Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Monday, September 21

எம்.எஸ்.கே.சத்தியேந்திரன்

எம்.எஸ்.கே.சத்தியேந்திரன் ஒரு தமிழக அரசியல்வாதி ஆவார் திராவிட முன்னேற்ற கலகத்தை சேர்ந்தவர்.இவர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகவும் மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.1971தேர்தலில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்  1980 தேர்தலில் வெற்றி பெற்று இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு இராமநாதபுரம் மக்களவை தொகுதியிலிருந்து  தேர்ந்தெடுக்கப்பட்டார்.இவருடைய தம்பி இராஜேந்திரன் எம்ல்ஏவாகவும் தம்பியின் மனைவி பவானி ராஜேந்திரன் எம்பிஆகவும் பனி ஆற்றியுள்ளனர் 

பொன் முத்துராமலிங்கம்


மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள இரும்பாடி என்ற சின்னக் கிராமம்தான் பொன் முத்துராமலிங்கத்தின் பூர்வீக ஊராகும்.இருப்பினும் தனது குடும்பத்தாருடன் மதுரை நரிமேடு பகுதியில்தான் பல காலமாக வசித்து வருகிறார் பொன் முத்துராமலிங்கம்.எம்.ஜி.ஆருக்கும் பொன் முத்துராமலிங்கத்திற்கும் நிறைய விசேஷம் உண்டு. எம்.ஜி. ஆரை எதிர்த்துத் தைரியமாக போட்டியிட்டு கடும் பீதியைக் கொடுத்தவர் பொன் முத்துராமலிங்கம். அவ்வளவு சுறுசுறுப்பான ஒருவர் பொன் முத்து.
1972ம் ஆண்டு அதிமுக ஆரம்பித்த புதிதில் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டவர். ஆனால் அதில் தோல்வி அடைந்தார்.மதுரையில் 1980ம் ஆண்டு மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட்டார் எம்.ஜி.ஆர். அப்போது அவரை எதிர்த்து பொன் முத்துவைத்தான் களம் இறக்கினார் கருணாநிதி. பொன் முத்துவும், எம்.ஜி.ஆரைக் கண்டு சற்றும் பயப்படாமல் சூறாவளி போல பிரசாரம் செய்தது அந்தக் காலத்து மதுரை மேற்குத் தொகுதியினருக்கு இன்னும் மறக்க முடியாத ஒரு விஷயம். தேர்தலில் வெற்றி எம்.ஜி.ஆருக்குத்தான்.
அடுத்து 1984ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் மதுரை மேற்கில் போட்டியிட்டு வென்றார். பின்னர் 1989ல் மீண்டும் போட்டியிட்டு வென்றார். இந்த முறை அவர் கருணாநிதி அமைச்சரவையிலும் இடம் பெற்றார்.

நன்றி ஒன் இந்தியா

பி.வி. இராஜேந்திரன்



பி.வி. இராஜேந்திரன் ஒரு தமிழ்நாடு அரசியல்வாதி காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.இவருடைய தந்தை பி.வி தேவர் ஆவார்.செப்டம்பர் 23 1955 அன்று பிறந்தார்.மனைவி வேதநாயகி  மற்றும் இரு குழந்தைகள் உண்டு.வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ்  சார்பில் 1989 மற்றும் 1991இல் வெற்றி பெற்றார்.
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் தமிழ் மாநில காங்கிரசு சார்பில் 1996ஆம் ஆண்டு வெற்றி பெற்றார்.

Friday, September 18

வி. எஸ். விஜய்



வி. எஸ். விஜய் ஓர் மருத்துவர் மேலும் தமிழக அரசியல்வாதி. வேலூர் தொகுதியிலிருந்து தமிழக சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார்.இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை சார்ந்தவர்.

