாதவன் வைத்திருக்கும் மீசை என்பது என்னுடைய அடி மயிருக்குச் சமமானதுஇதனை ஏற்றுக் கொள்ளாதவனுடைய பிள்ளைகள் ஐரோப்பிய ஈனப்பிறவிகளுக்குத் தன்னுடைய மனைவியைக் கூட்டிக் கொடுத்தவன் பெற்ற பிள்ளைகள் ஆவார்கள். எனவே, உடம்பில் ஐரோப்பியனின் ரத்தம் ஓடாத அனைவரும் ஒன்று சேருங்கள்!…. இதைப் படிப்பவர்களோ கேட்பவர்களோ இதில் கூறியிருப்பதைப் பரப்புங்கள்எவனொருவன் இந்த அறிவிப்பை ஒட்டப்பட்ட சுவரிலிருந்து எடுக்கிறானோ அவன் பஞ்சமா பாதகங்களைச் செய்தவனாகக் கருதப்படுவான்

இப்படிக்கு,
மருது பாண்டியன்
பேரரசர்களின் ஊழியன், ஐரோப்பிய ஈனர்களின் ஜென்ம விரோதி

பவானி ராஜேந்திரன்


பவானி ராஜேந்திரன் அவர்கள் 1954ஆம் ஆண்டு டிசம்பர் 10 அன்று மதுரை திருமங்கலத்தின் முன்னாள் எம்.எல்.ஏவான ரெத்தினசாமி தேவரின் மகளாக பிறந்தார்.இவருடைய கணவர் M.S.K.ராஜேந்திரன் அவர்கள் இராமநாதபுரம் எம்.எல்.ஏவாக இருந்தவர்.நாடாளுமன்ற எம்.பியாக இராமநாதபுரம் தொகுதியிலிருந்து 2004ஆம் ஆண்டு திமுக சார்பில் வெற்றி பெற்றார்.

எம்.எஸ்.கே.ராஜேந்திரன்

எம்.எஸ்.கே.ராஜேந்திரன் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார் மேலும்  தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.1989 ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தேடுகபட்டார்.இவருடைய மனைவி பவானி ராஜேந்திரன் ஆவார்.

எம்.எஸ்.கே.சத்தியேந்திரன்

எம்.எஸ்.கே.சத்தியேந்திரன் ஒரு தமிழக அரசியல்வாதி ஆவார் திராவிட முன்னேற்ற கலகத்தை சேர்ந்தவர்.இவர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகவும் மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.1971தேர்தலில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்  1980 தேர்தலில் வெற்றி பெற்று இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு இராமநாதபுரம் மக்களவை தொகுதியிலிருந்து  தேர்ந்தெடுக்கப்பட்டார்.இவருடைய தம்பி இராஜேந்திரன் எம்ல்ஏவாகவும் தம்பியின் மனைவி பவானி ராஜேந்திரன் எம்பிஆகவும் பனி ஆற்றியுள்ளனர் 

பொன் முத்துராமலிங்கம்


மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள இரும்பாடி என்ற சின்னக் கிராமம்தான் பொன் முத்துராமலிங்கத்தின் பூர்வீக ஊராகும்.இருப்பினும் தனது குடும்பத்தாருடன் மதுரை நரிமேடு பகுதியில்தான் பல காலமாக வசித்து வருகிறார் பொன் முத்துராமலிங்கம்.எம்.ஜி.ஆருக்கும் பொன் முத்துராமலிங்கத்திற்கும் நிறைய விசேஷம் உண்டு. எம்.ஜி. ஆரை எதிர்த்துத் தைரியமாக போட்டியிட்டு கடும் பீதியைக் கொடுத்தவர் பொன் முத்துராமலிங்கம். அவ்வளவு சுறுசுறுப்பான ஒருவர் பொன் முத்து.
1972ம் ஆண்டு அதிமுக ஆரம்பித்த புதிதில் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டவர். ஆனால் அதில் தோல்வி அடைந்தார்.மதுரையில் 1980ம் ஆண்டு மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட்டார் எம்.ஜி.ஆர். அப்போது அவரை எதிர்த்து பொன் முத்துவைத்தான் களம் இறக்கினார் கருணாநிதி. பொன் முத்துவும், எம்.ஜி.ஆரைக் கண்டு சற்றும் பயப்படாமல் சூறாவளி போல பிரசாரம் செய்தது அந்தக் காலத்து மதுரை மேற்குத் தொகுதியினருக்கு இன்னும் மறக்க முடியாத ஒரு விஷயம். தேர்தலில் வெற்றி எம்.ஜி.ஆருக்குத்தான்.
அடுத்து 1984ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் மதுரை மேற்கில் போட்டியிட்டு வென்றார். பின்னர் 1989ல் மீண்டும் போட்டியிட்டு வென்றார். இந்த முறை அவர் கருணாநிதி அமைச்சரவையிலும் இடம் பெற்றார்.

நன்றி ஒன் இந்தியா

பி.வி. இராஜேந்திரன்



பி.வி. இராஜேந்திரன் ஒரு தமிழ்நாடு அரசியல்வாதி காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.இவருடைய தந்தை பி.வி தேவர் ஆவார்.செப்டம்பர் 23 1955 அன்று பிறந்தார்.மனைவி வேதநாயகி  மற்றும் இரு குழந்தைகள் உண்டு.வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ்  சார்பில் 1989 மற்றும் 1991இல் வெற்றி பெற்றார்.
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் தமிழ் மாநில காங்கிரசு சார்பில் 1996ஆம் ஆண்டு வெற்றி பெற்றார்.

Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...