Sunday, November 19

சுபேதார் சுலைமான்

மாமன்னர் பெரிய மருது பாண்டியருக்கு காளையார் கோவிலில் உள்ள காளீஸ்வரருக்கு ஒரு ராஜகோபுரம் மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ளதைப் போல் கட்ட வேண்டும் என்ற ஆசை அதற்கான ஆயத்த வேலைகள் தொடர்ந்து செய்து கொண்டு இருக்கும் போது அஸ்திவாரம் தோண்டும் போது பிரச்சனைகள் கட்டிடம் கட்ட முடியாமல் நீர் ஊற்று அதிகரித்து கட்டிடம் கட்ட தடைப்பட்டது அந்த சமயத்தில் சிறிய வயதுடைய ஒரு முகமதியர் பெயர் சுலைமான் பக்கிரி என்பவர் அந்த இடத்திற்கு வந்தார் அவர் யார் தெரியுமா...? ஆற்காட்டு நவாப் முகமதலியின் படையில் பணி ஆற்றிய ஒரு தலைசிறந்த வீரன் தான் சுலைமான் இவன் காளையார் கோயில் மீது படையெடுக்க சரியான தருணத்தை கணக்கிடுவதற்காகவும் மருது பாண்டியர்களின் படையின் வலிமையை அறிந்து கொள்ளவும் அங்குள்ள மக்களின் மனநிலையை அறிந்து சரியான நேரத்தில் படையெடுக்க ஆற்காடு நவாப்பால் அனுப்பப்பட்ட ஒற்றன் ஆவான் சந்தர்ப்பம் கிடைக்குமாயின் மருது பாண்டியரைக் கொலை செய்வதற்குக் கூட சுலைமானுக்கு யோசனை சொல்லப்பட்டதாம் அந்த சமயத்தில் அங்கு வந்த சுலைமான் மருது பாண்டியருக்கு வணக்கம் சொல்லிவிட்டு அதிகமாக வரும் நீர் ஊற்றை தான் தடுத்துவிடுவதாகச் சொல்கிறான் அதுகேட்டு மன்னர் மருதிருவர் மன மகிழ்ச்சி அடைகிறார்கள் உடனே சுலைமானுக்கு நீர் ஊற்றை அடைக்க தேவையானவற்றை கொடுக்க வேலையாட்களிடம் பணித்தார்கள் மருது பாண்டியர்கள்...!

சுலைமான் பத்து வண்டி அளவு அயிரை மீன்கள் வேண்டும் என்றார் அடுத்த நாள் காளையார் கோயிலுக்கு அருகில் உள்ள எல்லாப் பகுதிகளுக்கும் செய்தி அனுப்பி அயிரை மீன்களையும் அஸ்திவாரம் தோண்டிய நீர் தேக்கிய பகுதிகளில் சுலைமான் ஆற்று மணலுடன் சேர்த்துப் போட்டதால் ஒவ்வொரு மீனும் மணலைகளைக் கவ்விக்கொண்டு நீர் ஊற்றை அடைத்தது அதன் பின்னர் நீரின் கசிவு ஏற்படாததால் கோபுரம் கட்டும் வேலை சுணக்கம் இல்லாமல் தொடர்ந்து நடைபெற்றது இதனை கண்ட மாமன்னர் பெரிய மருது பாண்டியருக்கு மட்டற்ற மகிழ்ச்சி சுலைமானிடம் உனக்கு என்ன வேண்டும் என மருதரசன் கேட்டார் அதற்கு சுலைமான் எதுவும் வேண்டாம் என மறுத்துவிட்டார் இந்த சுலைமான் பல மொழி பேசும் திறமை பெற்றவர் அத்தோடு வானத்தில் பறக்கும் பறவையை குறிதவறாது வேட்டையாடும் கலையை நன்கறிந்தவர் அத்துடன் மல்யுத்தம், சிலம்பு ஆட்டம் கற்றறிந்தவர் மகா புத்திசாலி
அப்படிப்பட்டவரை மருது பாண்டியர்கள் அவர்கள் தனது அரண்மனையிலேயே அதன் உள்ளே உள்ள குதிரை லாயத்தின் முழுப் பொறுப்பையும் கவனிக்க முழு அதிகாரத்தை சுலைமானுக்கு கொடுத்து கௌரவித்தார்...!