கே. பொன்முடி



கே. பொன்முடி ஒரு தமிழக அரசியல்வாதி. தமிழக அமைச்சரவையில் உயர் கல்வி அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். திராவிடக் கொள்கையில் பற்றுக் கொண்ட இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1989 ஆம் ஆண்டு முதல் முக்கியப் பங்கு வகிக்கின்றார்.
எடையார் கிராமத்தில் 19 ஆகஸ்டு 1950 ஆம் ஆண்டு பிறந்தார். வரலாறு, அரசியல் மற்றும் பொதுத்துறை நிர்வாகம் ஆகிய துறையில் முதுநிலைப் பட்டமும், வரலாற்றில் முனைவர் பட்டமும் பெற்ற இவர் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். பொன்முடி 1989 ஆண்டு முதல் தி.மு.க.வில் முக்கியப் பதவிகளில் உள்ளார்.

Friday, September 4

தா. கிருட்டிணன்


சிவகங்கை மாவட்டம் கொம்புக்கரனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் தா.கிருட்டிணன். இவரது மனைவி பெயர் பத்மா இவருக்கு 1 மகன், 1 மகள் உள்ளனர். தா.கி. என்று திமுகவினரால் அன்புடன் அழைக்கப்பட்டவர் தா.கிருட்டிணன்.
இருமுறை சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் ,ஒருமுறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும்இருந்தவர். கடந்த 1996ம் ஆண்டு சிவகங்கை தொகுதி சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.
20.5.2003-ல் மதுரையில் கொலை செய்யப்பட்டார்.இது தொடர்பாக மதுரை அண்ணாநகர் காவல்துறை வழக்குப் பதிவு செய்து மு.க. அழகிரி உள்ளிட்ட 13 பேரைக் கைது செய்து வழக்குத் தொடர்ந்தனர். தா. கிருட்டிணன் கொலை வழக்கில் தமிழக முதல்வரின் மகன் மு.க. அழகிரி, மதுரை துணை மேயர் மன்னன் உள்ளிட்ட 13 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

கோ. சி. மணி


கோ. சி. மணி தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழக அமைச்சரவையில்கூட்டுறவு,விவசாயம்,உள்ளாட்சித் துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். திராவிடக் கொள்கையில் பற்றுக் கொண்ட இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆரம்ப காலம் முதல் முக்கியப் பங்கு வகிக்கின்றார்.

குடும்பம்

நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் வட்டத்தில் மேக்கிரிமங்கலம் என்ற கிராமத்தில் கோவிந்தசாமி, அஞ்சலை தம்பதிக்கு மகனாகப் 13 செப்டம்பர் 1929ஆம் ஆண்டு பிறந்தார். இவரது இயற்பெயர் சிவசுப்பிரமணியன் ஆகும். இவருக்கு சாவித்திரி, கிருஷ்ணவேணி என்ற இருமனைவிகள். இவரது மூத்த மகன் கோ.சி.மதியழகன் நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம்ஒன்றியதலைவராக பணியாற்றி பன்றிக் காய்ச்சல் பாதிப்பால் 26-11-2009இல் காலமானார். இவரது அடுத்த மகன் கோ.சி.இளங்கோவன் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் ஒன்றியத் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
1948இல் பண்டாரவாடை இரயில் நிலையப் பெயர்ப் பலகையில் இருந்த இந்தி எழுத்தைத் தார்பூசி அழித்தமைக்குக் கைது செய்யப்பட்டுத் தண்டனை பெற்றவர். இவர் திமுகவின் உயர் மட்டக் குழுவில் உள்ளார்.
"ஓய்வறியா சிங்கம்,' "சின்னக் கலைஞர்' என்றெல்லாம் காவிரி டெல்டா தி.மு.க.வினரால் செல்லமாக அழைக்கப்படும் கோ.சி. மணி, நான்கு முறைதமிழக சட்டபேரவை உறுப்பினராக பணியாற்றியுள்ளார். 1968 முதல் 1980 வரை பன்னிரெண்டு ஆண்டுகள் தமிழகச் சட்டமேலவை உறுப்பினராக போன்ற பதவிகளை வகித்தவர். தமிழகச் சட்ட மேலவையின் எதிர்க்கட்சித் துணைத் தலைவராகவும் இருந்தவர்.

ஆற்காடு ராமசாமி முதலியார்


திவான் பகதூர் சர் ஆற்காடு இராமசாமி முதலியார் (1887 – 1976) ஓர் இந்திய வழக்கறிஞரும் அரசியல்வாதியும் இராசதந்திரியும் ஆவார். இவர் நீதிக்கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவர். இந்திய விடுதலைக்கு முன்னும் பின்னும் இந்திய அரசாங்கத்தில் நிருவாகம், ஆட்சி சார்ந்த பல பதவிகளை வகித்தவர்.

வாழ்க்கைக் குறிப்பு

இராமசாமி முதலியார் 1887இல் தென்னாற்காட்டில் ஒரு வசதி படைத்த 

அகமுடையார் குடும்பத்தில் பிறந்தார்.

 இவரும் ஆற்காடு லட்சுமணசாமி
 முதலியாரும் இரட்டையர்கள் ஆவர் . இவர் கர்னூலிலுள்ள முனிசிப்பல் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். சென்னை கிருத்துவக் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும் சென்னை சட்டக் கல்லூரியில்சட்டமும் பயின்றார். சட்டப்படிப்பு முடிந்தபின், அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பு வழக்குரைஞராகப் பணியாற்றினார். 1920இல் சென்னை சட்ட மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.1920 - 1926; 1931-1934 காலகட்டங்களில் சட்ட மன்ற உறுப்பினராக இருந்த ராமசாமி முதலியார் 1934இல் இடம்பெற்ற சென்னை மாகாணச் சட்டமன்றத் தேர்தலில், எஸ். சத்தியமூர்த்தியிடம் தோற்றுப் போனார்.

நீதிக்கட்சி

இராமசாமி முதலியார், நீதிக்கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே (1917) கட்சியில் இருந்தவர். நீதிக்கட்சியின் பொதுச்செயலாளராகப் பொறுப்பு வகித்தார்.சூலை 1918இல் இராமசாமி முதலியார், மருத்துவர் டி. எம். நாயர்,கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு ஆகிய மூவரடங்கிய குழு ஒன்று இங்கிலாந்து சென்று நீதிக்கட்சி சார்பில் வகுப்புவாரியான பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தி அதற்கான சான்றுகளைப் பிரித்தானிய நாடாளுமன்றச் சீர்திருத்தச் செயற்குழு முன் சமர்ப்பித்தது. இவர் நீதிக்கட்சியில் படிப்படியாக முன்னேறி அக்கட்சியின் மூளையென்று கருதப்படும் அளவுக்கு உயர்ந்தார் இந்தியாவில் வெவ்வேறு பகுதிகளிலும் உள்ள பிராமணர்அல்லாதோரை ஒன்றிணைக்கவும் அவர்களையும் உள்ளடக்கி மாநாடுகளை நடத்தவும் முயற்சிகள் மேற்கொண்டார். இவர் ஒரு சிறந்த பேச்சாளர். இவரது பேச்சுக்கள் ஊக்கம் மிக்கவையாக அமைந்திருந்தன.
நவம்பர் 8, 1926இல் நடைபெற்ற சென்னை சட்டமன்றத் தேர்தலில் நீதிக்கட்சி 98இற்கு 21 இடங்களை மட்டுமே பிடித்து மிகப் பெரிய தோல்வியைத் தழுவியது. தோல்வியடைந்தவர்களில் முதலியாரும் ஒருவர். தற்காலிகமாக அரசியலில் இருந்து ஓய்வு பெற்று பி. என். ராமன் பிள்ளைக்குப் பதில் நீதிக்கட்சியின் ஜஸ்டிஸ்செய்தித் தாளின் பொறுப்பை ஏற்று நடத்தினார்.இவரது மேற்பார்வையின் கீழ் அச்செய்தித் தாள் பிரபலமடைந்து அதன் விற்பனையும் அதிகமானது.மார்ச் 1, 1929இல் இவரும் நீதிக்கட்சியின் மற்றொரு முக்கியத் தலைவருமான சர் ஏ. டி. பன்னீர்செல்வமும் நீதிக்கட்சி சார்பில் கோரிக்கைகளை சைமன் குழு முன் வைத்தனர்.இவர் 1928 முதல் 1930 வரை சென்னை நகர மேயராகப் பணிபுரிந்தார். 1935இல் அரசின் வரித்துறையில் நியமிக்கப்பட்டதால் ஜஸ்டிஸ் செய்தித் தாளின் ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகினார்.இவர் பிரித்தானியஅரசின் இந்தியத்துறை அமைச்சரின் செயற்குழு உறுப்பினராகவும் இருந்தார். பெப்ரவரி 25, 1937இல் பக்கிங்ஹாம் அரண்மனையில் இவருக்கு சர் பட்டம் வழங்கப்பட்டது.