காலப் போக்கில் மருது சகோதரர்களின் உண்மையான உணர்வுகளும் சிறந்த சிந்தனைகளும் அவர்களுக்கு மக்களிடத்தில் அவர்கள் காட்டும் அன்பையும் நேரில் பார்த்த பொழுது சுபேதார் சுலைமான் மனம் மாறினார் அவர் உளவாளியாக வந்த ஆற்காட்டருக்கு எந்த தகவலும் அனுப்பவில்லை இப்படிப் பல மாதங்கள் உருண்டோடின ஒரு நாள் பெரிய மருது பாண்டியர் சிவகங்கைக்கு அரசு வேலையாக சென்றிருந்தார் சின்ன மருது பாண்டியர் அவரின் நம்பிக்கைக்கு உரிய கரடிக் கறுத்தானைக் கூட்டிக் கொண்டு காளையார் கோயிலுக்கு சென்றார் (இந்தக் கரடி கறுத்தான் தான் பின்னாளில் வெள்ளையனின் பொருளுக்கு ஆசைப்பட்டு சின்ன மருது பாண்டியரை துப்பாக்கியால் சுட்டு காலை உடைத்து ஒரு மிருகம் போல வேட்டையாடி வெள்ளையனுக்கு காட்டிக் கொடுத்தவன்) அங்கு ஒரு வெள்ளை புறா பறந்து சென்றது சின்ன மருது பாண்டியர் தனது வளரியை எடுத்து பறந்து கொண்டிருந்த புறாவை நோக்கி வீசினார் குறிதவறாது புறா மீது வளரி தாக்கி புறா கீழே விழுந்து கொண்டிருந்தது அது தரையில் விழு முன் சுலைமான் புறாவை தனது கையில் பிடித்தார் அதை அருகில் இருந்து பார்த்த சின்ன மருது பாண்டியருக்கு ஒரே ஆச்சரியம் வளரியால் வீழ்த்திய புறாவை இடையிலேயே பிடிப்பவன் தனக்கு அடுத்து இந்த கரடி கறுத்தான் ஒருவனே ஆனால் இந்த வித்தை சுலைமானுக்கு எப்படித் தெரியும் என்று அப்பொழுது கறுத்தான் சுலைமானின் கையிலிருந்து புறாவைக் கவனித்தான் அதன் கால்களில் ஒரு துண்டுச் சீட்டு இருந்தது அதை உடனே சின்ன மருதுவும் நோக்கினார் அதன் எழுத்து உருது மொழியில் இருந்தது அதில் ஆற்காட்டான் எப்பொழுது காளையார் கோயிலுக்கு படையெடுத்து வரலாம் என சுலைமானின் யோசனையைக் கேட்டு எழுதி இருந்தது...!