அனைத்திந்தியப் பிராமணரல்லாதோர் இயக்கம்

இராமசாமி முதலியாருக்கு ஷாகு மகாராஜுடனும் மகாராட்டிரப் பிராமணரல்லாதோர் கூட்டத் தலைவர்களோடும் மற்ற வட இந்தியப் பிராமணரல்லாதோர் கூட்டத் தலைவர்களோடும் நட்புமுறையிலான நல்ல உறவு இருந்தது. ராமசாமி முதலியார் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளிலும் உள்ள பிராமணரல்லாதோர் அமைப்புகளின் தலைவர்களை ஒருங்கிணைப்பதிலும் அவர்களுக்கான மாநாடுகள் நடத்துவதற்கும் உதவினார்.திசம்பர் 18,1922இல் சதாராவில் இரண்டாம் இராஜாராமின் தலைமையில் நடந்த பிராமணரல்லாதோர் மாநாட்டில் இவரும் பங்கேற்றார்.திசம்பர் 26, 1924இல் பெல்காமில் நடந்த அனைத்திந்தியப் பிராமணரல்லாதோர் மாநாட்டில் கலந்து கொண்டு இவர் ஆற்றிய சொற்பொழிவு அனைவராலும் பாராட்டிப் பேசப்பட்டது. பெப்ரவரி 8, 1925இல் நடந்த ஏழாவது பிராமணரல்லாதோர் மாநாட்டில் கலந்து கொண்டு பிராமணரல்லாதவர்களிடம் இருக்க வேண்டிய ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்திப் பேசினார்.
1925இல் சர் பி. டி. தியாகராய செட்டியின் மறைவுக்குப்பின் ஷாகு மஹாராஜின் சத்ய ஷோதக் சமாஜையும்நீதிக்கட்சியையும் இணைக்கும் பாலமாக இருந்தவர் முதலியார் ஒருவர் மட்டுமே. திசம்பர் 19, 1925இல் சென்னை விக்டோரியா மண்டபத்தில் அனைத்திந்தியப் பிராமணரல்லாதோர் மாநாடு நடத்த பனகல் அரசருக்குத் துணை புரிந்தார். திசம்பர் 26, 1925இல் இரண்டாவதாக மறுபடியும் ஒரு மாநாட்டை அமராவதியில் நடத்தினார். அது இரு தொடர்களாக நடந்தது. முதல் கூட்டத்தொடருக்குக் கோலாப்பூர் மகாராசாவும் இரண்டாவது தொடருக்குப் பனகல் அரசரும் தலைமை தாங்கினர்.
இரண்டாவது தொடரில் முதலியார் பேசியது:-
பிராமணரல்லாதோர் இயக்கத்தினைப் பற்றி நான் விளக்க வேண்டிய கட்டத்தை அது தாண்டிவிட்டது. அதன் செயல்பாடுகள்பம்பாயிலிருந்து சென்னை வரையும் விந்திய மலையிலிருந்து கன்னியாகுமரி வரையும் பரவியுள்ளன. நாடு முழுவதும் அதன் கொள்கைகள் பரவிய மின்னல் வேகமும் வீச்சுமே இயக்கத்தின் நிலையை விளக்கிவிடும்.
முதலியாரின் பேச்சைத் தி இந்து நாளிதழ், பிற மாகாணத்தில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற அவரது விருப்பம் இந்த அளவுக்கு அவரது கற்பனையைத் தூண்டியிருக்கிறது என விமர்சனம் செய்தது.

போர்க்கால அமைச்சரவையில்

1939இல் இரண்டாம் உலகப்போர் மூண்டபோது இராமசாமி முதலியார், வைசிராயின் செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். ஜூன் 1942ல் அவருக்கு கே. சி. எசு. ஐ (KCSI) பட்டம் வழங்கப்பட்டது. சூலை 1942இல் பிரித்தானியப் பிரதம மந்திரி வின்ஸ்டன் சர்ச்சிலின் போர்க்கால அமைச்சரவைக்கு நியமிக்கப்பட்ட இரு இந்தியரில் இவரும் ஒருவர். பிரித்தானியரின் ஆட்சிக்குட்பட்ட மற்றப் பகுதிகளின் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டிருந்த உரிமைகளும் சலுகைகளும் இவர்களுக்கும் சமமாக வழங்கப்பட்டிருந்த்து.

ஐக்கிய நாடுகள் பொருளாதார, சமூக மன்றத் (ECOSOC) தலைவராக

1945இல் ஏப்ரல் 25 முதல் சூன் 26 வரை சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் அவையின் மாநாட்டில் இந்தியப் பிரதிநிதியாக முதலியார் கலந்து கொண்டார். அங்கு பொருளாதார, சமுதாயப் பிரச்சினைகளைப் பற்றி விவாதித்த செயற்குழுக் கூட்டதிற்குத் தலைமை தாங்கினார். சனவரி 23,1946 அன்று சர்ச் ஹவுஸ், இலண்டனில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொருளாதார, சமூக மன்றக் கூட்டத்தில் மன்றத்தின் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.முதலியாரின் தலைமையில் பெப்ரவரி 1946இல் நடந்த மன்றக் கூட்டத்தில் பன்னாட்டுச் சுகாதார மாநாடு ஒன்று நடத்தப்படவேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சூன் 19, 1946இல் பன்னாட்டுச் சுகாதார மாநாடு நடந்தது. அதனை முதலியார் தொடங்கி வைத்தார். அம்மாநாட்டிற்றான் உலக சுகாதார அமைப்பு (WHO) உருவானது. அவ்வமைப்பின் சட்டதிட்டங்கள் விவாதிக்கப்பட்டு 61 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.பொருளாதார, சமூக மன்றத் தலைவராக ஓராண்டு பணிபுரிந்து பின் பணிக்காலம் முடிவடைந்ததால் இந்தியாவுக்குத் திரும்பி மைசூரின் முதலமைச்சராகப் (திவான்) பதவியேற்றார். மைசூர் மகாராஜா ஜயச்சாமராஜ வாடியாருக்கு சுதந்திர இந்தியாவுடன் இணைய வேண்டாமென ஆலோசனை கூறினார்.

சி. நடேச முதலியார்


சி. நடேச முதலியார் (1875-1937) நீதிக்கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவராவார். சென்னை நகரத்தில்திருவல்லிக்கேணியில் பிறந்த இவர் சென்னை மாநிலக் கல்லூரியிலும், சென்னை மருத்துவக்கல்லூரியிலும் படித்து டாக்டர் பட்டம் பெற்றார்.

சென்னை தி நகரில் உள்ள நடேசன் பூங்காவில் உள்ள நடேசனார் சிலை

இவர் பிராமணரல்லாத ஜாதியனரின் நலனுக்காக குரல் கொடுக்க 1912 இல் ஐக்கிய சென்னை இயக்கம் (ஆங்கிலம்:Madras United League) என்ற அமைப்பை உருவாக்கினார். பின்னர் இவ்வியக்கம் சென்னை திராவிடர் சங்கம் (ஆங்கிலம்:Madras Dravidian Association) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.அரசியலில் பங்கேற்காமல் சென்னையில் பிராமணரல்லாத மாணவர்களுக்காக ஒரு விடுதியை நடத்தி வந்தது.