இந்தச் செய்தியை படித்தமட்டில் சின்ன மருதுவுக்கு கோபம் எல்லை மீறிப் போய்விட்டது அடேய் ராஜதுரோகி உன்னை எனது அண்ணன் பெரிய மருது பாண்டியர் எப்படியெல்லாம் உயர்வாக நடத்துகிறார் அதற்கு நீ காட்டும் நன்றிக் கடன் இது...? என ஏக வசனத்தில் பேசிக் கொண்டிருந்தார் இது கண்டு சுலைமானுக்கு மிகுந்த மனவேதனை அடைந்தார் உடனே மன்னர் அவர்களே நான் சொல்லும் விளக்கத்தினை தயவுசெய்து செவிமடுத்துக் கேட்கவும் நான் ஒற்றனாய் வந்தது உண்மை ஆனால் இங்கு உங்களையும் பெரிய மன்னரையும் கண்டவுடன் அவர் ஆட்சியையும் அவர் நாட்டு மக்கள் மீது கொண்ட அன்பை பார்த்த பின்பு நான் வந்த வேலையை மறந்தேன் அத்தோடு ஆற்காட்டருக்கு எந்த பதிலும் அனுப்பவில்லை அதனால் தான் அவர்கள் எனது நோக்கம் அறிய புறா மூலம் தூதுவிட்டுள்ளனர் என்றார் சின்ன மருது பாண்டியர் எந்த விளக்கத்தையும் கேட்பதாக இல்லை உடனே அவருக்குத் தெரிந்த கத்திச் சண்டை, குத்துச் சண்டை, மல்யுத்தம் போன்ற வீர விளையாட்டில் எப்படியும் சுலைமானின் உயிரைப் போக்க வேண்டும் என முடிவு செய்தார் அதற்கு சுலைமானும் சளைக்காமல் சின்னமருதுவுக்கு சமமாக அவரும் ஈடு கொடுத்து சமாளித்தார் ஆனால் கடைசியில் சின்ன மருது பாண்டியர் அவர்களின் மர்ம அடி  நெற்றியில் பட்டு அக்கணமே சுலைமானின் உயிர் பிரிந்தது...!

சிவகங்கையில் உள்ள பெரிய மருது பாண்டியருக்கு இந்த துயரமான செய்தி கிடைத்தவுடன் மிகவும் மன வேதனைப்பட்டார் மனம் மாறிய சுலைமானை சின்ன மருது கொன்றுவிட்டானே என அப்பொழுது உள்ள அரசியல் சூழ்நிலையில் அப்படி ஒரு செயலை சின்ன மருது செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது போலும் தனது உண்மையான ஊழியன் என எண்ணப்பட்ட கரடிக் கறுத்தான் மருது பாண்டியரைக் காட்டிக் கொடுத்தான் ஆனால் ஒற்றனாய் வந்த சுலைமான மருதுவுக்கு அதரவாக இருந்துள்ளார் இது காலத்தின் கோலம் தானே பெரிய மருதுவின் மனம் அம்மாவீரனுக்கு அவரின் ஞாபகமாக பட்டரைக் கண்மாய் என்ற ஊரில் ஒரு பெரிய சமாதி ஒன்றைக் கட்டினார் அத்தோடு அவரின் சந்ததியினருக்கு பல நிலங்களை தானமாக கொடுத்தாராம் அந்த நினைவிடத்தில் இன்றும் விவசாய காலம் ஆரம்பிக்கும் பொழுதும் பின் அறுவடை நடைபெறும் காலத்திலும் சுபேதார் சுலைமானின் சமாதியில் காணிக்கை செலுத்தி அவரின் நினைவாக எல்லா சமூகத்தினரும் வணங்கிச் செல்வது அங்கு வழக்கமாக கொண்டுள்ளனர் இச்செய்தியை மறைந்த முன்னாள் அமைச்சர் தா. கிருஷ்ணன் அவர்கள் மருதுபாண்டியர் நினைவு நாளில் சொல்லக் கேட்டது...!



சுபேதார் சுலைமானின் சமாதி


பட்டரை கண்மாய் கிராமத்தில் மாமன்னர் பெரிய மருது பாண்டியரால் கட்டப்பட்ட சுலைமான் சமாதி தற்போது அவர்களது வாரிசுதார்களின் வசம் உள்ளது அவர்கள் தான் பராமரிப்பு செய்கிறார்கள்...!!!