 முதலியார் 1916 இல் அரசியல் போட்டியாளர்களாக இருந்த தியாகராய செட்டியையும் டாக்டர் டி. எம். நாயரையும் ஒருங்கிணைந்து செயல்பட வைத்தார். இதனால் ”தென்னிந்திய நல வாரியம்” எனப்படும் நீதிக்கட்சி உருவானது; முதலியாரும் அதன் முன்னணி தலைவர்களுள் ஒருவரானார்.

1921 இல் சென்னை மாகாணத்தில் திரு. வி. கலியாணசுந்தரனார் தலைமையில் நடைபெற்ற பங்கிங்காம் கர்நாடிக் ஆலை வேலைநிறுத்தத்தை (புளியந்தோப்பு கலவரங்கள்) முடிவுக்கு கொண்டுவந்ததில் இவருக்கும் தியாகராய செட்டிக்கும் பெரும்பங்கு உண்டு. நடேச முதலியார் 1923 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று சென்னை சட்டமன்ற உறுப்பினரானார்.ஆனால் நீதிக்கட்சி முதல்வர் பனகல் அரசருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சிறிது காலம் சுப்பராயனின் ஆதரவாளராக இருந்தார். 



நீதிக்கட்சி பிராமணரல்லாதோர் நலனுக்காக தொடங்கப்பட்டிருந்தாலும் கட்சியில் பிராமணர்களை அனுமதிக்க வேண்டும் என்று நடேச முதலியார் கருதினார். இதற்காக 1929 இல் நீதிக்கட்சி மாநாட்டில் அவர் கொண்டு வந்த தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது (பின்னர் 1934 முதல் பிராமணர்கள் உறுப்பினர்களாக இருந்த தடை நீக்கப்பட்டது). 1937 வரை சென்னை சட்டமன்றத்தின் உறுப்பினராக இருந்த நடேச முதலியார் பெப்ரவரி 1937 இல் மரணமடைந்தார்.



Wednesday, September 2

அக்ரி கிருஷ்ணமூர்த்தி

அக்ரி. எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி ஓர் தமிழக அரசியல்வாதி . கலசப்பாக்கம்
தொகுதியிலிருந்து தமிழக சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டவர். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை சார்ந்த இவர் வேளாண் துறை அமைச்சராக பதவி வகித்தார்.தமிழ் நாடு வேளான் பொறியியல் துறையின் திருநெல்வேலி மாவட்ட


செயற்பொறியாளர் முத்துகுமாரசாமி ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார் இதன் காரணமாக கிருஷ்ணமூர்த்தி கைது செய்யபட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்க பட்டார்

அங்கமுத்து நாயக்கர்

சேலம் மாவட்ட ஆத்தூர் முன்னாள்
சட்டமன்ற உறுப்பினர் 1962 காங்கிரஸ் சார்பில் நின்று வெற்றி பெற்ற அங்கமுத்து
நாயக்கர் (அகமுடையார்) காமராசரின்
நெருங்கிய நண்பர்.இருவரும்
இணைபிரியா நண்பர்கள்

டி. ஆர். பாலு

தளிக்கோட்டை இராசுத்தேவர் பாலு
( டி. ஆர். பாலு , பி ஜூன் 15 , 1941)
இந்தியாவின் நடுவண் அரசில்
அமைச்சராகப் பணியாற்றிய ஓர்
அரசியலாளர். இவர் 1957 ஆம்
ஆண்டிலிருந்தே திராவிட
முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்து
அரசியலில் பங்களிப்பவர். இவர் 1996
முதல் நான்குமுறை மக்களவையின்
உறுப்பினராகத் தென் சென்னை
மக்களவைத் தொகுதியிலிருந்து
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2004-ம்
ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை
இந்திய அரசில் கப்பல்துறை மற்றும்
நெடுஞ்சாலை துறை அமைச்சராகப்
பணியாற்றினார். நாடாளுமன்ற
திராவிட முன்னேற்றக் கழக
தலைவராக பணியாற்றியுள்ளார்.

Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...