தகவல் மற்றும் புகைப்பட உதவி: மருது பிரசன்னா அகமுடையார்

Wednesday, November 8

மாமன்னர் மருதுபாண்டியர்கள்

மருதுபாண்டியர்கள்

ஆங்கிலேயரை எதிர்த்து வீரமரணம் அடைந்த மருதுபாண்டியர்களின் இறுதி நொடி பொழுதினை மருதுபாண்டியர்கள் அரசு விழாவன்று ஓவியமாக வெளியிட்டு மாமன்னர் மருதரசர்களின் தியாகங்களை நினைவு கூர்ந்தனர் மருது வரலாறு மீட்புகுழுவினர்.



புகைப்பட உதவி:மருது பிரசன்னா

Thursday, July 13

MJF.லியோமுத்து



சுந்தரராஜன் சேர்வை

அகமுடையாரான தியாகி சுந்தரராஜன் சேர்வை அவர்களால் திறக்கப்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் முதல் சிலை.இச்சிலை ஆங்கிலேயர் காலத்திலயே திறக்கப்பட்டது.



நேதாஜி அவர்களின் படையில் அகமுடையார்கள் பெருமளவில் இருந்தனர் .

எஸ்.ஆர்.நாதன்

சிங்கப்பூரின் முன்னாள் குடியரசு தலைவர் எஸ்.ஆர்.நாதன் அகமுடையார் இனத்தவர்.வெளியுறவுத் துறை செயலர், பாதுகாப்பு மற்றும் நுண்ணறிவுப்பிரிவு இயக்குநர், அமெரிக்காவிற்கான சிங்கப்பூர் துாதர் என பல உயரிய பதவிகளை சிங்கையில் வகித்தவர் தஞ்சை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர்.சிங்கை மற்றும் மலேசிய பகுதிகளில் கோலோச்சிய தமிழர்கள் பெரும்பாலும் தஞ்சையை பூர்வீகமாக கொண்டவர்கள்.

Sunday, July 2

மணலி கந்தசாமி

தஞ்சை மாவட்டத்தில் மணலி என்ற சிற்றூரில் பிறந்து பொதுவுடைமைக் கட்சி தமிழகத்தில் வேரூன்றி வளர அரும்பனி ஆற்றியவர் மணலி சி.கந்தசாமி இந்தியக் கம்யூனிஸ்ட் காட்சியின் தமிழ்நாடு மாநிலக் கவுன்சில் செயலாளாராகவும் இரண்டு முறை சட்டப்பேரவை உறிப்பினராகவும் தேர்ந்துதெடுக்க்ப்பட்டவர்.

Saturday, May 27

மதுரை மாவட்ட அகமுடையார் தொகுதிகள்

மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை அகமுடையார் அனைத்து பகுதிகளிலும் பரவலாக வசித்து வருகின்றனர்.மதுரை மாநகராட்சியில் அகமுடையார்கள் மிக அதிகமாக உள்ளனர்.



மதுரை பத்து சட்டமன்ற தொகுதிகளை கொண்டது ஐந்து தொகுதிகளில் முதல் பெரும்பாண்மையாக அகமுடையார்கள் உள்ளனர்.

சோழவந்தான்(தனி)

சோழவந்தான் தனி தொகுதியாக உள்ளது.

1 வாடிப்பட்டி ஒன்றியம்
2 அலங்காநல்லூர் ஒன்றியம்
3 வடக்கு தாலுகா (சில பகுதிகள்) உள்ளடக்கியது பேரூராட்சிகள்:
1 சோழவந்தான்
2 வாடிப்பட்டி
3 அலங்காநல்லூர்
4 பாலமேடு
அகமுடையார் அதிகமுள்ள பேரூராட்சிகள்
1சோழவந்தான்
2 வாடிப்பட்டி
கணிசமாக உள்ள பேரூராட்சி
1பாலமேடு
அகமுடையார் அதிகமுள்ள கிராமங்கள்:
1முள்ளிப்பள்ளம்
2 தென்கரை
3 மன்னாடிமங்கலம்
4 இரும்பாடி
5 ரிஷபம்
6 நாச்சிகுளம்
7 மேலநாச்சிகுளம்
8 காடுபட்டி
9 கருப்பட்டி
10 கிருஷ்ணாபுரம்
11 பெருமாள்பட்டி
12 செம்மினிப்பட்டி
13 மேலக்கால்
14 தேனூர்
15 சமயநல்லூர்
16 சத்யமூர்த்தி நகர்
17 கள்ளிக்குடி
18 தோடனேரி
19 மூலக்குறிச்சி
20 தனிச்சியம்
21 வயலூர்
22 அரியூர்
23 பொதும்பு
24 அதலை
25 தண்டலை
26 புதுப்பட்டி
27 எர்ரம்பட்டி
28 வாவிடமருதூர்
29 மேட்டுப்பட்டி
30 அய்யூர்
31 நடுப்பட்டி
2 கணிசமாக உள்ள கிராமம்
1 நீரேத்தான்
2 அய்யங்கோட்டை
3 குருவித்துறை
4 மாத்தூர்
5 திருவேடகம்
6 முடுவார்பட்டி
7 தாதகவுண்டம்பட்டி
வாடிப்பட்டி வட்டாரத்தில் பல கிராமங்கள் விடுபட்டுள்ளது


மதுரை வடக்கு தொகுதி:

மதுரை மாநகர பகுதி 8 முதல் 15 வார்டு பகுதிகளை கொண்டது.
இத்தொகுதியின் அனைத்து பகுதிகளிலும்
அகமுடையார்கள் மிக அடர்த்தியாக உள்ளனர்
அகமுடையார் அதிகமுள்ள பகுதிகள்
1 நரிமேடு
2 பி.பி குளம்
3 சின்னசொக்கிகுளம்
4 மருதுபாண்டியர்நகர்
5 மீனாம்பாள்புரம்
6 செல்லூர்
7 அகிம்சாபுரம்
8 கட்டபொம்மன் நகர்
9 ஆழ்வார்புரம்
10 மதிச்சியம்
11 கே.கே நகர்
12 புதூர்
13 தல்லாகுளம்
14 லூர்துநகர்
15 கைலாசபுரம்
இப்பகுதிகள் அனைத்திலும் அகமுடையார்கள் பெரும்பாண்மை எண்ணிக்கையோடு வாழ்கின்றனர்

அகமுடையார் கணிசமாக உள்ள பகுதிகள்
1 அண்ணாநகர்
2 சாத்தமங்கலம்
3 கோரிப்பாளையம்
4 செல்லூர்
5 கோமதிபுரம்
7 மேலமடை
8 ரிசர்வ்லைன்
இப்பகுதிகளில் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர்
இத்தொகுதியில் 70000 வாக்காளர்களுக்கு மேல் அகமுடையார்கள் உள்ளனர்அதிகமானோர் சுயதொழில் செய்பவர்கள்.


மதுரை மேற்கு தொகுதி:

1,மதுரை மாநகர பகுதிகள்
2,தெற்கு தாலுகா(சில பகுதிகள்)
3,வடக்கு தாலுகா(சில பகுதிகள்) உள்ளடக்கியது
இத்தொகுதியின் நகர்புறம் மற்றும் புறநகர் பகுதிகள் அனைத்திலும் அகமுடையார்கள் பரவியுள்ளனர்
அகமுடையார் அதிகமுள்ள பகுதிகள்
1 பழங்காநத்தம்
2 ஜெய்ஹிந்த்புரம்
3 பைக்காரா
4 சுப்ரமண்யபுரம்
5 நேரு நகர்
6 சோலையழகுபுரம்
7 வசந்தநகர்
8 ஆண்டாள்புரம்
9 முத்துப்பட்டி
10 கோச்சடை
11 துவரிமான்
12 விராட்டிப்பத்து
13 கொடிமங்கலம்
14 அச்சம்பத்து
15 ஜீவாநகர்
16 விளாங்குடி(பேரூர்)
17 பரவை (பேரூர்)
18 பெத்தானியாபுரம்
19 கோயில்பாப்பாங்குடி
20 கீழமாத்தூர்
21 எம்.கே புரம்
அகமுடையார் கணிசமாக உள்ள பகுதிகள்
1 பொன்மேனி
2 காளவாசல்
3 கரிசகுளம்
4 பிபி சாவடி
5 அழகப்பன்நகர்
6 கூடல்நகர்
7 மாடக்குளம்
இத்தொகுதியில் மட்டும் 1 லட்சம் வாக்காளர்களுக்கு மேல் அகமுடையார்கள் உள்ளனர்.

திருமங்கலம் தொகுதி:



தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
1 கள்ளிக்குடி ஒன்றியம்
2 திருமங்கலம் ஒன்றியம்
3 டி.கல்லுப்பட்டி ஒன்றியம்
4 திருமங்கலம் நகர்
5 பேரையூர் பேரூர்
திருமங்கலம் தொகுதியில் சுற்றியுள்ள அனைத்து கிராமத்திலும் அகமுடையார்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.
கள்ளிக்குடி ஒன்றியத்தில் உள்ள 90 சதவீத கிராமங்களில் அகமுடையார் மிகப்பெரும்பான்மையான எண்ணிக்கையோடு உள்ளனர்
திருமங்கலம் நகராட்சியிலும் அகமுடையார் சமூகம் பெரும்பான்மை
இது தவிர திருமங்கலம் ஒன்றியம் கல்லுப்பட்டி ஒன்றியம் மற்றும் பேரையூர் பகுதியிலும் பரவலாக உள்ளனர்
இத்தொகுதியில் அகமுடையார்கள் 95000 வாக்காளர்களைக் கொண்டு வெற்றியை நிர்ணயிக்கும் சமூகமாக உள்ளனர்.


திருப்பரங்குன்றம் தொகுதி:



திருப்பரங்குன்றம் தொகுதியில் அனைத்து பகுதிகளிலும் அகமுடையார்கள் அடர்த்தியாகவும் கணிசமாகவும் உள்ளனர்.
தொகுதியில் முக்கிய பகுதிகளான அவனியாபுரம் , நாகமலை , திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளில் அகமுடையார் பெரும்பான்மையாக வசிக்கின்றனர்.தொகுதியில் அதிக வாக்காளர்களை கொண்ட பகுதிகளும் இவைகள் தான்
அகமுடையார் அதிகமுள்ள பகுதிகள்
1, அவனியாபுரம்
2, நாகமலை
3, சிலைமான்
4, ஒ.ஆலங்குளம்
5, பெரிய ஆலங்குளம்
6, பனையூர்
7, அய்யனார்புரம்
8, சாமநத்தம்
9, சின்னஅனுப்பானடி
10, பெரியகூடக்கோயில்
11, நிலையூர்
12, பெருங்குடி
13, வில்லாபுரம்
14, சின்னஉடப்பு
15, நெடுங்குளம்
16, விராதனூர்
அகமுடையார் கணிசமாக உள்ள பகுதிகள்..
1 திருப்பரங்குன்றம்
2 விரகனூர்
3 கீழக்குயில்குடி
4 தோப்பூர்
5 திருநகர்
6 வடிவேல்கரை
7 ஐராவதநல்லூர்
8 சிந்தாமணி
9 பசுமலை
10 புளியங்குளம்
11 ஹார்விபட்டி
12 கொம்பாடி
இத்தொகுதியில் 55000 அகமுடையார் வாக்காளர்கள் உள்ளனர்.இது தவிற மற்ற தொகுதிகளில் பரவலாக உள்ளனர்.

நன்றி: சகோதரர் ராகவன் அகமுடையார்

Featured post

மலயா கணபதி

மலயாவின் மிகப்பெரும் புரட்சி வீரரான கணபதி அவர்கள் பிறந்தது தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டையில் ஸ்ரீமுகு ஆறுமுக தேவர் - வைரம்மாள் ஆகியோருக...